சேலம் – முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள்
ஜனவரி - 2022-2023
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம்
– தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண்
: 100
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 15 |
|||||||||||||||||||||||||||||||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|||||||||||||||||||||||||||||||||||||
1. |
ஈ. பாடல்;கேட்டவர் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
2. |
அ. கடல் நீர் ஆவியாகி மேகமாதல் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
3. |
ஆ. இன்மையிலும் விருந்து |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
4. |
ஆ. இறைவனிடம் குலசேகராழ்வார் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
5. |
இ. அறியாவினா,சுட்டுவிடை |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
6. |
இ. செய்கு தம்பிப் பாவலர் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
7. |
ஈ. அங்கு வறுமை இல்லாததால் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
8. |
இ. வலிமையை நிலைநாட்டல் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
9. |
இ. கலித்தொகை |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
10. |
இ. இடையறாது அறப்பணி செய்தலை |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
11. |
இ. முன்பனிக்காலம் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
12. |
ஆ. சிலப்பதிகாரம் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
13. |
அ. எண்ணும்மை |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
14. |
இ. நெய்பவர் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
15. |
ஈ. இளங்கோவடிகள் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 2 பிரிவு
- 1 |
|||||||||||||||||||||||||||||||||||||||
16. |
மாமிசத்தையும், தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள். |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
17. |
Ø
அறம் கூறும்
மன்றங்கள் Ø
துலாக்கோல் போல்
நடுநிலையானது Ø
மதுரையில் மதுரைக்காஞ்சி
அவையம். |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
18. |
·
உடுப்பதூஉம்
உண்பதூஉம் – இன்னிசை அளபெடை. ·
செய்யுளில் ஓசை
குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
19 |
அ. நாட்டு விடுதலைக்காக அறவழியில் போராடியவர் யார்? ஆ.கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் யாருடைய தொன்மைக் காலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது? |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
20. |
அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து
நிற்க கல்லிலும் செப்பேட்டிலும் மெய்கீர்த்தி எழுதினார்கள். |
1
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
21
|
கட்டாய வினா: குன்றேறி யானைப்போர் கண்டற்றால்
தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை |
2
|
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 2 / பிரிவு - 2 |
|||||||||||||||||||||||||||||||||||||||
22 |
அ. கீரிபாம்பு – உம்மைத் தொகை ஆ. முத்துப்பல் - உவமைத்தொகை |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
23 |
அமர்ந்தான் – அமர் +த்(ந்)+த்+ஆன் அமர் – பகுதி , த் – சந்தி, த்(ந்) – ந் ஆனது விகாரம்; த் – இறந்தகால இடைநிலை;
ஆன் – படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
24 |
அ. சிறு பூனையும் சீறும் ஆ.விடு அவன் வீடு செல்லட்டும் |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
25. |
அ. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் ஆ. உப்பிட்டவரை உள்ளளவும் நினை, |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
26. |
அ. விண்வெளிக் கதிர்கள் ஆ. அறிவாளர் |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
27. |
முன்தினம் தான் பார்த்த அர்ச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும்
சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்ததாக சேகர் என்னிடம்
கூறினான். |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
28.
|
அ. அழைப்புமணி ஒலித்ததும் கயல்விழி கதவைத் திறந்தார் ஆ. ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது. அறையில் உள்ளவர்கள் பேச்சு
தடைப்பட்டது. |
1 1
|
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 3 / பிரிவு - 1 |
|||||||||||||||||||||||||||||||||||||||
29 |
அ. அறம் கூறும் மன்றங்கள் ஆ. அறம் அறக் கண்ட நெறிமான் அவையம் இ. துலாக்கோல் போல் நடுநிலை மிக்கது |
1
1
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
30
|
|
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
31. |
இடம்: மாநகர தந்தை செங்கல்வராயன் தலைமை – மாநகராட்சி சிறப்புக்
கூட்டம் பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகர்
சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து
முழங்கிய முழக்கம் இது. விளக்கம் : இதன் பொருட்டு மா.பொ.சி. சென்னையை மீட்க தலைக்கொடுத்தேனும் தலைநகர் காப்போம்
என முழங்கினார். |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 3 / பிரிவு - 2 |
|||||||||||||||||||||||||||||||||||||||
32 |
· நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என
கூத்தனை கூத்தன் ஆற்றுப்படுத்துதல் ஆற்றுப்படை ·
நன்னன் எனும்
மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தர், மற்றொரு கூத்தரிடம் பரிசில் பெறுவதற்கான வழியினை
கூறுகிறது. ·
உணவினைப் பெறுவதற்கான
வழியினை கூறல். |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
33. |
v
மேல் மண் பதமாகிவிட்டது. v
வெள்ளி முளைத்திடுது v
காளைகளை ஓட்டி
விரைந்து செல் |
3
|
|||||||||||||||||||||||||||||||||||||
34. |
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்! எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை என்ப தறிந்து ஏகுமென் சாலை! தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்; தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்! கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க! உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது; நானே தொடக்கம்; நானே முடிவு; நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!. -
கண்ணதாசன் ( அல்லது )
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள் நடுங்கு சுவல் அசைத்த கையள், “ கைய கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர இன்னே வருகுவர்,தாயார்” என்போள் நன்னர் நன்மொழி கேட்டனம் - நப்பூதனார் |
3
|
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 3 பிரிவு
- 3 |
|||||||||||||||||||||||||||||||||||||||
35 |
கண்ணே கண்ணுறங்கு – விளித்தொடர் காலையில் நீயெழும்பு – வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் மாமழை – உரிச்சொல் தொடர் மாம்பூவே – விளித்தொடர் பாடினேன் தாலாட்டு – வினைமுற்றுத் தொடர் ஆடி ஆடி ஓய்ந்துறங்கு – அடுக்குத் தொடர் |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
36. |
இலக்கணம்: இயல்பாக நிகழும்
நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக்கூறுதல். எ.கா: தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால் .................................................................................. ................... கூவினவே கோழிக் குலம். விளக்கம்: அதிகாலை விடிந்து கோழிகளும் இயல்பாக கூவும்.ஆனால் புலவர்
தமயந்தியின் துயர் கண்டே கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாகக் கூறுகிறார். |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
37 |
|
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 4 |
|||||||||||||||||||||||||||||||||||||||
38 |
அ) ·
மன்னன் இடைக்காடனார்
புலவரின் பாடலை இகழ்ந்தார். ·
இடைக்காடனார்,
மன்னன் இகழ்ந்ததை இறைவனிடம் முறையிடுகிறார் ·
இறைவன் கோவிலை
விட்டு நீங்கினார் ·
மன்னன் இறைவனிடம்
தன் பிழையைப் பொறுத்து அருள்புரியுமாறு வேண்டினார் ·
மன்னன் புலவருக்கு
மரியாதை செய்து, மன்னிப்பு வேண்டினார் |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
38 |
ஆ. Ø பூமித்தாயே என் அன்னையின் உடலைக் காப்பாயாக. Ø கருணையன் அன்னை உடல் மீது மலரையும்,கண்ணீரையும்
பொலிந்தான் Ø கருணையன் மனம் பறிக்கப்பட்ட மலர்ப் போல உள்ளது. Ø அம்பினால் உண்டான வலிப் போல் உள்ளது. Ø கருணையனை தவிக்க விட்டுச் சென்றார். Ø பசிக்கான வழித் தெரியாது. Ø இவனது இரங்கல் கண்டு இயற்கை கண்ணீர் சிந்துகிறது. |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
39 |
அ. சேலம் 03-03-2021 அன்புள்ள தங்கைக்கு, வணக்கம்.
இணைய வழிக் கல்விக்காக மென் திறன் பேசி வாங்கி இருப்பதாய் கூறினாய். அந்த மென் திறன்
பேசியை அளவோடு பயன்படுத்து அதில் நன்மை உண்டு, தீமையும் உண்டு. பார்த்து அளவோடு பயன்படுத்து, இப்படிக்கு, உன் அன்பு அண்ணன், அ அ அ அ அ அ அ . உறைமேல் முகவரி; பெறுதல் .இரா.இளவரசி, 100,பாரதி தெரு, நாமக்கல். |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
39 |
ஆ. அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி தெரு, சக்தி நகர், சேலம் – 636006. பெறுநர் உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள், உணவு பாதுகாப்பு ஆணையம், சேலம் – 636001 ஐயா, பொருள்: தரமற்ற உணவு
வழங்கிய உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல் – சார்பு வணக்கம். நான் நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் கோழி பிரியாணி உண்டேன். அது கெட்டுப்
போனதாகவும் மேலும் அதன் விலைப்பட்டியலைவிட விலைக் கூடுதலாகவும் இருந்தது. இத்துடன் அந்த
உணவிற்கான விலை இரசீது நகல் மற்றும் உணவு பட்டியல் நகலையும் இணைத்துள்ளேன். தகுந்த நடவடிக்கை
எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன். நன்றி. இணைப்பு: இப்படிக்கு, 1. விலை இரசீது – நகல் தங்கள் உண்மையுள்ள, 2. விலைப்பட்டியல்–நகல் அ அ அ அ அ. இடம் : சேலம் நாள் :
04-03-2021 உறை மேல் முகவரி: பெறுநர் உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள், உணவு பாதுகாப்பு
ஆணையம், சென்னை. |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
40 |
(
ஏற்புடைய விடை இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் ) ஏடு
எடுத்தேன் கவி ஒன்று எழுத என்னை
எழுது என்று சொன்னது இந்தக் காட்சி அர்த்தமுள்ள
இந்தக் காட்சி சமூகத்திற்கு
தேவையான காட்சி சமூக விளைவை
ஏற்படுத்துக் காட்சி எல்லோருக்கும்
அறிவுறுத்தும் காட்சி |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
41. |
5 |
||||||||||||||||||||||||||||||||||||||
42 |
அ.
|
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
42 |
1. Education is what remains after one has forgotten
what one has learned in school – Albert Einstein பள்ளியில் கற்றபின் எது நமது நினைவில் நிற்கின்றதோ அதுவே
கல்வி – ஆல்பிரட் ஐன்ஸ்டீன் 2. Tomorrow is often the busiest day of the week –
Spanish proverb நாளையே இந்த வாரத்தின் மிகப் பரபரப்பான நாள் – ஸ்பானிஷ்
பழமொழி 3. It is during our darkest moment that we must
focus to see the light – Aristotle நம் வாழ்வில் மிகவும் இருண்ட காலத்தில் தான் நாம் அகவொளியைக்
காண முற்பட வேண்டும் - அரிஸ்டாட்டில் 4. Success is not final,failure is not fatal.It is
the courage to continue that counts – Winston Churchill வெற்றி என்பது முடிவல்ல தோல்வி என்பது மரணமல்ல தொடர்ந்து
முனைகின்ற துணிவே கணக்கில் உள்ளது – வின்ஸ்டன் சர்ச்சில் |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
|
பகுதி
– 5 |
|
|||||||||||||||||||||||||||||||||||||
43 |
அ) ·
வழக்கத்தில்
பல ஆங்கில சொற்களை தமிழோடு இணைத்து பேசவும், எழுதவும் செய்வதை தவிர்க்க புதிய சொல்லாக்கம் தேவை. ·
தொழில் நுட்பம்
சார்ந்த பல சொற்களை தமிழில் பயன்படுத்த சொல்லாக்கம் தேவை. ·
தாவரத்தின் அனைத்து
நிலைகளுக்கும் தமிழில் சொற்கள் உண்டு. ·
புதிய தமிழ்ச்சொல்லாக்கம்
தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்கிறது. ·
மொழியின் மூலம்
நாட்டாரின் நாகரிகத்தையும்,நாட்டு வளத்தின் மூலம் மொழிவளத்தினை அறியலாம். |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
|
ஆ. வாசிப்போம் நேசிப்போம் இதழ் வெளியீடு இதழ் : ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழ் எழுத்தாளர் : ஜெயகாந்தன் ( சிறுகதை மன்னன் ) இனி வாராவாரம் ஆரவாரம். வாரந்தோறும் ஜெயகாந்தன் அவர்களின் கதைகள் நமது இதழின் நடுப்பக்கத்தில்
வெளிவரும். இப்போது பரபரப்பான விற்பனையில்..... இது தமிழ்விதை வார இதழ் வெளியீடு. உங்கள் பிரதிக்கு முந்துங்கள்….. நன்றி |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
44. |
அ.
முன்னுரை: கல்மனதையும்
கரைய வைக்கும் கதை இந்த ஒருவன இருக்கிறான். இதை இக்கட்டுரையில் காண்போம். குப்புசாமி: Ø குப்புசாமி 25 வயது வாலிபன்.வயிற்று வலிக்காரன் Ø உறவினர்கள் இவனை அனாதைப் போல நடத்தினார்கள். Ø காரணமில்லாமல் பக்கத்து வீட்டுக்காரரால் வெறுக்கப்பட்டான்
குப்புசாமி. Ø வயிற்றுவலிக்கு மருத்துவம் பார்க்க சென்னை வந்தவன் இந்த
குப்புசாமி. பக்கத்து வீட்டுக்காரர்: Ø பக்கத்து வீட்டுக்காரர் காரணமில்லாமல் வெறுப்பை அவன் மீது
காட்டியவர். அவரின் மனைவி கருணையோடு இருந்தவர். Ø குப்புசாமிக்கு ஆறுமுகம் மூலம் கடிதம் வந்தது. ஆறுமுகமும் தன் பங்காக இரு சாத்துகுடியும்,ஒரு ரூபாய் பணமும் கொடுத்தார். Ø பக்கத்து வீட்டுக்காரர் குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான்
என்பதை வீரப்பனின் கடிதம் மூலம் அறிந்தார். கடன் வாங்கி கொடுத்த அந்த மூன்று ரூபாயும் அவரின் மனதை மாற்றியது. Ø மனைவியை உடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல சாத்துக்குடி
வாங்க சென்றார். முடிவுரை: எல்லோருக்கும் ஒருவன் இருக்கிறான் யாரும் அனாதை இல்லை என்பதை
இக்கட்டுரையின் மூலம் காணும் போது மனிதம் துளிர்க்கிறது எனபதனை அறிய முடிகிறது. . |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
44 |
ஆ) குறிப்புச்சட்டம்
முன்னுரை : மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின்
வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். மேரி : ·
சாம் – பாட்ஸி
இணையருக்கு மகளாகப் பிறந்தவள் மேரி. ·
பருத்திக்காட்டில்
வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள். அவமானம் : ·
மேரி பாட்ஸியுடன்
பென்வில்ஸன் வீட்டிற்கு செல்கிறார்கள். ·
மேரி அந்த வீட்டின்
அலமாரியிலிருந்த புத்தகத்தை எடுக்கிறாள். ·
பென்வில்ஸன்
இளையமகள் அவளிடமிருந்து புத்தகத்தை பிடிங்கினாள். ·
உனக்கு படிக்கத்
தெரியாது என கூறினாள். ·
மேரி மனம் துவண்டாள். புதிய நம்பிக்கை ·
மேரிக்கு படிக்க
வேண்டும் என்ற ஆர்வம் உணடானது. ·
ஒரு நாள் மிஸ்
வில்ஸன் என்பவர் “ உன் போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும். நீ சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு
வர வேன்டும். ·
மேரிக்கு புதிய
நம்பிக்கை பிறந்தது. கல்வி ·
மேரி ஐந்து மைல்கள்
நடந்து சென்று கல்வி கற்றாள். ·
சில வருடங்கள்
கழித்து மேரிக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. ·
அதில் “ இந்த
பட்டம் பெறும் மாணவர் எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என எழுதப்பட்டிருந்தது. உதவிக்கரம் ·
மிஸ்வில்சன்
மூலம் மேரிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி ·
அவளின் மேல்படிப்பு
செலவுக்காக மேற்குப் பகுதியில் வாழ்கின்ற வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார். ·
அவள் மேல் படிப்புக்காக
டவுணுக்கு செல்கிறாள். மேல்படிப்பு ·
மேரியை மேல்படிப்பு
படிப்பதற்காக இரயில் நிலையத்தில் அவளது கிராமமே வழியனுப்ப திரண்டு வந்தது. ·
மிஸ் வில்ஸனும்
இரயில் நிலையத்தில் வந்தார்கள். முடிவுரை எப்படிப்பட்ட நிலையிலும் கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு
மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப்
புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றியது என்பதனை இக்கட்டுரை வழியாகக்
கண்டோம். |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
45 |
அ. குறிப்புச்
சட்டம்
முன்னுரை : விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய பெண் வீராங்கனை
கல்பனா சாவ்லா குறித்து நாம் இக்கட்டுரையில் காணலாம். பிறப்பும், கல்வியும் : பிறப்பு : இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் கர்னலில் ஜூலை 1,1961
இல் பிறந்தார். பெற்றோர்
: பனாரஸ்லால் - சன்யோகிதா தேவி கல்வி : கர்னலில்
பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டம் ·
டெக்சாஸ்
பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம். ·
. 1986-ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக் கழகத்தில் 2-ஆவது முதுகலைப்பட்டம். ·
பிறகு 1988-ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் துறையில்
முனைவர் பட்டம் பெற்றார். விண்வெளிப் பயணம்: ·
1995 இல் நாசா
விண்வெளி வீரர் பயிற்சியில் இணைந்து கொலம்பிய விண்வெளி ஊர்தி எஸ்,டி,எஸ்-87 இல் பயணம்
செய்தார், ·
சுமார் 372 மணிநேரம்
விண்வெளியில் இருந்து சாதனையுடன் பூமி திரும்பினார். வீர மரணம் : ·
2003இல் ஜனவரி
16 ந் தேதி அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ்
107 இல மீண்டும் பயணம் செய்தார். ·
அந்த விண்கலம்
ஆய்வை முடித்து திரும்பிய போது பிப்ரவரி -1 இல் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச்
சிதறியதில் கல்பனா சாவ்லாவுடன் உடன் பயணித்த 7 வீரர்களும் மரணமடைந்தனர் விருது: ·
நியூயார்க் நகரின்
ஒரு சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ·
பிப்ரவரி 1ந்
தேதி கல்பனா சால்வலா நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ·
2011 முதல் வீரதீர
சாதனைப் புரிந்த பெண்களுக்கு “ கல்பனா சாவ்லா விருது “ அரசு வழங்கி வருகிறது. முடிவுரை: மாணவர்களாகிய நாமும் இவரைப் போன்றவர்களை
உதாரணமாகக் கொண்டு விடாமுயற்சியுடன் படித்தால் அனைத்தையும் சாதிக்கமுடியும். |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
45 |
ஆ. குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக ( பொருத்தமான கருத்துகள் எழுதப்பட்டிருந்தால்
மதிப்பெண் வழங்கலாம் )
|
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
ஆக்கம் :
வெ.ராமகிருஷ்ணன்,
அரசு
உயர்நிலைப் பள்ளி,
கோரணம்பட்டி.
CLICK HERE TO PDF THIS QUESTIONS
WAIT FOR 15 SECONDS