10TH - TAMIL - FORM QUESTIONS - PANI VAIPPU - PDF

 

பத்தாம் வகுப்பு

தமிழ்

படிவ வினாக்கள்

பணிவாய்ப்பு வேண்டி தன்விவர பட்டியல் நிரப்புதல்

1. பணி வாய்ப்பு வேண்டி தன் விவர படிவம்  நிரப்புக.

 

2. பணிவாய்ப்பு வேண்டி தன் விவரப்பட்டியல் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு படிவத்தை நிரப்புக.( ஆகஸ்ட் துணை பொதுத் தேர்வு – 2022 )

பெயர் : அருளன், தந்தை : செல்வம், முகவரி : கதவு எண்.25,திலகர் தெரு,மதுரை வடக்கு-2

 

3.  எண்-6,பாரதியார் தெரு, நீலகிரி மாவட்டத்தில்  வசிக்கும் தமிழரசுவின் மகள் பூங்கொடி, கணினிப் பயிற்றுநர் பணி வேண்டி தன் விவரப் பட்டியல் நிரப்புகிறார். தேர்வர் தன்னை பூங்கொடியாக பாவித்து பணிவாய்ப்பு வேண்டி தன் விவரப் பட்டியல் நிரப்புக. ( செப்டம்பர் -2020- தனித்தேர்வர் வினாத்தாள் )

 

4. மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா, வள்ளுவர் நகர், எண் 19 இல் வசித்து வரும்  பழனி, தந்தை பெயர் சிவன், எழுத்தர் பணி வேண்டி விண்ணப்பிக்கிறார். தேர்வர் தன்னை பழனியாக எண்ணி படிவத்தை நிரப்புக.

 

5. வீட்டு எண் 14, வ.உ.சி தெரு, தஞ்சாவூரில் வசித்து வரும் மோகன் மகள் அனிதா தட்டச்சர் பணி வேண்டி விண்ணப்பிக்கிறார். தேர்வர் தம்மை அனிதாவாக நினைத்து உரிய படிவத்தை நிரப்புக.

 

6.வேலூர் மாவட்டம், எண் -7 , பாரதி தெரு, ஊசூரில் வசிக்கும் தமிழ்செல்வன் த/பெ, ரவி என்பவர் பிறந்த தேதி 01-01-2000,அவர் உதவியாளர் பணி வேண்டிவிண்ணப்பிக்கிறார். தேர்வர் தம்மை தமிழ்ச்செல்வனாக நினைத்து உரிய படிவம் நிரப்புக.

 

7. கதவு எண் 66, திருவள்ளுவர் தெரு, திருச்சி என்ற முகவரியில் வசிக்கும் மாணிக்கம் என்பவரின் மகன் அறிவழகன் என்பவர் கணினியில் டேலி , தட்டச்சுப்பிரிவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேல்நிலை முடித்து, அங்குள்ள அச்சகத்தில் கணினி தட்டச்சு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கிறார். உரிய படிவம் நிரப்புக.

 

8. அறிவழகனின்  25 வயது மகன் அன்பழகன், எழுத்தர் பணி வேண்டி விண்ணப்பிக்கிறார்.உரிய படிவத்தை நிரப்புக.

 

9.  நிறைமதி என்பவர் விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஊரில் அரசு கூட்டுறவுத் துறையில் உதவியாளர் பணிக்கு தேர்வர் தன்னை நிறைமதியாக பாவித்து, கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்புக.

 

10. விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் கதவு எண்.32/1, காந்தி வீதியில் வசிக்கும் சீனிவாசன் என்பாரின் மகன் மணி (28 வயது ) என்பார் அலுவலகப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கிறார். கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு படிவத்தை நிரப்புக.

CLICK HERE TO PDF THIS QUESTIONS

WAIT FOR 15 SECONDS 

நீங்கள் 15 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

 

  

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post