10TH PUBLIC EXAM -RESULT ANALYSIS - 2023 - PDF

 

அன்பார்ந்த ஆசிரியப்பெருமக்களுக்கும்,அன்பு மாணவச் செல்வங்களும் கல்விவிதைகள் மற்றும் தமிழ்விதையின் கனிவான வணக்கம். ஏப்ரல் 6 முதல் 20 வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று முடிந்தது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கடந்த ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை 3986 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டன. இந்த தேர்வினை சுமார் 9,96,089 மாணவ மாணவிகள் எழுதினர்.
அதேபோல, 11ஆம் வகுப்பு தேர்வுகளும் இதே சமயத்தில் நடந்து முடிந்தன. இதனிடையே 10ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு எப்போது ரிசல்ட் வெளியிடப்படும் என கேள்வி எழுந்திருந்தது. முன்னதாக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியாகி இருந்தது.

இந்நிலையில் 10 வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. இதன்படி 2022-23ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்றும் அதே தினம் பிற்பகல் 2 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

*மேலும் தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட உள்ளதாகவும், பள்ளி மாணவர்கள் சமர்பித்த செல்போன் எண்ணிலும் குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துதிருந்தது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த பகுப்பாய்வு அறிக்கை நேற்றைய தினம் பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை, ஆண்கள்,பெண்கள், மாவட்ட வாரியான அறிக்கை பாட வாரியான அறிக்கை என அனைத்து தகவல்களும் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையை வெளியிட்டது. அதனை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம். உங்கள் மாவட்டம் எந்த இடத்தில் உள்ளது என்பதனை நீங்கள் அறிந்துக் கொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள CLICK HERE என்பதனை அழுத்தி பகுப்பாய்வு அறிக்கையை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு
அரசு பொதுத் தேர்வு - 2023
பகுப்பாய்வு அறிக்கை



Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post