ஆறாம் வகுப்பு - தமிழ்
பருவம் - 3
இயல் - 2
வினா - விடைகள்
ஆறாம் வகுப்பு
தமிழ் – வினா – விடைத் தொகுப்பு
பருவம் : 3 இயல் : 2
எல்லோரும் இன்புற பராபரக் கண்ணி
தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்
செம்மையருக்கு ஏவலென்று செய்வேன் பராபரமே!
அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை தானே வந்து எய்தும் பராபரமே!
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
அ) தம்முயிர் ஆ) தமதுயிர் இ) தம்உயிர் ஈ) தம்முஉயிர்
2. இன்புற்று + இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ----
அ) இன்புற்றிருக்க ஆ)இன்புறுறிருக்க இ) இன்புற்றுஇருக்க
ஈ) இன்புறு இருக்க
3. 'தானென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ---------
அ) தானெ + என்று ஆ)தான் + என்று இ) தா + னென்று
ஈ) தான் + னென்று
4. ’சோம்பல்’ என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் --------
அ) அழிவு ஆ) துன்பம் இ) சுறுசுறுப்பு ஈ) சோகம்
நயம் அறிக
பராபரக்கண்ணி பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
எதுகை : தம் உயிர் – செம்மை ; அன்பர் – இன்பநிலை
மோனை : எவ்வுயிரும் – ஏவல் ; பராபரமே – பராபரமே
குறுவினா
1. யாருக்குத் தொண்டு செய்ய வேண்டும்?
தம் உயிர் போல் கருதும் சான்றோருக்கு தொண்டு செய்தல் வேண்டும்.
2. இன்பநிலை எப்போது வந்து சேரும்?
தொண்டு செய்பவராக தம்மை ஆக்கிக்கொண்டால் இன்ப நிலை தானே வந்து சேரும்.
சிறுவினா
பராபரக்கண்ணியில் தாயுமானவர் கூறுவன யாவை?
· தம் உயிர் போல் கருதும் சான்றோருக்கு தொண்டு செய்தல் வேண்டும்.
· தொண்டு செய்பவராக தம்மை ஆக்கிக்கொண்டால் இன்ப நிலை தானே வந்து சேரும்.
· எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும்
சிந்தனைவினா
குளிரால் வாடுபவர்களுக்கு நீங்கள் எவ்விதம் உதவுவீர்கள்?
· போர்வை வழங்குவேன்
· சூடான உணவினை வழங்குவேன்.
· குச்சிகளைக் கொண்டு தீ மூட்டி குளிரைப் போக்குவேன்.
· சூடான பானங்கள் வாங்கி வந்து தருவேன்.
நீங்கள் நல்லவர்
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பரிசு பெறும்போது நம் மனநிலை ……………… ஆக இருக்கும்.
அ) கவலை ஆ) துன்பம் இ) மகிழ்ச்சி ஈ) சோர்வு
2. வாழ்வில் உயர கடினமாக ……………… வேண்டும்.
அ) பேச ஆ) சிரிக்க இ) நடக்க ஈ) உழைக்க
ஆ) குறுவினா
1. பழம், வேர் ஆகியவற்றின் இயல்புகள் யாவை?
கொடுப்பது – பழம்
பெறுதல் - வேர்
2. உழைக்கும்போது என்னவாக ஆகிறோம்?
புல்லாங்குழல் ஆகிறோம்.
இ) சிந்தனை வினா
1. நல்லவர் என்னும் பெயர் பெற நாம் என்ன செய்யலாம்?
· மற்றவர்களை மதிக்க வேண்டும்.
· மற்றவர்களுக்கு உதவ வேண்டும்
· பொறுமை காக்க வேண்டும்
· நேர்மையுடன் இருக்க உழைக்க வேண்டும்.
· உண்மையாக உழைக்க வேண்டும்
2. உங்கள் குறிக்கோளை அடைய நீங்கள் செய்யும் முயற்சிகளை எழுதுக.
· நேர்மையுடன் செயல்படுவேன்
· திட்டத்தை தெளிவாக செயல்படுத்துவேன்.
· பொறுமையாக செயல்படுவேன்.
· எனகு குறிக்கோள் நிறைவேற எத்தனை தோல்விகள் கண்டாலும் அஞ்சமாட்டேன்.
பசிப்பிணி போக்கிய பாவை
1. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு …………………
அ) இலங்கைத் தீவு ஆ) இலட்சத் தீவு இ) மணிபல்லவத் தீவு ஈ) மாலத் தீவு
2. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் …………
அ) சித்திரை ஆ) ஆதிரை இ) காயசண்டிகை ஈ) தீவதிலகை
ஆ) சொற்றொடரில் அமைத்து எழுதுக.
அ) செடிக்கொடிகள் - தோட்டத்தில் செடிக்கொடிகள் அதிகம் உள்ளன.
ஆ) முழுநிலவு நாள் - பெளர்ணமி அன்று முழுநிலவு நாளாகும்
இ) அமுதசுரபி - அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம் அமுதசுரபி
ஈ) நல்லறம் – பிறருக்கு தானம் செய்வது நல்லறமாகும்.
இ) குறுவினா
1. அமுதசுரபியின் சிறப்பு யாது?
பாத்திரத்தில் இட்ட உணவு எடுக்க எடுக்க குறையாது வளர்ந்து கொண்டே இருக்கும்.
2. ‘கோமுகி“ என்பதன் பொருள் யாது?
கோ – பசு, முகி – முகம்
பசுவின் முகம் போன்று இருப்பதால் இப்பொய்கை கோமுகி என்னும் பெயரைப் பெற்றது.
ஈ) சிறுவினா
1. மணிபல்லவத்தீவு எவ்வாறு காட்சி அளித்தது?
· எங்குப் பார்த்தாலும் வெண்மணல் குன்றுகள். பூத்துக் குலுங்கும் செடிகொடிகள்.
· அடர்ந்த மரங்கள்.
· இடையிடையே பொய்கைகள்.
· மனதை மயக்கும் காட்சிகள
2. மணிமேகலை மன்னரிடம் வேண்டியது யாது?
· சிறையில் உள்ளவர்களுக்கு எவை நன்மை, எவை தீமை என்பதனை அறிஞர்களைக் கொண்டு எடுத்துக் கூற வேண்டும்,
· பெற்றோரை மதித்தல், முதியோரைப் பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வி அளிக்க வேண்டும்.
உ) சிந்தனை வினா
1. அறச்செயல்கள் என்று நீங்கள் எவற்றை எல்லாம் கருதுகிறீர்கள்?
· பிறரிடம் அன்புடன் பழகுதல்
· மற்ற உயிரினங்களிடம் அன்புக் காட்டுதல்
· கேட்காமலே உதவி செய்தல்
· மற்றவர்களை ஏமாற்றமல் இருத்தல்.
பாதம்
அ) விரிவான விடையளி
1) ‘ பாதம் ‘ கதையைச் சுருக்கி எழுதுக:-
முன்னுரை :
மாரி என்பவர் காலணி தைக்கும் ஒரு தொழிலாளி. அவர் பசியால் வாடிக்கொண்டிருந்தார். திடீரென ஒரு விசித்திரக் காலணியின் மூலம் செல்வந்தர் ஆனார். அதன் கதையைக் காண்போம்.
மாரி :
திரையரங்கு வாசலில் அவர் காலணி தைத்துக் கொண்டிருப்பவர். அன்றைக்கு பலத்த மழை. டீ குடிப்பதற்கு கூட காசு இல்லை.அன்று தான் அந்த அதிசயம் நடந்தது.
சிறுமியின் காலணி :
தியேட்டரின் வலப்புறச் சந்தில் இருந்து சிறுமியொருத்தி அவர் அருகில் வந்து ஒரு காலணியைக் கொடுத்துத் தைத்து வைக்கும்படிக் கூறிவிட்டுச் சென்றாள்.. காலணி கொடுத்துவிட்டு சென்ற சிறுமி சாயங்காலம் வரை வரவில்லை.
மாரியின் ஏமாற்றம் :
அடுத்த நாள் மாரி அந்தக் காலணியைத் துடைத்து, தனது நீலநிற விரிப்பில் வைத்துவிட்டு வேலையைத் தொடங்கினார். அன்றும் அந்தச் சிறுமி வரவில்லை. மறந்துவிட்டாளா? இல்லை யாரிடம் கொடுத்தோம் எனத் தெரியாமல் அலைகிறாளா? என்று எண்ணியபடி அன்றும் அக்காலணியை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இப்படியே. பல நாட்கள் கழிந்தன.
மாரியின் மனைவி :
மாரியின் மனைவி ஓர் இரவில் அந்தக் காலணியைக் கண்டாள் அதன் வசீகரம் அவளை ஈர்த்தது. அதனைப் போட்டுப் பார்த்தாள். அளவில் சிறியதாக இருந்தாலும் அவளுக்குச் சரியாக இருந்தது. மனைவியைத் திட்டி விட்டு காலணியை எடுத்துப் பார்த்தார் கிழியவில்லை. சிறுமியின் காலணி மனைவிக்குப் பொருந்தியதை எண்ணி வியந்தார்
காலணியின் விசித்திரம் :
மறுநாள் மாரி அவருடன் தொழில் செய்பவரிடம் இந்தக் காலணியின் விசித்திரம் பற்றிக் கூறினார் அவரும் போட்டுப் பார்த்தார் பொருத்தமாக இருந்தது. இச்செய்தி நகர் முழுவதும் பரவியது சிறியவர் முதல் முதியவர் வரை அந்தக் காலணி அனைவருக்கும் பொருந்தியது.
மீண்டும் வந்த சிறுமி :
ஒரு மழை இரவில் பார்வையாளர்கள் வந்து சென்றதும் மத்திய வயதில் ஒரு பெண் நனைந்தபடி நின்றிருந்தாள். அவள் தணிவான குரலில் சொன்னாள். “வெகு தாமதமாகிவிட்டது எனது காலணியைத் தைத்துவிட்டீர்களா இல்லையா?” என்றாள். அவளை அடையாளம் கண்டு கொண்டார் மாரி “வலது காலணியை தைக்கக் கொடுத்தது நினைவிருக்கிறதா?” என்றாள். மாரி தன்னிடம் இருந்த காலணியைக் காட்டினார். “இந்தக் காலணி உலகின் எல்லாப் பாதங்களுக்கும் பொருந்துகிறது” என்று கூறினார்.
சிறுமியின் செயல் :
அவள் இரு காலணிகளையும் தரையிலிட்டுக் காலில் அணிய முயன்றாள். அவள் கொண்டு வந்த இடது காலணி பொருந்தியது தைத்து வாங்கின வலது காலணி பொருந்தவில்லை சிறியதாக இருந்தது.
பெயர்ச்சொல்
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. இடுகுறிப்பெயரை வட்டமிடுக.
அ) பறவை ஆ) மண் இ) முக்காலி ஈ) மரங்கொத்தி
2. காரணப்பெயரை வட்டமிடுக.
அ) மரம் ஆ) வளையல் இ) சுவர் ஈ) யானை
3. இடுகுறிச்சிறப்புப் பெயரை வட்டமிடுக.
அ) வயல் ஆ) வாழை இ) மீன்கொத்தி ஈ) பறவை
ஆ) குறுவினா
1. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை,
1. பொருட்பெயர்
2. இடப்பெயர்
3. காலப்பெயர்
4. சினைப்பெயர்
5. பண்புப்பெயர்
6. தொழிற்பெயர்
2. இடுகுறிப்பெயர் என்றால் என்ன?
நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப்பெயர்கள் ஆகும். (எ.கா.) மண், மரம், காற்று
3. காரணப்பெயர் என்றால் என்ன?
நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதிப் பெயரிட்டனர். இவ்வாறு காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும். (எ.கா.) நாற்காலி
இ) சிறுவினா
1. அறுவகைப் பெயர்ச்சொற்களை எழுதுக.
1. பொருட்பெயர்
பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும்
2. இடப்பெயர்
ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர் இடப்பெயர் எனப்படும்
3. காலப்பெயர்
காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.
4. சினைப்பெயர்
பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர் எனப்படும்
5. பண்புப்பெயர்
பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் பண்புப்பெயர் எனப்படும்
6. தொழிற்பெயர்
தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.
2. அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கும் எடுத்துக்காட்டுகள் தருக.
காவியா புத்தகம் படித்தாள் - பொருட்பெயர்
காவியா பள்ளிக்குச் சென்றாள் - இடப்பெயர்
காவியா மாலையில் விளையாடினாள் - காலப்பெயர்
காவியா தலை அசைத்தாள் - சினைப்பெயர்
காவியா இனிமையாகப் பேசுவாள் - பண்புப்பெயர்
காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும் – தொழிற்பெயர்
.மொழியை ஆள்வோம்
அ) குறிப்புகளைக் கொண்டு கதை எழுதுக.
நாய்க்குட்டி - குழிக்குள் – கத்தும் சத்தம் – முகிலன் – முதலுதவி – பால் – தூங்கியது – வாலாட்டியது
நாய்க்குட்டி ஒன்று தெருவில் இருந்த குழிக்குள் எதிர்பாராத விதமாக விழுந்தது. நாய்க்குட்டியால் மேலே வர இயலவில்லை. இதனால் குழிக்குள் இருந்து சத்தமிட்டுக் கொண்டே இருந்தது. அந்த வழியாக வந்த முகிலன் நாய்க்குட்டி கத்தும் சத்தம் கேட்டு அதனை குழிக்குள் இருந்து வெளியே எடுத்தான். பின் அந்த நாய்க் குட்டிக்கு முதல் உதவியாக பால் கொடுத்தான். இதனால் நாயின் பசி அடங்கியது, பின் முகிலனைப் பார்த்து வாலாட்டியது.
ஆ) அகராதியைப் பயன்படுத்தி பொருள் எழுதுக.
1. கருணை - இரக்கம்
2. அச்சம் - பயம்
3. ஆசை - விருப்பம்
இ) கீழ்க்காணும் பெயர்ச் சொற்களை அகரவரிசையில் எழுதுக
பூனை, தையல், தேனீ, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்
விடை :
ஆசிரியர்,ஓணான்,கிளி,தேனீ,தையல்,பழம்,பூனை,மனிதன்,மாணவன்,மான், வெளவால்
ஈ) பின்வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்கள் எவ்வகைப் பெயர்கள் என எழுதுக.
1. கைகள் இரண்டும் பிறர்க்கு உதவவே எனச் சான்றோர் கருதினர். – சினைப்பெயர்.
2. அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூலின் பயனாகும். – தொழிற்பெயர்
3. குழந்தை தெருவில் விளையாடியது. – இடப்பெயர்.
4. நீதிநூல் பயில் என்கிறார் பாரதியார். – பொருட்பெயர்.
5. மாலை முழுதும் விளையாட்டு. – காலப்பெயர்
6. அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்.- பண்புப்பெயர்
உ) பின்வரும் தொடர்களில் உள்ள பெயர்ச்சொற்கள் எவ்வகைப் பெயர்கள் என எழுதுக.
விடியலில் துயில் எழுந்தேன் – துயில் – காலப்பெயர்
இறைவனைக் கை தொழுதேன் – கை – சினைப்பெயர்
நான் மதுரைக்குச் சென்றேன் – மதுரை – இடப்பெயர்
புத்தகம் வாங்கி வந்தேன் – புத்தகம் – பொருட்பெயர்
கற்றலைத் தொடர்வோம் இனி – கற்றல் – தொழிற்பெயர்
நன்மைகள் பெருகும் நனி – நன்மைகள் – பண்புப்பெயர்
ஊ) கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
அறம் செய விரும்பு
முன்னுரை
மனித வாழ்வில் அறம் செய்வது பெரும் பாக்கியமாகும். அறம் செய்ய விரும்புதல் எனும் கருத்தியல் அடுத்தவர்க்கு கொடுத்தல் மற்றும் நல்ல விடயங்களில் ஈடுபடுதல் என்பது பொருள் ஆகும்.
அறம் எனப்படுவது
மனிதனொருவன் தனக்கென வரையறுத்து கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுப்பே அறம் எனப்படுகிறது. அறம் என்பதற்குத் திருவள்ளுவர் “அழுக்காறு அவாவெகுழி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்” என்கிறார்.
நற்பண்பு
மனிதன் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்குத் தன்னால் முடிந்த அளவு உதவி செய்து வாழ வேண்டும். பிறருடையப் பொருளுக்கு ஆசைப்படாமலும், தன்னால் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்காமலும் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போதுதான் அவனுடைய நற்பண்பு வெளிப்படுகிறது. தன்னலம் கருதாமல் பிறர் நலம் பேணுபவரிடம் நற்பண்பு சிறந்தோங்கும். அதன் மூலம் அறம் வெளிப்படும்.
முடிவுரை
அறம் என்பது மனித வாழ்க்கையோடு இணைந்திருக்க வேண்டும். வையம் செழிக்க. இயற்கை வளம் பேண, மனிதர்கள் சிறந்த பண்புடன் விளங்க அறம் செய்வோம். உலகம் செழித்தோங்கவே.
மொழியோடு விளையாடு
அ) கட்டங்களில் உள்ள வார்த்தைகளைக் கொண்டு தொடர்களை அமைக்க.
வெல்லும்
கேளிர்
தீதும்
வாரா
நன்றும்
யாவரும்
யாதும் ஊரே
பிறர் தர
வாய்மையே
மாலையில்
கற்போம்
பிறருக்கு உதவி
எழுவோம்
பெரியோரை
விளையாடுவோம்
நூல் பல
செய்வோம்
உடற்பயிற்சி
புரிவோம்
அதிகாலையில்
வணங்குவோம்
1. யாதும் ஊரே யாவரும் கேளிர்
2. தீதும் வாரா நன்றும் யாவரும் பிறர்தர
3. வாய்மையே வெல்லும்
ஆ) சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துங்கள்
1. சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்.
2. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்.
3. சிறைச் சாலைக்குச் சென்று உணவிட்டாள்.
4. அமுதசுரபியைப் பெற்றாள்.
5. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்
விடை :
2. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்.
4. அமுதசுரபியைப் பெற்றாள்.
5. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்
3. சிறைச் சாலைக்குச் சென்று உணவிட்டாள்.
1. சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்.
இ) ஒலி வேறுபாடறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக.
1. அரம் – அறம்
அரம் – மரத்தை அறுக்க அரம் பயன்பட்டது.
அறம் – உதவி என்று வருபவர்களுக்கு அறம் செய்ய வேண்டும்
2. மனம் – மணம்
மனம் - மனம் இறங்கி வந்தார் முதலாளி
மணம் – மல்லிகை மணம் மிக்கது.
ஈ) இருபொருள் தருக. (எ.கா.)
ஆறு - நதி ஆறு - எண்
1. திங்கள் – மாதம், நிலவு
2. ஓடு – வீட்டின் கூரை , ஓடுதல்
3. நகை – சிரித்தல், அணிகலன்
உ) புதிர்ச் சொல் கண்டுபிடி
1. இச்சொல் மூன்றெழுத்துச் சொல். உயிர் எழுத்துகள் வரிசையில் முதல் எழுத்து இச்சொல்லின் முதல் எழுத்து. வல்லின மெய் எழுத்துகளின் வரிசையில் கடைசி எழுத்து இச்சொல்லின் இரண்டாம் எழுத்து. வாசனை என்னும் பொருள்தரும் வேறு சொல்லின் கடைசி எழுத்து இச்சொல்லின் மூன்றாம் எழுத்து. அஃது என்ன?
விடை:
அறம்
ஊ) கட்டத்தில் உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக.
விடை :
Ø மாலையில் விளையாடுவோம்
Ø பிறருக்கு உதவி செய்வோம்
Ø பெரியோரை வணங்குவோம்
Ø நூல் பல கற்போம்
Ø உடற்பயிற்சி செய்வோம்
Ø அதிகாலையில் எழுவோம்
எ) நிற்க அதற்குத் தக...
கலைச்சொல் அறிவோம்
1. அறக்கட்டளை - Trust
2. தன்னார்வலர் - Volunteer
3. இளம் செஞ்சிலுவைச்- Junior Red Cross
4. சாரண சாரணியர் - Scouts & Guides
5. சமூகப் பணியாளர் - Social Worker
ஆக்கம் :
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்
நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .
காத்திருப்புக்கு நன்றி