அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளின் கனிவான வணக்கம். அரசு பொதுத் தேர்வு வினாத்தாளில் இரண்டு மதிப்பெண் பகுதியில் பிரிவு 2 இல் கலைச் சொல் கட்டாயம் இடம் பெறுகிறது, 9 இயல்களில் உள்ள கலைச்சொற்களை மாணவர்கள் படித்தால் நிச்சயம் 2 மதிப்பெண் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். மீத்திற மாணவர்கள் கலைச்சொற்கள் படிப்பதில் சிரமம் ஏற்படுவதில்லை. ஆனால் மெல்லக் கற்கும் மாணவர்கள் கலைச்சொற்கள் படிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மெல்ல கற்கும் மாணவர்கள் அந்த ஆங்கிலத்தில் உள்ள கலைச்சொற்களை சொற்களை பிரித்து படித்தால் அவர்கள் எளிமையாகப் புரிந்துக் கொள்வர். இங்கு இயல் வாரியாகக் கொடுக்கப்பட்டுள்ள கலைச்சொற்களை நகல் எடுத்து மாணவர்களுக்கு கொடுத்து பயிற்சி மேற்கொண்டால் மாணவர்கள் நிச்சயம் 2 மதிப்பெண் எடுக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இந்த கலைச்சொற்களை A4 தாளில் தனித்தனியே நகல் எடுத்து வகுப்பறையில் ஒட்டி வைக்கும் போது மாணவர்கள் அவற்றை தினமும் கண்ணால் கண்டு வாசிக்கும் போது அவர்கள் மனதில் இருத்திக் கொள்வர். எனவே ஆசிரியர்கள் இவற்றை நகல் எடுத்து பயிற்சி மேற்கொள்ளும் போது அவர்கள் நிச்சயம் இந்த பகுதியில் 2 மதிப்பெண் முழுமையாகப் பெற இயலும்.
மெல்லக் கற்போர் கலைச்சொற்களை வாசிப்புக்கு ஏற்ற வகையில் தனித்தனி சொற்களாக பிரித்து கொடுத்து அவற்றை மாணவர்களுக்கு பயன்படுத்தும் விதமாக நமது வலைதளத்திற்கு கொடுத்து உதவிப் புரிந்த ஆசிரியர் திரு. இராஜா - பட்டதாரி ஆசிரியர் ( தமிழ் ) அவர்களை மனதார பாராட்டி பெருமைக் கொள்கிறது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம்
மெல்லக் கற்போர் கலைச்சொற்கள்
இயல் - 1 - click here
இயல் - 2 - click here
இயல் - 3 - click here
இயல் - 4 - click here
இயல் - 5 - click here
இயல் - 6 - click here
இயல் - 7 - click here
இயல் - 8 - click here
இயல் - 9 - click here