10TH - TAMIL - HALF YEARLY KEY - KALLAKURICHI DT - PDF

    

கள்ளக்குறிச்சி – அரையாண்டு வினாத்தாள்

டிசம்பர் - 2022-2023

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

கள்ளக்குறிச்சி – அரையாண்டு வினாத்தாள்

டிசம்பர் - 2022-2023

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                         மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

இ. சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

1

2.

ஆ. அன்மொழித் தொகை

1

3.

ஆ. ஆசிரியப்பா

1

4.

அ. வணிக கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

1

5.

ஆ. உயிர்ப்பின் ஏக்கம்

1

6.

ஈ. சிலப்பதிகாரம்

1

7.

இ. குகன்

1

8.

அ. கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

1

9.

ஈ. சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

1

10.

ஆ. நேர் விடை

1

11.

இ. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடம் உண்டு

1

12.

அ. கூத்தராற்றுப்படை

1

13.

ஈ. மலை (மலைச்சரிவு)

1

14.

ஆ. நோனா - நோன்தாள்

1

15.

ஆ.வினையெச்சம்

1

பகுதி – 2

பிரிவு - 1

16.

உரைநடையும் செய்யுளும் இணைந்து,  யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை எனப்படும்..

 தமிழில் மகாகவி பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது

2

17.

அ. ஈழத்துப் பூதம் தேவனார் உதவியாண்மை என்று எதனைக் குறிப்பிடுகிறார்?

ஆ. கரகாட்டத்தின் துணை ஆட்டமாக ஆடப்படுவது எது?

1

1

18.

அரும்பு,       போது,       மலர்,      வீ,     செம்மல்

2

19

(பொருத்தமான விடை எதுவாயினும் மதிப்பெண் வழங்கலாம்)

தாய்மொழி தமிழையும் ஆங்கிலத்தையும் தவிர நான் கற்க விரும்பும் மொழி பிரெஞ்சு மொழி.

ஏனென்றால், நான் பிரெஞ்சுப்  புரட்சிக்கு காரணமான சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம் என்ற

கருத்துக்களை உள்ளடக்கிய இலக்கியங்களை கற்க விரும்புகிறேன்.

 

2

20.

"இளம் பயிர் வளர்ந்து நல் மணியாய் முதிர்வதற்கு முன் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்ந்தது போல"  என்பது உவமையின் பொருளாகும்.

 அதுபோல், கருணையன் வளர்ந்து ஆளாகும் முன்னரே தாயை இழந்து வாடுகிறான்,   என்பதை உணர்த்த இவ்வுவமை எழுத்தாளப்பட்டுள்ளது.

2

21

கட்டாய வினா:

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்

2

பகுதி – 2 / பிரிவு - 2

22

ஆநிரை கவர்தல் வெட்சி        x ஆநிரை மீட்டல் கரந்தை

மண்ணாசை கருதிப்  போரிடல்     வஞ்சி x எதிர்த்து நிற்றல் காஞ்சி

மதிலைக் காத்தல் நொச்சி x மதிலை வளைத்தல் உழிஞை

2

23

ஒலி + த் + த் + உ.        

ஒலி – பகுதி;       த் – சந்தி;     த் - இறந்த கால இடைநிலை;      உ - வினையெச்ச விகுதி

2

24

அ. நாட்டுப்புற இலக்கியம்                                

ஆ கலந்துரையாடல்

1

1

25.

அவ்விடத்திலேயே   தேநீர் அருந்திவிட்டு, செய்தித்தாள் படித்துக் கொண்டு இரு. நான் விரைவாக     வந்து விடுவேன்.

2

26.

இன்னும் சிறிது நேரத்தில் நான் ஊருக்குள் வரப் போகிறேன்

பண்டிகைக் காலங்களில் பூக்களின் விலை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும்

2

27.

அ. கசடறக் கற்கும் கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்           (ஏற்ற விடை ஏதாயினும் மதிப்பெண் தரலாம்)

ஆ. பழங்கள் தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

 

1

1

28.

அ. கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கியதும் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்

ஆ. ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது; அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைப்பட்டது.

2

பகுதி – 3 / பிரிவு - 1

29

இடம்: மாநகர தந்தை செங்கல்வராயன் தலைமைமாநகராட்சி சிறப்புக் கூட்டம்

பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகர் சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து முழங்கிய முழக்கம் இது.

விளக்கம் : இதன் பொருட்டு மா.பொ.சி. சென்னையை மீட்க தலைக்கொடுத்தேனும் தலைநகர் காப்போம் என முழங்கினார்.

3

30

Ø  காட்டில் பனைவடலி நடப்பட்டது

Ø  தோட்டத்தில் மாங்கன்று நடப்பட்டது.

Ø  சோளப் பைங்கூழ் வளர்ந்து வருகிறது

Ø  புளியங்கன்று சாலை ஓரத்தில் வளர்ந்து வருகிறது.

Ø  தோட்டத்தில் தென்னம்பிள்ளை வளர்த்தேன்

3

31.

அ.  இதழியலில் செயற்கை நுண்ணறிவு குறிப்பிடத் தகுந்த மாறுதல்களைச் செய்து வருகிறது.

ஆ. இயல்பான மொழி நடையை உருவாக்கும் மென்பொருளின் பெயர் எழுத்தாளி (வேர்டு ஸ்மித்)

இ. இந்த உலகத்தை இனி ஆளப்போவது செயற்கை நுண்ணறிவு.

 

1

1

1

பகுதி – 3 / பிரிவு - 2

32

தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று

கடவுளரையோ,       அரசரையோ,     சான்றோரையோ     பாட்டுடைத்      தலைவராக்கி,    அத்தலைவரைக் குழந்தையாக கருதி பாடுவர்.

இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ்,பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகை உள்ளது.   

3

33.

தமிழ்

கடல்

1. முத்தமிழாக வளர்ந்தது

1. முத்தினைத் தருகிறது

2. முச்சங்களால் வளர்க்கப்பட்டது

2. மூன்று சங்குகளைத் தருகிறது

3. ஐம்பெருங்காப்பியங்கள்

3. பெரும் வணிகக் கப்பல்

4. சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது.

4. சங்கினைத் தடுத்து காக்கிறது

3

34.

அ) அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.

              -குலசேகராழ்வார்

( அல்லது )

ஆ) நவமணி வடக்க யில்போல்

நல்லறப் படலைப் பூட்டும்

       தவமணி மார்பன் சொன்ன

தன்னிசைக்கு இசைகள் பாடத்

        துவமணி மரங்கள் தோறும்

துணர்அணிச் சுனைகள் தோறும்

        உவமணி கானம்கொல் என்று

ஒலித்து அழுவ போன்றே                                                                வீரமாமுனிவர்

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

இலக்கணம்: இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக்கூறுதல்.

.கா:

தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்

..................................................................................

................... கூவினவே கோழிக் குலம்.

விளக்கம்:

அதிகாலை விடிந்து கோழிகளும் இயல்பாக கூவும்.ஆனால் புலவர் தமயந்தியின் துயர் கண்டே கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாகக் கூறுகிறார்.

3

36.

வ.எ

சீர்

அசை

வாய்பாடு

1

மதி/நுட்/பம்

நிரை நேர் நேர்

புளிமாங்காய்

2

நூ/லோ

நேர் நேர்

தேமா

3

டுடை/யார்க்/

நிரை  நேர்

புளிமா

4

கதி/நுட்/பம்

நிரை நேர் நேர்

புளிமாங்காய்

5

யா/வுள/

நேர்  நிரை

கூவிளம்

6

முன்/நிற்/

நேர் நேர்

தேமா

7

பவை

நிரை

மலர்

இக்குறள் இறுதிச்சீர் “மலர்” என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

3

37

 

கொண்டுகூட்டுப் பொருள்கோள்:

ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக் கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள் கொள்வது கொண்டு கூட்டுப் பொருள்கோள் ஆகும்.

       சான்று:      ஆலத்து மேல குவளை குளத்துள

வாலின் நெடிய குரங்கு

        விளக்கம்:

மேற்கண்ட பாடலில் ஆலத்து மேல் குவளை என்றும் குளத்தில் வாலின் நெடிய குரங்கு என்றும் பொருள் கொண்டால் பொருத்தமற்றதாகிவிடும். இதில் ஆலத்து மேல குரங்கு குளத்துள குவளை என்று கருத்தைக் கொண்டு அங்கும் இங்கும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளுமாறு அமைந்திருப்பதால் இது கொண்டு கூட்டுப் பொருள்கோள் ஆகும்

3

பகுதி – 4

38

  அ)

v  இரண்டாம் இராச இராச சோழனின் நாட்டின் வளம்,ஆட்சிச் சிறப்பைச் சொல்கிறது.

v  யானைகள் மட்டும் பிணிக்கப்படுகிறது.மக்கள் பிணிக்கப்படவில்லை.

v  சிலம்புகள் புலம்புகின்றன. மக்கள் புலம்புவதில்லை.

v  ஓடைகள் கலக்கமடைகின்றன.மக்கள் கலக்கமடைவதில்லை.

v  நீர் அடைக்கப்படிகிறது. மக்கள் அடைக்கப்படுவதில்லை.

v  மாங்காய்கள் வடுபடுகிறது. மக்கள் வடுபடுவதில்லை.

v   நெற்போர் மட்டுமே இருக்கிறது.மற்ற போர்கள் இல்லை.

5

38

ஆ.

குறிப்புச் சட்டம்

முன்னுரை

மழை மேகம்

மழைப் பொழிவு

மாலைப் பொழுது

நற்சொல் கேட்டல்

ஆற்றுப்படுத்துதல்

முன்னுரை :

            முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை நாம் கட்டுரை வடிவில் காணலாம்.

மழை மேகம் :

திருமால் மாவலி மன்னனுக்கு நீர் வார்த்து தரும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் பேருருவம் எடுத்தது போல் மழை மேகம் உயர்ந்து நின்றது.

மழைப் பொழிவு :

கடலின் குளிர் நீரைப் பருகி, மலையைச் சூழ்ந்து விரைந்த வேகமாய் பெருமழைப் பொழிகிறது.

மாலைப் பொழுது :

வண்டுகளின் ஆரவாரம் கொண்ட அரும்புகள்.

முதுப் பெண்கள் மாலை வேலையில் முல்லைப் பூக்களோடு, நெல்லையும் தெய்வத்தின் முன் தூவினர்.

நற்சொல் கேட்டல் :

முதுப்பெண்கள் தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.

இது விரிச்சி என அழைக்கப்படும்

ஆற்றுப்படுத்துதல் :

இடைமகள் பசியால் வாடிய இளங்கன்றை காணல்

உன் தாய்மாரை எம் இடையர் இப்போது வந்து விடுவர் எனக் கூறல்

முதுப் பெண்கள் இந்த நற்சொல்லை நாங்கள் கேட்டோம். உன் தலைவன் வந்து விரைந்து வந்துவிடுவான் என ஆற்றுப்படுத்தினர்

முடிவுரை :

          இவ்வாறு முல்லைப் பாட்டில் மழைமேகம், மழைப்பொழிவு, மாலைப் பொழுது, நற்சொல் கேட்டல், ஆற்றுப்படுத்துதல் என செய்திகளை கண்டோம்

5

39

அ.

அனுப்புநர்

அமுதன்.வெ

10, ஆம் வகுப்பு,

அரசு உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி,சேலம்.

பெறுநர்

தலைமை ஆசிரியர் அவர்கள்,  

அரசு உயர் நிலைப்லைப்பள்ளி,

கோரணம்பட்டி,சேலம்.

ஐயா,

பொருள்: பள்ளித் தூய்மை - செயல்திட்ட வரைவு - ஒப்புதல் வேண்டுதல் - சார்பு.

நமது 'பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல்' குறித்த செயல்திட்ட வரைவு ஒன்றை உருவாக்கியுள்ளேன். அதனைச் செயல்படுத்திட ஒப்புதல் வழங்கிடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 செயல்திட்ட வரைவு :

1) வகுப்பறைத் தூய்மை – தினமும் காலை 8.00 மணி

2) வளாகத் தூய்மை - தினமும் மாலை 5.00 மணி

3) குடிநீர்த் தொட்டி பராமரிப்பு - திங்கள், வெள்ளி

4) வீணாகும் நீரை – செடிகளுக்கு செல்லுமாறு மாற்றிவிடுதல்

இடம்: கோரணம்பட்டி

நாள்:27 /06 /2021

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள

அமுதன்.வெ

உறைமேல் முகவரி:

பெறுநர்:

தலைமை ஆசிரியர் அவர்கள்,  

அரசு உயர் நிலைப்லைப்பள்ளி,,

கோரணம்பட்டி,சேலம்.

5

39

அனுப்புநர்

            அ அ அ அ அ,

            100,பாரதி தெரு,

            சக்தி நகர்,

            சேலம் – 636006.

பெறுநர்

            உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

            உணவு பாதுகாப்பு ஆணையம்,

            சேலம் – 636001

ஐயா,

பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல்சார்பு

            வணக்கம். நான் நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் கோழி பிரியாணி உண்டேன். அது கெட்டுப் போனதாகவும் மேலும் அதன் விலைப்பட்டியலைவிட விலைக் கூடுதலாகவும் இருந்தது. இத்துடன் அந்த உணவிற்கான விலை இரசீது நகல் மற்றும் உணவு பட்டியல் நகலையும் இணைத்துள்ளேன். தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி.

இணைப்பு:                                                                     இப்படிக்கு,

1. விலை இரசீதுநகல்                                                                              தங்கள் உண்மையுள்ள,

2. விலைப்பட்டியல்நகல்                                                                                                    அ அ அ அ அ.

இடம் : சேலம்    

நாள் : 04-03-2021

உறை மேல் முகவரி:

பெறுநர்

          உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

உணவு பாதுகாப்பு ஆணையம்,

சென்னை.

5

40

மேல்நிலை வகுப்பு  -  சேர்க்கை விண்ணப்பம்

சேர்க்கை எண்:    12345          தேதி:  16.12.2022       வகுப்பும் பிரிவும்: 11, கணிதம்

 

1.             மாணவ / மாணவியின் பெயர்               :           தமிழ்ப்பாவலன்

2.            பிறந்த நாள்                                           :           05.04.2007

3.            தேசிய இனம்                                        :           இந்தியன்

4.            பெற்றோர் / பாதுகாவலர் பெயர்             :           தமிழ்வேந்தன்

5.            வீட்டு முகவரி                                       :16, பாரதிதாசன் தெரு,       

                                                                              தி.ரு.வி.க. நகர்.

                                                                      கள்ளக்குறிச்சி மாவட்டம்

6.            இறுதியாகப் படித்த வகுப்பு                    :           பத்தாம் வகுப்பு

7.             பயின்ற மொழி                                      :           தமிழ்

8.            பெற்ற மதிப்பெண்கள்                           :           450

9.            இறுதியாகப் படித்த பள்ளியின் முகவரி  :          

                                             அரசு உயர்நிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி

தேர்வின் பெயர்

பதிவு எண் – ஆண்டு

பாடம்

மதிப்பெண் (100)

அரசு பொதுத் தேர்வு

 

 6543210

2022 – 2023

தமிழ்

   90

ஆங்கிலம்

   90

கணிதம்

   90

அறிவியல்

   90

சமூக அறிவியல்

   90

மொத்தம்

 450

 

10.           மாற்றுச் சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா?     :           ஆம், இணைக்கப்பட்டுளது

11.            தாய்மொழி                                                        :           தமிழ்

12.           சேர விரும்பும் பாடப்பிரிவும் பயிற்றுமொழியும்     :           கணிதம் – உயிரியல்,        தமிழ்

                                                 மாணவ / மாணவியின் கையொப்பம்

                                                                      தமிழ்ப்பாவலன்

5

41.

( ஏற்புடைய விடை இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் )

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத  

என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி    

அர்த்தமுள்ள இந்தக் காட்சி

சமூகத்திற்கு தேவையான காட்சி

சமூக விளைவை ஏற்படுத்துக் காட்சி

எல்லோருக்கும் அறிவுறுத்தும் காட்சி

5

42

அ.

1.குழு விளையாட்டுகள் விளையாடுதல்.

2.உலக நிகழ்வுகளைப் பற்றி  கலந்துரையாடுதல்.

3.விளையாட்டு களத்திற்குச் சென்று விளையாடுதல்.

4நூல்களைப் படித்தல்.

5..திறன்பேசியின் தீமைகளை எடுத்துரைத்தல், அதன் பயன்பாட்டை குறைக்கச் செய்தல்.

5

42

மொழிபெயர்க்க

கலைஞர்களால் தெருவில் இசை நாடகம் போல் நடத்தப்படுவதே தெருக்கூத்து. இதில் இராமாயணம்,மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் இன்னபிற பழங்கால புராணங்களிலிருந்தும் கதைகளை,நிறைய பாடல்களுடன் நாடகமாக்கம் செய்து, சூழ்நிலைக்கேற்ப வசன்ங்களை சேர்த்து கலைஞர்கள் மெருகேற்றி நடிப்பார்கள். பதினைந்திலிருந்து இருபது கலைஞர்கள் ஒரு குழுவாககூத்து குழுஒன்றை அமைத்து இதை நடத்துவர். குழுவுக்கென பாடகர் இருந்தாலும் அனைவருமே தங்கள் குரலில் பாடுவர். கலைஞர்கள் மிக கனமான உடைகளும்,ஆபரணங்களும் அணிந்து கனமாக முகப்பூச்சும் அணிந்து பங்கு கொள்கிறார்கள். இவை கிராமங்களில் புகழ் பெற்றவை

5

 

பகுதி – 5

 

43

( ஏற்புடைய விடை இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் )

அ)    குறிப்புச் சட்டம்

வரவேற்பு

விருந்து உபசரிப்பு

நகர் வலம்

இரவு விருந்து

பிரியா விடை

வரவேற்பு :

·         என் இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக,வருக என மகிழ்ச்சியாக வரவேற்றேன்.

·         அவர்கள் அமர்வதற்கு இருக்கையை சுத்தப்படுத்திக் கொடுத்தேன்.

·         வந்தவர்களுக்கு முதலில் நீர் அருந்தத் தந்தேன்.

விருந்து உபசரிப்பு :

·         வந்தவர்களுக்கு கறியும், மீனும் வாங்கி வந்தேன்.

·         மாமிச உணவை வாழை இலையில் பரிமாறினேன்.

·         அவர்கள் உண்ணும் வரை அருகில் இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றை பார்த்துப் பார்த்து கவனித்தேன்.

நகர்வலம் :

·         விருந்து முடித்து, எங்கள் ஊரின் சிறப்புகளை கூறினேன்.

·         ஊரின் சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று அவற்றை உறவினர்களோடு கண்டு களித்தேன்.

இரவு விருந்து :

·         நகர்வலம் முடித்து, இரவு விருந்துக்கு தேவையானவற்றை செய்தேன்.

·         இரவில் இரவு நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்துப் படைத்தேன்.

பிரியா விடை :

·         இரவு விருந்து முடித்து அவர்கள் தங்கள் ஊருக்கு செல்வதாக கூறினர்.

·         எனக்குப் பிரிய மனமில்லாமல் அவர்கள் கூடவே பேருந்து நிறுத்தம் வரை சென்று வழி அனுப்பிவிட்டு வந்தேன்

 

8

 

ஆ. ( ஏற்புடைய விடையாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் )

·         வணிக நோக்கமின்றி அறம் செய்ய வேண்டும். அதை விளம்பரப்படுத்தக்கூடாது.

·         நீர்நிலை பெருக்கி,நிலவளம்கண்டு,உணவுப் பெருக்கம் காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல் தலைவர்களுக்கு பொருந்தும்

8

44.

அ. குறிப்புச் சட்டம்

முன்னுரை

1புயல் வருணனை

அடுக்குத் தொடர்

ஒலிக் குறிப்பு

முடிவுரை

முன்னுரை :

          புயலிலே ஒரு தோணியில் பா.சிங்காரம் எழுதியுள்ள புயல் வருணனை, அடுக்குத் தொடர், ஒலிக் குறிப்பு பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

புயல் வருணனை :

·         கொளுத்தும் வெயில்

·         மேகங்கள் கும்மிருட்டு

·         இடி முழக்கம் வானத்தைப் பிளந்தது.

·         மலைத் தொடர் போன்ற அலைகள்

·         வெள்ளத்தால் உடை உடலை ரம்பமாய் அறுக்கிறது

அடுக்குத் தொடர் :

·         நடுநடுங்கி

·         தாவி தாவி

·         குதி குதித்தது

·         இருட்டிருட்டு

·         விழுவிழுந்து

ஒலிக் குறிப்பு :

·         கடலில் சிலுசிலு, மரமரப்பு

·         ஙொய்ங், புய்ங் ஙொய்ங் புய்ங் ஙொய்ங் புய்ங்

முடிவுரை :

·         பகல் இரவாகி உப்பக்காற்று உடலை வருடியது

·         அடுத்த நாள் பினாங்கு துறைமுகத்தை அணுகினார்கள்.

·         இவ்வாறாக வருணனைகளோடும், அடுக்குத் தொடர்களையும், ஒலிக் குறிப்புகளையும் கொண்டு தோணி படும் பாட்டை பா.சிங்காரம் விவரிக்கின்றார்.

8

44

ஆ) குறிப்புச்சட்டம்

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

குப்புசாமி

பக்கத்து வீட்டுக்காரர்

முடிவுரை

முன்னுரை:

          கல்மனதையும் கரைய வைக்கும் கதை இந்த ஒருவன இருக்கிறான். இதை இக்கட்டுரையில் காண்போம்.

குப்புசாமி:

Ø  குப்புசாமி 25 வயது வாலிபன்.வயிற்று வலிக்காரன்

Ø  உறவினர்கள் இவனை அனாதைப் போல நடத்தினார்கள்.

Ø  காரணமில்லாமல் பக்கத்து வீட்டுக்காரரால் வெறுக்கப்பட்டான் குப்புசாமி.

Ø  வயிற்றுவலிக்கு மருத்துவம் பார்க்க சென்னை வந்தவன் இந்த குப்புசாமி.

பக்கத்து வீட்டுக்காரர்:

Ø  பக்கத்து வீட்டுக்காரர் காரணமில்லாமல் வெறுப்பை அவன் மீது காட்டியவர். அவரின் மனைவி கருணையோடு இருந்தவர்.

Ø  குப்புசாமிக்கு ஆறுமுகம் மூலம் கடிதம் வந்தது. ஆறுமுகமும் தன் பங்காக இரு சாத்துகுடியும்,ஒரு ரூபாய் பணமும் கொடுத்தார்.

Ø  பக்கத்து வீட்டுக்காரர் குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதை வீரப்பனின் கடிதம் மூலம் அறிந்தார். கடன் வாங்கி கொடுத்த அந்த மூன்று ரூபாயும் அவரின் மனதை மாற்றியது.

Ø  மனைவியை உடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல சாத்துக்குடி வாங்க சென்றார்.

முடிவுரை:

          எல்லோருக்கும் ஒருவன் இருக்கிறான் யாரும் அனாதை இல்லை என்பதை இக்கட்டுரையின் மூலம் காணும் போது மனிதம் துளிர்க்கிறது எனபதனை அறிய முடிகிறது.

8

45

ஆ.

நிகழ்கலை வடிவங்கள்

நிகழும் இடங்கள்

ஒப்பனைகள்

சிறப்பும்,பழமையும்

அருகி வரக் காரணம்

நாம் செய்ய வேண்டுவன

நிகழ்கலை வடிவங்கள் :

          சமூக பண்பாட்டுத் தளத்தின் கருத்து கருவூலம் நிகழ்கலைகள். பழந்தமிழ் மக்களின் கலை,அழகியல்,புதுமை ஆகியவற்றை அறிவதற்கு தற்காலத்தில் நிகழ்த்தப்படும் நிகழ்கலை வடிவங்கள் துணை செய்கின்றன.

நிகழும் இடங்கள் :

          நிகழ்கலைகள் பொதுவாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நிகழ்த்தப்படும். கோயில் திருவிழாக்களில் இவ்வகை கலைகளை நாம் காணலாம்.

ஒப்பனைகள் :

            பல்வேறு விதமான நிகழ்கலைகளுக்கு கலைஞர்கள் பல்வேறு விதமான ஒப்பனைகள் செய்து ஆடுகின்றனர். தெருக் கூத்து கலைகளில் தெய்வங்கள், மன்னர்கள் போன்ற பல்வேறு விதமான ஒப்பனைகளை காணலாம்.

சிறப்பு, பழமையும்

          வாழ்வியலில் ஒரு அங்கமாக இருந்தது நிகழ்த்துகலைகள். இவை அறக்கருத்துகளைக் கூறும் சிறப்பாகவும் அமைந்தது, பொம்மலாட்டம், கையுறை கூத்து, தெருக் கூத்து போன்றவை  முன்னோர்களின் பழமை வாய்ந்த கலைகள் ஆகும்.

அருகி வரக் காரணம்:

·         நாகரிக வளர்ச்சி

·         கலைஞர்களுக்கு போதிய வருமானம் இல்லை

·         திரைத்துறை வளர்ச்சி

·         அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி

நாம் செய்ய வேண்டுவன:

·         நமது இல்லங்களில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகளில் இந்நிகழ்கலைகளை நிகழ்த்துவது.

·         நமது ஊர் கோவில் திருவிழாக்களில் இக்கலைகளை ஊக்கப்படுத்துவது.

ஊடகங்களில் இக்கலைகளைப் பற்றி விளம்பரப்படுத்துவது.

8

45

ஆ.

1. சான்றோர் வளர்த்த தமிழ்

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

தமிழின் தொன்மை

சான்றோர்களின் தமிழ்ப்பணி

தமிழின் சிறப்பு

முடிவுரை

முன்னுரை:

          சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

தமிழின் தொன்மை:

Ø  தமிழின் தொன்மையைக் கருதி கம்பர் என்றுமுள தென்தமிழ் என்றார்.

Ø  கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ்.

சான்றோர்களின் தமிழ்ப்பணி:

Ø  ஆங்கில மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச் செய்தார்.

Ø  வீரமாமுனிவர் தமிழில் முதல் சதுரகராதி வெளியிட்டார்

Ø  தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்கள் ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.

தமிழின் சிறப்புகள்:

Ø  தமிழ் இனிமையான மொழி. பல இலக்கிய, இலக்கணங்களை கொண்ட மொழி.

Ø  இயல்,இசை,நாடகம் என முத்தமிழ் உடையது.

Ø  தமிழ் மூன்று சங்கங்களை கண்டு வளர்ந்தது.

முடிவுரை:

          சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் கண்டோம்.

8

  

 ANSWER KEY - PDF

PLS WAIT FOR 10 SECONDS


நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி


ஆக்கம் :

வெ.ராமகிருஷ்ணன்,

அரசு உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி.


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post