10TH - TAMIL - HALF YEARLY KEY - RAMANATHAPURAM DT - PDF

 

இராமநாதபுரம் – அரையாண்டு வினாத்தாள்

டிசம்பர் - 2022-2023

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

அரையாண்டுத்தேர்வு  தமிழ் – டிசம்பர் 2022

பத்தாம் வகுப்பு – இராமநாதபுரம் மாவட்டம்

விடைக்குறிப்பு

1. அ) எம் + தமிழ் + நா

9. அ) அகவற்பா

2. இ) அன்மொழித்தொகை

10. இ) உருவகம்

3. ஈ) சிற்றூர்

11. ஆ) வீரமாமுனிவர்

4. ஆ) பெப்பர்

12. இ) பரிபாடல்

5. ஈ) மன்னன், இறைவன்

13. ஆ) கீரந்தையார்

6. அ) மருதம், நெய்தல்

14. ஆ) அடுக்குத்தொடர்

7. ஈ) சிலப்பதிகாரம்

15. அ) யுகம்

8. இ) சங்க காலம்

 

16. அ) தமிழர் பண்பாட்டில் எதற்குத் தனித்த இடமுண்டு?

   ஆ) ஒரு நாளின் ஆறு கூறுகளை எவ்வாறு பிரித்தனர்?

17. 1 உரைநடையும் கவிதையும் இணைந்த கவிதை வடிவம் வசன கவிதை.

   2 யாப்புக் கட்டுப்பாடுகள் அற்றது.

   3 தமிழில் வசன கவிதையைப் பாரதியார் கொண்டு வந்தார்.

18. திணைச் சோற்றை உணவாகப் பெறுவீர்கள்.

19. 1  அறப்பணிகள் ஓய்வதில்லை.

    2  அறப்பணிகள் ஓய்ந்தால் உலகம் இயங்காது என்கிறார் கவிஞர்.

20. 1  வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பிவிடுவது மடை

   2  உரை என்பது பேசும் மொழியின் ஓட்டம்

   3  இதனைச் செய்யுளாகிய வயலில் பாய்ச்சுவது உரைப்பாட்டு மடை

21  செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்

    தியற்கை அறிந்து செயல்

22. தண்ணீரைக் குடி – தண்ணீரை மிகுதியாகக் குடிக்க வேண்டும்

   தயிரை உடைய குடம் – தயிர்க்குடத்தை எடுத்து வா

23. அ) சிறந்த கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்

   ஆ) பயனுள்ள மரத்தை வளர்ப்பது நன்மை தரும்

24. அ) உழவர்கள் வயலில் உழுதனர்

   ஆ) முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாரே ஆயர் காட்டுக்குச் சென்றனர்

25. கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கியதால் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்

26. அ) கலைச்சொல்  ஆ) காப்புரிமை

27. 1  வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று வரும்.

    2  முதலடி நான்கு சீராயும், இரண்டாமடி மூன்று சீராயும் வரும்

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்

28. என் ஆசிரியர் கற்றுத் தரும் பாடம் சிலைமேல் எழுத்துபோல மனதில் அழியாமல் இருக்கிறது

29. 1. ஹிப்பாலஸ் என்னும் கிரேக்க மாலுமி சேர நாட்டு முசிறித் துறைமுகத்திற்கு நடுக்கடலின் வழியே விரைவாகச் செல்லும் புதிய வழியைக் கண்டறிந்தார்

   2. அதற்கு ஹிப்பாலஸ் பருவக் காற்று என யவனர் பெயர் சூட்டினர்

   3. இதன்மூலம் தமிழரின் கடல் வாணிகம் பெருகிற்று

30. இடம் – சிற்றகல் ஒளி

பொருள் விளக்கம்

1  ஆந்திர மாநிலத்தின் தலைநகராகச் சென்னை வேண்டும் என்று ஆந்திரத் தலைவர்கள் கேட்டனர்.

2  அப்போதைய முதல்வர் இராஜாஜி தலைநகரைக் காக்கத் தன் முதல்வர் பதவியைத் துறக்க முன்வந்தார்.

3  கூட்டம் ஒன்றில் ‘தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்’ என்று முழங்கினார் மா. பொ. சி.

 31. அ) வாய்மையைச் சிறந்த அறமாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன

    ஆ) அதிசயத் திறவுகோல் நாக்கு

    இ) வாய்மை அறம்

32. 1 நோயாளிக்கு மருத்துவர்மீது மிகுந்த அன்புண்டு.

2 மருத்துவர் உடலை அறுத்தாலும் அது நன்மைக்கே என நோயாளி நினைப்பார்.

3 அதுபோல இறைவா நீயே எனக்கு மருத்துவர்.

4 உமது அருள் வேண்டும் என்கிறார் குலசேகர ஆழ்வார்.

33. 1 தேம்பா + அணி – வாடாத மாலை

   2 தேன் + பா + அணி – தேன் போன்ற பாடல்களின் தொகுப்ப

   3 இந்நூலில் 3 காண்டங்களும், 36 படலங்களும், 3615 பாடல்களும் உள்ளன

   4 இந்நூல் வீரமாமுனிவரால் இயற்றப்பட்டது

34. மனப்பாடப்பாடல் {அடியம், சீரும், பிழையும் கவனித்து மடிப்பெண் வழங்குக}

35. புறத்திணைகள் பன்னிரெண்டு வகைப்படும். அவை வெட்சி கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், கைக்கிளை, பெருந்திணை என்பன.

36.

சீர்

அசை

வாய்ப்பாடு

கொல்/லப்

நேர் நேர்

தேமா

பயன்/படு/வர்

நிரை நிரை நேர்

கருவிளங்காய்

சான்/றோர்

நேர் நேர்

தேமா

கரும்/புபோல்

நிரை நிரை

கருவிளம்

கொல்/லப்

நேர் நேர்

தேமா

பயன்/படும்

நிரை நிரை

கருவிளம்

கீழ்

நேர்

நாள்

37. அணி விளக்கம்

இயல்பாக நிகழும் நிகழ்ச்சியில் கவிஞர் தம் கற்பனையை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணியாகும்.

சான்று

காத்திரு, கவலை வீண்

வருகிறது உனக்கான வசந்தம்

இலையை உதிர்த்த மரம்

அணிப் பொருத்தம்

மரங்கள் இலையை உதிர்ப்பது இயல்பானது. இலையை உதிர்க்கும் மரம்  கவலைப் படுவதாகக் கவிஞர் தம் குறிப்பை மரத்தின் மீது ஏற்றிக் கூறுவதால் இப்பாடல் தற்குறிப்பேற்ற அணியாகும். 

38. அ) அனைவருக்கும் வணக்கம்

சுந்தரனார்

   1 கடலை ஆடையாக உடுத்திய பூமியைப் பெண்ணாகவும்

   2 பாரத நாட்டை முகமாகவும், நெற்றியாகவும்

   3 தமிழை நெற்றியில் இட்ட பொட்டாகவும் உருவகப் படுத்துகிறார்.

பெருஞ்சித்திரனார்

 1 அன்னை மொழியே, அழகான செந்தமிழே,

 2 பழமையான நறுங்கனியே, பத்துப்பாட்டே

 3 எட்டுத்தொகையே, திருக்குறளே

 4 பாண்டிய மன்னனின் மகளே

 5 உன்னைத் தலைபணிந்து வாழ்த்துகிறேன்.

அனைவருக்கும் நன்றி.

38. ஆ) 1  இரண்டாம் இராசராசச் சோழன் ஆட்சிக் காலத்தில் மக்கள் சிறப்பாக வாழ்ந்தனர்.

2  அந்நாட்டில் யானைகளே கட்டப்பட்டன, மக்கள் கட்டப்பட்டதில்லை.

2  சிலம்புகளே புலம்புகின்றன, மக்கள் புலம்புவதில்லை.

3  மாங்காய்களே வடுப்படுகின்றன, மக்கள் வடுப்படுவதில்லை.

5  வண்டுகள் கள் உண்கின்றன, மக்கள் கள் உண்பதில்லை.

6  வயலில் போர் உண்டு, மக்களிடம் போர் இல்லை.

39. அ) 1. தலைப்பு

39. ஆ) 1. தலைப்பு

2. இடம், நாள்

2. அனுப்புநர்

3. விளித்தல்

3. பெறுநர்

4. நலம் விசாரித்தல்

4. விளித்தல்

5. பொருள் விளக்கம்

5. பொருள்

6. இப்படிக்கு, பெயர்

6. விளக்கம்

7. தெளிவான முகவரி

7. இப்படிக்கு, பெயர்

 

8. இடம், நாள்

 

9. உரைமேல் முகவரி

40. பொருத்தமாக எழிதினால் மதிப்பெண் வழங்கவும்

41. வினாவைப் புரிந்து, சரியாக நிரப்பினால் மதிப்பெண் வழங்கவும்

42. அ. 1. பள்ளியில் கல்வி கற்றபின் எது நமது நினைவில் நிற்கிறதோ அதுவே கல்வியாகும்.    {ஆல்பட் எய்ன்ஸ்டீன்}

        2. வெற்றி என்பது இறுதியல்ல. தோல்வி என்பது முடிவுமல்ல. தொடர் முயற்சியே சிறப்பு.    {வின்செண்ட் சர்ச்சில்}

42. ஆ. 1  எங்கள் ஊரில் கரகாட்டம் நடத்துவேன்.

2  எங்கள் பள்ளியில் மயிலாட்டம் நடத்துவேன்.

3  எங்கள் தெருவில் தெருக்கூத்து நடத்துவேன்.

4  விழாக்களில் ஒயிலாட்டம் நடத்துவேன்.

5  சிலம்பக் கலையை வளர்ப்பேன். 

43. அ.  செயற்கை நுண்ணறிவு

முன்னுரை

‘’அறிவே ஆற்றல்’’ என்பது பழமொழி மனித அறிவின் ஆற்றலால் உருவானதே செயற்கை நுண்ணறிவு.

எதிர்கால வெளிப்பாடுகள்

1 இன்றைய உலகை ஆறிவியல் கண்டுபிடிப்புகள் ஆள்கின்றன.

2 நாளைய உலகம் இயந்திர மனிதர்களால் ஆளப்படும்.

3 வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்ளும்.

4 குழந்தைகளோடு விளையாடும்.

5 முதியவர்களைக் கவனித்துக் கொள்ளும்.

6 வணிகத்தில் பெரும்பங்கு வகிக்கும்.

7 மனிதனின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறிக்கும்.

முடிவுரை

எதிர்காலத்தில் மனிதனுக்குச் சவால் காத்திருக்கிறது.

43. ஆ. சங்க இலக்கிய அறங்கள்

1. வணிக அறம்

2. அரசியல் அறம்

3. போர் அறம்

4. கொடை அறம்

5. வாய்மை அறம்

44. அ. ஒருவன் இருக்கிறான்

முன்னுரை

‘கண்வனப்புக் கண்ணோட்டம்’  என்கிறது சிறுபஞ்சமூலம். அழகிரிசாமியின் ஒருவன் இருக்கிறான் சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் வீரப்பன்.

வீரப்பனின் மனிதநேயம்

1  வீரப்பன் கூலித் தொழில் செய்பவன். 

2  வீரப்பனின் நண்பன் குப்புசாமி.

3  குப்புசாமி பெற்றொரை இழந்தவன்.

4  மற்றவர்கள் குப்புசாமியை வெறுத்து ஒதுக்கியபோதும், விரப்பன் அவன்மீது அன்பு செலுத்தினான்.

5  தன் வறுமையிலும் அவனுக்கு உணவளித்துப் பாதுகாத்தான்.

6 குப்புசாமிக்குத் தீராத வயிற்றுவலி ஏற்பட்டபோது கடன் வாங்கி உதவினான்.

முடிவுரை

நாமும் வீரப்பனைப் போல் மற்றவர்களுக்கு உதவுவோம்.

44. ஆ. வினாவிற்குப் பொருத்தமான விடையை எழுதினால் மதிப்பெண் வழங்கவும்

45. அ. விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

முன்னுரை

‘’வானை அளப்போம் கடல்மீனை அளப்போம்

 சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம்’’

என்ற பாரதியின் கனவை நனவாக்கியவர் கல்பனா சாவ்லா.

விண்வெளிப் பயணம்

1  ஹரியானா மாநிலம் கர்னல் என்னும் ஊரில் 1961 இல் பிறந்தவர் கல்பனா கல்பனா சாவ்லா.

2  அரசுப் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்தார்.

3  விண்வெளித் துறையில் சேர்ந்து படித்தார்.

4  1997 ஆம் ஆண்டு முதல் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கினார்.

5  ஆய்வை முடித்துத் திரும்பியபோது விண்களம் வெடித்து இறந்தார்.

முடிவுரை

நாமும் கல்பனா சாவ்லாவைப் போன்று உழைத்து முன்னேறுவோம்.

45. ஆ. கொடுக்கப்பட்ட தலைப்புகளின் கீழ் பொருத்தமான விளக்கமும், தேவையான மேற்கோளும் அளித்திருந்தால் மதிப்பெண் வழங்கவும்.

  ANSWER KEY - PDF

PLS WAIT FOR 10 SECONDS



நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post