8TH-TAMIL-ANNUAL EXAM-2024-ANSWER KEY

 

 சேலம் – ஆண்டு இறுதித் தேர்வு  -2024

எட்டாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  3.00 மணி                                                                            மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஆ. கல்வி

1

2.

அ. ஒரு பைசாத் தமிழன்

1

3.

இ. ஊக்கம்

1

4.

ஆ. வனைதல்

1

5.

அ. வேற்றுமைத் தொகை

1

6.

அ. மதிய உணவுத் திட்டம்

1

7.

ஈ.குணங்களெல்லாம்

1

8.

ஆ. வெம்மை + கரி

1

9.

இ. கைகுலுக்கிக்

1

10.

அ. தலை

1

II) கோடிட்ட இடம் நிரப்புக

11.

சுதந்திர தொழிலாளர் கட்சி

1

12 .

சேலம்

1

13 .

வீரமாமுனிவர்

1

14 .

தாயாக

1

15

அறிவியல்

1

III.பொருத்துக

16

பத்துப்பாட்டு

1

17.

கெடுதல் விகாரம்

1

18.

செப்பலோசை

1

19

மேன்மை

1

IV.அடிமாறாமல் எழுதுக

20

கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்

மற்றோர் அணிகலம் வேண்டாவாம் – முற்ற

முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே

அழகுக்கு அழகு செய் வார்       - குமரகுருபரர்

3

20.

ஓடி வந்து கைகுலுக்க

ஒருவருமில்லையா?

உன்னுடன் நீயே

கைகுலுக்கிக் கொள்!

தூங்கி விழுந்தால்

பூமி உனக்குப்

படுக்கையாகிறது

விழித்து நடந்தால்

அதுவே உனக்குப்

பாதையாகிறது.

3

21

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு

2

பிரிவு - 2

22

 மரபுகளை மாற்றினால் பொருள் மாறிவிடும்.

2

23

மகாதேவ் அம்பேத்கர் என்ற ஆசிரியர் தன் மீது அன்பும், பற்றும் கொண்டவராக இருந்தமையால் அவரைப் பெயரைத் தம்பெயராக மாற்றிக் கொண்டார்

2

24.

கைக்குழந்தைகளாக

2

25

நல்ல சிந்தனை, சிறப்பான செயல், உயர்வான பேச்சு, உவப்பான எழுத்து, பாராட்டத்தக்க உழைப்பு

2

26

பணத்தின் மீது பற்று வைப்பதே காரணம்

2

27

பண்பு – பாடறிந்து ஒழுகுதல்

அன்பு – தன்கிளை செறாஅமை

1

1

28.

நடுநிலையில் நின்று ஆட்சி செய்வதே சிறந்த ஆட்சி

2

29.

தாய்மொழியைக் கொண்டே பிறக்கிறது

2

பகுதி – 3

30

பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்கள் முற்று வினை அல்லது வினைமுற்று என்பர்.

2

31

நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்ற மும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும். (எ.கா.) தாய் + மொழி = தாய்மொழி (இரு சொற்களிலும் எம்மாற்றமும் நிகழவில்லை. )

2

32

நான்கு வகைப்படும்

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா

2

33

அ. கொக்கரிக்கும்                  ஆ. உண்

2

34.

அ.                              ஆ. ௫

2

VII. எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளி

36

1.     சரியான உணவு

2.    சரியான உடற்பயிற்சி

3.    சரியான தூக்கம்

இவை மூன்றும் உங்களை நலமாக வாழ வைக்கும்.

3

37

·         ஒளி வீசும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலன்களுக்கு மேலும் அழகுப்படுத்த வேறு அணிகலன்கள் தேவையில்லை.

·         கல்விகற்றவருக்கு கல்வி அழகு தரும். அவரை அழகுபடுத்தும் வேறு அணிகலன்கள் தேவையில்லை.

3

38

மட்டக் கூடை, தட்டுக்கூடை, கொட்டுக்கூடை, துடைப்பம், மூஞ்சிப்பெட்டி, பழக்கூடை, பூத்தட்டு, புல்லாங்குழல், தொட்டில், பாடை

3

39

நாம் சோர்ந்து தளர்ந்தால் பூமி நம் நோய்ப்படுக்கையாகிவிடும்.நாம் கிளர்ந்து எழ வேண்டும். அப்போது நமக்குப் பூமி பாதையாகும்.

3

40

·         விடுதலை என்பது ஆட்சி மாற்றம் மட்டுமன்று

·         மக்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்.

·         சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவது அன்று.

·         மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

·         மக்கள் வாழ்க்கையில் மாற்றம் உண்டானால் மட்டுமே நாடு முன்னேறும்.

3

41

இரு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பின் அவற்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை அணி ஆகும்.

3  

VIII. விடையளி

42

  • இல்வாழ்வு என்பது ஏழைகளுக்கு உதவி செய்தல்.
  • பாதுகாத்தல் என்பது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்.
  • அன்பு என்பது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல்.
  • அறிவு என்பது அறிவற்றவர்கள் கூறும் சொற்களைப் பொறுத்தல்.
  • செறிவு என்பது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.
  • நிறை என்பது மறைபொருளை அழியாமல் காத்தல்.
  • முறை என்பது குற்றம் செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல்பொறை என்பது தம்மை இகழ்பவரையும் பொறுத்தல்.

5

42  

i) நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது.

(ii) விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது. கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது. குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது.

5

43அ

7, தெற்கு வீதி,

மதுரை-1

11-03-2023.

அன்புள்ள மாமவுக்கு,

        நலம் நலமறிய ஆவல். நான் .மாநில அளவில் நடைபெற உள்ள இயற்கை என்றும் தலைப்பில் கட்டுரைப்போட்டியில்  கலந்துக் கொண்டுள்ளேன். எனவே எனக்கு அவைசார்ந்த புத்தகங்களை வாங்கி அனுப்புமாறு அன்போடு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,

உங்கள் உண்மையுள்ள

க.தளிர்மதியன்.

உறைமேல் முகவரி:

பெறுதல்

     த.கோவேந்தன்,

     12,பூங்கா வீதி,

     சேலம்-4

5

43ஆ

இருப்பிடச் சான்று வேண்டி விண்ணபித்தல்

அனுப்புதல்

பெறுதல்

விளித்தல், பொருள்

விளக்கக் கடிதம்

இப்படிக்கு

நாள், இடம்

உறைமேல் முகவரி

5

44

அ. உடன்

ஆ. பொருட்டு

இ.இருந்து

ஈ. காட்டிலும்

உ. உடைய

5

45

4. அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்

2. தொண்டைமான் படையெடுத்து வரும் செய்தியை அதியமான் ஒளவைக்கு தெரிவித்தல்

1 . தொண்டைமானிடம் ஒளவை தூது போதல்

3. ஒளவைக்கு தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்

6. தொண்டைமானிடம் ஒளவை அதியமானின் படைச்சிறப்பைக் குறிப்பால் உணர்த்துதல்

5. தொண்டைமான் போர் வேண்டாம் என்று முடிவு செய்தல்

5

46

படத்திற்கு பொருத்தமான சொற்கள் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

47அ

i) வேர்பாரு; தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே’ என்றனர் சித்தர்கள்.

(ii) வேர், தழையால் குணம் அடையாதபோது சில நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் உலோகங்களையும் பாஷாணங்களையும் சித்த மருந்துகளாக நம் முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

(iii) அந்தக் காலத்தில் எப்படி மூலிகைகளை மருந்தாகப் பார்த்தார்களோ அப்படியே தாதுப்பொருட்களையும், உலோகத்தையும் பார்த்தார்கள்.

(iv) அவற்றை மருந்துகளாக மாற்றும் வல்லமை சித்தமருத்துவத்தில் இருந்திருக்கிறது.

(v) ஒரு மருந்தை எடுத்துக்கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும்; பக்கவிளைவும் இருக்கும். ஆனால் தமிழர் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை. அதற்குக் காரணம் மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது.

(vi) ஒரு கவளம் சோற்றை உடல் எப்படி எடுத்துக்கொள்கிறதோ, அப்படியே தான் சித்த மருத்துவத்தின் லேகியத்தையும், சூரணத்தையும் உடல் எடுத்துக்கொள்ளும்.

(vii) அதனால் உணவு எப்படி பக்கவிளைவுகளைத் தருவதில்லையோ அதே போலச் சித்த மருந்துகளும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை.

viii) தமிழர் மருத்துவத்தின் சிறப்பு என்னவென்றால், தனித்துவமான பார்வை இதன் முதல் சிறப்பு; இரண்டாவது சூழலுக்கு இசைந்த மருத்துவம் இது. இந்த மருத்துவத்தின் பயன்பாடோ, மூலக்கூறுகளோ, மருந்துகளோ சுற்றுச்சூழலைச் சிதைக்காது.

(ix) மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால், நோய்க்கான சிகிச்சையை மட்டும் சொல்லாமல், நோய் மீண்டும் வராமலிருப்பதற்கான வாழ்வியலையும் சொல்கிறது.

(x) அதாவது நோய்நாடி நோய் முதல் நாடி’ என்ற திருக்குறளின்படி நோயை மட்டுமன்றி, அதன் காரணிகளையும் கண்டறிந்து ஒருவரை நோயில்லாத மனிதராக்குகிறது.

8

47ஆ

(i) வாழ்விற்கு உரிய இன்பத் துறைகளில் காவிய இன்பமும் ஒன்று. அதுவே முதன்மையானது என்றும் கூறலாம்.

(ii) நாம் தமிழர்கள், நாம் பாட்டு இன்பத்தை நுகர வேண்டும். அதற்காகத் தமிழ் இலக்கியங்களுக்கு இடையே செல்ல வேண்டும். தமிழில் இலக்கியங்கள் பலப்பல இருக்கின்றன.

(iii) இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு, இயற்கை இன்பக்கலம் கலித்தொகை, இயற்கை வாழ்வில்லம் திருக்குறள், இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும், இயற்கைத் தவம் சிந்தாமணி, இயற்கைப் பரிணாமம் கம்பராமாயணம், இயற்கை அன்பு பெரிய புராணம், இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக திருவாய் மொழிகள்.

(iv) இத்தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்திலும் வரும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது.

(v) இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள். தமிழ் இன்பத்தில் சிறந்த இன்பம் இவ்வுலகில் உண்டோ ? தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள் என்று திரு. வி. க. காப்பியக் கல்வி பற்றிக் கூறுகிறார்.

 

8

48அ

முன்னுரை :
ஒரு மாணவனின் உள்ளத்தில் ஆசிரியர் விதைத்த விதை எவ்வாறு பயன் தந்தது என்பதை இக்கதை மூலம் காணலாம்.

காணாமல் போன வேட்டி :
ஒரு சிற்றூர் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர். எளிய குடிசை வீடுதான் அவருடைய வீடு. ஒருநாள் காலை தனது எட்டு முழ வேட்டியைத் தும்பைப் பூவைப்  போலத் துவைத்து கொடியில் காயப் போட்டு விட்டு, பள்ளிக்குச் சென்றிருந்தார். பள்ளி முடிந்து வந்து பார்க்கும்போது, அந்த வேட்டியைக் காணவில்லை.

ஊர் மக்கள் கூற்று :
கிணற்றில் பல முறை தண்ணீர் எடுப்பதற்குச் சிகாமணி தான் அந்தப் பக்கம் அடிக்கடி வந்தான். எல்லோரும் வேலைக்குப் போய் இருந்த நேரத்தில், அவன் அந்த வேட்டியை எடுத்து இருப்பான். சிகாமணியின் தந்தை பண்டுக் கிழவர். இவனும் ஒரு திருடன். இவன் மகனும் ஒரு திருடன் என்று ஊரார் கூறினார்கள்.

திருக்குறள் வகுப்பு :
சிகாமணியின் மகன் சகாதேவன். அவனும் அந்த ஆசிரியரின் பள்ளியில்தான் நான்காம் வகுப்பு படிக்கின்றான். வேட்டி விஷயத்தை அந்தப் பையனிடம் அவர காட்டிக்கொள்ளவில்லை
.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு’

என்னும் குறளை ஆசிரியர் நடத்தத் தொடங்கினார். சிறந்த குடியில் பிறப்பது யார் கையில் உள்ளது? எனவே, திருவள்ளுவர் அப்படிக் கூறியிருக்க மாட்டார். அப்பன் திருடனாக இருக்கலாம், மகன் நல்லவனாக இருப்பான் என்று விளக்கம் தந்தார்.

சகாதேவன் செயல் :
மதிய உணவிற்காக ஆசிரியர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞன் ஆசிரியரின் வேட்டியைக் கொண்டு வந்தான். இதனைச் சகாதேவன் கொடுத்ததாகவும் தாங்கள் நடத்திய பாடத்தால், அப்பா திருடி வைத்திருந்த உங்களுடைய வேட்டியை அவன் கொடுக்கச் சொன்னான் என்றான். ஊரார் ஒன்று கூடி விட்டனர்.

ஆசிரியரின் எண்ணம் :
சிகாமணிதான் திருடன் என்பதை, அவன் மகன் சகாதேவன் சொல்லிவிட்டான். ‘அவனுக்குத் தண்டனை வாங்கி கொடுக்கலாம் வாருங்கள்’ என்று ஆசிரியரை ஊரார் அழைத்தனர். சிகாமணிக்குத் தண்டனை கிடைத்தால், சகாதேவனுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று ஆசிரியர் எண்ணினார். ஊரார் எவ்வளவு கூறியும் ஆசிரியர் ஏற்றுக் கொள்ளவில்லை. என் வீட்டில் திருடு போகவில்லை என்று நான் சாட்சியம் சொல்வேன் என்றார். மக்களுக்கு எல்லாம் புரிந்தது.

முடிவுரை :
வள்ளுவரின் குறட்பாக்கள் ஒருவரின் மனதை மாற்றம் செய்யும் என்பதில் ஐயமில்லை ” என்பதை இக்கதை வாயிலாக நாம் அறிய முடிகின்றது. உலகப் பொதுமறை கற்று, அதன் வழி நடப்போம்.

8

48 ஆ

மனிதனின் படைப்பு விசித்திரமானது. அதிலும் குழந்தை பிராயம் மிகவும் அழகானது. குழந்தை கிருஷ்ணாவின் உள்ள அழகு பற்றி இக்கதையின் மூலம் பார்க்கலாம்.

குழந்தை கிருஷ்ணா பிஞ்சுவிரல், வெள்ளரிப் பிஞ்சாக முகம், சிறகு போன்ற இமைகள், கண்ணாடி போன்ற விழிகள், பூ போல் உதடுகள், ஒளியரும்புகளான பற்கள், நுங்கு நீரின் குளிர்ச்சியான குரல், தெய்வ வடிவான அழகு, முகம் உலகைப் புரிந்து கொள்ள முயலும் மனவளர்ச்சிக்கான சிந்தனைச் சாயல். இந்த ஒட்டு மொத்த இணைப்புதான் கிருஷ்ணா.

சன்னலைப் பிடித்தவாறு தெருவில் பார்த்த கிருஷ்ணா தன் அம்மாவிடம் குப்பைத் தொட்டியோரம் இருந்த சொறிநாயைக் காட்டினாள். அம்மா அது அசிங்கம் என்றும் தன் வீட்டில் இருக்கும் டாமி அழகானது, சுத்தமானது’ என்றும் கூறினாள். மேலும் ‘அதனைத் தொடக்கூடாது, அப்பா திட்டுவார்’ என்றும் கூறினாள். கிருஷ்ணா , “திட்டவில்லையென்றால் தொடலாமா?” என்று கேட்டாள். கிருஷ்ணாவிற்குத் தெரு நாயும், வீட்டு நாயும் வேறில்லை.

வீட்டுவாசலில் கீரைவிற்கும் கிழவியைப் பார்த்ததும் உற்சாகமாக சென்ற கிருஷ்ணாவை அம்மா “அவளைத் தொடாதே உடம்பு சரியில்லாதவள்” என்று கூவினாள். அக்கண்டிப்பில் 3 திகைத்த கிருஷ்ணா “அப்பாவுக்கு உடம்பு சரியில்லாதப்போ நீ தொடவில்லையா சித்தப்பா?” என்று கேட்டாள்.

கிருஷ்ணா சித்தப்பாவுடன் காந்தி மண்டபத்துக்குச் சென்று விட்டுத் திரும்பி வரும் 5 போது ஒருவர் காலில் செருப்பில்லாமல் நிறைந்த பாரத்துடன் கைவண்டியை இழுத்துச் செல்வதைப் பார்த்தாள். அவருக்குக் கல்குத்தும், வெயில் சுடும் எனக் கவலைப்பட்டாள். தன் சித்தப்பாவிடம் “உன் செருப்பைக் கொடுத்து விடு, நீதான் பூட்ஸ் வச்சிருக்கியே” என்றாள்.

அடுத்த நாள் காலையில் தெருவை ஒட்டிய வராந்தாவில் மழையின் குளிர் தாங்காமல் இரண்டு சிறு ஆட்டுக்குட்டிகள் நிற்பதைக் கண்டாள். உடனே கிருஷ்ணா, கைக்குழந்தையின் அருகில் வைத்திருந்த பால் புட்டியை எடுத்து வந்து ஒரு குட்டியின் வாயில் வைத்து அதற்குப் பால் ஊட்டினாள். அதைக் கண்ட அம்மாவும், அப்பாவும், சித்தப்பாவும் வியப்புடன் நின்ற னர்.

தெருநாயும் வீட்டு நாயும் வேறில்லை என்ற சமரச நோக்கம், கீரை விற்கும் பாட்டியிடம் காட்டிய பாசம், வண்டி இழுக்கும் மனிதரின் துன்பதைக் கண்டு பொறுக்காத மனம், ஆட்டுக்குட்டியிடம் காட்டிய கருணைப் பரிவு இவையெல்லாம் குழந்தை கிருஷ்ணாவின் சிறப்பு பண்புநலன்கள்.

ஆனால் அவள் எட்டு வயதில் தன் தம்பி தெருநாய்க்குப் பால் சாதம் பேடுவதைத் தவறு எனக் கூறுகிறாள். கல்லடிப்பட்ட ஆட்டுக்குட்டியைப் பார்த்துக் கைகொட்டி நகைக்கிறாள். கூலியாள் குடிக்கத் தண்ணீர் கேட்டால், “எப்பவும் இங்கேதான் வருவாயா? நான் தரமாட்டேன்” என்று கூறுகிறாள். இதையெல்லாம் கிருஷ்ணாவின் அம்மா ஏற்றுக் கொள்கிறார்.
உலகச்சூழல் ஒவ்வொரு குழந்தையையும் மாற்றிவிடுகிறது.

8

49 அ

நான் விரும்பும் கவிஞர்

முன்னுரை:     

          இருபதாம் நூற்றாண்டின் விடிவெள்ளி, புதுமைக் கவிஞர், தேசியக் கவி, மகாகவி எனப் பாராட்டப்பட்டவர் நம் பாரதியாரே ஆவார்.

பிறப்பும் இளமையும்                                                                 .       

பாரதியார் எட்டயபுரத்தில் 11.12.1882 ஆம் நாளில் பிறந்தார். இவரின் பெற்றோர் சின்னசாமி, இலக்குமி அம்மையார் ஆவார். சிறிய வயதிலேயே கவிதை புனையும் திறமையைப் பெற்றார். தமது பதினோறாம் வயதில் பாரதி என்னும் பட்டம் சான்றோர்களால் வழங்கப்பட்டது

விடுதலை வேட்கை: 

'பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு' என்றார். இப்படிப்பட்ட நம் உயர்ந்த பாரதம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருப்பதைஎண்ணி 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என பாடினார். வெள்ளையரின் அடக்கு முறைக்கு அஞ்சாது விடுதலை உணர்வு மிக்க பாடல்களைப் பாடி மக்களைத் தட்டி எழுப்பினார்.

ஒருமைப்பாட்டுணர்வு:

 எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்திய மக்கள் என்றார். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே எனப் பாடி மக்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தினார்.

மொழிப்பற்று:

          பல மொழிகளைக் கற்றிருந்த பாரதி யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றுதமிழின்சிறப்பைஎடுத்துரைத்தார்.

 நாட்டுப்பற்று                                                                                                                                                           .                    பாரதத் தாயின் அடிமைத்தனத்தை தகர்த்தெறிய இவர் எழுதிய பாடல்கள் இளைஞர்களைவீறு கொண்டு எழச் செய்தது. சமுதாயத் தொண்டு: சாதிக் கொடுமைகள், பெண்ணடிமை, சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவை இந்நாட்டிலிருந்து விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மதவெறிப் பிடித்து அலைபவர்களின் போக்கினைக் கண்டித்தார்.

படைப்புகள்: 

பாரதியார் எண்ணற்ற கவிதை, உரைநடை நூல்களைப் படைத்துள்ளார். குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், ஞானரதம், தராசு போன்ற எண்ணற்ற படைப்புகளைப் படைத்துள்ளார்.

முடிவுரை: 

 வளமான, வலிமையான பாரதத்திற்குத் தேவையான சிறந்த வழிகள் யாவும் அவருடைய பாடல்களில் உள்ளன. அவற்றை பின்பற்றினால் அவர் கனவு கண்ட பாரதத்தை நம்மால் உருவாக்க முடியும்.

8

49ஆ

முன்னுரை

நோய்வரக் காரணங்கள்

நோய் தீர்க்கும் வழிமுறைகள்

வருமுன் காத்தல்

உணவே மருந்து

உடற்பயிற்சியின் தேவை

முடிவுரை

எனும் தலைப்பில் எழுதி இருக்க வேண்டும்

8

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும். சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

 

 KINDLY WAIT FOR 10 SECONDS

TO GET PDF




நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post