6TH - TAMIL - 3RD TERM - - UNIT 1 - GUIDE

 

ஆறாம் வகுப்பு - தமிழ்

பருவம் - 3 

இயல் - 1 

வினா - விடைகள்

பாரதம் அன்றைய நாற்றங்கால்

மனப்பாடப்பாடல்

*புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப்

புன்னகை செய்த பொற்காலம்!

கல்லைக் கூட காவிய மாக்கிக்

கட்டி நிறுத்திய கலைக்கூடம்!       (புதுமைகள்)

அன்னை நாட்டின் அமுத சுரபியில்

அன்னிய நாடுகள்பசிதீர

அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி

அறத்தின் ஊன்று கோலாக

 புதுமைகள் செய்த தேசமிது

 பூமியின் கிழக்கு வாசலிது!*

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                         

1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்

அ) திருவாசகம் ஆ) திருக்குறள் இ) திரிகடுகம் ஈ) திருப்பாவை

2. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்

அ) காவிரிக்கரை ஆ) வைகைக்கரை இ) கங்கைக்கரை ஈ) யமுனைக்கரை

3. கலைக்கூடமாகக் காட்சி தருவது

அ) சிற்பக்கூடம் ஆ) ஓவியக்கூடம் இ) பள்ளிக்கூடம் ஈ) சிறைக்கூடம்

4. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) நூல்+ஆடை ஆ) நூலா+டை இ) நூல்+ லாடை ஈ) நூலா+ஆடை

5. எதிர்+ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) எதிரலிக்க ஆ) எதிர்ஒலிக்க இ) எதிரொலிக்க ஈ) எதிர்ரொலிக

ஆ ) நயம் அறிக

1. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

தெய்வ – நெய்த ; மெய்களை – மெய்யுணர்வு

2. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

புதுமை – பூமி; காளிதாசன் - காவிரி

3. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக

          தேசமிது – வாசலிது ; நூலாடை - மேலாடை

குறுவினா                                                                                 .         

1. தாராபாரதியின் பாடலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

            காளிதாசன் , கம்பன்

2. இந்தியாவின் மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளை இணைத்துக் கவிஞர் காட்டும் காட்சியை எழுதுக.

            மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக் கிழக்குக் கரையின் நலம் கேட்கும்.

இ ) சிந்தனை வினா

1. நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக.

Ø  நமது சக்தியை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும்.

Ø  பெற்றோர், ஆசிரியர் கூறுவதனை கேட்க வேண்டும்.

Ø  நம்மால் இயன்ற உதவிகளை இயலாதவர்களுக்கு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் காந்தி

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                            

1. காந்தியடிகளிடம் உடைஅணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் _________

அ) கோவை ஆ) மதுரை இ) தஞ்சாவூர் ஈ) சிதம்பரம்

2. காந்தியடிகள் _____________ அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்.

அ) நாமக்கல் கவிஞர் ஆ) பாரதிதாசன் இ) உ.வே.சாமிநாதர் ஈ) பாரதியார்

பொருத்துக

1. இலக்கிய மாநாடு - பாரதியார்  ( சென்னை )

2. தமிழ்நாட்டுக் கவிஞர் - சென்னை ( பாரதியார்)

3. குற்றாலம் - ஜி.யு.போப் ( அருவி )

4. தமிழ்க் கையேடு - அருவி ( ஜி.யு.போப் )

சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. ஆலோசனை காந்தியடிகள் ஆலோசனை செய்தார்

2. பாதுகாக்க பெண்களை நம் கண்கள் போல் பாதுகாக்க வேண்டும்.

3. மாற்றம் மாற்றம் ஒன்றே மாறாதது

4. ஆடம்பரம் காந்தியடிகள் ஆடம்பர வாழ்க்கையை வெறுத்தார்.

குறுவினா

1. காந்தியடிகள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் முதலில் ஏன் நுழையவில்லை?

            மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் செல்ல அனைவருக்கும் அனுமதி இல்லாத காரணம்.

2. காந்தியடிகளுக்குத் தமிழ் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிகழ்வைக் கூறுக.

Ø  தென்னாப்பிரிக்காவில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கினார்.

Ø  ஜி,யு,போப் எழுதிய “ தமிழ்கையேடு “ தமிழ்மொழியை கற்கும் ஆர்வத்தைத் தூண்டியது.

சிறுவினா

1. காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த நிகழ்வினை எழுதுக.

Ø  1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்தார்.

Ø  மதுரைக்கு செல்லும் போது மக்கள் இடுப்பில் ஒரு துணி மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார்.

Ø  அன்று முதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார்.

2. காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை எழுதுக.

Ø  ஜி.யு.போப் எழுதிய  “ தமிழ்க்கையேடு “ தமிழ் கற்கும் ஆர்வத்தை உண்டாக்கியது.

Ø  1937 – இல் சென்னை இலக்கிய மாநாட்டில் உ.வே.சாமிநாதரின் வரவேற்புரை கேட்டு மகிழ்ந்தார்.

Ø  “ இந்த பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆர்வத்தை உண்டாகிறது “ என்றுக் கூறினார்.

சிந்தனை வினா

காந்தியடிகளிடம் காணப்படும் உயர்ந்த பண்புகளாக நீங்கள் கருதுபவை யாவை?

Ø  எளிமை

Ø  தூய்மை

Ø  சிக்கனம்

Ø  நேர்மை

Ø  அமைதி

வேலுநாச்சியார்

அ) விரிவான விடையளி     

1. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட நிகழ்வைச் சுருக்கமாக எழுதுக.

Ø  சிவகங்கையை இழந்து எட்டு ஆண்டுகள் ஆகிறது.

Ø  மைசூரிலிருந்து ஐதர் அலியின் ஐயாயிரம் குதிரை படை வந்து விட்டது.

Ø  வேலு நாச்சியார் ஐதர் அலியிடம் உருது மொழியில் பேசினார்.

Ø  முதலில் காளையார் கோவில் கைபற்றுதல்.

Ø  ஆண்கள் படைப்பிரிவுக்கு மருது சகோதரர்களும், பெண்கள் படைப்பிரிவுக்கு குயிலியும் தலைமை ஏற்றனர்.

Ø  விசயதசமி நாளில் படைகள் உள்ளே நுழையலாம் என வேலுநாச்சியார் கூறினார்.

Ø  உடையாளுக்கு நடுகல் நடப்பட்டது.

Ø  வேலுநாச்சியார் படைகள் உள்ளே சென்று ஆங்கிலேயர் படையைத் தோற்கடித்தது.

Ø  சிவகங்கை மீட்கப்பட்டது.

நால்வகைச் சொற்கள்

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:-

சொல்வகையை அறிந்து பொருந்தாச் சொல்லை வட்டமிடுக.

 1. அ) படித்தாள்  ஆ) ஐ     இ) மற்று            ஈ) கு

2. அ) மதுரை      ஆ) கால்             இ) சித்திரை       ஈ) ஓடினான்

 3. அ) சென்ற                  ஆ) வந்த            இ) சித்திரை      ஈ) நடந்து

4. அ) மா            ஆ) ஐ                இ)உம்              ஈ) மற்று

குறுவினாக்கள்

1. சொல் என்றால் என்ன?

            எழுத்துகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது சொல்.

 2. சொற்களின் வகைகளை எழுதுக.

            பெயர்ச்சொல், வினைச்சொல்,இடைச்சொல்,உரிச்சொல்

 3. பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சொற்களை எவ்வாறு வழங்குகிறோம்?

Ø  இடைச்சொல் என்கிறோம்

Ø  இவை தனித்து இயங்காது.

மொழியை ஆள்வோம்

அ) கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களுள் ஒருவர் வ.உ.சிதம்பரனார். வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார் . அவர், வழ க்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொ ழிற்சங்கத் தலைவ ர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார். ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் ”சுதேசி நாவாய்ச் சங்கம் ” என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். வ.உ.சி. சென்னைக்கு ச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.மேலும், பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.

1. சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார்? – வ.உ.சிதம்பரனார்

2. வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?  - பாரதியார்

3. வ. உ.சி. அவர்கள் யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார்? – பாரதியார்

4. வ. உ. சி. அவர்களின் பன்முகத் தன்மைகள் யாவை? – எழுத்தாளர்,வழக்கறிஞர்,பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர்

5. வ. உ. சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் யாவை? – தமிழ் , ஆங்கிலம்.

ஆ) கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக

1. ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.

            ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது

 2. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்.

            ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒரு நாள்

3. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

            அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

 4. அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை.

            அது நகரத்திற்குச் செல்லும் சாலை.

5. அது ஒரு இனிய பாடல்.

            அஃது ஒரு இனிய பாடல்

இ ) அகரவரிசைப்படுத்துக

 பெண்கள், பாரதம், புதுமை, பீலி, பேருந்து, பூமி, பழங்கள், பொதுக்கூட்டம், பையன், போக்குவரத்து, பின்னிரவு.

பழங்கள், பாரதம், பின்னிரவு, பீலி, புதுமை, பூமி, பெண்கள், பேருந்து, பையன், பொதுக்கூட்டம், போக்குவரத்து.

 

கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

தேசிய ஒருமைப்பாடு

முன்னுரை

வேற்றுமையில் ஒற்றுமை

இந்தியர்களின் ஒற்றுமை

ஒருமைப்பாடு வளர்ப்போம்

முடிவுரை

முன்னுரை :

          ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது பொன்மொழி. நம் முன்னோர்கள் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தியதால் தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது.

வேற்றுமையில் ஒற்றுமை :

          அனைவரும் இந்தியர் என்ற உணர்வால் ஒன்றுபட்டிருக்கிறோம். தேசிய ஒருமைப்பாட்டை நாம் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் நாம் அடுத்தவர்களை நம்முடைய உடன் பிறந்தவர்களாக நினைக்க வேண்டும்.

இந்தியர்களின் ஒற்றுமை :

          இந்தியா மொழிகள், இனங்கள், சமயங்கள் இருந்தாலும்  நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வினால் எப்போதும் ஒற்றுமை அடைகிறார்கள். இந்திய தேசிய கீதம் ஒலிக்கும் போது ஒவ்வொரு இந்தியர்களும் ஒரு தாயின் பிள்ளைகள் போல் ஒற்றுமையை உணர்கின்றனர்.

ஒருமைப்பாடு வளர்ப்போம்

          நாடு முன்னேற ஒவ்வொரு மனிதர்களுக்கும் தேசப் பற்று மிகவும் முக்கியம். வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையினை வளர்த்து கொள்வதால் தான் இந்தியா பலமான நாடாக வளர்ச்சி அடைய முடியும்.

முடிவுரை :

          உலக அளவில் இந்தியா தனது பங்களிப்பை அளிக்கும் போது நாம் பெருமை அடைகிறோம். இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன் இருந்து இந்திய நாட்டிற்கு பெருமைச் சேர்ப்போம்.

 

மொழியோடு விளையாடு

அ) இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்கு.

(எ.கா.) எனக்கு எனக்குண்டு எனக்கில்லை

 வடக்கு வடக்குண்டு வடக்கில்லை

பந்து பந்துண்டு பந்தில்லை

பாட்டு பாட்டுண்டு, பாட்டில்லை

ஆ) கட்டங்களில் உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக.

பாரி

எழிலி

மாணவர்கள்

மாடு

மாடுகள்

வீட்டுக்கு

வந்தன

வந்தான்

வந்தது

வந்தார்கள்

வந்தாள்

 

பாரி வீட்டுக்கு வந்தான்

எழிலி வீட்டுக்கு வந்தாள்

மாணவர்கள் வீட்டுக்கு வந்தார்கள்

மாடு வீட்டுக்கு வந்தது

மாடுகள் வீட்டுக்கு வந்தன.


இ) கட்டங்களில் மறைந்துள்ள நால்வகைச் சொற்களை எழுதுக.

கு

ம்

பே

சி

ன்

ரு

ண்

தா

ந்

று

டி

ய்

ன்

து

ம்

செ

மா

டு

ற்

று

க்

கி

றா

ள்

பெயர்ச்சொல்

          குமரன்,கரம்,மாடு,பேருந்து,சிவன்,தாய்,வண்டி,செறு,பண்,பசி,நகரம்.


வினைச்சொல்

          நடக்கிறாள், செய்தான்

இடைச்சொல்

          கு,ஐ,உம்,மற்று,தான்

உரிச்சொல்

          உறு, மாநகரம்

ஈ) கலைச் சொல் அறிவோம்

நாட்டுப்பற்று -    Patriotism           இலக்கியம் –      Literature

கலைக்கூடம் -   Art Gallery          மெய்யுணர்வு -  Knowledge of Reality

நீங்கள் 15 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி
 

ஆக்கம் :

தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்

www.tamilvithai.com

www.kalvivithaigal.com

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post