அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் , அன்பு மாணவச் செல்வங்களுக்கும் கனிவான வணக்கம். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன்- 6 முதல் துவங்க உள்ளன. மாணவர்கள் அனைவரும் இந்த கல்வி ஆண்டில் நன்றாக பயின்று அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற அன்புடன் வாழ்த்துகிறது உங்கள் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம்.
2024 -25 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் ஒரு பாடம் மாற்றபட்டுள்ளது என்பது எத்தனை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிந்துள்ளீர்கள்?. ஆம் இந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் - 6 இல் உரைநடை உலகம் மாற்றப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு நிகழ்கலை என்ற பாடத்தலைப்பில் கரகாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தெருக்கூத்து, தேவராட்டம்,புலி ஆட்டம், தோற்பாவைக் கூத்து என்ற தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகள் பற்றி தகவல்கள் அடங்கிய பாடம் இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு இந்த பாடத்தின் சுருக்கமான கருத்துகள் கொண்ட உரைப்பத்தி மட்டும் மொழியோடு விளையாடு பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த உரைப்பத்தியிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. மேலும் கலைகளில் வல்லவரான ஆளுமைமிக்க ஒருவரைப் பற்றி பாடம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தான் கலைஞர் மு.கருணாநிதி. கலைஞரின் கலைத்தன்மையை எடுத்துரைக்கும் விதமாக பன்முகக் கலைஞர் என்ற தலைப்பில் பாடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த பாடப்பகுதியில் என்னென்னத் தலைப்புகள் இடம் பெற்றுள்ளன என்பதனை நீங்கள் அறிந்துக் கொள்ளவும், பாடம் நடத்துவதற்கு ஏற்ற வளங்களை நீங்கள் உருவாக்கிக் கொள்ளவும் உங்களுக்கு அந்த பன்முகக் கலைஞர் என்ற உரைநடை உலகம் பாடப்பகுதி மட்டும் இங்கு PDF வடிவில வழங்கப்பட்டுள்ளது.
மாற்றப்பட்ட புதிய பாடத்தினை பதிவிறக்கம் செய்ய : CLICK HERE
மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இந்த ஆண்டு அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண்பெற ஏதுவாக இளந்தமிழ் வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இளந்தமிழ் வழிகாட்டி அனைத்து மாணவர்களும் படித்துப் பயன் பெற ஏதுவாக மீத்திற மாணவர்களுக்கும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. இளந்தமிழ் வழிகாட்டியானது புதிதாகச் சேர்க்கப்பட்ட பன்முகக் கலைஞர் பாடப்பகுதியில் இடம் பெற்ற வினாக்களுக்கும் விடைகள் வழங்கப்பட்டுள்ளது. ( இயல் 6 இல் பாடநூலில் பல்வேறு வினாக்கள் மாற்றப்பட்டுள்ளன. அனைத்து வினாக்களுக்கும் விடைகள் வழங்கப்பட்டுள்ளன ) இளந்தமிழ் வழிகாட்டி பற்றிய தகவல்களுக்கு 8072426391 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். இந்த மாற்றியமைக்கப்பட்ட புதிய வழிகாட்டியின் மாதிரி பக்கங்களை நீங்கள் நமது கல்விவிதைகள் வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். சென்ற ஆண்டு இளந்தமிழ் வழிகாட்டியினை வாங்கி ஊக்கம் அளித்த அத்துணை ஆசிரியப் பெருமக்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு.... அதே ஊக்கத்தை இந்தாண்டும் வழங்க வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறேன்.
இளந்தமிழ் புதிய வழிகாட்டியின் மாதிரிப் பக்கங்கள் பதிவிறக்கம் செய்ய :
CLICK HERECLICK HERE