ஆறாம் வகுப்பு - தமிழ்
பருவம் - 3
இயல் - 2
திருக்குறள்
வினா - விடைகள்
ஆறாம் வகுப்பு
தமிழ் – வினா – விடைத் தொகுப்பு
பருவம் : 3 இயல் : 2
வாழ்வியல் திருக்குறள்
மனப்பாடக்குறள்
1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
2. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
3. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஏழைகளுக்கு உதவி செய்வதே ………………… ஆகும்.
அ) பகை ஆ) ஈகை இ) வறுமை ஈ) கொடுமை
2. பிற உயிர்களின் .........................க் கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்.
அ) மகிழ்வை ஆ) செல்வத்தை இ) துன்பத்தை ஈ) பகையை
3. உள்ளத்தில் ..................... இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.
அ) மகிழ்ச்சி ஆ) மன்னிப்பு இ) துணிவு ஈ) குற்றம்
ஆ) இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.
வறியார்க்கு ஒன்று ஈகைமற்று ஈவதே எல்லாம்
குறியெதிர்ப்பை உடைத்து நீரது.
விடை :
வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து
எனைத்தானும் யார்க்கும் எஞ்ஞான்றும் மனத்தானாம்
மாணாசெய் தலை யாமை.
விடை :
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
இ) குறுவினா
1. அறிவின் பயன் யாது?
பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் கருதுவதே அறிவின் பயன்.
2. பிற உயிர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்?
தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டும்.
3. ஈகை பற்றிய வள்ளுவரின் கருத்து யாது?
இல்லாதவர்க்கு தருவதே ஈகை ஆகும். மற்றவை எல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்பவை ஆகும்.
ஈ) பின்வரும் நிகழ்வைப் படித்து அதற்குப் பொருத்தமான திருக்குறள் எதுவெனக் காண்க.
நிறைமதி அவளுடைய தோழிகளுடன் பூங்காவிற்குச் சென்றாள். அங்குள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தாள். நண்பகல் நேரத்தில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தான் கொண்டு வந்திருந்த உணவைத் தோழிகளுடன் பகிர்ந்து உண்டாள். அவர்களின் அருகே பறவைகள் பறந்து வந்தன. தன்னிடம் இருந்த உணவைப் பறவைகளுக்கும் அளித்தாள்.
1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
2. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
3. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
ஆக்கம் :
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்
PDF SOON