அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளின் அன்பான வணக்கம். இவ்வுலகில் படைக்கப்பட்ட உயிரினங்கள் எல்லாம் ஏதோ ஒரு காரணம் கருதியே படைக்கப்பட்டுள்ளது. அவற்றில் தமது திறனால் பிரபலமடைவதும் உண்டு. மானிடப் பிறவிகளிலும் பலர் பிறக்கிறார்கள், பலர் வளர்கிறார்கள் ஆனால் வெகு சிலரே தமது திறமைகள் என்னவென்று அறிந்து அதனை வெளி உலககிற்கு அடையாளப்படுத்தி சாதனைப் புரிகிறார்கள். உலகின் வரலாற்றுப் பக்கங்களில் நீங்கா இடம் பெறுகிறார்கள். நாம் ஓவ்வொருவரும் தமது திறமை என்ன என்பதனை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒவ்வொருவரிடமும் படைப்பாக்கத் திறன் உள்ளது. அதனை வெளிக்கொணர வேண்டும். சில நாட்களுக்கு முன் அரசு பள்ளிகளில் கலைத் திருவிழாப் போட்டிகள் மாவட்ட அளவில் நடந்து முடிந்துள்ளன. அதில் பல்வேறு மாணவர்கள் பல்வேறு விதமான திறமைகளை வெளிப்படுத்தியதை நாம் சமூக வலைதளங்களில் காண முடிந்தது. அந்த வகையில் சேலம் மாவட்டம் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் படைப்பாற்றல் திறன், கற்பனைத் திறன் இவற்றை வெளிப்படுத்தும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஒவ்வொரு மாதமும் சேலம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மூலம் மாதாந்திர மின் இதழ் வெளியிடப் பட உள்ளது. ஜனவரி -2023 முதல் அந்த மின் இதழ் ஒவ்வொரு மாதமும் வெளிவர உள்ளது. இந்த மின் இதழில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் படைப்பாற்றல் திறன், கற்பனைத் திறன் இவற்றை வெளிப்படுத்தலாம். இதற்கு ஜனவரி மாத மின் இதழ்களுக்கான தலைப்புகள் பாடவாரியாக வழங்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் படைப்புத் திறனை வெளிக் கொணரலாம். தங்களின் படைப்புகள் சுயமாக எழுதப்பட்டவையாக இருக்க வேண்டும்.
ஜனவரி மாதத்தில் வெளிவர இருக்கும் மின் இதழுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின் பற்றவேண்டிய வழிமுறைகள் மற்றும் தலைப்புகளை இங்கு உங்களுக்கு PDF வடிவில் வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு தங்களின் படைப்புகளை 02-01-2023 க்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த அரையாண்டு விடுமுறை தினத்தில் உங்களின் படைப்புகளை வெளி உலகிற்கு காட்டுங்கள். சிறந்த படைப்புகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
ஜனவரி - மாத மின் இதழ் - அறிவுரைகள் - CLICK HERE
ஜனவரி - மாத மின் இதழ் - தமிழ் - CLICK HERE
ஜனவரி - மாத மின் இதழ் - ஆங்கிலம் - CLICK HERE
ஜனவரி - மாத மின் இதழ் - கணிதம் - CLICK HERE
ஜனவரி - மாத மின் இதழ் - அறிவியல் - CLICK HERE
ஜனவரி - மாத மின் இதழ் - சமூக அறிவியல் - CLICK HERE
ஜனவரி - மாத மின் இதழ் - ஓவியம் - CLICK HERE