www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூன்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : தமிழ்ச்சொல்வளம்
அறிமுகம் :
Ø
தமிழ்மொழியின் சிறப்புகளை
வலையொளி காட்சிப் பதிவுகள் மூலம் காண்பித்து பாடப்பொருளை ஆர்வமூட்டல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø
தமிழ் சொல் வளங்கள் அறிதல்.
Ø
சொல் வளங்களை பேச்சிலும், எழுத்திலும் இடமறிந்து கையாளுதல்.
ஆசிரியர் குறிப்பு :
Ø தமிழ் சொல் வளங்களைப் பற்றி கூறல்.
Ø தமிழ்மொழிப் பற்றி கால்டுவெல் கூற்றுப் பற்றிக் கூறல்.
Ø கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தமிழ்ச்சொல்
வளத்தில் இடம் பெறும் சொற்களை கூறல்
Ø அருகில் உள்ள மரங்களைக் கொண்டு கிளைப்பிரிவுகளை
கூறல்.
Ø பூவின் நிலைகளைக் கூறல்
Ø பழத்தோல் வகைகளைக் கூறல்
Ø கெட்டுப்போன காய்கனிகளுக்கு வழங்கும் பெயர்களைக் கூறல்
கருத்துரு வரைபடம் :
தமிழ்ச்சொல் வளம்
விளக்கம் :
தமிழ்ச்சொல்வளம்
·
தேவநேய பாவாணர் – குறிப்பு
·
தமிழ் பற்றி கால்டு வெல் கூற்று
·
தமிழ்ச்சொல் வளம்
·
அடிவகை,கிளைப்பிரிவுகள், காய்ந்தவை,
இலைவகை, கொழுந்து வகை,
·
பூவின் நிலைகள்
·
பிஞ்சு வகை, குலை வகை
·
கெட்டுப்போன காய் வகை
·
மணிவகை
·
இளம் பயிர்வகை, சம்பா நெல் வகை…..
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø பாடப்பகுதியினை வாசித்தல்
Ø புதிய சொற்களை அடையாளம் காணுதல்
Ø புதிய சொற்களுக்கு பொருள் அறிதல்
Ø மரங்களைக் கொண்டு தமிழ்ச் சொல்வளம் பாடப்பகுதியில்
கூறப்பட்டுள்ள சொற்களை அறிதல்
Ø சில உண்மைப் பொருட்கள் மூலம் தமிழ் சொல் வளத்தின்
சொற்களைக் காணல்
Ø தேவநேயபாவணர் பற்றி அறிதல்
மதிப்பீடு :
LOT :
Ø உலக
தமிழ்க்கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர் ________
Ø திராவிட
மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் ____
MOT :
Ø தாவரத்தின்
அடி வகை குறிக்கும் சொற்கள் யாவை?
Ø பூவின்
நிலைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?
HOT
:
Ø தமிழின் சிறப்புகளாக நீங்கள் கருதும் கருத்துகளைத்
தொகுக்க.
Ø பிஞ்சு வகை சொற்களைக் கொண்டு ஐந்து தொடர்களைக்
கூறுக
கற்றல் விளைவுகள் : தமிழ்ச்சொல் வளம்
T1002 மொழியிலுள்ள வகைப்படுத்தப்பட்ட சொல்வளங்களின் பொருளையும்,
நுட்பத்தையும் பேச்சிலும் எழுத்திலும் இடமறிந்து கையாளுதல், புதிய சொற்களை உருவாக்கி
எழுதுதல்.
தொடர் பணி
:
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை