6TH-TAMIL-3RD TERM-EXAM-2024 - ANSWER KEY

 

சேலம் – மூன்றாம் பருவத் தேர்வு  -2023

ஆறாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  2.00 மணி                                                                            மதிப்பெண் : 60

பகுதி – 1

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                          5 × 1 = 5

1.

அ. சிற்பக்கூடம்

1

2.

ஆ.மதுரை

1

3.

அ. தம்முயிர்

1

4.

ஈ.உழைக்க

1

5

ஆ. ஆசியஜோதி

1

II) பொருத்துக                                                                                                           3 × 1 = 3

6

சென்னை

1

7

பாரதியார்

1

8

அருவி

1

9

ஜி.யு.போப்

 

III). எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளி                             6× 2 = 12

11 .

காளிதாசன் , கம்பன்

2

12.

தொண்டு செய்பவராக தம்மை ஆக்கிக்கொண்டால் இன்ப நிலை தானே வந்து சேரும்.

2

13

புல்லாங்குழல் ஆகிறோம்.

2

14

பாத்திரத்தில் இட்ட உணவு எடுக்க எடுக்க குறையாது வளர்ந்து கொண்டே இருக்கும்.

2

15.

இல்லாதவர்க்கு தருவதே ஈகை ஆகும். மற்றவை எல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்பவை ஆகும்.

2

16.

இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவது மன்னனாலும் முடியாத செயல்.

2

17.

அ. மனிதநேயம்      ஆ. தன்னார்வலர்

2

IV. எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளி                                 3×2= 6

18

ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி

2

19.

நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப்பெயர்கள் ஆகும். (எ.கா.) மண்மரம்காற்று

2

20.

ஆ. வளையல்

2

21

எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது சொல்

2

V. அடிமாறாமல் எழுதுக                                                                     4 +2 =6

22

*புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப்

புன்னகை செய்த பொற்காலம்!

கல்லைக் கூட காவிய மாக்கிக்

கட்டி நிறுத்திய கலைக்கூடம்!       (புதுமைகள்)

அன்னை நாட்டின் அமுத சுரபியில்

அன்னிய நாடுகள்பசிதீர

அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி

அறத்தின் ஊன்று கோலாக

 புதுமைகள் செய்த தேசமிது

 பூமியின் கிழக்கு வாசலிது!*

ஆ)

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

  நன்னயம் செய்து விடல்.

5

VI. 23.பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி                                   5× 1 = 5

I)

வ.உ.சிதம்பரனார்

 

II)

பாரதியார்

1

III)

பாரதியார்

1

IV)

எழுத்தாளர்,வழக்கறிஞர்,பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர்

1

V)

தமிழ்,ஆங்கிலம்

1

VII. ஏதேனும் ஒன்றனுக்கு விடையளிக்க                                                     1×5=5

24அ

Ø  சிவகங்கையை இழந்து எட்டு ஆண்டுகள் ஆகிறது.

Ø  மைசூரிலிருந்து ஐதர் அலியின் ஐயாயிரம் குதிரை படை வந்து விட்டது.

Ø  வேலு நாச்சியார் ஐதர் அலியிடம் உருது மொழியில் பேசினார்.

Ø  முதலில் காளையார் கோவில் கைபற்றுதல்.

Ø  ஆண்கள் படைப்பிரிவுக்கு மருது சகோதரர்களும், பெண்கள் படைப்பிரிவுக்கு குயிலியும் தலைமை ஏற்றனர்.

Ø  விசயதசமி நாளில் படைகள் உள்ளே நுழையலாம் என வேலுநாச்சியார் கூறினார்.

Ø  உடையாளுக்கு நடுகல் நடப்பட்டது.

Ø  வேலுநாச்சியார் படைகள் உள்ளே சென்று ஆங்கிலேயர் படையைத் தோற்கடித்தது.

Ø  சிவகங்கை மீட்கப்பட்டது.

5

24.ஆ

முன்னுரை :

மாரி என்பவர் காலணி தைக்கும் ஒரு தொழிலாளி. அவர் பசியால் வாடிக்கொண்டிருந்தார். திடீரென ஒரு விசித்திரக் காலணியின் மூலம் செல்வந்தர் ஆனார். அதன் கதையைக் காண்போம்.

மாரி :

திரையரங்கு வாசலில் அவர் காலணி தைத்துக் கொண்டிருப்பவர். அன்றைக்கு பலத்த மழை. டீ குடிப்பதற்கு கூட காசு இல்லை.அன்று தான் அந்த அதிசயம் நடந்தது. 

சிறுமியின் காலணி :

தியேட்டரின் வலப்புறச் சந்தில் இருந்து சிறுமியொருத்தி அவர் அருகில் வந்து ஒரு காலணியைக் கொடுத்துத் தைத்து வைக்கும்படிக் கூறிவிட்டுச் சென்றாள்.. காலணி கொடுத்துவிட்டு சென்ற சிறுமி சாயங்காலம் வரை வரவில்லை.

மாரியின் ஏமாற்றம் :

அடுத்த நாள் மாரி அந்தக் காலணியைத் துடைத்துதனது நீலநிற விரிப்பில் வைத்துவிட்டு வேலையைத் தொடங்கினார். அன்றும் அந்தச் சிறுமி வரவில்லை. மறந்துவிட்டாளாஇல்லை யாரிடம் கொடுத்தோம் எனத் தெரியாமல் அலைகிறாளாஎன்று எண்ணியபடி அன்றும் அக்காலணியை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இப்படியே. பல நாட்கள் கழிந்தன.

மாரியின் மனைவி :

மாரியின் மனைவி ஓர் இரவில் அந்தக் காலணியைக் கண்டாள் அதன் வசீகரம் அவளை ஈர்த்தது. அதனைப் போட்டுப் பார்த்தாள். அளவில் சிறியதாக இருந்தாலும் அவளுக்குச் சரியாக இருந்தது. மனைவியைத் திட்டி விட்டு காலணியை எடுத்துப் பார்த்தார் கிழியவில்லை. சிறுமியின் காலணி மனைவிக்குப் பொருந்தியதை எண்ணி வியந்தார்

காலணியின் விசித்திரம் :

மறுநாள் மாரி அவருடன் தொழில் செய்பவரிடம் இந்தக் காலணியின் விசித்திரம் பற்றிக் கூறினார் அவரும் போட்டுப் பார்த்தார் பொருத்தமாக இருந்தது. இச்செய்தி நகர் முழுவதும் பரவியது சிறியவர் முதல் முதியவர் வரை அந்தக் காலணி அனைவருக்கும் பொருந்தியது.

மீண்டும் வந்த சிறுமி :

ஒரு மழை இரவில் பார்வையாளர்கள் வந்து சென்றதும் மத்திய வயதில் ஒரு பெண் நனைந்தபடி நின்றிருந்தாள். அவள் தணிவான குரலில் சொன்னாள். “வெகு தாமதமாகிவிட்டது எனது காலணியைத் தைத்துவிட்டீர்களா இல்லையா?” என்றாள். அவளை அடையாளம் கண்டு கொண்டார் மாரி “வலது காலணியை தைக்கக் கொடுத்தது நினைவிருக்கிறதா?” என்றாள். மாரி தன்னிடம் இருந்த காலணியைக் காட்டினார். “இந்தக் காலணி உலகின் எல்லாப் பாதங்களுக்கும் பொருந்துகிறது” என்று கூறினார்.

சிறுமியின் செயல் :

அவள் இரு காலணிகளையும் தரையிலிட்டுக் காலில் அணிய முயன்றாள். அவள் கொண்டு வந்த இடது காலணி பொருந்தியது தைத்து வாங்கின வலது காலணி பொருந்தவில்லை சிறியதாக இருந்தது.

5

VIII. ஏதேனும் ஒன்றனுக்கு விடையளிக்க                                                1×5=5

25அ

·         எங்குப் பார்த்தாலும் வெண்மணல் குன்றுகள். பூத்துக் குலுங்கும் செடிகொடிகள்.

·         அடர்ந்த மரங்கள்.

·         இடையிடையே பொய்கைகள்.

·         மனதை மயக்கும் காட்சிகள்

5

25ஆ

சிறுவன் ஒருவன்,"பணம் இல்லாததால் அச்சிறுவன் பள்ளிக்கு வரவில்லை. வீட்டின் உணவுத் தேவையை நிறைவு செய்யப் பணம் வேண்டும். எனவே அவன் பணம் ஈட்ட வேலை பார்க்கிறான்" என்ற பதில் கிடைத்தது. அந்தப் பதில் அவருக்கு மிகுந்த மன வருத்தத்தைக் கொடுத்தது. அவருடைய மனித நேயம் பிற்காலத்தில் அவரைப் பள்ளி செல்லாத குழந்தைகள் மேல் பரிவு கொள்ள வைத்தது. அதற்காக அவர் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்னும் இயக்கத்தைத் தொடங்கினார்

5

VIII. ஏதேனும் ஒன்றனுக்கு விடையளிக்க                                                                        1×5=5

26அ

அனுப்புநர்

க. இளவேந்தன்

 மாணவச்செயலர்,

10ஆம் வகுப்பு ’ஆ’ பிரிவு,

 அரசினர் உயர்நிலைப்பள்ளி,

  கோரணம்பட்டி,

பெறுநர்

  மேலாளர்,

  தமிழ்விதைப் பதிப்பகம்,

  சென்னை-600 001.

பெருந்தகையீர்,

சுமார் 500 மாணவர்கள் படிக்கும் எங்கள் பள்ளிக்கு தமிழ்மொழியில் உள்ள அருஞ்சொற்களின் பொருளை அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம் அகராதியின் பத்துபடிகளை எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

நாள் : 01-09 -2021     

இடம்: கோரணம்பட்டி                                                   தங்கள் உண்மையுள்ள,

                                                                               க.இளவேந்தன்.

                                                                           (மாணவர் செயலர்)

உறைமேல்  முகவரி:

மேலாளர்,

தமிழ்விதைப் பதிப்பகம்,

சென்னை-600 001

5

26ஆ

Ø  எளிமை

Ø  தூய்மை

Ø  சிக்கனம்

Ø  நேர்மை

Ø  அமைதி

5

VIII.

ஏதேனும் ஒன்றனுக்கு விடையளிக்க                                                                        

7×1=7

27

ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது

1

28

அ) இரக்கம்                  ஆ) பயம்

1

29

இடப்பெயர்

1

30

எண் , நதி

1

31

எல்லோரிடமும் அன்பு காட்ட வேண்டும்

1

32

கனவு, காக்கை, கிளி, கோடு,கெளதாரி

1

33

ன்பர் - இன்பநிலை

1

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும். சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

 

இளந்தமிழ் ஆறாம் வகுப்புக்கான முப்பருவ வழிகாட்டி தயார் நிலையில் உள்ளது.

விபரங்களுக்கு மேல்கண்டுள்ள எண்ணில் தொடர்புக் கொள்ளவும்

 KINDLY WAIT FOR 10 SECONDS

TO DOWNLOAD PDF


நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post