10TH-TAMIL-1ST MID TERM -ANSWER KEY - SALEM DT- PDF

 

 சேலம் -முதல் இடைத் தேர்வு  -2023

தேர்வு நாள் : 08-08-23

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                                                                              மதிப்பெண் : 50

பகுதி – 1

மதிப்பெண்கள் - 8

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

அ. வணிகக் கப்பல்களும், ஐம்பெருங்காப்பியங்களும்

1

2.

ஆ. மலேசியா

1

3.

இ. அன்மொழித்தொகை

1

4.

இ. காசிநகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

1

5.

ஆ. ச.முகமது அலி

1

பகுதி - 2

6.

இ. நற்சொல்

1

7.

இ. மூன்றாம் வேற்றுமைத் தொகை

1

8.

ஆ. முல்லைப்பாட்டு

1

9

ஆ. அரும்பு,பெருமுது

1

பகுதி – 3

10

அ. இணை ஒப்பு என்பது யாது?

ஆ. மலைபடுகடாம் என்ற நூலை இயற்றியவர் யார்?

1

1

11

குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி

2

12.

உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை

2

13.

உவகைக் காரணமாக சிரித்து சிரித்து பேசினார்.

2

14

வாருங்கள், வணக்கம். நலமா? நீர் அருந்துங்கள்,அமருங்கள்

2

15

தம்பி அழாதே அப்பா உனக்கு பொம்மைகள் வாங்கி வருவார்.

அப்பா உனக்கு தின்பண்டங்கள் வாங்கி வருவார்.

2

16.

அ. சிரித்தல்          ஆ) படித்தல்

2

17

வடக்கு – வாடை

தெற்கு – தென்றல்

கிழக்கு – கொண்டல்

மேற்கு - கோடை

2

18

தண்ணீர் குடி – தண்ணீரைக் குடி – நாளும் உடல் நலம் காக்க தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

தயிர்க்குடம் – தயிரை உடைய குடம் – கலா தயிரை உடைய குடத்திலிருந்து தயிர் ஊற்றினாள்.

2

19

கவிஞர் – பெயர் பயனிலை,  சென்றார் – வினைப் பயனிலை    யார் – வினாப் பயனிலை

2

20

அ. 8 – ௮ ,                ஆ. 5 – ௫

2

21

அ. உயிரெழுத்து     ஆ. புயல்

2

பகுதி – 4

22

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள், “ கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர்,தாயார்” என்போள்

நன்னர் நன்மொழி கேட்டனம்                                             - நப்பூதனார்!

4

23

. பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

  நல்லார் தொடர்கை விடல்

2

பகுதி – 5

24 அ.

v  அன்னை மொழியானவள்

v  அழகான செந்தமிழானவள்

v  பழமைக்கு பழமையாய் தோன்றிய நறுங்கனி

v  பாண்டியன் மகள்

v  திருக்குறளின் பெருமைக்கு உரியவள்

பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்களையும் கொண்டவள்.

4

24

சோலைக் காற்று : மின் விசிறிக் காற்றே ! நலமா?

மின் விசிறிக் காற்று : நான். நலம். உனது  இருப்பிடம் எங்கே?

சோலைக்காற்று : அருவி,பூஞ்சோலை,மரங்கள். உனது இருப்பிடம் எங்கே?

மின் காற்று : அறைகளின் சுவர்களின் இடையில். எனது இருப்பிடம்

சோலைக்காற்று : என்னில் வரும் தென்றல் காற்றை அனைவரும் விரும்புவர்.

மின்  காற்று : விரும்பியவர்கள் மின் தூண்டுதல் மூலம் என்னைப்

                      பெறுவர். எண்ணிக்கையின் அடிப்படையில் வேகம்

                     கொள்வேன்

சோலைக் காற்று : இலக்கியங்களில் நான் உலா வருவேன். அனைவரும்

                     விரும்பும் விதமாக இருப்பேன்.

மின் காற்று : நான் இல்லாமல் அலுவலகம் இல்லை. மின்சாரம் இல்லையெனில்

                நான் இல்லை.  என்னை விரும்பும் நேரங்களில் இயக்கிக்

                கொள்ளலாம்.

4

25.அ

சேலம்

03-03-2021

அன்புள்ள நண்பனுக்கு,

          நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம்என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

          பெறுதல்

                   திரு.இரா.இளங்கோ,

                   100,பாரதி தெரு,

                   சேலம்.

 

4

25.ஆ

·         ஒழுக்கம் எல்லோர்க்கும் சிறப்பைத்  தருவதால்  அவ்வொழுக்கத்தை உயிரினும் மேலானதாக பேணி காக்க வேண்டும்.

·         ஒழுக்கமோக வாழும் எல்லோரும் மேன்மை அடைவர். ஒழுக்கம் தவறுபவர் அடையக் கூடாதப் பழியை அடைவர்.

·         உலகத்தோடு ஒத்து வாழ கல்லோதோர், பல நூல்கள் கற்றோராயினும் அறிவு இல்லாதவராக கருதப்படுவர்

 

பகுதி – 6

26. அ

v  வழக்கத்தில் பல ஆங்கில சொற்களை தமிழோடு இணைத்து பேசவும், எழுதவும் செய்வதை தவிர்க்க புதிய சொல்லாக்கம் தேவை.

v  தொழில் நுட்பம் சார்ந்த பல சொற்களை தமிழில் பயன்படுத்த சொல்லாக்கம் தேவை.

v  தாவரத்தின் அனைத்து நிலைகளுக்கும் தமிழில் சொற்கள் உண்டு.

v  புதிய தமிழ்ச்சொல்லாக்கம் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்கிறது.

v  மொழியின் மூலம் நாட்டாரின் நாகரிகத்தையும்,நாட்டு வளத்தின் மூலம் மொழிவளத்தினை அறியலாம்

7

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

முடிவுரை

 

முன்னுரை :

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக் காணலாம்.

தேசாந்திரி:

Ø  சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி.

Ø  அன்னமய்யாவுடன் ஒரு ஆள் உடன் வந்தான்

Ø  அவன் மிக சோர்வாக இருந்தான்

Ø  லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான்.

Ø  குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது.

Ø  வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான்

கருணை அன்னமய்யா:

Ø  அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான்.

Ø  அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்து கொடுத்தார்.

Ø  கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான்.

Ø  ஆனந்த உறக்கம் கண்டான்.

முடிவுரை:

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது.

 

7

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

சிறிது நேரத்தில் தோன்றும் DOWNLOAD என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் இந்த விடைக் குறிப்பினை பதிவிறக்கம் செய்யலாம்.

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

 

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post