பத்தாம் வகுப்பு
அரையாண்டுத் தேர்வு - 2024
தமிழ்
தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி – அரையாண்டுத் தேர்வு -2024
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 15 |
|||||||||||||||||||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|||||||||||||||||||||||||
1. |
ஈ) பாடல், கேட்டவர் |
1 |
|||||||||||||||||||||||||
2. |
ஆ) 3,1,4,2 |
1 |
|||||||||||||||||||||||||
3. |
ஆ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும்
நூல் |
1 |
|||||||||||||||||||||||||
4. |
ஈ) இலா |
1 |
|||||||||||||||||||||||||
5. |
இ) கல்வி |
1 |
|||||||||||||||||||||||||
6. |
இ) குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள் |
1 |
|||||||||||||||||||||||||
7. |
அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது |
1 |
|||||||||||||||||||||||||
8. |
இ) உருவகம் |
1 |
|||||||||||||||||||||||||
9. |
ஈ) ஐந்தாம் |
1 |
|||||||||||||||||||||||||
10. |
இ) 5-6ஆம் |
1
|
|||||||||||||||||||||||||
11.
|
ஆ) அறிவினா |
1
|
|||||||||||||||||||||||||
12
. |
இ) எம்+தமிழ்+நா |
1
|
|||||||||||||||||||||||||
13
. |
அ) பண்புத்தொகை |
1
|
|||||||||||||||||||||||||
14
. |
ஆ) தமிழ்மொழியை |
1
|
|||||||||||||||||||||||||
15
|
இ) வேற்றுமொழியினர் |
1
|
|||||||||||||||||||||||||
பகுதி
– 2 – பிரிவு - 1 |
|||||||||||||||||||||||||||
16 |
ஒல்லியான
தண்டுகளே பெரிய மலர்களைத் தாங்குகின்றன. அதுபோல, மென்மையான அன்பே உலகத்தைத் தாங்குகின்றது |
1 1 |
|||||||||||||||||||||||||
17. |
பொருத்தமான தலைப்புகள் இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம் |
2 |
|||||||||||||||||||||||||
18. |
Ø அறிவைத்
திருத்தி சீராக்குவோம். Ø கல்வி
பெற்று மயக்கம் அகற்றுவோம். |
2 |
|||||||||||||||||||||||||
19 |
சித்தாளுவின்
வாழ்வினைக் கூறுகிறார் நாகூர் ரூமி. |
2 |
|||||||||||||||||||||||||
20 |
வயது
முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து
செய்கிறார். |
2 |
|||||||||||||||||||||||||
21. |
குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை. |
2 |
|||||||||||||||||||||||||
பிரிவு
– 2 – பிரிவு - 2 |
|
||||||||||||||||||||||||||
22 |
ஒரு
பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அளவுக்கு
மீறினால் அமுதமும் நஞ்சு |
1 1 |
|||||||||||||||||||||||||
23 |
நளனும்
அவனது நண்பனும் கீரியும் பாம்பும் போல சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவள்
தனது முத்துப்பற்களால் சிரித்தாள் |
1 1 |
|||||||||||||||||||||||||
24. |
கலைஞர்
முரசொலி ஏட்டைக் கையெழுத்து இதழாகத் தொடங்கினார். கலைஞர் முரசொலி ஏட்டை வார
இதழாக்கினார். |
2 |
|||||||||||||||||||||||||
25 |
அ)
குடந்தை ஆ)
மன்னை |
1 1 |
|||||||||||||||||||||||||
26 |
அ) குறியீட்டியல் ஆ) அழகியல்,முருகியல் |
1 1 |
|||||||||||||||||||||||||
27 |
|
1 1 |
|||||||||||||||||||||||||
28 |
Ø வெண்பாவின்
பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகள் கொண்டது குறள் வெண்பா. எ.கா: எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள்
காண்ப தறிவு. |
2 |
|||||||||||||||||||||||||
பகுதி
– 3 – பிரிவு - 1 |
|||||||||||||||||||||||||||
29 |
அ)
அறம் கூறும் மன்றங்கள் ஆ)
அறம் அறக்கண்ட நெறிமான் அவையம் இ)
துலாக்கோல் போல் நடுநிலையானது. |
1
1 1 |
|||||||||||||||||||||||||
30 |
|
3 |
|||||||||||||||||||||||||
31 |
Ø கல்வித்துறையை
பள்ளிக்கல்வி, உயர்கல்வி
என இரண்டாகப் பிரித்தார். Ø “ தமிழ்
வளர்ச்சித் துறை
“ எனப்
புதியதாக ஒரு துறையை உருவாக்கினார். Ø தமிழ்த்தாய்
வாழ்த்துப்பாடலை அனைத்து
அரசு விழாக்களிலும் தொடக்கப் பாடலாக பாடச் செய்தார். Ø 2010 இல்
கோவையில் “ உலகத்
தமிழ்ச் செம்மொழி மாநாட்டை “ நடத்தி தமிழின் பெருமையை உலகறியச் செய்தார். |
3 |
|||||||||||||||||||||||||
பகுதி
-3 / பிரிவு - 2 |
|||||||||||||||||||||||||||
32 |
|
3 |
|||||||||||||||||||||||||
33
|
அணி
விளக்கம்: சொல்லையும், பொருளையும்
வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை
அணி எனப்படும். எ.கா அன்பும்
அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும்
பயனும் அது அணிப்
பொருத்தம் : இக்குறளில்
அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும்
பயனும் என்ற சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் இது நிரல்நிறை அணி ஆகும். |
3 |
|||||||||||||||||||||||||
34அ |
விருந்தினனாக ஒருவன்
வந்து எதிரின் வியத்தல் நன்மொழி இனிது
உரைத்தல் திருந்துற நோக்கல் வருக
என உரைத்தல் எழுதல் முன் மகிழ்வன செப்பல் பொருந்து மற்றுஅவன்
தன்அருகுற இருத்தல் போமெனில் பின் செல்வதாதல் பரிந்துநன் முகமன்
வழங்கல் இவ்வொன்பான் ஒழுக்கமும் வழிபடும் பண்பே -
அதிவீரராம பாண்டியர் |
3 |
|||||||||||||||||||||||||
34ஆ |
வெய்யோனொளி
தன்மேனியின் விரிசோதியின் மறையப் பொய்யோவெனு
மிடையாளொடு மிளையானொடும் போனான்; மையோமர
கதமோமறி கடலோமழை முகிலோ ஐயோவிவன்
வடிவென்பதொ ரழியாவழ குடையான்.
-கம்பர் |
3 |
|||||||||||||||||||||||||
பகுதி
– 3 / பிரிவு - 3 |
|||||||||||||||||||||||||||
35 |
Ø ஆற்றுநீர்ப்
பொருள்கோள் Ø விளக்கம் : பாடலின் தொடக்கம் முதல் இறுதி வரை நேராகப் பொருள் கொள்ளுமாறு
அமைவது. பொருத்தம் : முயற்சி
ஒருவனுக்கு செல்வத்தைப் பெருக்கும். முயற்சி
இல்லாதிருந்தால் வறுமை சேரும். இக்குறள் தொடக்கம் முதல் இறுதி வரை நேராக பொருள் கொள்ளுமாறு
அமைந்துள்ளது |
3 |
|||||||||||||||||||||||||
36 |
அணி
விளக்கம்: சொல்லையும், பொருளையும்
வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை
அணி எனப்படும். எ.கா அன்பும்
அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும்
பயனும் அது அணிப்
பொருத்தம் : இக்குறளில்
அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும்
பயனும் என்ற சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் இது நிரல்நிறை அணி ஆகும். |
3
|
|||||||||||||||||||||||||
37
|
|
3 |
|||||||||||||||||||||||||
பகுதி
- 4 |
|||||||||||||||||||||||||||
38அ |
முன்னுரை : முல்லைப்பாட்டில்
உள்ள கார்காலச் செய்திகளை நாம் கட்டுரை வடிவில் காணலாம். மழை மேகம் : திருமால் மாவலி மன்னனுக்கு நீர் வார்த்துத் தரும் போது
விண்ணுக்கும் மண்ணுக்கும் பேருருவம் எடுத்தது போல் மழை மேகம் உயர்ந்து நின்றது. மழைப் பொழிவு : கடலின் குளிர் நீரைப் பருகி, மலையைச்
சூழ்ந்து விரைந்த வேகமாய் பெருமழைப் பொழிகிறது. மாலைப் பொழுது : வண்டுகளின் ஆரவாரம் கொண்ட அரும்புகள். முது பெண்கள் மாலை வேளையில் முல்லைப் பூக்களோடு, நெல்லையும் தெய்வத்தின் முன் தூவினர். நற்சொல் கேட்டல் : முதுபெண்கள் தலைவிக்காக கோவிலில் நற்சொல் கேட்டு
நிற்பர். இது விரிச்சி என அழைக்கப்படும். ஆற்றுப்படுத்துதல் : ·
இடைமகள் பசியால் வாடிய இளங்கன்றை காணல். ·
உம் தாயர்
இப்போது வந்து விடுவர் இடையர் எனக் கூறல். ·
முதுப் பெண்கள் இந்த நற்சொல்லை கேட்டல். ·
உன் தலைவன் வந்து விரைந்து வந்துவிடுவான் என
ஆற்றுப்படுத்துதல். முடிவுரை : இவ்வாறு
முல்லைப் பாட்டில் மழைமேகம், மழைப்பொழிவு, மாலைப்
பொழுது, நற்சொல் கேட்டல், ஆற்றுப்படுத்துதல்
என செய்திகளைக் கண்டோம். |
5
|
|||||||||||||||||||||||||
38ஆ |
|
5
|
|||||||||||||||||||||||||
39அ |
சேலம் 03-03-2024 அன்புள்ள நண்பனுக்கு, நான்
நலம். நீ அங்கு நலமா? என
அறிய ஆவல். மாநில அளவில் நடைபெற்ற ” மரம்
இயற்கையின் வரம் “ என்ற
தலைப்பில் கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ
இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன். இப்படிக்கு, உன்
அன்பு நண்பன், அ
அ அ அ அ அ அ . உறைமேல் முகவரி; பெறுதல் திரு.இரா.இளங்கோ, 100,பாரதி தெரு, சேலம்.
|
5 |
|||||||||||||||||||||||||
39ஆ |
அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி தெரு, சக்தி நகர், சேலம் – 636006. பெறுநர் மின்வாரிய அலுவலர் அவர்கள், மின்வாரிய அலுவலகம், சேலம் – 636001. ஐயா, பொருள்: மின்விளக்கு சரி செய்ய
வேண்டுதல்
– சார்பு வணக்கம். எங்கள் தெருவில் 100 குடும்பங்கள் உள்ளன. எங்கள் தெருவில்
மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன.
இதனால்
இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே பழுதடைந்த
மின்விளக்குகளைச் சரி செய்து கொடுக்க வேண்டுமாய்த் தாழ்மையுடன் கேட்டுக்
கொள்கிறேன். நன்றி. இடம் : சேலம் இப்படிக்கு, நாள் : 04-03-2024 தங்கள் உண்மையுள்ள, அ அ அ அ அ. உறை
மேல் முகவரி: பெறுநர் மின்வாரிய
அலுவலர் அவர்கள், மின்வாரிய
அலுவலகம், சேலம் – 636001. |
5 |
|||||||||||||||||||||||||
40 |
|
5 |
|||||||||||||||||||||||||
41 |
கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக
அனைத்துப் பகுதியினையும் மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்து இருப்பின்
முழு மதிப்பெண் வழங்குக |
5 |
|||||||||||||||||||||||||
42அ |
|
5 |
|||||||||||||||||||||||||
42ஆ |
மலர்: தேவி,அறையை விட்டு வெளியே வரும் போது மின்விளக்கை
அணைத்துவிட்டு வா. தேவி: ஆமாம்! நாம் மின்சாரத்தைச் சேமிக்க வேண்டும். மலர்: நம்முடைய தேசம் தெருவிளக்குகளுக்கு அதிக மின்சாரத்தைச்
செலவிடுகிறது. தேவி: யாருக்குத்
தெரியும்? நம்நாடு எதிர்காலத்தில் இரவில் வெளிச்சம் தர செயற்கை
நிலவுகளையும் செலுத்தலாம். மலர்: நான் படித்திருக்கிறேன். வருங்காலத்தில் சில நாடுகள் இதைப் போன்ற செயற்கைக்
கோள்களை ஏவ இருக்கின்றனர் எனப் படித்து இருக்கிறேன். தேவி: அருமையான
செய்தி. நாமும் இது போல் செயற்கை நிலவுகளை ஏவினால், இயற்கைப் பேரழிவின் போது மின்தடை ஏற்படக்கூடிய
இடங்களில் ஒளியை ஏற்படுத்தித் தர இயலும் |
5 |
|||||||||||||||||||||||||
42 |
செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா 1. திருப்பாதிரிப் புலியுர் ஞானியாரடிகள் 2.அம்மானை பாடல்கள், சித்தர் பாடல்கள் 3. கேள்வி ஞானம் 4. திருப்பாதிரிப் புலியுர் ஞானியாரடிகள் 5. இலக்கிய அறிவு |
5 |
|||||||||||||||||||||||||
பகுதி
- 5 |
|||||||||||||||||||||||||||
43அ |
‘ செம்மொழித் தமிழுக்கு வளம்
சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை ‘ குறிப்புச்சட்டம்
தமிழின் இலக்கிய வளம் உலக
இலக்கியங்களில் தமிழின் இலக்கியப் பழமையும் பெருமையும் அழிக்கமுடியாது. தமிழின்
இலக்கிய வளம் மேலும் சிறக்கப் பிறமொழிகளில் சிறந்து விளங்கும் நூல்களைத் தமிழில்
மொழிப்பெயர்க்க வேண்டும். கல்வி மொழி : மொழிபெயர்ப்பை
கல்வி ஆக்குவதன் மூலம், தமிழ்மொழியின் பெருமைகளை பிற மொழியினரும். பிறமொழியின்
சிறப்புகளை தமிழ் மொழியிலும் அறிந்து கொள்ள முடிகிறது. பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்: ·
பிறமொழிகளின் இலக்கியங்களை அறிந்துக் கொள்ளவும், புதிய படைப்புகளை உருவாக்கவும் மொழிபெயர்ப்பு
உதவுகிறது. ·
தாகூர் கீதாஞ்சலி நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தப்
பின் தான் நோபல் பரிசு கிடைத்தது. அறிவியல் கருத்துகள்
பிறதுறைக் கருத்துகள் :
தமிழுக்குச் செழுமை: தேமதுரத்
தமிழ் எங்கும் பரவ வேண்டும். அதற்கு மொழிபெயர்ப்பு அவசியம் வேண்டும். |
8 |
|||||||||||||||||||||||||
43ஆ |
இடம் :
பள்ளி, வகுப்பறை பங்கேற்பாளர்கள் : தமிழாசிரியர், ஜனனி, ஜிவிதா , அஸ்வினி, ஜிவிதா : ஜனனி, அஸ்வினி நமது
தமிழ் ஆசிரியர் அன்றைய வகுப்பில் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் எனக் கூற வந்தார்.
அதற்குள் மணி அடித்துவிட்டது.
இன்று நாம் அவரிடம் முதலில் கேட்டிடுவோம். ஜனனி : ஆம், வந்தவுடன் கேட்கலாம். மாணவர்கள் : வணக்கம். ஐயா, தமிழாசிரியர் : வணக்கம் மாணவர்களே, எல்லோரும்
உணவு உண்டீர்களா? மாணவர்கள் : உண்டோம் ஐயா. ஜிவிதா : ஐயா
நேற்றைய வகுப்பில் மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை கூற வந்தீர்கள்.
அதற்குள் மணி அடித்துவிட்டது. இப்போது கூறுங்கள். ஜனனி, அஸ்வினி: ஆமாம்.
ஐயா. தமிழாசிரியர் : ஆம்.
மூன்று உதாரணங்களுடன் கூறுகிறேன். கேளுங்கள் மாணவர்கள் : கூறுங்கள் ஐயா. தமிழாசிரியர் : 1. மாணவர்கள் கொக்கைப் போல
இருக்க வேண்டும். காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்
கொள்ள வேண்டும். பொறுமை அவசியம். ஜிவிதா : ஐயா, இனிமேல் நாங்கள் அவசரப்படமாட்டோம். தமிழாசிரியர் : அடுத்து, இரண்டாவது கோழியைப் போல குப்பையைக்
கிளறினாலும். தனக்கான உணவினை மட்டும் உட்கொள்வது
போல சமூகத்தில் கெட்டது இருந்தாலும், நல்லதை
மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஜனனி : ஆமாம்
ஐயா, நாங்கள் நல்லதை மட்டுமே எடுத்துக் கொண்டு எங்கள் பண்பினை வளர்த்துக் கொள்வோம். தமிழாசிரியர் : மூன்றாவதாக உப்பைப் போல உணவில் உப்பின் சுவையை
நாக்கு உணர்வதை போல , ஒவ்வொருவரின் வெளித்தோற்றத்தைக் காணாது அவரின் குணநலன்களை ஆராய்ந்து உணர்ந்து பழக வேண்டும். அஸ்வினி : ஐயா, அருமை. மிக சரியாக விளக்கினீர்கள். இனி நாங்கள்
இவ்வாறே நடந்து கொள்வோம். நன்றி ஐயா. |
8 |
|||||||||||||||||||||||||
44அ |
முன்னுரை : பசியென்று
வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற மனித நேயம்
விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின்
விருந்தோம்பலைக் காணலாம். தேசாந்திரி: Ø சுப்பையாவின்
வயலில் அருகு எடுக்கும் பணி. Ø அன்னமய்யாவுடன்
ஒரு ஆள் வந்தான். Ø அவன்
மிக சோர்வாக இருந்தான். Ø லாட
சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான். Ø குடிக்க
தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது. Ø வேப்பமர
நிழலில் சோர்வாக அமர்ந்தான். கருணை
அன்னமய்யா: Ø அவன்
பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான். Ø அன்னமய்யா
ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்துக் கொடுத்தார். Ø கடுமையான
பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான். Ø ஆனந்த
உறக்கம் கண்டான். முடிவுரை: பசியென்று
வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின்
விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது. |
8
|
|||||||||||||||||||||||||
44ஆ |
முன்னுரை: கல்மனதையும் கரைய
வைக்கும் கதை இந்த ஒருவன் இருக்கிறான். இதை இக்கட்டுரையில் காண்போம். குப்புசாமி: Ø குப்புசாமி 25 வயது
வாலிபன்.வயிற்று
வலிக்காரன். Ø உறவினர்கள் இவனை அனாதை
போல நடத்தினார்கள். Ø காரணமில்லாமல் பக்கத்து
வீட்டுக்காரரால் வெறுக்கப்பட்டான் குப்புசாமி. Ø வயிற்றுவலிக்கு
மருத்துவம் பார்க்கச் சென்னை வந்தவன் இந்த குப்புசாமி. பக்கத்து
வீட்டுக்காரர்: Ø பக்கத்து வீட்டுக்காரர்
காரணமில்லாமல் வெறுப்பை அவன் மீது காட்டியவர். அவரின் மனைவி கருணையோடு
இருந்தவர். Ø குப்புசாமிக்கு ஆறுமுகம்
மூலம் கடிதம் வந்தது. ஆறுமுகமும்
தன் பங்காக இரு சாத்துக்குடியும், மூன்று ரூபாய் பணமும்
கொடுத்தார். Ø பக்கத்து வீட்டுக்காரர்
குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதை வீரப்பனின் கடிதம் மூலம் அறிந்தார். கடன்
வாங்கிக் கொடுத்த அந்த மூன்று ரூபாய் அவரின் மனதை மாற்றியது. Ø மனைவியை உடன்
அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல சாத்துக்குடி வாங்க சென்றார். முடிவுரை: எல்லோருக்கும் ஒருவன்
இருக்கிறான். யாரும் அனாதை இல்லை என்பதை இக்கட்டுரையின் மூலம் காணும் போது
மனிதம் துளிர்க்கிறது என்பதனை அறிய முடிகிறது. |
8 |
|||||||||||||||||||||||||
45அ |
முன்னுரை பல்வேறு
கலை நிகழ்ச்சிகள் கரகாட்டமும்,காவடியாட்டமும், வேடம் கட்டி
ஆடும் ஆட்டம் குழுவாக
ஆடும் ஆட்டம் தெருக்கூத்து முடிவுரை
|
8 |
|||||||||||||||||||||||||
45ஆ |
முன்னுரை – பிள்ளைத்தமிழ்
பேசி – சதகம் சமைத்து – பரணிபாடி – கலம்பகம் கண்டு – உலாவந்து – அந்தாதி – கோவை நூலகள்
- முடிவுரை |
|
|||||||||||||||||||||||||
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, வளையசெட்டிப்பட்டி
www.tamilvithai.com
www.kalvivithaigal.com
மேலும் பல்வேறு
கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.
சராசரி
மற்றும் மெல்லக் கற்கும்
மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும்.
மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற
சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும்
போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா
வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக்
கொள்ளவும். நன்றி, வணக்கம்