அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்விதையின் அன்பான வணக்கம். கலைத்திருவிழா அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் திறனை வளர்க்கும் நோக்கில் பள்ளிக்கல்வித்துறை மூலம் பள்ளி அளவில் நடத்தப்பட்டு, அவற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் பங்கேற்றனர். இவர்களில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற்று, அதில் வெற்றிப் பெறும் மாணவர்களுக்கு கலையரசன்,கலையரசி பட்டத்துடன் அவர்கள் வெளிநாடு சுற்றுலாச் செல்ல வாய்ப்புள்ளது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டன. அதில் கலந்துக் கொண்டு தங்கள் திறமைகளை மாணவர்கள் பலர் வெளிக்காட்டினர். அனைவரின் பங்களிப்பும் நன்றாக இருந்தது, அதில் சிறப்பாக காணப்பட்ட மூன்று இடங்கள் நடுவர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. யார் ? எந்தப் போட்டியில்? எந்த பள்ளி ? வெற்றிப் பெற்றுள்ளது என்பதனை வகுப்பு வாரியாக கீழ்க்காணும் இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது. பங்கு பெற்றவர்கள் இதனை பதிவிறக்கம் செய்து பார்த்துக் கொள்ளலாம்.
மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு தமிழ்விதையின் வாழ்த்துகள். மேலும் இதில் முதலிடம் பிடித்த மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். முதலிடம் பிடித்த மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற்று அதிலும் வெற்றிப் பெற வேண்டுமாய் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் மனமாறப் பாராட்டுகிறது. மாநில அளவிலான போட்டியில் அதிகப் போட்டியில் வெற்றிப் பெற்று சேலம் மாவட்டத்திற்கு பெருமைச் சேர்க்க அன்பு நிறைந்த வாழ்த்துகளும், ஆசிர்வாதங்களும்.
நன்றி, வணக்கம்.