அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். இந்த 2023- 24 கல்வி ஆண்டு சிறப்பான கல்வி ஆண்டாக அமைய தமிழ்விதையின் சார்பாக வாழ்த்துகள். விளையாட்டு என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. ஒவ்வொருவருக்கும் வயதிற்கு ஏற்றாற் போல விளையாட்டுகள் பிடிக்கும். கல்வியிலும் விளையாட்டு முறை கல்வி என்றால் மாணவர்கள் குஷியாகி விடுவர். விளையாட்டு முறையின் மூலம் நாம் பாடங்களை மாணவர்களுக்கு நடத்தும் போது அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. தமிழ் பாடத்தினை மாணவர்கள் எளிமையாக இனிமையாக மகிழ்வுடன் அணுகுவது என்பதனை சிந்தித்து விளையாட்டு மூலம் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் போது அதன்பால் அவர்களுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்த வகையில் தொடக்க நிலை மாணவர்களிலிருந்து உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவர்கள் வரை இங்கு கொடுக்கப்படும் விளையாட்டினை ஆர்வமுடன் விளையாடமுடியும். ஏன் பொதுமக்களும் இதில் விளையாட முடியும். இந்த வலைதளம் மூலம் தமிழ்மொழியினை அடுத்த நிலைக்குக் கொண்டுச் செல்ல முடியும். முதல் முயற்சியாக தொடக்கநிலை மாணவர்களுக்கு தமிழ் அடிப்படை பயிற்சியாக உயிர் எழுத்துகளை இந்த விளையாட்டில் பகிர்ந்துள்ளோம். மாணவர்களுக்கு சொற்கள் வழங்கப்பட்டு இருக்கும். அந்த சொற்களுக்குரிய எழுத்தினை மிகச்சரியாக குறிப்பிடப்பட்ட இடத்தில் பொருத்த வேண்டும். இதற்கு மதிப்பெண் உண்டு. அதே போல இதில் வேகமாக செயல்படக் கூடியவர்கள் தங்களின் பெயரை பதிவு செய்தால் அவர்கள் எந்த இடம் பெற்றுள்ளனர் என்பதனையும் காட்டிவிடும். மேலும் நீங்கள் இந்த தளத்தில் இந்த விளையாட்டினை எத்தனை முறை வேண்டுமானாலும் விளையாடலாம். இந்த விளையாட்டில் உங்களுடைய சாதனையை நீங்களே முறியடிக்கலாம். இந்த விளையாட்டிற்கு எவ்வித கட்டணமும் இல்லை. உங்களின் அறிவுத்திறத்தையும், தமிழ் மொழியையும் வலுப்படுத்த இது மிகவும் உதவும் என்பது திண்ணம். விளையாடிப் பாருங்கள். வெற்றி பெறுங்கள் வாழ்த்துகள்.
( உதாரணப்படம் )
விளையாட்டு விளையாடுவோமா மாணவர்களே!