அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். பொதுத் தேர்வு எழுதும் பத்து முதல் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் அச்சத்தினைப் போக்குவதற்காக சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் அலகுத் தேர்வு நடத்தப்படுகிறது. பத்தாம் வகுப்புக்கான அனைத்துப் பாட அலகுத் தேர்வு வினாத்தாள்கள் நமது தமிழ்விதை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் பத்தாம் வகுப்பு - தமிழ் வினாத்தாளுக்கான முழு விடைக்குறிப்பும் நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். சேலம் மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் பிற மாவட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் இந்த அலகுத் தேர்வு வினாத்தாளினை நகல் எடுத்து தேர்வு வைக்கவும். இது மாணவர்களின் பொதுத் தேர்வு நலன் கருதி வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு தேர்வும் முடிந்து அடுத்த நாள் நமது வலைதளத்தில் அந்த வினாத்தாளினை பதிவிறக்கம் செய்ய முடியும்.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 4 அலகுத் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் வழங்கப்பட்டு, அதில் 3 அலகுத் தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. நான்காவது அலகுத் தேர்வுக்கான கால அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இதில் 3 அலகுத் தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அதற்கான அனைத்து பாடவினாத்தாளும் நமது தமிழ் விதை வலைதளத்தில் பதிவிட்டு உள்ளோம். ஆசிர்யர்கள் மற்றும் மாணவர்கள் இங்கு பயன்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
நன்றி
பத்தாம் வகுப்பு
முதல் அலகுத் தேர்வு
அனைத்துப் பாட வினாத்தாள்கள் - PDF
இரண்டாவது அலகுத் தேர்வு
அனைத்துப் பாட வினாத்தாள்கள் - PDF
மூன்றாவது அலகுத் தேர்வு
அனைத்துப் பாட வினாத்தாள்கள் - PDF
நான்காவது அலகுத் தேர்வு
அனைத்துப்பாட வினாத்தாள் = PDF