10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 1 - IRATTURA MOZHITHAL

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

மாதம்             :      ஜூன்

வாரம்              :        முதல் வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      இரட்டுற மொழிதல்


அறிமுகம்                   :

Ø  சில சிலேடை பேச்சுகளைக் கூறி ஆர்வமூட்டல்

Ø  உரைநடையின் சில நயங்களைக் கூறி ஆர்வமூட்டல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                     :

Ø  வேறுபட்ட கவிதை வடிவங்களைப் படித்து பொருளுணர்தல்

Ø  இரட்டுற மொழி அறியும் பாங்கினை அறிதல்.

ஆசிரியர் குறிப்பு           :

Ø  சிலேடை அணி பற்றி கூறல்

Ø  ஆசிரியர் பற்றிய குறிப்புகளைக் கூறல்

Ø  செய்யுளினை சீர்பிரித்து வாசித்தல்

Ø  செய்யுளில் கூறப்பட்டுள்ள கருத்துகளை கொண்டு தமிழை கடலோடு ஒப்பிடல்

Ø  தற்கால உரைநடையில் பயன்படுத்தும் நயங்களை உணர்ந்து கூறல்

Ø  நயங்களின் பொருளை கூறல்

கருத்துரு வரைபடம்              :

இரட்டுற மொழிதல்



விளக்கம்    :

               இரட்டுற மொழிதல்

Ø  தமிழ் மொழி கடலோடு ஒப்பிடப்படும் பாங்கினை கூறல்

Ø  தமிழழகனார் பற்றிய குறிப்பினை அறிதல்

Ø  செய்யுளின் பொருள் புரிந்து அதன் சிலேடை நயம் உணர்தல்

Ø  தமிழ் – முத்தமிழ், முச்சங்கம் எனக் கண்டது, ஐம்பெரும் காப்பியங்கள் கொண்டது,சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.

Ø  கடல் – முத்து,அமிழ்து தருகிறது, மூன்று வித சங்குகளை தருகிறது. சங்குகளை அலைகள் தடுத்து காக்கிறது.

Ø  உரையாடலின் சிறப்பினை அறிதல்

Ø  தமிழில் காணப்படும் சில நயங்களை இன்றைய வாழ்வியல் சூழலோடு ஒப்பிடல்

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø செய்யுளினை சீர்ப் பிரித்து படித்தல்

Ø செய்யுளில் காணப்படும் நயங்களை இனம் காணுதல்

Ø பாடலின் பொருளை அறிதல்

Ø சிலேடையின் தன்மையினை உணர்தல்

Ø உரைநடையில் சிலேடை நயங்களை உணர்தல்

மதிப்பீடு                      :

LOT :

Ø  தமிழ் எதனோடு ஒப்பிடப்பட்டுள்ளது?

Ø  சந்த கவிமணி என அழைக்கப்படுபவர் யார்?

                MOT :

Ø  முத்தமிழ், முச்சங்கம் தொகைச்சொற்களை விரித்தெழுதுக.

Ø  சிலேடை அணி என்பது யாது?

                HOT :

Ø   தமிழை நீங்கள் எதனோடு ஒப்பிடுவீர்கள்?

Ø   உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு சான்றுத் தருக

கற்றல் விளைவுகள்                  :         இரட்டுற மொழிதல்

T1003  மொழி, தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரும் நுட்பத்தையும் அதன் நயங்களையும் அறிந்து முறையாக மொழியைப் பயன்படுத்துதல்.

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post