சேலம்: கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிவுற்றது. தமிழ் மற்றும் இதரப் பாடங்களுக்கு அச்சுப்பிழை மற்றும் இதர பிழைகள் காரணமாக சில வினாக்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் ஏப்ரல் 10ம் தேதி திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதிலும் 20 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கும் பணிகள் நடந்து முடிந்தன.
இதனை அடுத்து திட்டமிட்ட்படி மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகள் வெளியிடும் போது மாணவ மாணவிகள் ஏற்கனவே தேர்வுத்துறைக்குத் தெரிவித்த கைப்பேசி எண்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இது தவிர மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி, மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள், பொது நூலகம் ஆகியவற்றிலும் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் இது தவிர அரசுத் தேர்வு இயக்கத்தின் இணைய தளங்களான
WWW.RESULTS.NIC.IN
WWW.DGE.TN.GOV.IN
போன்ற இணைய தளங்களிலும் தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் தேர்வு முடிவுகளை கீழ் உள்ள இணைப்பின் வழியாகவும் தெரிந்துக் கொள்ளலாம்.
RESULT DIRECT LINK 1