10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 9 - ANIGAL

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      நவம்பர்

வாரம்              :        நான்காம் வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 9

தலைப்பு          :      அணிகள்


அறிமுகம்                   :

Ø  ஒருவர் தம்மை அழகுப்படுத்திக் கொள்ள எவற்றை எல்லாம் மேற்கொள்வார்? போன்ற வினாக்கள் கேட்டு பாடப்பொருளை ஆர்வமூட்டல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.

நோக்கம்                     :

Ø  அணியிலக்கணக் கூறுகளைச் செய்யுளுடன் தொடர்புப்படுத்தி அதன் சுவையுணர்ந்து நயத்தல்

 ஆசிரியர் குறிப்பு          :

Ø  பாடப்பொருளை ஆர்வமூட்டல்.

Ø  அணி – என்பதன் விளக்கம் கூறல்

Ø  அணியின் தன்மையினை விளக்குதல்

Ø  பாடப்பகுதியில் உள்ள அணியின் வகைகளை விளக்குதல்.

Ø  உரிய உதாரணங்களுடன் அணி பொருத்தத்தை விளக்குதல்

Ø  மாணவர்களுக்கு புரியும் வண்ணம் உதாரணங்களை கூறி விளக்குதல்

கருத்துரு வரைபடம்              :

அணிகள்

விளக்கம்    :

            அணிகள்

·         செய்யுளினை அழகு செய்வது அணி

·         தற்குறிப்பேற்ற அணி :

      • இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது

o    தீவக அணி :

§  தீவகம் – விளக்கு

§  செய்யுளின் ஓர் இடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவது.

§  முதல் நிலை தீவகம்

§  இடைநிலை தீவகம்

§  கடைநிலை தீவகம்

o    நிரல் நிறை அணி :

§  நிரல் – வரிசை  நிறை – நிறுத்துதல்

§  சொல்லையும்,பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப் படியே இணைத்துப் பொருள் கொள்வது.

o    தன்மை அணி :

§  இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு கூறுவது.

§  பொருள் தன்மையணி

§  குணத் தன்மையணி

§  சாதித் தன்மையணி

§  தொழிற்தன்மையணி

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø அணியைப் பற்றி அறிதல்

Ø அணியின் தன்மையினை அறிதல்

Ø தற்குறிப்பேற்ற அணியினை அறிதல்

Ø தீவக அணியை அறிதல்

Ø நிரல் நிறை அணியை அறிதல்

Ø தன்மையணியை அறிதல்

மதிப்பீடு                      :

LOT :

Ø  அணி என்பதன் பொருள் யாது?

Ø  ஒரு செய்யுளை அழகுற சொல்வதற்கு பயன்படுவது எது?

                MOT :

Ø  இயல்பாக நிகழும் நிகழ்வின் மீது கவிஞர் தம் கற்பனையினை மிகைப்படுத்திக் கூறும் அணி எது?

Ø  தன்மை அணிக்கு நடைமுறை உதாரணத்தைக் கூறுக

                HOT :

Ø  தீவக அணியை நடைமுறை வாழ்வியலோடு எவ்வாறு ஒப்பிடலாம்?

Ø  ஏதேனும் ஒரு அணியின் தன்மையினைக் கொண்டு ஒரு கவிதைக் கூறுக

கற்றல் விளைவுகள்                  :         அணிகள்

T1049 அணியிலக்கணக் கூறுகளைச் செய்யுளுடன் தொடர்புப்படுத்தி அதன் சுவையுணர்ந்து நயத்தல்.

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post