9TH-TAMIL-1ST MID TERM -ANSWER KEY - SALEM DT- PDF

                                                                              
                                                             சேலம் -முதல் இடைத் தேர்வு  -2023
                                                        ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
                                                                        உத்தேச விடைக் குறிப்பு
நேரம் :  1.30 மணி                                                                              மதிப்பெண் : 50

பகுதி – 1

மதிப்பெண்கள் - 8

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

அ. கீழே

1

2.

இ.சிற்றிலக்கியம்

1

3.

ஆ. வந்துவிட்டான்,வரவில்லை

1

4.

ஆ. 28

1

5.

ஈ. தொகைச் சொற்கள்

1

6.

ஈ.புலரி

1

7.

இ. வளம்

1

8.

I) ஆ,அ,இ

1

பகுதி – 2

எவையேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளி

9

வாளை மீன்கள் துள்ளி எழுந்து பாக்கு மரத்தில் பாய்வதற்கு ஒப்பிடுகிறது.

2

10

இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை.

2

11

வீணையோடு வந்தாள்     – வேற்றுமைத் தொடர்

கிளியே பேசு                    – விளித்தொடர்

2

12

மூன்று – தமிழ்               மூணு – மலையாளம்

மூடு – தெலுங்கு            மூரு – கன்னடம்

மூஜி - துளு

2

13

திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது

2

14

அ. நீர் மேலாண்மை                  ஆ. பேரகராதி

1 + 1

15.

அ. திகழ்கிறது                           ஆ) திருத்தினேன்

1 + 1

16

அ. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான். 

ஆ. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.

2

பகுதி – 3

( 22 வது வினா கட்டாய வினா )

17

Ø  மழைக்காலங்களில் ஏரிகள் நிரம்பும் போது நீரினைத் தூர் வார  நீந்துபவர் கழிமுகத்தை அடைந்து, குமிழித்தாம்பினைத் தூக்குவர்

Ø  நீரோடி துளையிலுருந்து நீரும், சேறோடி துளையிருந்து சேற்று நீரும் வெளியேறும்.

Ø  நீரைத் தூர் வார வேண்டி பயன்படுத்தப்பட்டது.

3

18

தன்வினை

பிறவினை

எழுவாய் ஒரு வினையை செய்தல்

எழுவாய் ஒரு வினையை செய்ய வைத்தல்

எ.கா : பந்து உருண்டது

எ,கா: பந்தை உருட்ட வைத்தான்

 அவன் திருந்தினான்

  அவனைத் திருந்தச் செய்தான்

3

19

Ø  குறைகள் சொல்வதை விட்டுவிட்டுப் புதுவடிவெடுத்து தமிழை வளர்ப்போம்.

Ø  அறிவியல் தமிழாய், கணினித்தமிழாய், இணையத் தமிழாய் வளர்ந்துள்ளது.

Ø  பல்வேறுத் துறைகளில் பலவிதமான கலைச்சொற்களை உருவாக்கி தமிழை வளர்த்து வருகிறோம்.

3

20  

மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சு விரட்டு, வேலி மஞ்சு விரட்டு, எருது கட்டி, காளை விரட்டு, ஏறு விடுதல், சல்லிக்கட்டு.

3  

21

Ø  மொட்டைக் கிளையோடு, வெட்ட ஒரு நாள் வரும் என வருத்தமடைந்தது.

Ø  இலைகளும், கிளைகளும் வெந்து கருகியதால் இந்த நிலை வந்ததோ என வருத்தமுற்றது.

Ø  பட்டுக் கருதியதன் காரணமாக கட்டை என பெயர் வந்ததோ என வருத்தமுற்றது.

Ø  மரப்பட்டைகள் எல்லாம் விழுந்ததனால் வருத்தமுற்றது.

3

22

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு

மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை

கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன

 நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்*  - சேக்கிழார்!

3

22

தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான

முத்திக் கனியேஎன் முத்தமிழே – புத்திக்குள்

 உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும்

விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் – மண்ணில்

3

பகுதி – 4

23 அ.

ü  காவிரி ஆறு புதிய பூக்களை அடித்து வர அதனை வண்டுகள் மொய்த்து ஆராவாரம் செய்கின்றன.

ü  நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலை சுருள் விரிந்து. இதனைக் கண்ட உழவர் இது தான் களை பறிக்கும் பருவம் என்று அறிந்தனர்.

ü  காடுகளில் எல்லாம் கரும்புகள் உள்ளன.

ü  வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன.

ü  சோலைகள் எல்லாம் செடிகளின் புதிய கிளைகளில் அரும்புகள் உள்ளன.

ü  பக்கங்களில் எல்லாம் குவளை மலர்கள் உள்ளன.

ü  கரை எங்கும் இளைய அன்னங்கள் உலவுகின்றன.

ü  குளங்கள் எல்லாம் கடல் போல் பெரிதாக உள்ளன.

ü  அன்னங்கள் விளையாடும் நீர் நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள் அருகில் உள்ள பாக்கு  மரங்கள் மீது பாயும் இக்காட்சியை நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில் போன்றுள்ளது.

ü  செந்நெல்லின் சூடுகள், பலவகைப்பட்ட மீன்கள் ,முத்துக்கள், மலர்த் தொகுதிகள் ஆகியவற்றைத் திருநாட்டில் குவித்து வைத்திருந்தனர்.

ü  தென்னை, செருந்தி, அரசமரம், கடம்பமரம்,பச்சிலை மரம், குராமரம், பனை,சந்தனம், நாகம், வஞ்சி,காஞ்சி மலர்கள் நிறைந்த கோங்கு முதலியன எங்கும் திருநாட்டில்.

5

23  

கோரணம்பட்டி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 05-07-23 அன்று வள்ளுவன் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி மாணவ – மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர்.

    பள்ளித் தலைமையாசிரியர்  சிறப்பான வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக வந்த முனைவர் எ.மாணிக்கம் தாய்மொழியின் மூலமாகத்தான் கருத்துக்களைச் சிறந்த முறையில் வெளியிட முடியும், தாய்மொழி வழியே கற்பதன் மூலமே பாடங்களைச் செம்மையாகவும் திருத்தமாகவும் கற்றுக்கொள்ள முடியும்.

       மாணவர்கள் நாட்டுப்பற்றும் ,மொழிப்பற்றும் கொண்டு ஒழுக்கச் சீலர்களாகத் திகழ வேண்டும் என்று மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி சிறப்புரையாற்றினார்.

     மாணவர் செயலர் நன்றி கூறினார். மாணவிகள் நாட்டுப்பண் பாட விழா இனிதே முடிந்தது.

5

24.அ

ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத

என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி

அர்த்தமுள்ளக் காட்சி

ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் காட்சி

சமூக விளைவைக் காட்டும் காட்சி

தனித்திறனை உணர்த்தும் காட்சி

5

24.ஆ

1. எல்லா பூக்களும் இயற்கையில் உயிருடன் இருக்கிறது

2. சூரிய அஸ்தமனமே முதலில் எனக்கு பிடித்த வண்ணம், வானவில்லின் வண்ணம் அடுத்த நிலை தான்.

3. அதிகாலையில் நடைப்பயிற்சி அந்நாளுக்கே ஒரு வரமாகும்.

4. வெறுமையான வாழ்வு மட்டும் போதாது, ஒவ்வொரு வருக்குள்ளும்  ஒளி, ஆற்றல், விடுதலை மலர் என இருத்தல் வேண்டும்.

5

பகுதி – 5

26. அ

முன்னுரை :

         கந்தர்வன் எழுதிய தண்ணீர் என்ற இக்கதையில் நீரின் அவசியமும், நீருக்காக கிராம மக்கள் படும் பாட்டையும் அழகாக எழுதியுள்ளார். அதை இக்கட்டுரையில் காணலாம்.

கிராமத்தின் நிலை :

        கதையின் கிராமத்தில் குடிப்பதற்கு நீர் பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும். அந்த கிராமம் குடிநீருக்காக பிலாப்பட்டிக்கு செல்ல வேண்டும். நிலத்தடி நீர் வற்றி ஆண்டுகள் பல ஆயிற்று.

இரயில் நீர் :

          அந்த ஊருக்கு வரும் இரயிலின் ஊதல் ஒலிக் கேட்டு அந்த கிராம மக்கள் தண்ணீருக்காக பெண்கள் ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ஓடுவர். ஸ்டேசன் மாஸ்டர் மிரட்டியும் பயன் இல்லை. இரயிலை விட்டால் பிலாப்பட்டிக்கு போக வேண்டும்.

இந்திரா :

        இளம் பெண் இந்திரா தன்னை திருமணம் செய்து கொடுத்தால் நீர் இருக்கும் ஊருக்கு தான் கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இரயில் பெட்டியில் நுழைந்தாள்.

மக்கள் தேடல் :

        வீட்டில் நீர் இல்லை என்பதை நினைத்துக் கொண்டே நீர் பிடித்திருந்த இந்திரா இரயில் நகர்ந்ததை கவனிக்கவில்லை.

          இந்திராவின் தாய் புலம்புகிறாள். இந்திராவைத் தேடி இராமநாதபுரம் பேருந்து நிலையம் சென்று தேடிப் பார்த்தனர். எங்கும் காணவில்லை.

திரும்பிய இந்திரா:

        தண்டாவளத்தில் சிறிது தூரத்தில் பெண் ஒருத்தி தென்பட்டாள். அவள் இந்திரா. ஒரு குடம் நீர் பிடிக்க இரயிலிலேயே உள்ள நீர் பிடித்து அதனை சிந்தாமல் கொண்டு வந்து சேர்த்தாள்.

முடிவுரை :

v  தண்ணீர் வாழ்வில் மிக முக்கியம். அதனை அறிந்து நீரினை சேமிப்போம். சிக்கனமாகப் பயன்படுத்துவோம். நீர் மேலாண்மையைக் கட்டமைப்போம்.

8

25.ஆ

ü  திராவிட மொழிகளின் ஒப்பியக் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது.

ü  தமிழ் என்ற சொல்லிருந்து திராவிடா என்ற சொல் பிறந்தது என்கிறார் ஹீராஸ் பாதிரியார்.

ü  தமிழ் – தமிழா – தமிலா – டிரமிலா – ட்ரமிலா – த்ராவிடா – திராவிடா என்று  விளக்குகிறார் ஹீராஸ் பாதிரியார்.

ü  பிரான்சிஸ் எல்லீஸ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியன ஒரே இனம் என்கிறார்.

ü  ஹோக்கன் ,மாக்சுமுல்லர் ஆகியோர் திராவிட மொழிகள் ஆரிய  மொழிகளிலிருந்து வேறுபட்டன என்றனர்.

ü  கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலில் திராவிட மொழிகள் ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டன என்றார். சமஸ்கிருத்திற்குள்ளும் திராவிட மொழிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளது என்றார். 

 

8

விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி
சிறிது நேரத்தில் தோன்றும் DOWNLOAD என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் இந்த விடைக் குறிப்பினை பதிவிறக்கம் செய்யலாம்.

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி
 
www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post