6TH - TAMIL - LEARNING OUT COMES - PDF

 

ஆறாம் வகுப்பு

தமிழ்

கற்றல் விளைவுகள்

6 ஆம் வகுப்பு   தமிழ் கற்றல் விளைவுகள்

T601-  குழந்தை பல வகையான ஒலிகளை (மழை, தென்றல். தொடர் வண்டி,  பேருந்து மற்றும் தெரு வியாபாரிகள் எழுப்பும் ஓசைகள்) தங்கள் சொந்த மொழியிலும் விரும்பும் வகையிலும் கேட்டுச் சுவைத்திடல் இன்புறுதல் (பேச்சு மொழி சைகை மொழி)

T602  தாங்கள் பார்த்த கேட்ட உள்ளூர் சமூக நிகழ்வுகள், செயல்பாடுகள், சடங்குகள் போன்றவற்றைப்  பற்றி தயக்கம் இன்றி வினா எழுப்பவும் கலந்துரையாடவும் செய்தல்

T603 மாணவர்கள் தாம் படித்த பார்த்த நிகழ்வுகள் மீதான கட்டுரைகள் எழுதுதல் கேட்ட தலைப்புகள் பற்றி தங்களின் சொந்த நடையில் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லல் கதைகளை நீட்டித்தல் போன்றவற்றைச் செய்தல்

T604 வானொலி, தொலைக்காட்சி ,செய்தித்தாள்  போன்றவற்றில் தாங்கள் கேட்ட பார்த்த படித்த செய்திகளை தங்களின் சொந்த மொழி நடையில் கூறுதல்

T605 பல்வேறு சூழல்களில் பிறரால் சொல்லப்பட்ட சொற்களை (பார்வை இழந்தவரின் பயண அனுபவங்கள் போன்றவை திரும்பக் கூறுதல்

T606 தங்கள் பகுதிகளில் காணப்படும் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாட்டுப்புறப் பாடல்களை அறிந்திருத்தல் அவற்றை பற்றி கலந்துரையாடல்

T607 மற்றவர்களின் மொழிகள் உணவுப் பழக்கங்கள் வாழ்க்கை நிலை அவற்றில் காணப்படும் வேற்றுமைகள் அவை தன்னுடையதிலிருந்து வேறுபட்டுள்ளமை பற்றி பேசுதல்

T608 ஒரு நூலை ஆழ்ந்து படித்து அந்நூலின் மையக்கருத்தை ஊகித்தறிதல்

T609 மிக நுட்பமாக ஒரு நூலை ஆய்ந்து குறிப்பிட்ட செய்திகளைத் தேடிக்கண்டு பிடித்தல் ஊகித்தறிதல்மற்றும் முடிவு செய்தல்

T610 பல்வேறு பாடப் பொருட்கள் பற்றி தமிழில் உள்ள பனுவல்களை (செய்தித்தாள்கள், பருவ இதழ்கள், கதைகள், இணையத்தில் தகவல் தரும் பகுதிகள் போன்றவற்றில் இருந்து படித்து புரிந்து கொண்டு அவற்றின் மீதான கருத்துக்களை பகிர்தல் தங்களின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல்

T611 ஒலி யியைவு , சந்தம் முதலான யாப்ப மைதிக்  கூறுதல் மரபுத் தொடர்கள் போன்ற மொழியின் மரபு நடை நுட்பங்கள் போன்றவற்றை க் கருத்தில் கொண்டு கதைகள் கட்டுரைகளின் நயம் பாராட்டல்

T612 பல வடிவங்களில் எழுதப்பட்ட இலக்கியப்  பாடப் பகுதிகளை உரிய ஒலிப்பு முறை குரல் ஏற்ற இறக்கம் ஆகியவற்றோடு ஒப்புவித்தல்

T613  வெவ்வேறு வகையான கட்டுரைகளை படித்தல்

T614 புதிய சொற்களை தெரிந்து கொள்வதில் பேரார்வத்தை வெளிப்படுத்துதல் அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளை புரிந்து கொள்ள முயலுதல்

T615 கைத்தொழில், கட்டடவியல், உழவுத் தொழில், நாட்டியம் ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படும் மொழியின் தனிச்சிறப்புகளை அறிந்து கொள்ள பேரார்வத்தை வெளிப்படுத்துதல் அவற்றின் நயங்களை பாராட்டுதல்

T616 மற்றவர்களின் அனுபவங்களைத் தேவைக்கு ஏற்ப தேவை ஏற்படும்போது எழுதுதல் முதன்மை சாலைகளின் சந்திப்புகள் பேருந்து நிறுத்தங்கள் போன்ற பொது இடங்களில் நடக்கும் நிகழ்வுகள் கேட்ட பேச்சுக்கள் ஆகியன

T617 செய்தித்தாள்கள், இதழ்கள், கதைகள், இணையத்தில் காணப்படும்  தகவல்கள் கட்டுரைகள் போன்றவற்றை படித்து புரிந்து கொண்டு தமது விருப்பு வெறுப்புகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்துதல் (பொது எழுத்துமுறை அல்லது பிரெய்லி எழுத்துமுறை )

T618 பல்வேறு நோக்கங்களுடன் பல்வேறு தலைப்புகளில் சரியான நிறுத்தற்குறிகளுடன் எழுதுதல்

T619 பல்வேறு சூழல்களில் நிகழ்வின் போது மற்றவர்கள் கூறியவற்றை தமது சொந்த மொழியில் எழுதுதல்

T620  பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும் போது சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி எழுதுதல்.

CLICK HERE TO GET PDF

WAIT 10 SECONDS

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post