மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2020
பத்தாம்
வகுப்பு /மொழிப்பாடம் – தமிழ்
நேரம்
: 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண்
: 100
அறிவுரைகள் : 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச்
சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம்
உடனடியாகத் தெரிவிக்கவும்.
2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்
பயன்படுத்தவும்.
குறிப்பு
: I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.
ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும்
சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி – I ( மதிப்பெண்கள் : 15
)
i)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்கவும்
ii)
கொடுக்கப்பட்ட
நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து
எழுதவும்.
15×1=15
1.வேர்கடலை,மிளகாய்
விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை_____
அ)
குலைவகை ஆ) மணிவகை இ)
கொழுந்து வகை ஈ) இலைவகை
2.
நறுந்தொகை என்னும் நூலை இயற்றியவர்_____________
அ) சீவலமாறன் ஆ) ஒளவையார் இ) நாகூர் ரூமி ஈ)
பாரதியார்
3.வினாவிற்கு
விடையாக இனிமேல் நேர்வதைக் கூறல்
அ)
நேர்விடை ஆ) ஏவல் விடை இ) உறுவது கூறல் ஈ)
உற்றது உரைத்தல்
4.
சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில் ஒன்று___
அ)
தேவராட்டம் ஆ) குடக்க்கூத்து இ) ஒயிலாட்டம் ஈ)
மயிலாட்டம்
5.
இஸ்மத் சன்னியாசி எனும் பட்டப்பெயர் பெற்றவர் ______________
அ)
குமரகுருபரர் ஆ) வீரமாமுனிவர் இ) கண்ணதாசன் ஈ) செய்குதம்பிப் பாவலர்
6.
இருவர் உரையாடுவது போன்ற ஓசை உடையது _________
அ)
தூங்கலோசை ஆ) துள்ளலோசை இ) அகவலோசை ஈ) செப்பலோசை
7.
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் எனக் கூறும் நூல்________
அ)
புறநானூறு ஆ) குறுந்தொகை இ)
கலித்தொகை ஈ)
நற்றிணை
8.
“ உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான்” எனக் கூறியவர்_____
அ)
ஓளவையார் ஆ)
கபிலர் இ) நல்வேட்டனார் ஈ) நக்கீரர்
9.
காலம் கரந்த பெயரெச்சம்__________
அ) உவமைத் தொகை ஆ) வினைத்தொகை இ) பண்புத்தொகை
ஈ) வேற்றுமைத்தொகை
10.
முல்லைக்குரிய சிறுபொழுது _________
அ) மாலை ஆ) யாமம் இ) வைகறை ஈ) நண்பகல்
11.
“ வீட்டைத் துடைத்து சாயம் அடித்தல் “ இவ்வடி குறிப்பது
அ)
காலம் மாறுவதை ஆ) வீட்டைத் துடைப்பதை இ) இடையறாது அறப்பணி செய்தல் ஈ) வண்ணம் பூசுவதை
பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-
உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வெ லாம்
இறங்குகின்றது! இன்று காண்; எழுந்திராய்!ஏழுந்திராய்!
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே
உறங்குவாய்,உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்!
12) இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?
அ) காசிக்காண்டம் ஆ)
சிலப்பதிகாரம் இ) மணிமேகலை ஈ)
கம்பராமாயணம்
13) கறங்கு என்பதன் பொருள்
அ) காற்றாடி ஆ) காற்று இ) குறங்கு ஈ)
காலன்
14) சீர்மோனைச் சொற்களை எழுதுக.
அ) உறங்குகின்ற, இறங்குகின்ற ஆ) உறங்குகின்ற, உங்கள்
இ) இறங்குகின்ற, கறங்குபோல ஈ) உறங்குகின்ற, வாழ்வெலாம்
15) “ மாய “ என்பதன் எதிர்ச்சொல்லை எழுதுக.
அ) பொய்யான ஆ) மெய்யான இ)
தலைகீழான ஈ)
நேரான
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 4×2=8
21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்..
16. வசன கவிதை – குறிப்பு வரைக.
17. விடைக்கேற்ற வினா அமைக்க.
அ. பாரத
ஸ்டேட் வங்கி “ இலா” என்னும் உரையாடு மென்பொருளை உருவாக்கியிருக்கிறது.
ஆ. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை
வேறொரு மொழியில் வெளியிடுவது ‘ மொழிபெயர்ப்பு ‘.
18. வறுமையிலும்
படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.
19. செய்குதம்பிப்
பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.
20. தற்கால உரைநடையில் சிலேடை அணியும் நயத்திற்கு எடுத்துக்காட்டுத்
தருக.
21. “ உலகு “ எனத் முடியும் குறளை எழுதுக.
பிரிவு – 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2=10
22. தொழிற்பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் உள்ள வேறுபாடுகள்
இரண்டினை எழுதுக.
23. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக. விதி
- வீதி
24. கலைச்சொல் தருக:- அ) BIOTECHNOLOGY ஆ) MYTH
25. ஊர்பெயர்களின் மரூஉவை எழுதுக.
அ) சைதாப்பேட்டை ஆ) புதுக்கோட்டை
26. புறத்திணைகளில் எதிரெதிர் திணைகளை அட்டவணைப்படுத்துக.
27. தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி தமிழ் எண்ணுரு தருக.
முப்பாலை
முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள்.
28. பகுபத உறுப்பிலக்கணம் தருக:- மயங்கிய
பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )
பிரிவு – I
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-
2×3=6
29. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா
என்பது குறித்து சிந்தனைகளை முன்வைத்து எழுதுக
30. ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பித்
தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத்
“ தர்க்கத்திற்கு அப்பால் “ கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
31.
உரைப் பத்தியைப் படித்து
வினாக்களுக்கு விடை தருக.
ராகுல் சாங்கிருத்யாயன் 1942 ஆம் ஆண்டு
ஹஜிராபாக் மத்திய சிறையில் இருந்த போது “ வால்காவிலிருந்து கங்கை வரை “ என்ற நூலை இந்தி
மொழியில் எழுதினார். 1949 ஆம் ஆண்டு இந்நூலை கணமுத்தையா என்பவர் தமிழில் மொழிபெயர்த்து
வெளியிட்டார்.இந்நூல் ஒவ்வொரு தமிழரும் விரும்பிப் படிக்கும் நூலாக இருக்கிறது.
அ)
‘ வால்காவிலிருந்து கங்கை வரை ‘ என்ற நூல் யாரால் எப்போது எழுதப்பட்டது?
ஆ)
இந்நூலைத் தமிழில் யார், எப்போது மொழிபெயர்த்தார்?
இ)
இந்நூல் எம்மொழியில் எழுதப்பட்டது? எம்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது?
பிரிவு – II
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
32. தமிழழகனார் தமிழையும், கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை
– விளக்குக.
33. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன்
செங்கீரை ஆடிய நயத்தை எழுதுக.
34. அடிபிறழாமல்
எழுதுக
“ விருந்தினனாக“ எனத் தொடங்கும் காசிக்காண்டப் பாடல்
(அல்லது )
“ நவமணி “ எனத்
தொடங்கும் தேம்பாவணி பாடல்
பிரிவு -III
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35. . கரம்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு
கெடும் – இக்குறட்பாவிற்கு அலகிட்டு வாய்பாடு தருக.
36. தன்மையணியை எடுத்துக்காட்டுடன் விளக்கி எழுதுக.
37.
ஆசிரியப்பாவின் பொது
இலக்கணத்தை எழுதுக.
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 5×5=25
38. அ) மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்
பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப் பேச்சு ஒன்றை உருவாக்குக.
( அல்லது )
ஆ) காலக் கணிதம் கவிதையில் கண்ணதாசன் நயம்படக் கூறியவற்றை
எழுதுக
39. அ)
உங்கள் பள்ளியில் நடைபெறும்
நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் தொடக்க விழாவில் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க உரை
ஒன்றை உருவாக்கித் தருக.
( அல்லது )
ஆ. உணவு விடுதியொன்றில்
வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும்,விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உணவு பாதுகாப்பு
ஆணையருக்கு கடிதம் எழுதுக.
40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.
41.பணிவாய்ப்பு
வேண்டி தன் விவரப் படிவம் நிரப்புக.
42. அ)
அரசின் பொங்கல் விழாவில் சிற்றூர்க் கலைகளைக் காட்சியாக்கியிருக்கிறார்கள்.ஒரு புறம்
திரைகட்டித் தோற்பாவைக் கூத்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.இன்னொருபுறம் பொம்மலாட்டம்
ஆடிக் கொண்டிருந்தனர். சற்று நடந்தால் தாரை தப்பட்டை முழங்க ஒயிலாட்டம் ஆடியவாறு மண்ணின்
மக்கள்….இக்கலைகளை நீங்கள் நண்பர்களுடன் பார்த்தவாறும் சுவைத்தவாறும் செல்கிறீர்கள்.
இக்கலைகளைப் பாதுகாக்கவும்,வளர்க்கவும் மேன்மேலும் பரவலாக்கவும் நீங்கள் செய்ய விருப்பமானவற்றை
ஐந்தினை வரிசைப்படுத்துக.
( அல்லது )
ஆ)
மொழிபெயர்க்க.
The
Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away
the dark.The milky clouds start their wandering.The colourful birds start
twitting their morning melodies in percussion.The cute butterflies dance around
the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows
everywhere and makes everything pleasant.
குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
பருப்பொருள்கள்
சிதறும்படியாகப் பல காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக ( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.
1. பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.
2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
3. பெய்த மழை – இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?
5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?
பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. 3×8=24
43. அ) உங்கள் இல்லத்துக்கு வந்த
உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
( அல்லது )
ஆ) சங்க இலக்கிய பாடல்கள் மூலம் உங்களைக் கவர்ந்த அறக்கருத்துகளைத்
தொகுத்து விவரிக்க.
44. அ) புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்
தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில் தோணி படும்பாட்டை எவ்வாறு
( அல்லது )
ஆ) தன் கலையைப் பின்பற்ற தகுந்த வாரிசு உருவாகிறபோது அவன் கொள்கிற மகிழ்ச்சி
அளப்பரியது. இதனை “ பாய்ச்சல் “ கதை வழியாக நிறுவுக.
45. அ) நீங்கள் படித்த கதை/கட்டுரை/சிறுகதை/நூலுக்கான மதிப்புரை எழுதுக. நூலின்
தலைப்பு – மையப்பொருள் – மொழிநடை – நூல் வெளிப்படுத்தும் கருத்து – நயம் – சிறப்புக்
கூறுகள் – நூல் ஆசிரியர்.
( அல்லது )
ஆ) “ விண்வெளியும்
கல்பனா சாவ்லாவும் “ – கட்டுரை எழுதுக.