10TH - TAMIL - 2ND REVISION QUESTION PAPER - 2020 - PDF

  


இரண்டாம் திருப்புதல் தேர்வு  வினாத்தாள் 2020


பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்


நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                                    மதிப்பெண் : 100


அறிவுரைகள் : 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச்

 சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக்  கண்காணிப்பாளரிடம்

   உடனடியாகத் தெரிவிக்கவும்.


2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும் 

    பயன்படுத்தவும்.


குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.


            ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.


பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

i)              அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்


ii)              கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக்

 குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து  எழுதவும்.                                                                                 15×1=15

1.” பாடு இமிழ் பனிக்கடல் பருகி “ என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்            ஆ)  கடல் நீர் குளிர்ச்சி அடைதல்

 இ) கடல் நீர் ஒலித்தல்                            ஈ) கடல் நீர் கொந்தளித்தல்


2. “ இங்கு நகரப் பேருந்து நிற்குமா”? என்று வழிப்போக்கர் கேட்டது ______ வினா. “ அதோ ,அங்கே நிற்கும் “ என மற்றொருவர் கூறியது ________ விடை.

அ) ஐய வினா,வினா எதிர் வினாதல்        ஆ) அறிவினா,மறை விடை

இ) அறியா வினா,சுட்டுவிடை                  ஈ) கொளல் வினா, இனமொழி விடை


3.ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே __________

அ) வாட்சன்        ஆ) இலா           இ) பெப்பர்         ஈ) ரோபோ


4. ‘ உப்பில்லா கூழ் இட்டாலும், உண்பதே அமிர்தமாகும் ‘ -இப்பாடல் வரி இடம் பெற்ற நூல்

அ) காசிக்காண்டம்          ஆ) கொன்றை வேந்தன்             இ) சீவக சிந்தாமணி       ஈ) விவேக சிந்தாமணி


5. மண்ணாசை கருதிப் போருக்குச் செல்வது _______

அ) வஞ்சித் திணை        ஆ) காஞ்சித் திணை      இ) தும்பைத் திணை     ஈ) வாகைத் திணை


6. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க….

அ) உழவு,மண்,ஏர்,மாடு    ஆ) மண்,மாடு,ஏர்,உழவு           இ) ஏர்,உழவு,மாடு,மண் 

ஈ) உழவு,ஏர்,மண்,மாடு


7.மேன்மைத்  தரும் அறம் என்பது ___________

அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது  

ஆ) மறு பிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது  

இ) புகழ் கருதி அறம் செய்வது

ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது


8. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்__

அ) அகவற்பா      ஆ) வெண்பா     இ)  வஞ்சிப்பா    ஈ) கலிப்பா


9. பதினெண் கீழ்க்கணக்கு, நாலடியார் – இவ்விலக்கியங்களில் இருக்கும் தமிழெண்களைக் கண்டறிக

அ) ௧ ௦ ௬         ஆ) ௧ ௮ ,௪      இ) ௪ ,௧ ௧       ஈ) ௪ ,௧ ௮


10. கருத்தாழமும்,வாசக சுவைப்பும் கலந்து இலக்கியங்களைப் படைத்தவர்____

அ) அசோக மித்திரன்                  ஆ) க.ந.சு          இ) ஜெயகாந்தன்                        ஈ) ஜெகசிற்பியன்


11. அருந்துணை என்பதைப் பிரித்தால்

அ) அருமை + துணை      ஆ) அரு + துணை         இ) அருமை + இணை ஈ) அரு + இணை


பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-


பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்


12) இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?

அ) சிலப்பதிகாரம்            ஆ) மணிமேகலை         இ) சீவகசிந்தாமணி                    ஈ) பரிபாடல்


13) பாடலில் அமைந்த எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

அ) பகர்வன, நகரவீதி     ஆ) கட்டும்,காருகர்          இ)  பகர்வனர், பட்டினும் ஈ) பருத்தி,துகிரும்


14) காருகர் – பொருள் தருக.

அ) கட்டுபவர்                  ஆ) நெய்பவர்                 இ) உழுபவர்                             ஈ) பாடுபவர்


15) இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?

அ) பூக்கள் திரவியங்கள் ஆ) ஜவ்வாது,புகை         இ) சந்தனம்,அகில்          ஈ) அகில்,ஜவ்வாது


பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1


எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                  4×2=8

21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.


16. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. செயற்கை நுண்ணறிவுக் கணினியான வாட்சன் சில  நிமிடங்களில் நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.

ஆ. மூச்சுப் பயிற்சியே உடலைப் பாதுகாத்து,வாழ்நாளை நீட்டிக்கும் என்கிறார் திருமூலர்.


17. பலகற்றும் கல்லாதவராகக் கருதப்படுபவர் யார்?.


18. சங்க காலப் போர் அறம் குறித்து எழுதுக.


19. பாசவர், வாசவர், பல்நிணவிலைஞர்,உமணர் சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?


20. மெய்நிகர் உதவியாளர் பற்றிக் கூறு.


21.  “ முயற்சி “ எனத் தொடங்கும் குறளை எழுதுக.


பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                                   5×2=10


22. கால வழுவமைதி என்றால் என்ன?


23. அடிக்கோடிட்ட தொகைச் சொற்களை வகைப்படுத்துக.


அ) கபிலபரணர் , உற்றார் உறவினர்       ஆ) கார்குழலி பாடம் படித்தாள்


24. தொகைச் சொல்லை விரித்து எழுதுக:- அ) ஐந்திணை                       ஆ) முப்பால்


25. கலைச்சொல் தருக:- அ) NANOTECHNOLOGY          ஆ)  INFRARED RAYS


26. தற்குறிப்பேற்ற அணி என்றால் என்ன?


27. பதிந்து – பகுபத உறுப்பிலக்கணம் தருக.


28. உணர்ச்சித் தொடராக மாற்றுக.


அ) இமயமலை மிகவும் உயரமானது       ஆ) கிளி,கல்லால் அடிபட்டது.


பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                                      2×3=6

29. “ பொய்க்கால் குதிரையாட்டம் “ என்னும் நிகழ்கலை குறித்து நீங்கள் அறிந்தவற்றை எழுதுக


30. நவீன உலகில் எந்தெந்தப் பணிகளைச் செயற்கை நுண்ணறிவு மூலம் செய்கிறோம்?


31. உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

            தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை. அமிழ்தமே

 கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கு கொடுப்பார். நல்லோர், அத்தகையோரால் தான்

 உலகம் நிலைத்திருக்கிறது. விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளுள்

 ஒன்றாகக் கருதப்படுகிறது.


அ) தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை எது?


ஆ) நல்லோரின் இயல்பு யாது?


இ) உலகம் யாரால் நிலைத்திருக்கிறது?


பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                          2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. ‘ நானே தொடக்கம் ‘நானே முடிவு

        நானுரைப்பது தான் நாட்டின் சட்டம் “ – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

33. மன்னன் இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்பு செய்தது ஏன்? விளக்கம் தருக.

34.  அடிபிறழாமல் எழுதுக

“ சிறுதாம்பு தொடுத்த“ எனத் தொடங்கும் முல்லைப்பாட்டுப் பாடல்

(அல்லது )

             “ தூசும் துகிரும் “ எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடல்

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                                            2×3=6

35. . பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

     நல்லார் தொடர்கை விடல் – இக்குறட்பாவிற்கு அலகிட்டு வாய்பாடு தருக.

36. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தைக் கூறு.

37. வினா வகையையும் விடை வகையையும் தருக.

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                         5×5=25

38. அ) முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை அழகுற விவரிக்க.

( அல்லது )

ஆ) கருணையன் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும்

 உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.


39. அ) மரம் இயற்கையின் வரம் என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்றப் போட்டியில்

 முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.


( அல்லது )


 ஆ. உங்கள் பகுதியில் ஏற்பட்ட கடும்புயலில் சாய்ந்துவிட்ட மரங்களை அகற்றியும், பழுதுபட்ட

 சாலைகளைச் சீரமைத்தும் ,தருமாறு மாநகராட்சி ஆணையருக்குக் கடிதம் ஒன்று எழுதுக


40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.


41.கொடுக்கப்பட்டுள்ள நூலக உறுப்பினர் படிவத்தினைப் பூர்த்தி செய்க.


42. அ) அரசால் நிறுவப்படும் கட்டடங்களிலும் ,சிலைகளிலும் நிறுவியர் பெயர்,நிறுவப்பட்ட

 காலம், நோக்கம் சார்ந்த பிற செய்திகள் தாங்கிய கல்வெட்டுகளைப் பார்த்திருப்பீர்கள்.


இவை போன்று நீவிர் கண்ட பல்வேறு பழமையான நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்துப்

 பராமரிக்கும் வழிமுறைகள் ஐந்தினை பட்டியலிடுக.

( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க.

            Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam

 region was the fit for cultivation, as it had  the most fertile lands. The properity of a farmer

 depended on getting the necessary sunlight,seasonal rains and the fertility of the soil.Among these

 elements of nature,sunlight was considered indispensible by the ancient

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                                              3×8=24

43. அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ்

 மன்றத்தில்  பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக

( அல்லது )

ஆ) நிகழ்கலை வடிவங்கள் – அவை நிகழும் இடங்கள் – அவற்றின் ஒப்பனைகள் – சிறப்பும்

 பழமையும் – இத்தகைய மக்கள் கலைகள் அருகி வருவதற்கான காரணங்கள் – அவற்றை

 வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன – இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக


44. அ)அழகிரி சாமியின் ‘ ஒருவன் இருக்கிறான் ‘ என்னும் சிறுகதையில் மனத்தை

 வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக.

( அல்லது )

ஆ) மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம்,அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய

 கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க


45. அ) விசும்பின் துளியும் பசும்புல் தலையும், என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டு

 குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று வரைக.

குறிப்புகள் : முன்னுரை – இயற்கையோடு இயைந்து வாழ்வோம் – வானத்து மழைநீரைப் பூமியில்

 காப்போம் – மழைக்கு ஆதாரமான மரங்களை வளர்ப்போம் – முடிவுரை

( அல்லது )

ஆ) உங்கள் பகுதியில் நடைபெற்ற பொருட்காட்சிக்கு சென்று வந்த நிகழ்வைக்

 கட்டுரையாக்குக.

 WAIT FOR 10 SECONDS

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post