மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான
மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி புத்தகம்
பத்தாம் வகுப்பு - தமிழ்
சிறு வினா ( மூன்று மதிப்பெண் )
புத்தக
வினாக்கள்
இயல் – 1
1.தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன
யாவை?
2. ‘ புளியங்கன்று
ஆழமாக நடப்பட்டுள்ளது ‘
இது போல்
இளம் பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடரில்
அமைக்க.
3. ‘ அறிந்தது,அறியாதது, புரிந்தது,புரியாதது, தெரிந்தது, தெரியாதது,பிறந்தது,பிறவாதது
‘ இவை எல்லாம் அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை
இல்லை.எல்லாம் எமக்குத் தெரியும்.
இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக
மாற்றி எழுதுக.
4. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும்
பாங்கினை விளக்குக.
இயல் – 2
2. சோலைக் ( பூங்கா ) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது
போல் ஓர் உரையாடல் அமைக்க.
3. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி,வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர்
நிரப்பினாள்.வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.
இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு,விரித்து எழுதுக.
4. மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக.
குறிப்பு:
இலைகளில் சொட்டும் நீர் – உடலில் ஓடும் மெல்லிய குளிர் – தேங்கிய குட்டையில் ‘ சளப்
தளப் ‘ என்று குதிக்கும் குழந்தைகள் – ஓடும் நீரில் காகிதக் கப்பல்
இயல் – 3
காலையில் நீயெழும்பு!
மாமழை பெய்கையிலே
மாம்பூவே கண்ணுறங்கு!
பாடினேன் தாலாட்டு!
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!
– இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.
2. முல்லை நிலத்திலிருந்தும் மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும்
உணவுப் பொருள்கள் யாவை?
3. புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை
வைக்கத் திண்டும் அமைத்தனர்
திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களை அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச்
சில இடங்களில் காணமுடிகிறது.
இப்படியாக காலமுற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த
கருத்துகளை எழுதுக.
4. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப் படை எவ்வாறு காட்டுகிறது?.
இயல் – 3
திருக்குறள்
1. வேலோடு நின்றான்
இடுஎன்றது போலும்
கோலோடு நின்றான்
இரவு
இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
2. கவிதையைத் தொடர்க…..
தண்ணீர்
நிறைந்த குளம்
தவித்தபடி
வெளிநீட்டும் கை
கரையில்
கைபேசி படமெடுத்தபடி
…………………………………………………………………………………………….
இயல் – 4
1. மாளாத காதல் நோயாளன் போல் – என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
2. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா
என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.
3. மனிதர்களின் மூளையைப் போன்றது,செயற்கை நுண்ணறிவு கொண்ட
கணினியின் மென்பொருள். மனிதன் போலவே பேச, எழுத,சிந்திக்க இத் தொழிலுநுட்பம் மேம்படுத்துகிறது.இதனால்
மனித குலத்துக்கு ஏற்படுகிற நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு ‘ எதிர்காலத்
தொழில்நுட்பம் ‘ என்ற தலைப்பில் எழுதுக.
இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.
இயல் – 5
1. மன்னன்
இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.
2. உங்களுடன்
பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார்.
அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
3. ஐக்கிய
நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு
ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்துகொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது.
மொழிபெயர்ப்பு ( translation ) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது;ஆனால் ஒருவர் பேசும்போதே
மொழிபெயர்ப்பது விளக்குவது ( Interpreting
) என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா. அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்
பார்வையாளருக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிகேட்பியில்
( Headphone ) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து
ஒலி வாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தம்முன் உள்ள காதணிகேட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு
அவரது மொழியில் புரிந்துகொள்வார்.
இப்பகுதியிலிருந்து
ஐந்து வினாக்களை உருவாக்குக.
4. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
இக்குறட்பாவில் அமைந்துள்ள
பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.
இயல் – 6
1. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக
அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
2. நவீன கவிதையில் வெளிப்படும் நுண்மை உள்ளம், பூத்தொடுக்கும்
நாட்டுறப்புறப் பாடலில் வெளிப்படுகிறது. ஒப்பிட்டு எழுதுக.
இறுக்கி முடிச்சிட்டால் காம்புகளின் கழுத்து முறியும் தளரப் பிணைத்தால் மலர்கள் தரையில் நழுவும். வாசலில் மரணம் நிற்பதறிந்தும் வருந்தாமல் சிரிக்கும் இந்தப் பூவை எப்படித் தொடுக்க நான் நவீன கவிதை |
கையாலே பூவெடுத்தா – மாரிக்குக் காம்பழுகிப் போகுமின்னு விரலாலே பூவடுத்தா – மாரிக்கு வெம்பி விடுமென்று சொல்லி தங்கத் துரட்டி கொண்டு – மாரிக்குத் தாங்கி மலரெடுத்தார் நாட்டுப்புறப் பாடல் |
2. “ கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது;மலைப்பகுதிகளில் மலைப் பயிர்களும்
நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.” – காலப் போக்கில் பல மாற்றங்கள்
நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும்
அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.
இயல் – 6 / திருக்குறள்
1. வள்ளுவம்,சிறந்த
அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.
2. பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர்,அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில்
சேர்க்கவில்லை.அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள்
யாவை?
இயல் – 7
1. ‘ முதல் மழை விழுந்ததும்’ என்னவெல்லாம்
நிகழ்வதாக கு.ப.ரா.கவிபாடுகிறார்?
2. அவந்தி நாட்டு மன்னன்,மருத
நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டை கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப்
புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.
3. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” – இடம் சுட்டிப்
பொருள் விளக்குக.
4. பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும்
பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும்
ஆரமும் அகிலும்
அ) இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?
ஆ) பாடலில்
அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
இ) எதுகைச்
சொற்களை அடிக்கோடிடுக.
ஈ) காருகர் – பொருள் தருக.
உ) இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
5. பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக:-
பேரரசனது மெய்ப் புகழை எடுத்துக் கூறுவது மெய்கீர்த்தி. பொதுவாக இது சோழ மன்னருடைய
சாசன்ங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப்பெறும்.
சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு
வீற்றிருந்து நீடு வாழ்க எனக் கூறி,பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.
சோழ மன்னர்
பரம்பரையிலும் மெய்க்கீர்த்தியோடு சாசன்ங்களைப் பொறிக்கும் வழக்கம் நெடுநாள் இருந்ததில்லை.முதல்
இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன் கண் வமிச பாரம்பரியம்
விதந்து ஓதப்படவில்லை. ஏனைய பகுதிகள் உள்ளன.எனினும் இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது.
இன்னும் பின்வந்த மெய்கீர்த்திகளின் வமிச பரம்பரையை மிகவும் விரித்துக் கூறியுள்ளன.
இயல் – 8
1. சங்க இலக்கியங்கள காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே
என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
2. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
4. வாளித் தண்ணீர், சாயக் குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை
– இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.
இயல் – 9
1. சித்தாளின் மனச் சுமைகள்
செங்கற்கள் அறியாது
– இடஞ்சுட்டிப் பொருள் தருக.
3. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?
4. கவிஞர்
தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக..
மனப்பாடப் பகுதி ( மூன்று மதிப்பெண்
) செய்யுள் – அடிபிறழாமல் எழுதுக.
அடிபிறழாமல் எழுதுக. |
|
1. “ அன்னை மொழியே “ எனத்
தொடங்கி “ பேரரசே “ என முடியும் பாவலரேறுப் பாடலை எழுதுக |
1. “ தென்னன் “ எனத் தொடங்கி
“ வாழ்த்துவமே “ என முடியும் அன்னை மொழிப் பாடலை எழுதுக. |
2. “ சிறுதாம்பு “ எனத் தொடங்கும்
முல்லைப்பாட்டு பாடலை எழுதுக. |
2. “ விருந்தினனாக “ எனத்
தொடங்கும் காசிக்காண்டப் பாடலை எழுதுக. |
3. “ அடியேனே “ என முடியும்
பெருமாள் திருமொழிப் பாடலை எழுதுக |
3. “ அருளை “ எனத் தொடங்கும்
நீதிவெண்பா பாடலை எழுதுக. |
4. “ என்னா “ என முடியும்
திருவிளையாடற்புராணப் பாடலை எழுதுக.. |
4. “ செங்கீரை “ என முடியும்
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் பாடலை எழுதுக |
5. “ தண்டலை “ எனத் தொடங்கும்
கம்பராமாயணப் பாடலை எழுதுக |
5. “ வெய்யோன் “ எனத் தொடங்கும்
கம்பராமாயணப் பாடலை எழுதுக. |
6. “ தூசும் துகிரும் “ எனத்
தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுதுக. |
6. “ மாற்றம் “ எனத் தொடங்கும்
காலக்கணிதப் பாடலை எழுதுக. |
7. “ நவமணி “ எனத் தொடங்கும்
தேம்பாவணிப் பாடலை எழுதுக. |
மிகச்சிறப்பான பணி மிகவும் நன்றி
ReplyDelete