ஏழாம் வகுப்பு
தமிழ்
கற்றல் விளைவுகள்
ஏழாம்
வகுப்பு தமிழ் கற்றல் விளைவுகள்
T701 வெவ்வேறு பாடப் பொருள்களைப் படிக்கவும் அவற்றை
குழுக்களில் கலந்துரையாடவும் செய்தல்
T702
ஒன்றைப் படிக்கும் போது அந்த படைப்பாளி வேறு சூழல்களில் வெளியிட்ட சிந்தனைகளை புரிந்து
கொள்ள முயற்சி செய்தலும் கருத்துக்களை தமது சொந்த கருத்துக்களுடனும் , அனுபவங்களுடனும்
ஒப்பிட்டு தமது குறிப்பிட்ட கருத்துடன் படைப்பாளி ஒன்றுபடுதலையும் மாறுபடுதலையும் அறிதல்
T703
தாம் பார்த்த ஓவியம் அல்லது காட்சியின் அனுபவத்தை
தம் சொந்த சொற்களில் / சைகை மொழியில் வெளிப்படுத்துதல்
T704
தாங்கள் படித்தவற்றை பற்றி சிந்தித்து அவற்றின் மீதான வினாக்கள் எழுப்புதல் கருத்தாடலைத்
தொடங்கி வைத்தல் ஆகியவற்றின் மூலம் தங்களின் புரிதலை மேம்படுத்துதல்
T705
தாங்கள் வாழும் சமூகம் அல்லது நிலப்பகுதிகள்
நாட்டுப்புற இலக்கியங்கள் பாடல்கள் பற்றி கலந்துரையாடி அவற்றின் நயம் பாராட்டுதல்
T706
பல்வேறு கலைகளில் கைத்தொழில், கட்டிடக்கலை ,உழவுத் தொழில் ,நாட்டியம் போன்றவை பயன்படுத்தப்படும்
சொற்கள் பற்றி அறிய பேரார்வம் கொண்டு அவற்றைப் புரிந்து கொள்ள முயலுதல்
T707
மழைக்காலங்களில் பசுமையான சூழலை ஏற்படுத்துதல்
போன்ற உள்ளூர் / சமூகம் /இயற்கை சார்ந்த தலைப்புகள் அல்லது பிரச்சனைகள் தொடர்பாக தங்கள்
தருக்கவியல் முடிவுகளை அளித்தல்
T708
வெவ்வேறான உணர்ச்சிகரமான பாடப்பொருள் பிரச்சனைகள் சாதி ,மதம், நிறம், பாலினம், சடங்குகள்
போல்ன மீது காரண காரிய அடிப்படையில் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துதல்
T709
ஒன்றைப் படித்து முழுமையான பொறுமையை உணர்ந்து அதன் பயன்பாட்டினை கூறுதல்
T710
பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆய்ந்து
அதில் சில சிறப்பு கூறுகளைதேடிக் கண்டறிதல்.
T711
படித்தவற்றை பற்றி சிந்தித்து வினாக்கள் எழுப்பி
அவற்றை மேலும் சிறப்பாக புரிந்து கொள்ள முயலுதல்
T712
பல்வேறு வகை படித்தலுக்கான செயல்பாடுகளில்
அமைந்துள்ள வெவ்வேறு சொற்கள் ,சொற்றொடர்கள் சொல்வடைகள் ஆகிய அவற்றையும் புரிந்து கொண்டு
நயம் பாராட்டுதல்
T713
பல்வேறு கதைகள் பாடல்களை படித்து பல்வேறு வகையான முறைகளையும் நடைகளையும் வருணனை உணர்வு
சார்ந்தவை இயற்கை வர்ணனை போன்றவை இனங்கானல்
T714
படிக்கும் போது வகுப்பு தோழர்கள் மற்றும் ஆசிரியர்கள்
உதவியுடன் பாடப்பொருள்களை புரிந்து கொள்வதுடன் அகராதிகள், பார்வை நூல்கள், வரைபடங்கள்
,இணையதளம் அல்லது பொருள்கள் ஆகியவற்றின் துணைக் கொண்டு பொருண்மையை தெளிவாக அறிதல்
T715
பல்வேறு கலைகளிலும் தொழில்களிலும் கைத்தொழில், கட்டடக்கலை, உழவு ,நாட்டியம் முதலானவை
பயன்படுத்தும் மொழி பற்றிய கருத்தை ஆர்வமாக வெளிப்படுத்துதல்
T716
மொழி மரபின் நுட்பமான பயன்பாட்டுக் கூறுகளையும் பாடல்களில் படித்த ஒரு குறிப்பிட்ட
சொல் சொற்றொடர்களை போன்றவற்றின் பொருண்மை உணர்ந்து அவற்றையும் தமது உரையாடலில் வெளிவுபடுத்துதல்
T717
வெவ்வேறு சூழல்களில் மற்றவர்களால் கூறப்பட்ட
சொற்களை முறை சார்ந்த அல்லது தனி முறையிலான கூட்டங்கள் அல்லது நிகழ்களின் போது வயதில்
பெரியவர்கள் பயன்படுத்திய சொற்கள் தச்சர், குயவர் ,துணி துவைப்பவர் முடி திருத்துவோர்
போன்ற தொழிலாளிகளுடன் பெரியவர்கள் உரையாடும்போது கேட்ட சொற்கள் வேறு சூழல்களில் நாம்
விரும்பியவாறு எழுதுதலில் பயன்படுத்தப்படுகிறது
T718
பல்வேறு செய்திகள் குறித்த செய்தித்தாள்கள்
,இதழ்கள், கதைகள், இணைய வழி நூல்கள் ஆகியவற்றை படித்தும் பார்த்தும் கிடைத்த புரிதலைக்
கொண்டு அவை பற்றிய தங்களின் விருப்பு வெறுப்புகளை முன்னெடுத்துச் செல்லுதல் பிரெய்லி
அல்லது எழுத்து அல்லது பொது எழுத்து முறைமையில்
T719
தனிப்பட்ட அனுபவங்களை சொந்த நடையில் தமது
மொழியில் வெளிப்படுத்துதல்
T720
பல்வேறு பாடப் பொருள்களை பல்வேறு நோக்கங்களுக்காக எழுதும் போது பொருத்தமான சொற்கள்,
தொடர் அமைப்புகள், சொற்றொடர், மரபுத்தொடர், நிறுத்தற்குறிகள் மற்றும் பிற இலக்கண கூறுகளை
காலம் பெயரடை இணைச்சொற்கள் பொருத்தமாகப் பயன்படுத்துதல்
T721 சாதி ,மதம்,
நிறம், பாலினம் ,சடங்குகள், பழக்க வழக்கங்கள் போன்ற உணர்வு பூர்வமான சிக்கல்களில் தங்களின்
நிலைப்பாட்டை வெளிப்படுத்துதல்
T722
பள்ளி வகுப்பறை சுவரொட்டிகளுக்காக செய்திகள்
சேகரித்தல் உருவாக்குதல் அவற்றினை தொகுத்தல்.