10TH-TAMIL-HALF YEARLY EXAM-SIVAGANGAI-ANSWER KEY-2024

   

பத்தாம் வகுப்பு

அரையாண்டுத் தேர்வு - 2024

தமிழ்

சிவகங்கை  மாவட்டம்

 சிவகங்கை – அரையாண்டுத் தேர்வு  -2024

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  3.00 மணி                                                                           மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

இ) எம் + தமிழ் + நா

1

2.

அ) கடல்நீர் ஆவியாகி மேகமாதல்

1

3.

ஆ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

1

4.

ஈ) இலா

1

5.

ஆ) பரிபாடல்

1

6.

இ) உழவு,ஏர்,மண்,மாடு

1

7.

அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது

1

8.

ஈ) புறநானூற்றுத்தாய்

1

9.

ஈ) அங்கு வறுமை இல்லாததால்

1

10.

ஆ) நாகூர் ரூமி

1

11.

அ) அகவற்பா

1

12 .

இ) மலைபடுகடாம்

1

13 .

ஈ) தினை

1

14 .

அ) சொல்லிசை அளபெடை

1

15

அ) நன்னன்

1

பகுதி – 2 – பிரிவு - 1

16

  • வசனம் + கவிதை = வசன கவிதை.
  • உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை.

1

1

17.

பொருத்தமான தலைப்புகள்  இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

2

18.

அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து நிற்க கல்லிலும் செப்பேட்டிலும் மெய்க்கீர்த்தி எழுதினார்கள்.

2

19

காலை நேரம் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன் . அவரை மாலையிட்டு வரவேற்றனர் .அப்போது கி.வா.ஜ "அடடே! காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே!" என்றார் .

2

20

Ø  அறம் கூறும் மன்றங்கள்.

Ø  துலாக்கோல் போல் நடுநிலையானது.

Ø  மதுரையில் மதுரைக்காஞ்சி அவையம்.

2

21.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

2

பிரிவு – 2 – பிரிவு - 2

 

22

அன்புச்செல்வன் – இருபெயரொட்டு பண்புத் தொகை

தொடுதிரை – வினைத் தொகை

1

1

23

கொடு என்பதற்கு கோடு என எழுதினான்.

வளி என்பதற்கு வாளி என எழுதினான்.

1

1

24.

பதிந்து – பதி+த்(ந்)+த்+உ

பதி – பகுதி, த்-சந்தி, த்-ந் ஆன விகாரம், உ- வினையெச்ச விகுதி

2

25

அ) நிலக்காற்று

ஆ) துணைத்தூதரகம்

1

1

25

செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

மணிமேகலை, பூமணி, பொன்விலங்கு, பூவிலங்கு

 

26

அ) லாட்டரி வாங்கியதும் பணக்காரன் ஆகிவிடலாம் என மனக்கோட்டை கட்டாதே.

ஆ) கோபத்தை ஆறப்போடுதல் வேண்டும்.

1

1

27

நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு; நான் எழுதுவதற்கு காரணம் உண்டு.

1

1

28

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை

2

பகுதி – 3 – பிரிவு - 1

29

Ø  சோலைக் காற்று :              மின் விசிறிக் காற்றே ! நலமா?

Ø  மின் விசிறிக் காற்று :         நான். நலம். உனது  இருப்பிடம் எங்கே?

Ø  சோலைக்காற்று :            அருவி, பூஞ்சோலை, மரங்கள். உனது இருப்பிடம் எங்கே?

Ø  மின் காற்று :           அறைகளின் சுவர்களின் இடையில். எனது இருப்பிடம்.

Ø  சோலைக்காற்று :            என்னில் வரும் தென்றல் காற்றை அனைவரும் விரும்புவர்.

Ø  மின்  காற்று :          விரும்பியவர்கள் மின் தூண்டுதல் மூலம் என்னைப்

Ø                                         பெறுவர். எண்ணிக்கையின் அடிப்படையில் வேகம்

Ø                                        கொள்வேன்.

Ø  சோலைக் காற்று :              இலக்கியங்களில் நான் உலா வருவேன். அனைவரும்

Ø                                        விரும்பும் விதமாக இருப்பேன்.

Ø  மின் காற்று : நான் இல்லாமல் அலுவலகம் இல்லை. மின்சாரம் இல்லையெனில் நான் இல்லை.  என்னை விரும்பும் நேரங்களில் இயக்கிக் கொள்ளலாம்.

1

1

1

30

அ) ஐந்து     ஆ) காற்றுள்ள போதே மின்சாரம் எடுத்துக் கொள்

இ) தமிழகம்

3

31

இடம்: மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமைமாநகராட்சி சிறப்புக் கூட்டம்

பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகராக சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து முழங்கிய முழக்கம் இது.

விளக்கம் : இதன் பொருட்டு ம.பொ.சி. சென்னையை மீட்க தலைக்கொடுத்தேனும் தலைநகர் காப்போம் என முழங்கினார்.

3

பகுதி -3 / பிரிவு - 2

32

Ø  அன்னை மொழியானவள்.

Ø  அழகான செந்தமிழானவள்.

Ø  பழமைக்கு பழமையாய் தோன்றிய நறுங்கனி.

Ø  பாண்டியன் மகள்.

Ø  திருக்குறளின் பெருமைக்கு உரியவள்.

Ø  பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்களையும் கொண்டவள்.

3

33

Ø  உயிர் பிழைக்கும் வழி

Ø  உடலின் தன்மை

Ø  உணவைத் தேடும் வழி

Ø  காட்டில் செல்லும் வழி

3

34அ

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.           கா.ப.செய்கு தம்பி பாவலர்

3

34ஆ

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;

பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும்;                                               -இளங்கோவடிகள்

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

Ø  ஆற்றுநீர்ப் பொருள்கோள்

Ø  விளக்கம் : பாடலின் தொடக்கம் முதல் இறுதி வரை நேராகப் பொருள் கொள்ளுமாறு அமைவது.

பொருத்தம் : முயற்சி ஒருவனுக்கு செல்வத்தைப் பெருக்கும். முயற்சி இல்லாதிருந்தால் வறுமை சேரும். இக்குறள் தொடக்கம் முதல் இறுதி வரை நேராக பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளது

3

36

Ø  அகவல் ஓசை பெற்று வரும்.

Ø  ஈரசைச்சீர் குறைவாக காய்ச்சீர் மிகுதியாக வரும்.

Ø  ஆசிரியத்தளை மிகுதியாக வரும்.

Ø  வெண்டளை,கலித்தளை விரவி வரும்.

Ø  மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கு ஏற்ப முடியும்.

Ø  ஏகாரத்தில் முடிவது சிறப்பு.

3

37

சீர்

அசை

வாய்பாடு

வன்-கண்

நேர்+ நேர்

தேமா

குடி-காத்-தல்

நிரை+ நேர்+நேர்

புளிமாங்காய்

கற்-றறி-தல்

நேர்+ நிரை+நேர்

கூவிளங்காய்

ஆள்–வினை-யோ

நேர்+ நிரை+நேர்

கூவிளங்காய்

டைந்-துடன்

நேர்+ நிரை

கூவிளம்

மாண்-ட

நேர்+ நேர்

தேமா

தமைச்சு

நிரைபு

பிறப்பு

3

பகுதி - 4

38

குறிப்புச் சட்டம்

முன்னுரை

ஆற்றுப்படுத்துதல்

இன்றைய நிலை

முடிவுரை

முன்னுரை:

ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும், கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதைக் காணலாம்.

ஆற்றுப்படுத்துதல் :

·         நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதல் ஆற்றுப்படை

·         மற்றொரு கூத்தனை நெறிப்படுத்துவதாக அமைந்தது.

இன்றைய நிலை:

·         ஆற்றுப்படுத்துதல் என்பது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியுள்ளது.

·         நோய் குணமாக இந்த மருத்துவரைக் காணுங்கள் என வழிகாட்டுகின்றனர்.

·         மாணவர்களுக்கு கல்வி வழங்கக் கூடிய கல்வி நிலையங்கள், தொண்டு நிறுவனங்களை வழிகாட்டுகின்றனர்.

·         ஏழை, எளியோருக்கு அரசின் உதவிகளைப் பெற வழிகாட்டுகின்றனர்,

·         இன்றைய வழிகாட்டுதல் சூழலில் தன்னார்வ நிறுவனங்கள் பங்கு அளப்பரியது.

·         இன்றைய இணைய வழி வழிகாட்டுதல்கள் எல்லாம் பணம் பெறும் நோக்கமாக மாறி வருகிறது.

முடிவுரை :

        ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையும், கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதைக் கண்டோம்.

5

38ஆ

மருவூர்ப்பாக்க வணிக வீதி

இக்கால வணிக வளாகங்கள்

தானியக் கடைத் தெருக்கள்

தனித்தனி அங்காடிகள்

நேரடி வணிகம்

இடைத் தரகர்கள் அதிகம்

இலாப நோக்கமற்றது

இலாபம் மட்டுமே முக்கியம்

கலப்படம் இல்லாதது

கலப்படம் கலந்துள்ளது

தரம் உண்டு.விலை குறைவு

தரம் குறைவு,விலை அதிகம்

5

39அ

அனுப்புநர்

அ அ அ அ அ,

100,பாரதி தெரு,

சக்தி நகர்,

சேலம் – 636006.

பெறுநர்

ஆசிரியர் அவர்கள்,

தமிழ்விதை நாளிதழ்,

சேலம் – 636001.

ஐயா,

பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல்சார்பு

வணக்கம். நான்  தங்கள் நாளிதழில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் மலரில் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “  எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன்.தாங்கள் அந்த கட்டுரையைப் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இணைப்பு:                                                              இப்படிக்கு,

1. கட்டுரை                                                                                                        தங்கள்உண்மையுள்ள,

இடம் : சேலம்                                                         அ அ அ அ அ.

நாள் : 04-03-2024

உறை மேல் முகவரி:

பெறுநர்

ஆசிரியர் அவர்கள்,

தமிழ்விதை நாளிதழ், சேலம் – 636001

5

39ஆ

அனைவருக்கும் வணக்கம்.

நாட்டு நலப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மாணவர்களை

வாழ்த்துகிறேன்.

சேவை மற்றும் தொண்டு பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட

மாணவர்களுக்கு நன்றி.

மாணவர்களின் உங்களின் இந்த பொது நலத் தொண்டு நாட்டின் வளத்தினை

உயர்த்தும்.

சேவை மனப்பான்மையை வளர்க்கும் நாட்டு நலப் பணித்திட்ட

செயல்பாட்டாளர்களுக்கும், பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் வாழ்த்துகள்.

5

40

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத  

என்னை எழுது என்று

சொன்னது இந்தக் காட்சி

நாய் என் பசியைப் பற்றி எழுது என்றது

சிறுமி என் வறுமையைப் பற்றி எழுது என்றாள்

நான் எழுதுகிறேன் வறுமையிலும்

பிறர் பசிப்போக்குவதே சிறந்தப் பண்பு  என்று

5

41

கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக அனைத்துப் பகுதியினையும் மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக

5

42அ

பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண் மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குகிறது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து ,சுகந்தம் வீசின. காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.

5

42ஆ

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்.

1. அதிகாலையில் எழுதல்.

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்.

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துகொள்வேன்.

3. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துகொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன்.

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்.

5

42

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

1. மீண்டும் மீண்டும்   2.தொடர்ந்து பெய்த மழை  3. பெய்மழை

4.நீருக்கு ஆற்றல் உண்டு 5. ஐம்பூதங்கள்

5

பகுதி - 5

43அ

குறிப்புச்சட்டம்

போராட்டக் கலைஞர்

 பேச்சுக் கலைஞர்

 நாடகக் கலைஞர்

 திரைக் கலைஞர்

இயற்றமிழ்க் கலைஞர் 

முன்னுரை :

        போராட்டக் கலைஞர், பேச்சுக் கலைஞர், நாடகக் கலைஞர், திரைக்கலைஞர், இயற்றமிழ் கலைஞர்  என கலைஞரின் பன்முகத்தன்மையை நாம் இக்கட்டுரையில் காண்போம்.

போராட்டக் கலைஞர் :

Ø  பள்ளி வயதிலியே போராடியவர் கலைஞர்.

Ø  இந்தி திணிப்பை எதிர்த்து போராட மாணவர்களைத் திரட்டி திருவாரூர் வீதிகளில் போராடியவர்.

Ø  வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம் “ எனப் பாடலைப் பாடிக்கொண்டே ஊர்வலம் நடத்தினார்.

பேச்சுக் கலைஞர் :

Ø  தந்தை பெரியார், பட்டுக்கோட்டை அழகிரி, அறிஞர் அண்ணா ஆகியோரின் பேச்சாற்றல் கலைஞரைக் கவர்ந்தது.

Ø  மேடைப் பேச்சில் பெருவிருப்பம் கொண்டவர். நட்பு “ என்னும் தலைப்பில் கலைஞர் ஆற்றிய சொற்பொழிவை பலரும் பாராட்டினர்

நாடகக் கலைஞர் :

Ø  1944 இல் பழநியப்பன்“ என்னும் முதல் நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்.

Ø  சாம்ராட் அசோகன், மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப்பூ, தூக்கு மேடை  முதலிய நாடகங்களை எழுதியுள்ளார்.

Ø  தூக்குமேடை நாடகத்தில்  மாணவராக நடித்து “ கலைஞர் “ என்னும் சிறப்பு பட்டம் பெற்றார்.

திரைக் கலைஞர் :

Ø  ராஜகுமாரி “ திரைப்படம் மூலம் வசன எழுத்தாளாராக அறிமுகமானார்.

Ø  மருதநாட்டு இளவரசி, நாம், பூம்புகார், மந்திரிகுமாரி போன்ற பல படங்களுக்கு கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார்.

 

இயற்றமிழ் கலைஞர்:

Ø  நளாயினி, சித்தார்த்தன் சிலை, சந்தனக் கிண்ணம், தாய்மை, புகழேந்தி முதலிய சிறுகதைகள் எழுதியுள்ளார்.

Ø  ரோமாபுரி பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டி சிங்கம் உள்ளிட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்.

Ø  தொல்காப்பிய பூங்கா, குறளோவியம் முதலிய தமிழ் இலக்கிய நூல்களையும் எழுதி தம் இயற்றமிழ் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

முடிவுரை :

        அரசியல் மட்டுமன்றி, கலைத்துறை, பேச்சுக்கலை, பட்டிமன்றம், கவியரங்கம் என பலத்துறைகளிலும் தன்னுடைய பன்முக ஆற்றலை வெளிப்படுத்தி பல்துறை வித்தகராக விளங்கினார் கலைஞர்.

8

43ஆ

Reserved: விலை ரூ. 60வாசிப்போம்                                                                                               நேசிப்போம்

இதழ் வெளியீடு

இதழ்           :         ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழ்

எழுத்தாளர்   :         ஜெயகாந்தன் ( சிறுகதை மன்னன் )

இப்போது பரபரப்பான விற்பனையில்.....

இது தமிழ்விதை வார இதழ் வெளியீடு.

 

8

44அ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

புயல் வருணனை

அடுக்குத் தொடர்

ஒலிக் குறிப்பு

முடிவுரை

முன்னுரை :

        புயலிலே ஒரு தோணியில் பா.சிங்காரம் எழுதியுள்ள புயல் வருணனை, அடுக்குத் தொடர், ஒலிக் குறிப்பு பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

புயல் வருணனை :

·         கொளுத்தும் வெயில்.

·         மேகங்கள் கும்மிருட்டு.

·         இடி முழக்கம் வானத்தைப் பிளந்தது.

·         மலைத் தொடர் போன்ற அலைகள்.

·         வெள்ளத்தால் உடை உடலை ரம்பமாய் அறுக்கிறது.

அடுக்குத் தொடர் :

·         நடுநடுங்கி

·         தாவித் தாவி

·         குதி குதித்தது

·         இருட்டிருட்டு

·         விழுவிழுந்து

ஒலிக் குறிப்பு :

·         கடலில் சிலுசிலு, மரமரப்பு.

·         ஙொய்ங், புய்ங் ஙொய்ங் புய்ங் ஙொய்ங் புய்ங்.

முடிவுரை :

·         பகல் இரவாகி உப்பக்காற்று உடலை வருடியது.

·         அடுத்த நாள் பினாங்கு துறைமுகத்தை அணுகினார்கள்.

·         இவ்வாறாக வருணனைகளோடு, அடுக்குத் தொடர்களையும், ஒலிக் குறிப்புகளையும் கொண்டு தோணி படும் பாட்டை பா.சிங்காரம் விவரித்துள்ளார்.

8

44ஆ

முன்னுரை

பேரண்டம்

கருந்துளைகள்

தலைவிதி

திரும்புதல்

முடிவுரை

முன்னுரை :

          அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் என்பவருடன் விண்வெளிப் பயணம் மூலம் கிடைத்த கருத்தையும், அனுபவத்தையும் இக்கட்டுரை வாயிலாகக் காணலாம்.

பேரண்டம் :

        இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உருவானது என்பதற்கானச் சான்றுகளைக் கணிதவியல் அடிப்படையில் எங்களுக்கு விளக்கினார்.

கருந்துளைகள்:

        ஞாயிறு ஒரு விண்மீன். ஒரு விண்மீன் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது. இதனால் அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்து கொண்டே செல்கிறது என விளக்கினார்.

கருந்துளைகள்:

        விண்மீனின் ஈர்ப்பெல்லைக்குள் செல்கிற எதுவும், ஒளி கூடத் தப்ப முடியாது. இவ்வாறு உள்ளே சென்ற யாவையும் வெளிவர முடியாததால் இதனை கருந்துளை என்பதனை ஹாக்கிங் விளக்கினார்.

தலைவிதி :

        தலைவிதி ஒன்று இல்லை. தலைவிதி தான் நம்மை தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும் போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறீர்கள்? எனக் கேட்டு எங்களைச் சிந்திக்க வைத்தார்.

திரும்புதல் :

        ஹாக்கிங் அவர்களுடன் விண்வெளிப் பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பல்வேறு விதமான நிகழ்வுகளைக் கண்டும் அவற்றை அறிந்தும் பூமியை வந்தடைந்தோம்.

முடிவுரை :

        ஹாக்கிங் விண்வெளிப் பயணம் விண்வெளியைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு அரிய வாய்ப்பாக எங்களுக்கு அமைந்தது.

8

45அ

சான்றோர் வளர்த்த தமிழ்

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

தமிழின் தொன்மை

சான்றோர்களின் தமிழ்ப்பணி

தமிழின் சிறப்பு

முடிவுரை

முன்னுரை:

        குமரிக்கடல் முனையையும், வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவ திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில்சேர் கன்னியாய் என்றும்திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி,சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம் மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக்கொண்டு சான்றோர் வளர்த்த தமிழ்என்ற தலைப்பில் இக்கட்டுரையில் நாம் காண்போம்.

தமிழின் தொன்மை:

Ø  தமிழின் தொன்மையைக் கருதி கம்பர் என்றுமுள தென்தமிழ் என்றார்.

Ø  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ்.

சான்றோர்களின் தமிழ்ப்பணி:

Ø  ஆங்கில மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச் செய்தார்.

Ø  வீரமாமுனிவர் தமிழில் முதல் சதுரகராதி வெளியிட்டார்.

Ø  தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்கள் ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.

தமிழின் சிறப்புகள்:

Ø  தமிழ் இனிமையான மொழி. பல இலக்கிய, இலக்கணங்களைக் கொண்ட மொழி.

Ø  இயல்,இசை,நாடகம் என முத்தமிழ் உடையது.

Ø  தமிழ் மூன்று சங்கங்களைக் கண்டு வளர்ந்தது.

முடிவுரை:

                குமரிக்கடல் முனையையும், வேங்கட மலை முகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவ திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி,சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம் மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக்கொண்டு சான்றோர் வளர்த்த தமிழ்என்ற தலைப்பில் இக்கட்டுரையில் நாம் கண்டோம்

8

45ஆ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

அறிவிப்பு

அமைப்பு

கரகாட்டம், காவடியாட்டம்

பொய்க்கால் குதிரையாட்டம்

கூத்துகள் அரங்கு

சிற்ப அரங்கு

முடிவுரை

முன்னுரை:

          கிராமப்புற/சிற்றூர் மக்களின் கலை, அழகியல், பண்பாடு ஆகிய்வற்றின் எச்சங்களாக இருப்பவை கலைகள். எங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாகக் காணலாம்.

அறிவிப்பு:

“ கலைத்திருவிழாவிற்கு  வந்தது தூது

இதனையொட்டி எங்கள் ஊர் சேலத்தில் அரசு சார்பில் கலைத்திருவிழா மூன்று நாட்கள் நடப்பதற்கான அறிவிப்பு வந்தது. நிச்சயம் இந்த கலைத்திருவிழா எனக்கு உதவும் என்ற எண்ணத்தில் நான் கண்ட கலைத்திருவிழா நிகழ்வினைக் காணலாம்.

அமைப்பு:

           சேலத்தில் நேரு கலையரங்கத்தில் கலைகளுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நிகழ்கலைகளுக்கான அரங்குகள் எத்திசையில் எங்கெங்கு அமைக்கப்ப்பட்டுள்ளன என்பதற்கான வரைபடமும் இருந்தது.

கரகாட்டம், காவடியாட்டம் :

“ கண்களை கவருது கரகாட்டம்

ஆட துடிக்குது காவடியாட்டம் “

        கலைஞர்கள் பலர் பலவிதமான கரகத்துடன், அழகிய ஒப்பனைகளுடன் ஆடிய கரகாட்டம் கண்ணைக் கவர்ந்தது. தோளில் காவடியைச் சுமந்தவாறு ஒய்யாரமாக ஆடும் காவடியாட்டமும் மனதைக் கவர்ந்தது.

பொய்க்கால்  குதிரையாட்டம்:

பொய்க்கால்கள் கொண்டு ஆடியதோ குதிரையாட்டம்”

                   குதிரை வடிவக் கூட்டுக்குள் இருந்து, பாதத்துக்குக் கீழ் கட்டையைக் கட்டிக் கொண்டு ஆடிய பொய்க்கால் குதிரையாட்டமும் உற்சாகம் தரக்கூடிய நிகழ்த்துகலைகளாக இருந்தன,

கூத்துகள் அரங்கு:

          ஆடல் பாடலுடன் தோலால் செய்த வெட்டு வரைபடங்களைத் திரைசீலையில்  ஒளி  ஊடுருவும் வகையில் நாடகம் போல நிகழ்த்துவது தோற்பாவைக் கூத்து. கூத்துகள் அனைத்தும் சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற கருத்தையொட்டி அமைந்திருந்தது.

சிற்ப அரங்கு :

                                        கல்லிலே கலைவண்ணம் கண்டான்

                                        தன் திறனை அனைவருக்கும் படைத்தான்

    சிற்ப அரங்கில் சென்றால் சுண்ணக்கட்டியில் சிற்பம், காய்கறியில் சிற்பம், களிமண்ணில் சிற்பம், மண்ணில் சிற்பம், சோப்பில் சிற்பம்  என பலவிதங்களில் பல்வேறு விதமான சிற்பங்கள் சிறப்பாகவும், வியப்பாகவும் அமைந்தது.

முடிவுரை:

”ஆவலுடன் அங்கு சென்றேன்

                  அங்கிருந்து  வர மனமில்லாமல் வந்தேன்”

         அரசு நடத்தி வரும் இந்த கலைத்திருவிழா கூடத்தில் பல்வேறு விதமான அரங்குகள் இருந்தன. இந்த அரங்குகள் எல்லாம் சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு ஒரே மையக் கருத்தை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டன.

 

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, வளையசெட்டிப்பட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

CLICK HERE

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

 


1 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

  1. Very Useful Website Sir For Teachers And Students Amazing Job

    ReplyDelete
Previous Post Next Post