9TH-TAMIL-ANNUAL EXAM-2024-ANSWER KEY

 

 சேலம் – ஆண்டு இறுதித் தேர்வு  -மார்ச் -2024

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  3.00 மணி                                                                   மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஆ. தொல்காப்பியம்

1

2.

ஈ. கெடுதல்

1

3.

ஆ. செய்தித் தொடர்

1

4.

இ. சிற்றிலக்கியம்

1

5.

ஈ. தொகைச்சொற்கள்

1

6.

ஆ. பிப்ரவரி - 21

1

7.

ஈ. மதுரை

1

8.

இ. கணியன் பூங்குன்றனார்

1

9.

அ. மாமல்லபுரம்

1

10.

ஈ.மோகன்சிங்

1

11.

ஆ.வீரமாமுனிவர்

1

12 .

அ. ஓரெழுத்து

1

13 .

ஈ. திருக்குறள்

1

14 .

ஆ. தொடு உணர்வு

1

15

ஆ.1856

1

 

 

பிரிவு - ஆ

 

16

இனிய

1

17

பெரிய ( அ ) கொடிய

1

18.

நல்ல

1

19

மெதுவாக

1

20

அழகாக

1

பகுதி - 2

21

அ. சோழநாட்டின் எந்தப் படை வலிமையானது?

ஆ. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் எது?

1

1

22

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

  ஆன்ற பெருமை தரும்.

2

23

இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை.

2

24

தம்மை இகழ்பவரையும் பொறுப்பது சிறந்தது

2

25

மத்தளம் முழங்க,சங்குகள் ஊத,மதுசூதனன் எனப் பெயர் பெற்ற கண்ணன் புகுந்த பந்தலில் முத்துகள் உடைய மாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன

2

26

பெண் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத்திருமணம். அதனைத் தடுக்கும் நோக்கத்தில் 1929ம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது.

2

பிரிவு - 2

27

வீணையோடு வந்தாள்     – வேற்றுமைத் தொடர்

கிளியே பேசு                    – விளித்தொடர்

1

1

28

அ. அகழாய்வு

ஆ. நடுகல்

1

1

29

வந்தான் – வா(வ) + ந்(த்)+த்+ஆன்

வா – பகுதி; வ என குறுகியது விகாரம்

த் – சந்தி – ந் ஆனது விகாரம்

த் – இறந்தகால் இடைநிலை

ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

2

30

அ. 32 – ௩௨

ஆ. 61 – ௬௧

1

1

31

ஏற்புடைய தொடர் இருப்பின் மதிப்பெண் வழங்குக

1

1

32

Ø  இன்று கணினியில் வலம் வந்து உலக நாடுகள் எல்லாம் அறிந்த மொழியாக மாறி வருகிறது.

Ø  மேலும் பல்வேறு விதமான கலைச் சொல் உருவாக்கப்பட்டும் காலந்தோறும் தம்மைப் புதுப்பித்துக் கொள்கிறது தமிழ்மொழி

1

1

33.

அ. பவளவிழிதான் பரிசுக்கு உரியவள்

ஆ. குழலிக்கும் பாடத் தெரியும்

2

பகுதி – 3

34

அ. ராமேஸ்வரம்

ஆ.ஏவுகணை, ஏவுகணை ஏவு ஊர்தி தொழில் நுட்ப வளர்ச்சியில் கலாம் காட்டிய ஈடுபாட்டினால்  இவர் இந்திய ஏவுகணை நாயகன் எனப் போற்றப்படுகிறார்.

இ. பாரத ரத்னா

3

35

·         நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலைகளைப் பெருகச் செய்தல் வேண்டும்.

·         நிலத்துடன் நீரைக் கூட்டியோர் மூவகை இன்பத்தையும், நிலைத்த புகழையும் பெறுவர்

3

36

Ø  சென்னைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்துப் பட்டம் பெற்ற முதல் பெண் மருத்துவர்.

Ø  சென்னை மாகாண சட்டப்பேரவையில் முதல் பெண் உறுப்பினர்.

Ø  சட்டப்பேரவையின் துணைத் தலைவர் பதவியை வகித்த முதல் பெண்மணி.

Ø  சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர்.

3

பகுதி -3 / பிரிவு - 2

37

அ. சிறுபஞ்சமூலம்

ஆ. எதிர்மறை தொழிற்பெயர்

இ. காரியாசான்

3

38

·         விளக்குகளையும், கலசத்தையும் ஏந்தியவாறு கண்ணனை இளம் பெண்கள் எதிர்கொண்டு அழைத்தார்கள்.

·         கண்ணன் நடந்து வருகின்றான். இசைக்கருவிகள் முழங்குகின்றன.சங்குகளை ஊதுகின்றனர்.

·         கண்ணன் முத்துமாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் தன்னைத் திருமணம் செய்து கொள்கிறான்.

·         இக்காட்சிகளை ஆண்டாள் கண்டது.

3

39

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு

மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை

கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன

 நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்*- சேக்கிழார்

3

39

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே

 ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

ஆறறி வதுவே அவற்றோடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே*   -   தொல்காப்பியர்

3

பகுதி – 3 / பிரிவு - 3

40

பரி – குதிரை; பறி – பறித்தல்

வாழை – மரம் ; வாளை – மீன்

கரை – ஆற்றின் ஓரப் பகுதி ; கறை - அழுக்கு

3

41

விளக்கம் : தாம் கூறக் கருதியப் பொருளை மற்றொரு பொருளுடன் ஒப்பிட்டுக் கூறுவது.

பொருத்தம் : பிறருக்கு உதவாமலும், ஒருவராலும் விரும்பப்படாதவனும்      பெற்ற செல்வம் ஊரின் நடுவில் உள்ள பழுத்த நச்சுமரத்திற்கு ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது.

உவமானம் : பிறருக்கு உதவி செய்யாதவன்

உவமேயம் : ஊரின் நடுவில் உள்ள நச்சு மரம்

உவம உருபு : தற்று

உவமை அணிக்கு பொருத்தமான எவ்வித சான்றுக்கும் மதிப்பெண் வழங்கலாம்

3

42  

சீர்

அசை

வாய்பாடு

தன்-குற்-றம்

நேர்- நேர்- நேர்

தேமாங்காய்

நீக்-கிப்

நேர் – நேர்

தேமா

பிறர்-குற்-றம்

நிரை-நேர்-நேர்

புளிமாங்காய்

காண்-கிற்-பின்

நேர்- நேர்- நேர்

தேமாங்காய்

என்-குற்-றம்

நேர்- நேர்- நேர்

தேமாங்காய்

ஆ-கும்

நேர்- நேர்

தேமா

இறைக்கு

நிரைபு

பிறப்பு

பிறப்பு என்னும் வாய்பாட்டில் குறள் முடிந்துள்ளது.

3

பகுதி - 4

43அ

ü  முத்திக் கனியே ! முத்தமிழே ! உன்னோடு  மகிழ்ந்து சொல்லும் விண்ணப்பம் உண்டு கேள்.

ü  புலவர்கள் குறம், பள்ளு பாடி தமிழிடமிருந்து சிறப்பு பெறுகின்றனர். அதனால் உனக்கும் பா வகைக்கும் உறவு உண்டு.

ü  தமிழே ! சிந்தாமணியாய் இருந்த உன்னைச் சிந்து என்று அழைப்பவர் நா இற்று விழும்.

ü  தேவர்கள் கூட மூன்று குணங்கள் தான் பெற்றுள்ளனர். ஆனால் தமிழே! நீ மட்டும் பத்து குணங்களைப் பெற்றுள்ளாய்.

ü  மனிதர் உண்டாக்கிய வண்ணங்கள்  கூட ஐந்து தான்,. ஆனால் தமிழே ! நீ மட்டும் நூறு வண்ணங்களைப் பெற்றுள்ளாய்.

ü  உணவின் சுவையோ ஆறு தான். ஆனால், தமிழே ! நீயோ ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய்.

ü  மற்றையோர்க்கு அழகு ஒன்று தான். ஆனால் தமிழே! நீயோ எட்டு வகையான அழகினைப் பெற்றுள்ளாய்.

5

43ஆ

·         இலக்கியச் சான்றுகளுடன் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

5

44அ

நாள்,இடம்

விளித்தல் பகுதி

விளக்கக் கடிதம்

இப்படிக்கு

உறைமேல் முகவரி

5

44ஆ

அனுப்புதல்

பெறுதல்

விளித்தல்

பொருள்

விளக்கக் கடிதம்

இப்படிக்கு

நாள், இடம்

உறைமேல் முகவரி

5

45

மையக்கருத்து

திரண்டக் கருத்து

எதுகை நயம்

மோனை நயம்

இயைபு நயம்

பொருள் நயம்

5

46

காட்சிக்கு பொருத்தமான கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

பகுதி - 5

47அ

அட்டைப் பயன்படுத்தம் இயந்திரம்:-

ü  வங்கி அட்டையைக் கொண்டு இன்று தேவைப்படும் போது தானியங்கு பண இயந்திரம் மூலம் பணம் பெறமுடிகிறது.

ü  இதன் காரணமாக கால விரயம் தவிர்க்கப்படுகிறது.

ü  மேலும் இந்த அட்டை மூலம் பல்வேறு விதமான இணைய வழிச் சேவைகளைப் பெறமுடிகிறது.

ü  சமையல் எரிவாயு முன்பதிவு, இரயிலில் முன்பதிவு, திரையரங்கு காட்சி முன்பதிவு, அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வுக்கான கட்டணம் என எல்லாவற்றிற்கும் இந்த அட்டையைக் கொண்டு எளிதில் பணம் செலுத்திவிட முடிகிறது.

ü  வங்கி அனுப்பும் ஒரு முறை பயன்படுத்தும் குறியீட்டைப் பயன்படுத்தி இந்த இணைய வழி சேவைகளைப் பெறலாம்.

திறன் அட்டைக் கருவி:-

·         தமிழகத்தில் குடும்ப அட்டைகள் திறன் அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன.

·         குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதார் எண்கள், அலைபேசி எண், முகவரி ஆகிய விவரங்கள் சேர்த்து திறன் அட்டைகள் வழங்கப்படுகின்றன.

·         நியாயவிலைக் கடையில் திறன் அட்டை விற்பனைக்கருவியில் வருடப்படுகின்றன.

·         அங்கு விற்பனை செய்யப்படும் விவரங்கள் குறிப்பாக பதிவு செய்யப்பட்டு அலைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக வரும்.

8

47ஆ

மொழி

·                மிகப் பழமையான தமிழ்மொழியில் அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் படைக்கப் பட வேண்டும்.

·                ஒரு மொழியின் தேவை அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது.

·                மொழி எளிதில் கற்கக் கூடியதாக அமைய வேண்டும்.

·                அரசியல் ,சமூகம், பொருளாதாரக் கருத்துகளை ஊன்றி படிப்பவர் சுயமரியாதை உணர்ச்சி பெறுவர்.

இலக்கியம்

·                மொழியின் பெருமையும், எழுத்துகளின் மேன்மையும் அவை எளிதில் கற்றக்கொள்ளக் கூடியவனாக இருப்பதை பொறுத்து அமைகிறது.

·                மொழி என்னும் கருவி காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும்.

·                பெரியார் உயிர் எழுத்துகளில் ’ஐ’ என்பதனை ’அய்’ எனவும், ’ஒள’ என்பதனை ’அவ்’ எனவும் சீரமைத்தார்.

 

48 அ

நா..முத்துக்குமார் அவர்கள் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தின் செய்திகளைக் காண்போம்.

·         உலகம் இப்படித்தான் அழ வேண்டும். இப்படி தான் சிரிக்க வேண்டும்.

·         வாழ்க்கை முழுக்க நீ வெவ்வேறு வடித்தில் நடிக்க வேண்டும்.

·         கல்வியில் தேர்ச்சி கொள். இதேநேரம் அனுபவங்களிடம் இருந்து அதிகம் கற்றுக் கொள்.

·         இறக்கும் வரை இங்கு வாழ சூத்திரத்தைக் கற்றுக் கொள்.

·         மாநகரத்தில் வாழும் நீ கொடிய பல தேள் பல வடிவத்தில் இருக்கும், உனக்கான காற்றை நீயே உருவாக்கிக் கொள்.

·         கிடைத்த வேலையை விட, பிடித்த வேலையைச் செய்.

·         யாராவது கேட்டால் இல்ல எனினும் கடன் வாங்கியாவது உதவி செய்.

·         உலகில் மேலானது நட்பு மட்டுமே. நண்பர்களைச் சேர்த்துக் கொள்.

·         உன் வாழ்க்கை நேராகும்

8

44ஆ

முன்னுரை:-

இந்திய விண்வெளித் துறையில் அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாத்துரை, வளர்மதி, சிவன் ஆகியோரின் பங்கு அளப்பரியதாகும். இந்தியர்கள் வானியியல் வல்லமையை வலுப்படுத்தும் பல்வேறு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளித்துறை படைத்துள்ளது.

இஸ்ரோ:-

·           இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பெங்களூரில் உள்ளது. திரு.கே.சிவன் என்பவர் 14.1.2018 முதல் இதன் தலைவராக உள்ளார்,

·           குறைந்த செலவில் தரமான சேவையைக் கொடுப்பதனை நோக்கமாக இஸ்ரோ கொண்டுள்ளது.

·           இதுவரை 45 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

·                இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரிய விண்வெளி ஆய்வு மையத்தில் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது.

சாதனைகள்:-

·       1975-ல் இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆரியப்பட்டா சோவியத் ரஷ்யா உதவியால் விண்ணில் செலுத்தப்பட்டது. விக்ரம் சாராபாய் இதற்கு மூல காரணம் ஆவார்

·       1980-ல் முதல் செயற்கைக் கோள் ரோகிணி விண்ணில் ஏவப்பட்டது.

·       சந்திராயன்-1 நிலவை நோக்கி 2008-ல் விண்ணில் ஏவப்பட்டது.

·       நேவிக் என்ற செயலியைக் கடல் பயணத்திற்கு உருவாக்கியிருக்கிறது.

முடிவுரை:-

நம் நாட்டிற்கு தேவையான செயற்கைக் கோளை விண்ணில் அனுப்பி நம் தேவைகளை நிறைவு செய்வதே இஸ்ரோவின் செயல்பாடு.

8

49அ

முன்னுரை

நோய் வரக்காரணம்

நோய் தடுப்பு முறைகள்

வருமுன் காப்போம்

மாசுபாடு காரணங்கள்

விழிப்புணர்வு

முடிவுரை

மேற்கண்ட குறிப்புகளில் பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

8

45ஆ

ஏழைகளின் ஊட்டி - ஏற்காடு

         கடந்த 2018 சனவரி மாதம் இயற்கை எழில் கொஞ்சும் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடுக்கு நான் சுற்றுலா சென்றிருந்தேன்.அந்த அழகான பயண அனுபவங்களை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

       சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து  பேருந்தில் சென்றோம். மலைகளின் இருபுறமும் எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளைக் காண இரு கண்கள் போதாது. அங்கு சென்ற பின்

   ஏற்காடு படகு இல்லம்,

   சீமாட்டி இருக்கை,

   பகோடா உச்சி,

   பூங்கா,

    காவேரி சிகரம்,

   சேர்வராயன் மலை உச்சி என அனைத்து இடங்களும் மனதை கொள்ளைக் கொள்கிறது. எத்தனை அழகு. என்றும் நினைவை விட்டு அகலாது ஏற்காடு.

8

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும். சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

 KINDLY WAIT FOR 10 SECONDS

TO GET PDF


 

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post