10TH - TAMIL - FORM QUESTIONS - SPORTS ADMISSION - PDF

 

பத்தாம் வகுப்பு

தமிழ்

படிவ வினாக்கள்

விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம்

 1. விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பத்தினை  நிரப்புக.

 

2. கடலூர் மாவட்டம், பாரதியார் நகர், கம்பர் தெருவிலுள்ள 112 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் நிலவனின் மகள் பூங்குழலி, நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறார். அவர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினராகச் சேர்ந்து கால்பந்து விளையாட்டில் பயிற்சி பெற விரும்புகிறார். தேர்வர் தம்மை பூங்குழலியாகக் கருதி, கொடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை நிரப்புக.( செப்டம்பர்- 2021 தனித்தேர்வர் வினாத்தாள் )

 

3.  மதுரை மாவட்டம் அழகப்பா நகர்,சுந்தரம் தெருவிலுள்ள 110ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் அன்பழகனின் மகன் குமரன் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கிறார்.அவர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினராகச் சேர்ந்து கூடைப்பந்து விளையாட்டில் பயிற்சிபெற விரும்புகிறார். தேர்வர் தம்மைக் குமரனாகக் கருதி, கொடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை நிரப்புக.

 

4. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் முரளி என்பவர் உறுப்பினராக சேர விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்க.

 

5. எண்: 18 வள்ளுவர் தெரு, மதுரையில் வசிக்கும் கம்பதாசன் என்பவரது மகள் எழிலரசி தமிழ்நாடு தடகள விளையாட்டுப் பயிற்சியில் சேர விரும்புகிறார். 10ஆம் வகுப்பு முடித்துள்ள அவருக்கு உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பத்தை நிரப்பி உதவி செய்க.

 

6.வேலூர் மாவட்டம், எண் -7 , பாரதி தெரு, ஊசூரில் வசிக்கும் தமிழ்செல்வன் த/பெ, ரவி என்பவர் பிறந்த தேதி 01-01-2000,அவர் ஈட்டி எறிதல் போட்டியில் வெற்றி பெற விளையாட்டு ஆணையத்தில் உறுப்பினராக சேர விரும்புகிறார். உரிய படிவத்தை நிரப்புக.

 

7. கதவு எண் 66, திருவள்ளுவர் தெரு, திருச்சி என்ற முகவரியில் வசிக்கும் மாணிக்கம் என்பவரின் மகன் அறிவழகன் என்பவர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொள்ளப் பயிற்சி பெற விரும்புகிறார். உரிய படிவத்தை நிரப்புக.

 

8. அறிவழகனின்  25 வயது மகள் அன்பழகி, 51, பாரதியார் தெரு, வ.உ.சி.நகர், நாமக்கல் என்ற முகவரியில் வசித்து வருகிறார். அவர் வாள் வீச்சில் பயிற்சி பெற விரும்புகிறார். அவருக்கு உதவி செய்யும் பொருட்டு உரிய படிவத்தை நிரப்புக.

 

9.  வான்மதி என்பவர் விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஊரில் பத்தாம் வகுப்பு படித்து முடித்து, குத்துச்சண்டை விளையாட்டுப் போட்டியில் பயிற்சி பெற விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினராக சேர விரும்புகிறார்., கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்புக.

 

10. விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் கதவு எண்.32/1, காந்தி வீதியில் வசிக்கும் சீனிவாசன் என்பாரின் மகன் மணி (28 வயது ) என்பார் கபடி போட்டியில் பங்கு பெற விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினராக சேர விரும்புகிறார். தேர்வர் தம்மை மணியாக நினைத்து உரிய படிவம் நிரப்புக.

CLICK HERE TO PDF THIS QUESTIONS

WAIT FOR 15 SECONDS 

நீங்கள் 15 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

 

  

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post