பத்தாம் வகுப்பு
தமிழ்
விடைக்கேற்ற வினாக்கள் அமைக்க
1.
பாரதியார் சிந்துக்கு தந்தை எனப் போற்றப்படுகிறார்.
2.
மொழிப்பெயர்ப்பின் மூலம் இலக்கியத் திறனாய்வுக் கொள்கைகளைப் பெற்றிருக்கிறோம்.
3 தப்பாட்டம்
நிகழ்த்தப்படும் சூழலுக்கேற்ப பல்வேறு ஆட்டக்கூறுகளைக் கொண்டுள்ளது.
4.
ஒயிலாட்டத்தில் கோலால் கட்டப்பட்ட குடம்,தவில், சிங்கி, டோலக், தப்பு போன்ற இசைக்கருவிகள்
பயன்படுத்தப்படுகின்றன.
5 ஒரு
நாட்டு வளத்திற்குத் தக்கபடியே அந்நாட்டு மக்களின் அறிவொழுக்கங்கள் அமைந்திருக்கும்,
6.
கல்வியே சிறந்த செல்வம் என்றும் அழிவில்லாதது.
7.
அறங்கூறவையங்கள் அரசனின் செங்கோலாட்சிக்குத் துணைபுரிந்தன.
8.
பாண்டியன் நாற்புறமும் கடலையே பார்த்து மலைத்து நின்றான்
9.
உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா.
10.
தமிழ்த் தென்றல் திரு.வி.க.போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர்
இரா.இளங்குமனார்.
11.பரஞ்சோதி
முனிவர் திருமறைக்காட்டில் பிறந்தவர்.
12.
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழி பெயர்ப்பு.
13.
இந்தியா 1947 ஆகஸ்டு 15ம் நாள் விடுதலை பெற்றது.
14.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை எழுதியவர் கால்டுவெல்.
15.
பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம் ஆகும்.
16.
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்கிறார் ஒளவையார்?
17.
சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் ஜெயகாந்தன்.
18.
கலைகள் மனித வாழ்விற்கு அழகூட்டுபவை.
19.
கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர்.
20.
தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர் ந.முத்துசாமி ஆவார்.
21
இன்றைக்கு பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்புப் பயன்படுகிறது.
22.
நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும், பிறவும் கொடுத்தனர்.
23.
பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்று கரகாட்டம்.
24. சொற்பொழிவுகளைக் கேட்பதன்
மூலமாக ம.பொ.சி. இலக்கிய அறிவு பெற்றார்.
25.
1906 – ஆம் ஆண்டு வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயருக்கு எதிராகச் சுதேசிக் கப்பல்
நிறுவனத்தைத் தொடங்கினார்.
26
நாயக்கர்
,மராட்டியர் ஆட்சிக் காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச்செல்வோர்காகக் கட்டப்பட்டன.
27.அமெரிக்காவின் மினசோட்டா
தமிழ்சங்கம் ‘ வாழை இலை விருந்து விழாவை ‘ ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறது.
28.ஒரு நாட்டு வளத்திற்குத்
தக்கபடியே, அந்நாட்டு மக்களின் அறிவொழுக்கங்கள் அமைந்திருக்கும்.
29.சொல்லாராய்ச்சியில்
பாவாணரும் வியந்த பெருமகனார் தமிழ்த்திரு. இரா. இளங்குமரனார்.
30.செயற்கை நுண்ணறிவு
கருவியான வாட்சன்,சில நிமிடங்களில் நோயாளி ஒருவரின் புற்று நோயைக் கண்டுபிடித்தது
31. வேர்டுஸ்மித் என்ற
எழுத்தாளி தகவல்களைக் கொண்டு சில நொடிகளில் அழகான கட்டுரையை உருவாக்கி விடும்.
32. சாலைகளின் இடப்பக்கம்
வண்டிகள் செல்வதே சாலை விதிகளில் முதன்மையான விதி.
33. ஓட்டுநர் உரிமம,
ஊர்தியின் பதிவுச் சான்றிதழ், ஊர்தியின் வழி மற்றும் காப்பீட்டுச் சான்றிதழ் போன்றவற்றை
ஊர்தி ஓட்டுபவர் ஒவ்வொருவரும் கட்டாயமாகக் கையில் வைத்திருக்க வேண்டும்.
34. மொழிபெயர்ப்பு,மொழியில்
புதுக் கூறுகளை உருவாக்கி மொழி வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது.
35. தமிழ் நூல்கள்,ஆங்கிலம்,
மலையாளம், தெலுங்கு, இந்தி,கன்னடம்,வட மொழி, ரஷ்ய மொழி,வங்க மொழி, மராத்தி மொழி, போன்ற
பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
WWW.TAMILVITHAI.COM WWW.KALVIVITHAIGAL.COM
CLICK HERE TO PDF THIS QUESTIONS
WAIT FOR 15 SECONDS