9TH - TAMIL - UNIT -7 - SPECIAL GUIDE - PDF

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி

 சிறப்பு வழிகாட்டி

இயல் – 7                                                            வாழிய நிலனே            

ஒன்பதாம் வகுப்புதமிழ்

அ) பலவுள் தெரிக.

1.இந்திய தேசிய இராணுவத்தை ...............இன் தலைமையில் .................. உருவாக்கினர்.

அ) சுபா ஷ் சந்திரபோஸ், இந்தியர் ஆ) சுபாஷ் சந்திரபோ ஸ், ஜப்பானியர்

இ) மோகன்சிங், ஜப்பானியர்        ஈ) மோகன்சிங், இந்தியர்

2. சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?

அ) வருக்கை - இருக்கை            ஆ) புள் – தாவரம்

 இ) அள்ளல் – சேறு                    ஈ) மடிவு – தொடக்கம்

 3. இளங்கமுகு, செய்கோலம் – இலக்கணக்குறிப்புத் தருக.

அ) உருவகத்தொடர், வினைத்தொகை ஆ) பண்புத்தொகை, வினைத்தொகை

இ) வினைத்தொகை, பண்புத்தொ கை ஈ) பண்புத்தொகை, உருவகத்தொடர்

4. நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு - இத்தொடர்களில் 

குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே,

அ) பாண்டிய நாடு, சேர நாடு                     ஆ) சோழ நாடு, சேர நாடு

இ) சேர நாடு, சோழ நாடு                         ஈ) சோழ நாடு, பாண்டிய நாடு

 5. வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே – இவ்வடி உணர்த்தும் பொருள் யாது?

அ. மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்

ஆ. வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்

இ. செறிவான வயலில் உழவர் வெள்ளமாய்க் கூடியிருந்தனர்

ஈ. பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்

6. கூற்று - இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான், ”இந்திய

தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்” என்றார். காரணம் - 

இந்திய தேசிய இரா ணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள்.

அ) கூற்று சரி; காரணம் சரி          ஆ) கூற்று சரி; காரணம் தவறு

இ) கூற்று தவறு; காரணம் சரி                  ஈ) கூற்று தவறு; காரணம் தவறு

ஆ) குறு வினா

1. இந்திய தேசிய இராணுவத்தில் குறிப்பிடத் தகுந்த தமிழக வீரர்கள் யாவர்?

    • கேப்டன் தாசன்
    • ஜானகி
    • அப்துல் காதர்
    • இராஜாமணி
    • சிதம்பரம்
    • கேப்டன் லட்சுமி
    • லோகநாதன்
    • இராமு

2. தாய்நாட்டுக்காக உழைக்க விரும்பினால் எப்பணியைத் தேர்ந்தெ டுப்பீர்கள்? ஏன்?

·         இராணுவப் பணி

·         தாய்நாட்டைப் பாதுகாக்கவும், இந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையைப் 

பேணவும் கிடைத்த வாய்ப்பாக இராணுவப் பணியைக் கருதுகிறேன்.

3. ‘மதுரைக்காஞ்சி’ - பெயர்க் காரணத்தைக் குறிப்பிடுக.

    • காஞ்சி என்றால் நிலையாமை என்று பொருள். “மதுரை” நகரைக் குறிக்கும்.
    • மதுரை நகரின் சிறப்புகளைப் பாடுவதாலும், நிலையாமையைப் பற்றியக் கருத்துகளைக் கூறுவதாலும், இப்பெயர் பெற்றது

4. உங்கள் ஊரில் உற்பத்தியாகும் பொருள்களையும் சந்தையில் காணும் 

பொருள்களையும் ஒப்பிட்டு எழுதுக.

            மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் நெல்,காய்,கீரை,கிழங்கு வகைகளை

உற்பத்தி செய்து அவற்றை உண்டு வந்தனர்.

            மக்கள் உற்பத்தி செய்த பொருட்களை முச்சந்தி, நாற்சந்தி என மக்கள் கூடும் 

இடங்களில் கடை விரித்து வணிகமாக்கினர்

5. கருக்கொண்ட பச்சைப் பாம்பு, எதற்கு உவமையாக்கப்பட்டுள்ளது?

நெற்பயிர்கள் தோற்றத்திற்கு உவமையாக்கப்பட்டுள்ளது.

 6. அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ – இவ்வடியில் சேற்றையும் வயலையும் 

குறிக்கும் சொற்கள் யாவை?

·         அள்ளல் – சேறு

·         பழனம் - வயல்

7. "டெல்லி நோக்கிச் செல்லுங்கள் " என்ற முழக்கம் யாரால் எப்போது செய்யப்பட்டது?

·         நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

·         1943-ஆம் ஆண்டு சூலை மாதம் 9ஆம் நாள் பொறுப்பை ஏற்கும்போது டெல்லி நோக்கிச் 

செல்லுங்கள்’ (டெல்லி சலோ) எனப் போர் முழக்கம் செய்தார்.

சிறுவினா

1. குறிப்பு வரைக - டோக்கியோ கேடட்ஸ்

          இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45 வீரர்கள் நேதாஜியால் தேர்வு 

செய்யப்பட்டு வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஜப்பானில் 

உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகாடமிக்கு அனுப்பப்பட்ட பயிற்சிப் பிரிவின் பெயர்தான்

டோக்கியோ கேடட்ஸ்.

2. பனியிலும், மலையிலும் எல்லையைக் காக்கும் இந்திய வீரர்க ளின் பணியைப் பாராட்டி 

உங்கள் பள்ளிக் கையெழுத்து இதழுக்கு ஒரு துணுக்குச் செய்தி எழுதுக

          நாட்டைக் காப்பதற்காக வாட்டம் இல்லாமல் உழைப்பவர்கள் நம்முடைய இராணுவ 

வீரர்கள். நாம் நிம்மதியாய் உறங்குவதற்காகத் தங்கள்  உறக்கம் தொலைத்தவர்கள். நம் 

குடும்பத்தியக் காக்க தங்கள் குடும்பத்தையும் மறந்தவர்கள். எத்தனை வீரர்கள் 

மண்ணில் புதைந்தனர் நம்மைக் காக்க. அவர்களின் தியாகங்களை நாம் போற்றுவோம்.

. 3. “மாகால் எடுத்த முந்நீர்போல” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக

 இடம் :

மதுரைக் காஞ்சி என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

பொருள் :

மதுரையின் வளங்களையும், விழாக்களையும் பற்றியும் மாங்குடி மருதனார் குறிப்பிடுகிறார்.

விளக்கம்:

            “முரசறைவோரின் முழக்கம், பெருங்காற்று புகுந்த கடலொலி போல் ” ஒலிக்கிறது. 

இதனையே “மாகால் எடுத்த முந்நீர் போல” என்றார் மாங்குடி மருதனார்.

4. தற்குறிப்பேற்ற அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

விளக்கம் :

          இயல்பாக நிகழும் நிகழ்வின் மீது கவிஞர் தம் கற்பனையை ஏற்றிக் கூறுவது 

தற்குறிபேற்ற அணி.

எ.கா :

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம் தீப் பட்ட(து) எனவெரீஇப்புள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு.

பொருத்தம்:

            நீர் மிக்க வயல்களில் செவ்வாம்பல் மலர்வது இயல்பான நிகழ்வு. பறவைகள் நீரில் 

தீப்பிடித்துவிட்டது என அஞ்சுவதாக தன் கற்பனையை ஏற்றிக் கூறியுள்ளார்

5. சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.

சேரநாடு :

          வயல்களில் செவ்வாம்பல் மலர்கள் விரியத் தொடங்கின. அதனை கண்ட 

நீர்ப்பறவைகள் தீப்பிடித்தது என அஞ்சி தம் குஞ்சுகளை சிறகுகளில் ஒடுக்கி வைத்தன. 

சேர நாட்டில் இந்த அச்சம் இருக்கிறது.

சோழ நாடு :

          நெற்போர் மீது உழவர்கள் நின்றுக் கொண்டு மற்ற உழவர்களை நாவலோ என 

அழைப்பது யானை மீது ஏறி நின்றுக் கொண்டு மற்ற வீரர்களை நாவலோ என அழைப்பது 

போல் உள்ளது.

பாண்டிய நாடு :

          சங்குகள் மணலில் ஈனும் முட்டைகள் முத்துகள் போல் உள்ளன.

புன்னை மொட்டுகள் முத்துகள் போல் உள்ளன. பாக்கு மரத்தின் பாளையிலிருந்து சிந்தும் 

துளிகள் முத்துகள் போல் உள்ளன.

6. ஏமாங்கத நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கில் இருப்பதாகத் திருத்தக்கதேவர் பாடியுள்ளார்?

·         உணவுகள் ஆயிரம்

·         அறச்சாலைகள் ஆயிரம்

·         ஒப்பனை மணிமாடங்கள் ஆயிரம்

·         கம்மியர் ஆயிரம்

7. பண்பாகுபெயர், தொழிலாகுபெயர் - விளக்குக.

பண்பாகு பெயர் :

          மஞ்சள் பூசினாள்

          மஞ்சள் என்னும் நிறம் கிழங்கிற்கு ஆகி வந்துள்ளது.

தொழிலாகுபெயர்

          வற்றல் தின்றான்’

வற்றல்’ என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப் பொருளுக்கு ஆகிவந்துள்ளது

நெடுவினா         

1. இந்தியதேசிய இராணுவத்தின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதைக் 

கட்டுரைவழி நிறுவுக.

முன்னுரை:

இந்திய தேசிய இராணுவம் இந்திய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு 

ஆகும். இந்த அமைப்பின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் நம் தமிழர்கள் எனில் 

மிகையாகாது.

தூண்கள்:

இந்திய தேசிய இராணுவப்படை, பிரித்தானிய அரசை எதிர்த்த போது 

தமிழகத்தில் இருந்து பெரும்படையைத் திரட்டி, இந்திய தேசிய இராணுவத்திற்கு 

வலுசேர்த்த பெருமைக்குரிய தமிழர் ‘பசும்பொன் முத்துராமலிங்கதேவர்’ ஆவார்.

பசும்பொன் அவர்களின் தலைமையில் இருந்த தமிழர்களின் பணியைக்கண்டு 

வியந்த தில்லான் என்பவர், “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும், ஆத்மாவும் 

தமிழர்கள் தான்” என்றார்.

இராணுவத்தில் தமிழ்ப் பெண்கள்:

இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சி ராணி பெயரில் பெண்கள் படை 

உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் டாக்டர் லட்சுமி என்ற தமிழ்ப்பெண் ஆவார். 

இப்படையில் தமிழ் பெண்கள் பெருமளவில் பங்கேற்றார்கள். இதில் தலைசிறந்த 

பெண்தலைவர்களான ஜானகி, இராஜாமணி போன்றோர் வீரமிக்க தமிழ் 

பெண்களே ஆவர்..

இரண்டாம் உலகப்போரில் தமிழர்:

இரண்டாம் உலகப்போரின் போது தமிழ் மக்களை வைத்துப்போராடிய 

நேதாஜியைக் கண்டு ஆங்கிலப் பிரதமர் சர்ச்சில் கோபம் கொண்டார்.

தமிழர்களின் இரத்தம் நேதாஜி மூளையில் கட்டியாக உள்ளது” என்றார் சர்ச்சில், 

அதற்கு பதில் அளித்த நேதாஜி, “இந்தத் தமிழினம் தான் ஆங்கிலேயரை 

அழிக்கும் என்றார்.

நேதாஜியின் பாராட்டு:

இராணுவத்தில் தமிழர்கள் ஆற்றிய பணியையும் செய்த தியாகங்களையும் கண்டு 

வியந்த நேதாஜி, “நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாகப் பிறக்க

வேண்டும்” என்றாராம். நேதாஜியே வியந்து பாராட்டும் வண்ணம் நம் தமிழரின் 

இராணுவப்பணி அமைந்திருந்தது.

முடிவுரை:

தாயக நலனுக்காக தம் இன்னுயிரை ஈந்த நம் தமிழர்களின் வீரம் போற்றுதலுக்குரியது. தம் இன்னுயிரைத் தியாகம் செய்த முகம் தெரியாத வீரத்தமிழர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும், , நாட்டுப்பற்றையும், போற்றுவதோடு, இராணுவ வீரர்களையும் அவர்தம் குடும்பத்தினரையும் மதித்துக்காப்பதும், பெற்ற சுதந்திரத்தைப் பேணுவதும், பயங்கரவாத சக்திகளைத் தடுப்பதும் நம் கடமைகளாகும்.

2. ஏமாங்கத நாட்டு வளம் குறித்த வருணனைகளை நும் ஊரின் வளங்களோடு ஒப்பிடுக.

ஏமாங்கத நாடு

நமது ஊர்

தென்னையில் முற்றிய தேங்காய் விழுந்த வேகத்தில் தேனடை கிழிந்து தேன் சிந்தி, பலாமரத்தின் மீது விழுந்து பலாப்பழம் பிளந்தது,அருகில் இருந்த மாமரத்தில் விழுந்ததால் மாங்கனி சிதறியது, பின் வாழை மரத்தின் மீது விழுந்து வாழைப் பழங்கள் உதிர்ந்தது

சோலைகள் எல்லாம் பாலைகளாகக் காட்சி அளிக்கின்றன. தென்னை மரங்கள் போதிய நீர்வளம் இல்லாமையால்,மெலிந்த மட்டைகளும், ஓலைகளும் கொண்டு காட்சியளிக்கின்றன

மலையிலிருந்து வரும் வெள்ளம் நாட்டினுள் பாய்கிறது

மழைக்காலத்தில் தோன்றும் புது வெள்ளம் ஊர்களில் பாய்கிறது.

நீர் வளம் நிறைந்துள்ளமையால் கழனிகள் சேறும் சகதியுமாக உள்ளன.

நிலத்தடி நீர் மற்றும் மழை நீர் நம்பி வயல்கள் உள்ளன

வயல்களில் விளைச்சல் நன்றாக விளைந்து தலை சாய்ந்து இருக்கும்.

ஒரு பருவம் நன்றாக விளைந்தும்,அடுத்த பருவம் பயிர்கள் எல்லாம் காய்ந்து போவதைக் காணலாம்.

ஆயிரங்கணக்கான உணவு வகைகள், அறச்சாலைகள்,ஒப்பனை மண்டபங்கள்,திருமணக் கூடங்கள் இருக்கின்றன. அங்கு இல்லாததது எதுவும் இல்லை.ஆயிரங்கணக்கான நிகழ்வுகள் நிகழ்கின்றன.

ஊர் திருவிழா, திருமணம், தேர்தல் நேரங்களில் மட்டும் ஏதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக நிகழ்வுகள் நிகழ்கின்றன

3. எங்கள் ஊர்ச் சந்தை – என்னும் தலைப்பில் நாளிதழ்ச் செய்தி ஒன்றை எழுதுக

கொங்கணாபுரம் – வாரச்சந்தை

          சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட கொங்கணாபுரத்தில் வாரந்தோறும் 

சனிக்கிழமைகளில் சந்தை நடைபெறும். சந்தையானது மக்கள் அதிகம் வந்து போகக் 

கூடிய இடத்தில் அமைந்துள்ளது உள்ளூர் மக்கள் மட்டுமன்றி வெளியூர் மக்களும் இந்த 

சந்தைக்கு வந்து காய்கறிகள், கீரைகள், மளிகைப் பொருட்கள் என வீட்டிற்குத் 

தேவையான அனைத்துப் பொருட்களையும் குறைந்த விலையில் வாங்கி செல்வர். சந்தை 

காலை முதல் இரவு வரை நடைபெறுகிறது.

சந்தையின் சிறப்பு

            கொங்கணாபுரச் சந்தை ஆடு மற்றும் பருத்தி விறபனைக்குப் பெயர் போனது. இங்கு 

வாரந்தோறும் தவறாமல் ஆயிரங்கணக்கான ஆடுகளும், கோடிக்கணக்கில் 

பருத்திகளும் விற்பனை ஆகிறது. இங்குள்ள ஆடுகளும் ,பருத்திகளும் தரம் 

வாய்ந்தவையாக உள்ளமையால் அனைத்து ஊர் மக்களும் இங்கு வந்து பொருட்களை 

வாங்கிச் செல்கின்றனர்.

மொழியை ஆள்வோம்

அ. மொழி பெயர்க்க :-

Conversation between two friends meeting by chance at a mall.

Aruna: Hi Vanmathi! It’s great to see you after a long time.

Vanmathi: It’s great seeing you. How long has it been? It must be more than 6 months. I’m doing good. How about you?

 Aruna: Fine. I have come with my parents. They are inside the grocery shop. What about you?

 Vanmathi: I came with my father. He has gone to buy tickets for a 3D movie. Aruna: Which movie?

Vanmathi: Welcome to the jungle.

Aruna: Great! I am going to ask my parents to take me to that movie

இரண்டு தோழிகள் வணிகவளாகத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது நடந்த உரையாடல்.

அருணா : வான்மதி, என்ன ஒரு ஆச்சர்யம் நீண்ட நாட்களுக்குப்பின் உன்னைப் பார்க்கிறேன், மகிழ்ச்சி .

வான்மதி : எனக்கும் மகிழ்ச்சியும், ஆச்சர்யமும் தான்! உன்னைப் பார்த்து எவ்வளவு காலம் 

ஆகிவிட்டது. ஆறு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. நான் நன்றாக இருக்கிறேன் நீ எப்படி இருக்கிறாய்.?

அருணா : நான் என் பெற்றோருடன் வந்தேன். அவர்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் உள்ள பிரிவில் உள்ளார்கள். நீ..?
வான்மதி : நான் என் தந்தையுடன் வந்தேன் இவ்வளாகத்தில் நடைபெறும் முப்பரிமாண (3D) திரைப்படத்திற்கு அனுமதி சீட்டு வாங்க சென்றிருக்கிறார்.
அருணா : என்ன படம்?
வான்மதி : காட்டுக்குள் வரவேற்பு
அருணா : ஓ… நானும் என் பெற்றோரிடம் அந்தப் படத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்க போகின்றேன்.

வான்மதி : நான் என் தந்தையுடன் வந்தேன் இவ்வளாகத்தில் நடைபெறும் முப்பரிமாண (3D) திரைப்படத்திற்கு அனுமதி சீட்டு வாங்க சென்றிருக்கிறார்.

அருணா : என்ன படம்?

வான்மதி : காட்டுக்குள் வரவேற்பு

அருணா : ஓ… நானும் என் பெற்றோரிடம் அந்தப் படத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்க போகின்றேன்.

ஆ) பொருத்தமான இடங்களில் அடைமொழியிட்டு, சொற்றொடரை விரிவாக்குக.

1. புத்தகம் படிக்கலாம் ( நல்ல, ஆழ்ந்து, நாளும், தேர்ந்து, மகிழ்ந்து, உணர்ந்து)

2. விளையாடுவது நன்று (ஓடியாடி, மாலையில், சேர்ந்து, திடலில், அனைவருடன்)

(எ.கா.) நல்ல புத்தகம் படிக்கலாம், நாளும் நல்ல புத்தகம் படிக்கலாம்

அ) நல்ல புத்தகங்கள் படிக்கலாம்.

ஆ) நல்ல புத்தகத்தில் ஆழ்ந்த கருத்துகளைப் படிக்கலாம்.

இ) நாளும் நல்ல புத்தகம் படிக்கலாம்.

ஈ) நல்ல புத்தகங்களைத் தேர்ந்து எடுத்து படிக்கலாம்.

உ) நல்ல புத்தகங்களை நாளும் மகிழ்ந்து, உணர்ந்து படிக்கலாம்.

2. அ) மாலையில் அனைவருடன் சேர்ந்து விளையாடுவது நன்று.

ஆ) மாலையில் திடலில் ஓடியாடி விளையாடுவது நன்று.

இ) பிழை நீக்குக.

பெறுந்தலைவர் காமராசர் பள்ளிப் படிப்பை நிரைவு செய்யவிள்ளை எண்ராலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அலவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழ்கலை நாள்தோறும் படித்தது. எப்போது அரையை விட்டு வெளியே போனாலும் மின்விசிரியை நிருத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமனிகளைத் தாமே எடுத்துவைத்துக்கொள்வார்.

விடை :

பெருந்தலைவர் காமராசர் பள்ளிப் படிப்பை நிறைவு செய்யவில்லைன்றாலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழ்களை நாள்தோறும் படித்தது. எப்போது அறையை விட்டு வெளியே போனாலும் மின்விசிறியை நிறுத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமணிகளைத் தாமே எடுத்துவைத்துக்கொள்வார்

ஈ) கீழ்க்காணும் பத்தியில் உள்ள ஆகுபெயர்களை அட்டவணைப்படுத்துக.

விமலா கூடத்தில் உள்ள தட்டிலிருந்த டிசம்பரைத் தலையில் சூடிக்கொண்டாள் . மல்லிகையைப் படத்திற்குச் சூட்டினாள். அடுப்பிலிருந்து பாலை இறக்கினாள். பின்பு தோட்டத்திற்குச் சென்றாள். விமலாவைப் பார்த்தவுடன் தோட்டம் அமைதியானது! “தலைக்கு இருநூறு கொடுங்கம்மா ” என்று தோட்டத்தில் வேலை செய்தவருள் ஒருவர் சொன்னார். வெள்ளை மனங்கொண்ட வேலையாட்களின் கூலியைக் குறைக்க விரும்பாமல் அதனை அவளும் ஏற்றுக்கொண்டாள். அவர்கள் சென்றதும், காலையில் சாப்பிடப் பொங்கல் வைத்தாள் . வீட்டில் சமையல் செய்ய, எந்தெந்தப் பொருள்கள் குறைவாக உள்ளன என்பதைப்பற்றிச் சிந்தித்தாள் . “சாப்பாட்டிற்கு ஐந்து கிலோ வாங்க வேண்டும். தாளிப்பதற்கு மூன்று லிட்டர் வாங்க வேண்டும். துணி உலர்த்துவதற்கு நான்கு மீட்டர் வாங்க வேண்டும்” எனத் திட்டமிட்டாள். அலைபேசி அழைத்தது. அரை நிமிடம் அலைபேசியில் வந்த வயலின் கேட்டு மகிழ்ந்தாள் . பிறகு எடுத்துப் பேசினாள் . கடைக்குப் போய்விட்டு வந்த பிறகு, பாதியில் விட்டிருந்த சிவசங்கரியைப் படித்து முடிக்கவேண்டும் என்று நினைத்தாள்

விடை .

1. டிசம்பரைத் தலையில் சூடிக்கொண்டாள் – காலவாகு பெயர்

2. பாலை இறக்கினாள் – கருவியாகு பெயர்

3. தலைக்கு இருநூறு -  சினையாகு பெயர்

4. சாப்பாட்டிற்கு ஐந்து கிலோ வாங்க வேண்டும். -  எடுத்தலளவை ஆகுபெயர்

5. தாளிப்பதற்கு மூன்று லிட்டர் வாங்க வேண்டும் முகத்தலளவை ஆகுபெயர்

6. துணி உலர்த்துவதற்கு நான்கு மீட்டர் வாங்க வேண்டும் நீட்டலளவை ஆகுபெயர்

7. வெள்ளை மனங்கொண்ட வேலையாட்கள் – பண்பாகு பெயர்

8. சிவசங்கரியைப் படித்து முடிக்கவேண்டும் கருத்தாவாகு பெயர்

உ) பயண அனுபவங்களை விவரிக்க.

"எனது பயணம்" என்னும் தலைப்பில் உங்களது அனுபவங்களை வருணித்து எழுதுக.

ஏழைகளின் ஊட்டி - ஏற்காடு

         கடந்த 2018 சனவரி மாதம் இயற்கை எழில் கொஞ்சும் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடுக்கு நான் சுற்றுலா சென்றிருந்தேன்.அந்த அழகான பயண அனுபவங்களை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

       சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து  பேருந்தில் சென்றோம். மலைகளின் இருபுறமும் எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளைக் காண இரு கண்கள் போதாது. அங்கு சென்ற பின்

   ஏற்காடு படகு இல்லம்,

   சீமாட்டி இருக்கை,

   பகோடா உச்சி,

   பூங்கா,

    காவேரி சிகரம்,

   சேர்வராயன் மலை உச்சி என அனைத்து இடங்களும் மனதை கொள்ளைக் கொள்கிறது. எத்தனை அழகு. என்றும் நினைவை விட்டு அகலாது ஏற்காடு.

ஊ) நயம் பாராட்டுக.

வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய்

வளைந் துசெல் கால்களால் ஆறே!

அயலுள ஓடைத் தாமரை கொட்டி

ஆம்பலின் இதழ்களை விரித்தாய்

கயலிடைச் செங்கண் கருவரால் வாளை

கரைவளர் தென்னையில் பாயப்

பெயரிடைப் பட்ட வானெனத் தோன்றும்

பெருங்குளம் நிறைந்து விட்டாயே! – வாணிதாசன்

திரண்ட கருத்து:

ஆறே வயல்வெளியில் புகுந்தாய் ,கதிர்களை விளையச் செய்தாய்.

ஓடைகள் குளங்களை நிறைத்தாய். தாமரை கொட்டி, ஆம்பல் மலர்களின் இதழ்களை விரியச்செய்தாய்.

கருமையுடைய வரால், வாளை மீன்கள் கரையில் ஓங்கி வளர்ந்த தென்னையில் பாய்ந்து விளையாடுகிறது. நீர் நிறைந்த பெருங்குளங்கள் நிலமெங்கும் நிறையச் செய்தாய்,

நிலத்தில் ஒரு வானம் இருப்பதுபோல தோன்றச் செய்கிறாய்.

மையக்கருத்து:

ஆற்றினால் இயற்கை வளங்கள் செழிப்பாக உள்ளதாக பாடியுள்ளார் வாணிதாசன்.

எதுகை:

செய்யுளில், அடியிலோ, சீரிலோ, இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்.

சான்று:

லிடை           லுள்             லிடை           பெரிடை

மோனை:

செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும்.

சான்று:

யலிடை – ளைந்து                 யலுள் – ம்பல்            பெயரிடை – பெருங்குளம்

இயைபு

செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வருவது இயைபுத்தொடை ஆகும்.

சான்று:

விளைத்தாய் – விரித்தாய்

அணிநயம்:

செய்யுளின் அழகுக்குச் சேர்ப்பது அணியே ஆகும். அணி இல்லாத பாடல் அழகில்லா மங்கை போலும். பெயரிடைப்பட்ட வானெனத் தோன்றும் என்னும் அடியில் உவமை அணி அமைந்து இச்செய்யுளின் அழகுக்கு அழகு சேர்த்துள்ளது.

மொழியோடு விளையாடு

அ) புதிர் அவிழ்க்க :-

நான்கெழுத்துக்காரன்;

முதல் இரண்டும் அம்மாவில்

“மா“வைத் தொலைத்து நிற்கும்;

அடுத்த எழுத்தைச் சேர்த்தால்

 வில்லின் துணைவன்;

கடை இரண்டும்

கணக்கில் ’இது’ என்பர்!

முழுதாய்ப் பார்த்தால்

மேகத்திடைத் தெரிவான்

 அவன் யார்?                        -        அம்புலி

ஆ) பண்புத்தொகைகளை இட்டு நிறைவு செய்க.

(இன்னோசை, பேரொளி, சிற்றோடை, பேரின்பம், பைங்கிளி, பேரூர், செந்தாமரை]

மானாமதுரை ஒரு அழகான ……… நீண்டவயல்களும் ………………களும் நிறைந்த அவ்ஊரின் நடுவே வானுயர்ந்த கோபுரத்துடன் கூடிய கோவில் குளத்தில் எங்கும் …………பூக்கள் மலர்ந்துள்ளன. கதிரவனின் ………… வீசிட சோலைப் …….களின் ……………கேட்போரைப்…………………………..அடையச் செய்கிறது.

விடை:

(இன்னோசை, பேரொளி, சிற்றோடை, பேரின்பம், பைங்கிளி, பேரூர், செந்தாமரை]

மானாமதுரை ஒரு அழகான பேரூர். நீண்டவயல்களும் சிற்றோடைகளும் நிறைந்த அவ்ஊரின் நடுவே வானுயர்ந்த கோபுரத்துடன் கூடிய கோவில் குளத்தில் எங்கும் செந்தாமரைப் பூக்கள் மலர்ந்துள்ளன. கதிரவனின் பேரொளி வீசிட சோலைப் பைங்கிளிகளின் இன்னோசை கேட்போரைப் பேரின்பம் அடையச் செய்கிறது.

இ) வட்டத்திற்குள் உள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்குக.



கால்    காலை    கான்           புத்தகம்    புல்   புத்தி

அகல்   அவல்      கல்             அதிகம்    கறி   தறி

புதன்   வலை    அறிவன்        கலை     கத்தி  கவலை

காவல்  அலை  தில்லை

ஈ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத

என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி

அர்த்தமுள்ளக் காட்சி

ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் காட்சி

சமூக விளைவைக் காட்டும் காட்சி

செயல் திட்டம்

ஒரு வாரத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களின் பட்டியலை உருவாக்குக

அவரைப் பருப்பு – ¼ கிலோ

துவரம் பருப்பு – ¼ கிலோ

வெங்காயம் – 1 கிலோ

பூண்டு – ½ கிலோ

ரவை – ¼ கிலோ

சர்க்கரை – ¼ கிலோ

அரிசி – 3 கிலோ

உளுந்து – ½ கிலோ

அகராதியில் காண்க

ஈகை – கொடை ,பொன்

குறும்பு – குறும்புத்தனம், பகைவர்

கோன் -  அரசன், தலைவன்

புகல் – விருப்பம், வெற்றி

மொய்ம்பு – தோள், வலிமை

நிற்க அதற்குத் தக

அ) குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.

ஆ) தண்ணீர் வீணாவதை எங்கு கண்டாலும் தடுப்பேன்.

இ) என்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்வேன்.

ஈ) மழைநீர் சேகரிப்பின் இன்றியமையாமையை வலியுறுத்துவேன்.

உ) பெண்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவேன்.

ஊ) இயற்கையைப் பேணிப் பாதுகாக்க மரங்களை நடுவேன்.

எ) சாலை விதிகளைப் பின்பற்றுவேன். பிறரையும் பின்பற்ற செய்வேன்.

ஏ) முதியோர்களுக்கு உதவி செய்வேன்

 

 

எ) கலைச்சொல் அறிவோம்

இந்திய தேசிய இராணுவம் – Indian National Army

பண்டமாற்றுமுறை – Commodity Exchange

காய்கறி வடிசாறு – Vegetable Soup

செவ்வியல் இலக்கியம் – Classical Literature

கரும்புச் சாறு – Sugarcane Juice

சிறப்பு வழிகாட்டி ஆக்கம் :

வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப் பள்ளி, கோரணம்பட்டி,

சேலம்.

8667426866,8695617154

 CLICK HERE TO GET PDF

WAIT 10 SECONDS

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

வலைப்பக்கம் :

WWW.TAMILVITHAI.COM                               WWW.KALVIVITHAIGAL.COM



 



YOUTUBE :

https://youtube.com/user/000ramakrishnan

 



Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post