பத்தாம் வகுப்பு - தமிழ்
மாதிரி அலகுத் தேர்வு - 3
இயல் 6 மற்றும் 7
( அலகிடுதல், படிவம் , சொற்பொருள் பின்வரு அணி )
வகுப்பு : 10 இயல்
: 6,7
பாடம்
: தமிழ் மதிப்பெண் : 50
பகுதி
-1
அ. சரியான விடையைத் தேர்தெடு :- 1×7=7
1. தொல்காப்பியம் குறிப்பிடும்
இசைக்கருவி________
அ) நாகசுரம் ஆ) மத்தளம் இ)
புல்லாங்குழல் ஈ)
பறை
2. புலவர்களால் எழுதப்பட்டுக்
கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்படுபவை ______
அ) காப்பியம் ஆ) இலக்கியம் இ) கல்வெட்டு ஈ) மெய்க்கீர்த்தி
3. கோசல நாட்டில் கொடை
இல்லாத காரணம் என்ன?
அ)
நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால் ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ)
அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால் ஈ) அங்கு வறுமை இல்லாததால்
4. மலர்கள் தரையில் நழுவும்.
எப்போது?
அ) அள்ளி முகர்ந்தால் ஆ) தளரப் பிணைத்தால் இ) இறுக்கி முடிச்சிட்டால் ஈ) காம்பு முறிந்தால்
பாடலைப் படித்து வினாக்களுக்கு
விடையளி
“ செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடக்
திருவரை
யரைஞா ணரைமணி யொடுமொளி திகழரை வடமாடப்
பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
பட்ட
நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக் “
5. இப்பாடலின் ஆசிரியர்
அ. கீரந்தையார் ஆ. குமரகுருபரர் இ. நம்பூதனார் ஈ.
செய்குதம்பிப் பாவலர்
6. இப்பாடலில் இடம் பெற்றுள்ள
பிள்ளைத் தமிழ் பருவம்
அ. அம்மானை ஆ. சப்பாணி இ. சிறுதேர் ஈ. செங்கீரை
7. ‘ குண்டமும் குழைகாதும்
‘ – இலக்கணக் குறிப்பு தருக.
அ.
எண்ணும்மை ஆ.
உம்மைத்தொகை இ. பண்புத் தொகை ஈ. அடுக்குத் தொடர்
பகுதி
– 2/பிரிவு -1
ஆ. எவையேனும் ஐந்து வினாக்களுக்கு
விடையளி:-வினா எண் : 15 கட்டாயமாக விடையளிக்க. 4×2=8
8. பாசவர்,வாசவர்,பல்
பல்நிண விலைஞர், உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?
9. வறுமையிலும் படிப்பின்
மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.
10. மெய்க்கீர்த்தி பாடுவதன்
நோக்கம் யாது?
11. விடைக்கேற்ற வினா
அமைக்க:-
அ. ‘ கம்பன் இசைத்த கவியெல்லாம்
நான் ‘ என்று பாரதி பெருமைப்படுகிறார்.
ஆ. பொய்க்கால் குதிரையாட்டம்
புரவி ஆட்டம்,புரவி நாட்டியம் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
12. புறத் திணைகளில் எதிரெதிர்
திணைகளை அட்டவணைப்படுத்துக.
13. “ குற்றம் “ எனத்
தொடங்கும் குறளை எழுதுக.
பிரிவு – 2
இ. எவையேனும் மூன்று வினாக்களுக்கு
விடையளி:-வினா எண் : 16 கட்டாயமாக விடையளிக்க. 3×3=9
14.“ கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது;மலைப்பகுதிகளில் மலைப் பயிர்களும்
நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.” – காலப் போக்கில் பல மாற்றங்கள்
நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும்
அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.
15. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் “ இடம்
சுட்டிப் பொருள் விளக்குக..
16.” வெய்யோன் “ எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக.
17. தொகைச் சொற்களைப்
பிரித்து எழுதி,தமிழ் எண்ணுரு
தருக.
மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு, தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை
சங்க இலக்கியங்கள்
18. ” முதல் மழை விழுந்ததும் ‘ என்னவெல்லாம் நிகழ்வதாக கு.பா.ரா
கவிபாடுகிறார்?
ஈ. அலகிட்டு வாய்பாடு
தருக:- 1×3=3
19. குற்றம் இலனாய்க்
குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு ( அல்லது )
20. சொற் பொருள் பின்வரு
அணியை விளக்குக
பகுதி – 3 / பிரிவு – 1
உ. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-. 2×5=10
21. அ) நெகிழிப் பைகளின்
தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது.அதற்குப்
பாராட்டுரை ஒன்றினை எழுதுக. (
அல்லது )
ஆ) நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின்
முன்னேற்றத்தில் மாணவர் பங்கு
இக்குறிப்புகளைக் கொண்டு
ஒரு பக்க அளவில் ‘ மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் ‘ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
22. அ) உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச்
சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
( அல்லது )
ஆ) நாளிதழ் ஒன்றிற்கு
பொங்கல் மலரில் ‘ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் ‘ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட
வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்கு கடிதம் எழுதுக.
பிரிவு
– 2
23. படிவம் நிரப்புக:- 1×5=5
நாமக்கல் மாவட்டம்,வ.உ.சி.நகர், காந்தித் தெரு,கதவிலக்க எண்50 இல் வசிக்கும் இளமாறன் மகள் யாழினி பத்தாம் வகுப்பு முடித்து அரசு
மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் வேதியியல் பாடப்பிரிவில் தமிழ் வழியில்
சேர விரும்பிகிறார். அவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எண் 13156071 அவரின் மதிப்பெண்
பட்டியல் தமிழ் – 90, ஆங்கிலம் -80, கணிதம் – 90, அறிவியல் – 80, சமூக அறிவியல் -
90. தேர்வர் தம்மை யாழினியாக நினைத்துக் கொண்டு உரியப் படிவத்தை நிரப்புக.
பகுதி
– 4
ஈ) பின்வரும் வினாக்களுக்கு விடையளி :- 2×4=8
24. அ) பாரம்பரிய கலைகளை பாதுகாக்கவும், வளர்க்கவும் மேன்மேலும் பரவலாக்கவும் நீங்கள்
செய்யவிருப்பனவற்றை பட்டியலிடுக. (
அல்லது )
ஆ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
25. மொழிபெயர்க்க :-
Therukoothu is, as its name indicates, a popular form of theatre
performed in the steets.It is performed by rural artists.The stories are
derived from epics like Ramayana,Mahabharatha and other ancient puranas.There
are more songs in the play with dialogues improvised by the artists on the
spot. Fifteen to twenty actors with a Xsmall orchestra forms a koothu
troupe.Though the orchestra has a singer, the artists sing in their own voices.
Artists dress themselves with heavy costumes and bright makeup.Koothu is very
popular amoung rural areas. ( அல்லது
)
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி
சிற்றூர் மக்களின்
வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாதக் கூறுகளாகத் திகழ்பவை நிகழ்கலைகள்.
இவை மக்களுக்கு மகிழ்ச்சியெனும் கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன; சமுதாய நிகழ்வுகளின்
ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன. பழந்தமிழ் மக்களின் கலை,
அழகியல், புதுமை ஆகியவற்றின் எச்சங்களை அறிவதற்குத் தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கலைகள்
துணை செய்கின்றன,
அ) பழந்தமிழ் மக்களின் எந்தெந்த எச்சங்களை
அறிவதற்கு நிகழ்கலைகள் துணை செய்கின்றன?
ஆ) நிகழ்கலைகளின் பயன்கள் இரண்டினை
எழுதுக.
இ) நிகழ்கலைகள் எப்பகுதி மக்களின்
வாழ்வியல் கூறுகளில் ஒன்றாக திகழ்கின்றன?
ஈ) இவ்வுரைப் பத்திக்கு தலைப்பு ஒன்று
தருக
KINDLY WAIT FOR 10 SECONDS AFTER ENABLE DOWNLOAD ICON ,
CLICK TO DOWNLOAD ICON TO GET PDF THIS QUESTION