மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான
மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி புத்தகம்
பத்தாம் வகுப்பு - தமிழ்
மெல்லக்
கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி புத்தகம்
பத்தாம்
வகுப்பு - தமிழ்
மொழித்திறன் பயிற்சிகள் ( இரண்டு
மதிப்பெண் )
புத்தக
வினாக்கள் கலைச்சொல் அறிக
கலைச்சொல் அறிக - தொகுப்பு |
|||||
Vowel – Consonant – Homograph – Monolingual – Conversation – Discussion - |
இயல் - 4 |
Nanotechnology – Biotechnology – Ultraviolet rays – Space Technology – Cosmic rays – Infrared rays - |
இயல் - 7 |
Consulate – Patent – Document – Guild – Irrigation – Territory - |
|
Storm – Tornad0 – Tempest – Land breeze – Sea breeze – Whirlwind - |
இயல் - 5 |
Emblem – Thesis – Intellactual – Symbolism - |
இயல் - 8 |
Belief – Renaissance – Philosopher – Revivalism – |
|
Classical literature – Epic literature – Devotional literature – Ancient literature Regional literature – Folk literature – Modern literature - |
இயல் - 6 |
Aesthetics – Artifacts – Terminology- Myth - |
இயல் - 9 |
Humanism – Cabinet – Cultural Boundaries – Cultural values - |
மொழித்திறன் பயிற்சிகள் ( இரண்டு
மதிப்பெண் )
புத்தக
வினாக்கள் அகராதியில் காண்க
அகராதியில் காண்க |
|||||
அடவி- அவல் – சுவல் – செறு – பழனம் – புறவு - |
இயல் - 4 |
அவிர்தல் – அழல் – உவா – கங்குல் – கனலி - |
இயல் - 7 |
மிரியல் – வருத்தனை – அதசி – துரிஞ்சல் - |
|
அகன்சுடர்- ஆர்கலி – கட்புள் – கொடுவாய் – திருவில் - |
இயல் - 5 |
மன்றல் – அடிச்சுவடு – அகராதி – தூவல் – மருள் - |
இயல் - 8 |
ஆசுகவி – மதுரகவி – சித்திரகவி – வித்தாரகவி - |
|
ஊண்,ஊன் – திணை,தினை- அண்ணம்,அன்னம்- வெல்லம்,வெள்ளம் - |
இயல் - 6 |
தால் – உழுவை – அகவுதல் – ஏந்தெழில் – அணிமை - |
இயல் - 9 |
குணதரன் – செவ்வை – நகல் – பூட்கை |
(
இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் ) புத்தக வினாக்கள்
இவற்றில் சில வினாக்கள் ஐந்து மதிப்பெண்கள்
வினாக்களில் கேட்கக்கூடும்
இயல் -1
அ ) சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக:- ( 2 மதிப்பெண் )
தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை
தேரும் சிலப்பதி காறமதை
ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்
ஓதி யுனர்ந்தின் புருவோமே”
கவிமணி தேசிக விநாயகனார்
ஆ ) கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக. ( 2 மதிப்பெண் )
( குவியல், குலை,மந்தை,கட்டு )
சொல் |
கூட்டப்பெயர் |
சொல் |
கூட்டப்பெயர் |
கல் |
|
புல் |
|
பழம் |
|
ஆடு |
|
இ ) வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக ( 2 மதிப்பெண் )
1.கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார்.அவரை அழைத்து வாருங்கள்.
2. ஊட்டமிகு உணவு உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
3. நேற்று என்னைச் சந்தித்தார்.அவர் என் நண்பர்.
4.பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார்.போட்டித் தேர்வில் வென்றார்.
ஈ ) தொடர்களில் உள்ள தடித்த அடிக்கோடிட்டச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை
மீள எழுதுக. ( 2 மதிப்பெண் )
1. உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப்
போல,இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.
2. வள்ளல் குமணன் வறுமையால் வாடிவந்த புலவனுக்குத்
தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.
3. நளனும் அவனது துணைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு,அந்நாட்டு மக்கள் மழைமுகில் கண்ட மஞ்ஞை
போலக் களி கொண்டனர்.
4. சோலையிற் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.
5. பசுப்போல் சாந்தமும் புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு
வேண்டும்.
சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக:-
தேன்,விளக்கு,மழை,விண்,மணி,விலங்கு, செய்,மேகலை,வான்,பொன்,பூ
உ ) குறிப்புகளைக் கொண்டுவினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத்தொடர்கள் அமைக்க:-
( 2 மதிப்பெண் )
குறளின்பம், சுவைக்காத இளநீர், காப்பியச் சுவை, மனிதகுல மேன்மை, விடுமுறைநாள்
ஊ )எண்ணுப்பெயர்களைக் கண்டு,தமிழ் எண்களில் எழுதுக. ( 2 மதிப்பெண் )
செய்யுள் அடி |
எண்ணுப்பெயர் |
தமிழ் எண் |
நாற்றிசையும் செல்லாத நாடில்லை |
|
|
எறும்புந்தன் கையால் எண் சாண் |
|
|
ஐந்து சால்பு ஊன்றிய தூண் |
|
|
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி |
|
|
ஆனை ஆயிரம் அமரிடை வென்றமானவனுக்கு வகுப்பது பரணீ |
|
|
அ ) பழமொழியை நிறைவு செய்க:- ( 2 மதிப்பெண் )
1.
உப்பில்லாப்_____________
2.
ஒரு பானை_______________
3.
உப்பிட்டவரை_______________
4.
விருந்தும்______________________
5.
அளவுக்கு_____________________
ஆ ) பத்தியைப் படித்துக் கருத்தைச் சுருக்கி எழுதுக. ( 2 ( அ ) 5 மதிப்பெண்
)
பழைய சோறு
பச்சை நெல் வயலைக் கண்கள் முழுதும் சுமந்து, இளநெல்லை நுகர்ந்து, அதன் பாலை
ருசித்து, நீராவியில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம் வரை சுவைத்தவள் நான்.
அவித்து, காய்ந்து, குத்திய அந்தப் புழுங்கல் அரிசியை, அதன் வழவழப்பை, கடுப்பு மணத்தை,
சோறாகு முன் கை நிறைய அள்ளி வாயில் போட்டு நெரித்து மென்றவள் சொல்கிறேன்.பகலெல்லாம் உச்சி வெயிலுக்கு
அது சுடச்சுடப் புழுங்கலரிசிச் சோறு. இரவு முழுவதும் அந்தச் சோறு நீரில் ஊறும். விடிந்த
இந்த காலையில் அதன் பெயர் பழைய சோறு அல்லது பழையது. காத்திருந்து, சின்ன வெங்காயம்,
பச்சை மிளகாய் கடித்து நீராகாரம் போல் குடிப்பது ஒரு வகை. வாழை இலையில் அந்தப் பழைய
சோற்றைப் பிழிந்து போட்டால், வடுமாங்காய் அல்லது உப்பு நாரத்தங்காய் அதனுடன் சேர்ந்துகொள்ளத்
துடிப்பது இன்னொரு வகை. சுண்ட வைத்த முதல் நாள் குழம்பு இன்னும் உச்சம் ! நல்ல பழையது
மாம்பழ வாசம் வீசுமாம. பழைய சோறு – அது கிராமத்து உன்னதம்.
“ மைக்கடல் முத்துக்கு
ஈடாய் மிக்க நெல்முத்து “….. முக்கூடற்பள்ளு
இ ) கதையாக்குக:- ( 5 மதிப்பெண் )
மனித வாழ்வில் ஒவ்வொருவரும் நாளும் நாளும் புதுப்புது மனிதர்களைப் பார்க்கிறோம்;புதுப்புதுச் செய்திகள் கிட்டும்! கிட்டுகுற கருப்பொருள்களைத் திரட்டி,கற்பனை நயம் கூட்டிக்கதையாக்குவது ஒரு கலை. அது சிறுகதையாக இருக்கலாம்.புதினமாக இருக்கலாம்.அன்பை எதிர்பார்த்திருப்பவராக, யாருமற்றவராக..... இருக்கும் ஒருவர் உங்களின் உதவியால் மனம் மகிழ்ந்த நிகழ்வினைக் கதையாக்குக.
ஈ ) விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு
நூலின் பெயரைக் கண்டுபிடிக்க:- ( 2 மதிப்பெண் )
இ____கு ( பறவையிடம் இருப்பது )
கு____தி ( சிவப்பு நிறத்தில் இருக்கும் )
வா____ ( மன்னரிடம் இருப்பது )
அ____கா ( தங்கைக்கு மூத்தவள் )
ம_____ ( அறிவின் மறுபெயர் )
பட_____ ( நீரில் செல்வது )
உ ) இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:- ( 2 மதிப்பெண்
)
1.சிலை – சீலை 2.தொடு – தோடு 3 மடு - மாடு
4 மலை – மாலை 5 வளி – வாளி 6 விடு – வீடு
அ ) வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுக:- ( 2 மதிப்பெண் )
காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?
எல்லா பறவைகளுக்கும் காது உண்டு.செவி துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்ற படி பாலூட்டிகளுக்கு உள்ளதுபோல் புற செவிமடல் இருக்காது. காகத்திற்கு காது உண்டு. காது கேட்கும்.
பறவைகளுக்கு பார்த்தல்,கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சிப் பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வு குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றே கூறலாம்.
ஆ ) கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:- ( 2 மதிப்பெண் )
அ) இயற்கை – செயற்கை |
ஆ) கொடு - கோடு |
இ) கொள் - கோள் |
ஈ) சிறு - சீறு |
உ) தான் - தாம் |
ஊ) விதி - வீதி |
இ ) பத்தியைப் படித்துப் பதில் தருக:- ( 5 மதிப்பெண் )
பருப்பொருள்கள்
சிதறும்படியாகப் பல காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம்
தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து
திரண்டு இப்படியாக ( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம்
கடந்தது.
1. பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.
2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
3. பெய்த மழை – இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
4. இப்பத்தி
உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?
5. உயிர்கள்
வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?
ஈ ) தொடரைப் படித்து விடையைக் கண்டறிக:- ( 2 மதிப்பெண் )
1. நூலின் பயன் படித்தல் எனில்,கல்வியின் பயன்____
2.விதைக்குத் தேவை எரு எனில்,கதைக்குத் தேவை_____
3.கல் சிலை ஆகுமெனில்,நெல் _______ ஆகும்.
4.குரலில் இருந்து பேச்சு எனில்,விரலில் இருந்து ________
5.மீன் இருப்பது நீரில்;தேன் இருப்பது________________
உ ) குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக:- ( 1 ( அ ) 2 மதிப்பெண் )
குறிப்பு – எதிர்மறையான சொற்கள்
1. மீளாத் துயர் 2. கொடுத்துச் சிவந்த 3.
மறைத்துக்
காட்டு
4. அருகில் அமர்க 5. பெரியவரின் அமைதி 6. புயலுக்குப் பின்
இயல் -5
அ ) அட்டவணையில் விடுபட்டதை எழுதுக. ( 2 ( அ ) 5 மதிப்பெண் )
சொல் |
எழுவாய்த் தொடர் |
பெயரெச்சத் தொடர் |
வினையெச்சத் தொடர் |
விளித் தொடர் |
வேற்றுமைத் தொடர் |
ஓடு |
அருணா ஓடினாள் |
ஓடிய அருணா |
ஓடி வந்தாள் |
அருணா ஓடாதே! |
அருணாவிற்காக ஓடினாள் |
சொல் |
அம்மா சொன்னார் |
|
சொல்லிச் சென்றார் |
|
கதையைச் சொன்னார் |
தா |
அரசர் தந்தார் |
தந்த அரசர் |
தந்து சென்றார் |
அரசே தருக! |
|
பார் |
துளிர் பார்த்தாள் |
|
பார்த்துச் சிரித்தாள் |
|
துளிருடன் பார்த்தேன் |
வா |
குழந்தை வந்தது |
வந்த குழந்தை |
|
குழந்தையே வா |
குழந்தைக்காக வந்தாள் |
ஆ ) தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க. ( 2 மதிப்பெண் )
1. கடம்பவனத்தை
விட்டு இறைவன் நீங்கினான்.
2. மரத்தை
வளர்ப்பது நன்மை பயக்கும்.
3. வாழ்க்கைப்பயணமே
வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.
4. கல்வியே
ஒருவருக்கு உயர்வு தரும்.
5. குழந்தைகள்
தனித்தனியே எழுதித் தர வேண்டும்.
இ ) புதிர்ப் பாடலைப் படித்து விடையைக் கண்டுபிடிக்க:- ( 2 மதிப்பெண் )
தார்போன்ற நிறமுண்டு கரியுமில்லை
பார் முழுதும் பறந்து திரிவேன் மேகமுமில்லை
சேர்ந்து அமர்ந்து ஒலிப்பேன் பள்ளியுமில்லை
சோர்ந்து போகாமல் வீடமைப்பேன் பொறியாளருமில்லை
வீட்டுக்கு வருமுன்னே, வருவதைக் கூறுவேன்
.நான் யார்?
ஈ ) தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்து கொண்டு தொடர்களை முழுமை
செய்க ( 2 மதிப்பெண் )
1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும் ______யாவும் அரசுக்கே சொந்தம்.நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில் ___ __ நிலத்தடி நீர் வளத்தைக் குன்றச் செய்யும்.(புதையல்,புதைத்தல்)
2. காட்டு
விலங்குகளைச் _______தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் ___________திருத்த உதவுகிறது.( சுட்டல்,சுடுதல் )
3. காற்றின்
மெல்லிய ____ பூக்களைத்
தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான ________பூக்களை மாலையாக்குகிறது. ( தொடுத்தல்,தொடுதல் )
4. பசுமையான _______ஐக்_________
கண்ணுக்கு நல்லது.( காணுதல்,காட்சி)
5. பொது வாழ்வில்______கூடாது
_______இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. ( நடித்தல்,நடிப்பு )
அ ) தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக. ( 2 மதிப்பெண் )
1. அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார்.
( கலவைச் சொற்றொடராக மாற்றுக )
2. இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கிவைத்தார்.புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.(தொடர் சொற்றொடராக மாற்றுக )
3. ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக்கொண்டு,காலில் சலங்கை அணிந்து கொண்டு,கையில் ஒரு சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர். ( தனிச் சொற்றொடர்களாக மாற்றுக )
4. கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர். (கலவைச் சொற்றொடராக மாற்றுக )
5. ஓடிக் கொண்டிருந்த மின் விசிறி சட்டென நின்றவுடன்,அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.
( தனிச் சொற்றொடராக மாற்றுக )
ஆ ) பிறமொழிச்சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றுக:- ( 2 ( அ ) 5 மதிப்பெண் )
புதிர்
உங்களிடம் ஏழு கோல்டு பிஸ்கட் உள்ளது. அதில் ஒன்று மட்டும் எடை குறைவானது. உங்களிடம் உள்ள ஒரு தராசை இரு முறைகள் மட்டுமே யூஸ் பண்ணி வெயிட் குறைந்த கோல்டு
பிஸ்கட்டைக் கண்டுபிடிக்கவும்.
விடை
தராசின் இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டுகளை
வையுங்கள்.இரண்டு தட்டுகளும் ஈக்வலாக இருந்தால்,கையில் மிச்சம் உள்ள பிஸ்கட்டே வெயிட் குறைவானது. பட் ஆனால், ஒரு பக்க தராசுத் தட்டு உயர்ந்தால் அதில் உள்ள மூன்று பிஸ்கட்களில் ஒன்று வெயிட்
குறைவானது. அந்த மூன்று பிஸ்கட்டுகளை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு தட்டுகளிலும் ஒரு ஒரு பிஸ்கட்டைப் போட்டு இதே எக்ஸ்பெரிமெண்ட்டை ரிப்பீட்
செய்து ஆன்சரைக் கண்டுபிடியுங்கள்! ஆல் தி பெஸ்ட்!.
பிறமொழிச் சொல் |
தமிழ்ச்சொல் |
பிறமொழிச் சொல் |
தமிழ்ச்சொல் |
கோல்ட் பிஸ்கட் |
தங்கக்கட்டி |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இ ) நாட்டுப்புறப் பாடலுக்கேற்ற சூழலை எழுதுக:- ( 2 மதிப்பெண் )
பாடல் |
பாடல் எழுந்த சூழல் |
பாடறியேன் படிப்பறியேன் – நான் தான் பள்ளிக்கூடம் தானறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் – நான் தான் எழுத்துவகை தானறியேன் படிக்க நல்லா தெரிஞ்சிருந்தா – நான் தான் பங்காளிய ஏன் தேடுறேன் எழுத நல்லா தெரிஞ்சிருந்தா – நான் தான் எதிராளிய ஏன் தேடுறேன் நாலெழுத்துப் படிச்சிருந்தா – நான் தான் நாலு தேசம் போய்வருவேன் நாலு பக்கம் வரப்புக்குள்ள – தெனமும் நான் பாடுறேன் தெம்மாங்கு தான் |
|
ஈ ) மனிதனுக்கும் மலருக்குமான மணம் வீசும் இந்த நயவுரையைத் தொடர்க;- ( 2 மதிப்பெண் )
வண்டுகளை ஈர்க்கும் வாசனையில்
பூக்களிடம் வசப்படுவது மனிதர்களே!
பூச்சியைக் கவரும் வண்ணங்களில்
பூக்களிடம் விழுவது மனிதர்களே!
…………………………………………………………
உ ) தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக:- ( 2 மதிப்பெண் )
1. வானம் ----------- தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது.
2. அனைவரின் பாராட்டுகளால்,வெட்கத்தில் பாடகர் முகம் ------------------
3. ---------------------- மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
4. கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் --------- புல்வெளிகளில் கதிரவனின் ----- வெயில் பரவிக்கிடக்கிறது.
5. வெயில் அலையாதே;உடல் -------------- விடும்
ஆ. பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக. ( 1 ( அ ) 2 மதிப்பெண் )
தங்கும், மரம் வீடு, அவிழும், தயங்கும்,மரவீடு, தோற்பாவை, விருது, தோற்பவை,கவிழும்,விருந்து |
1. விரட்டாதீர்கள் – பறவைக்கு மரம் வீடு
வெட்டாதீர்கள் – மனிதருக்கு அவை தரும் -----------
2. காலை ஒளியினில் மலரிதழ் …………….
சோலைப் பூவினில் வண்டினம் ……………
3. மலைமுகட்டில் மேகம் ………………. அதைப்
பார்க்கும் மனங்கள் செல்லத் ……………..
4. வாழ்க்கையில்………………… மீண்டும் வெல்லும் – இதைத்
தத்துவமாய்த் ………………….. கூத்து சொல்லும்.
5. தெருக் கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே ………………. அதில்
வரும் காசு குறைந்தாலும் அதுவேயவர் ……………..
இயல் -7
அ ) பின்வரும் தொடர்களைக் கொண்டு
பொருத்தமான தொடர் அமைக்க. ( 2 மதிப்பெண் )
வரப் போகிறேன் |
இல்லாமல் இருக்கிறது |
கொஞ்சம் அதிகம் |
முன்னுக்குப் பின் |
மறக்க நினைக்கிறேன் |
ஆ ) தொகைச் சொற்களைப் பிரித்து
எழுதி,தமிழ் எண்ணுரு தருக. ( 2 மதிப்பெண் )
மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு, தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில்
அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள். நானிலத்தில் பசித்தவருக்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
படிப்பவர்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப் பெருமை சாற்றுகிறது.
இ ) கவிதையை உரையாடலாக மாற்றுக ( 5 மதிப்பெண் )
மகள் சொல்லுகிறாள் அம்மா என் காதுக்கொரு தோடு
– நீ அவசியம் வாங்கி வந்து போடு! சும்மா இருக்க முடியாது
– நான் சொல்லி விட்டேன் உனக்கு இப்போது! தாய் சொல்லுகிறாள் காதுக்குக் கம்மல் அழகன்று
– நான் கழறுவதைக் கவனி நன்று நீதர் மொழியை வெகுபணிவாய்
– நிதம் நீ கேட்டு வந்து காதில் அணிவாய்! மகள் மேலும் சொல்லுகிறாள் கைக்கிரண்டு வளையல் வீதம்
– நீ கடன்பட்டுப் போட்டிடினும் போதும் ! பக்கியென் றென்னை யெல்லோரும்
– என் பாடசாலையிற் சொல்ல நேரும் ! |
தாய் சொல்லும் சமாதானம் வாரா விருந்து வந்த களையில்
– அவர் மகிழ உபசரித்தல் வளையல்! ஆராவமுதே மதி துலங்கு – பெண்ணே அவர்சொல்வ துன்கைகட்கு விலங்கு! பின்னும் மகள் ஆபர ணங்கள் இல்லை யானால்
– என்னை யார் மதிப்பார் தெருவில் போனால் கோபமோ அம்மா இதைச் சொன்னால்
– என் குறைதவிர்க்க முடியும் அதற்குத் தாய்: கற்பது பெண்களுக்கா பரணம்
– கெம்புக் கல்வைத்த, நகைதீராத ரணம்! கற்ற பெண்களை இந்த நாடு
– தன் கண்ணில் ஒற்றிக் கொள்ளுமன் போடு. |
ஈ ) ஊர்பெயர்களின் மரூஉவை எழுதுக:- ( 2 மதிப்பெண் )
புதுக்கோட்டை,
திருச்சிராப்பள்ளி, உதக மண்டலம், கோயம்புத்தூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, கும்பகோணம்,
திருநெல்வேலி, மன்னார்குடி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை.
உ) படம் தரும் செய்தியைப்
பத்தியாக தருக. ( 5 மதிப்பெண் )
இயல் -8
அ ) மரபுத் தொடருக்கான பொருளறிந்து
தொடரில் அமைத்து எழுதுக;- ( 2 மதிப்பெண் )
மனக்கோட்டை, கண்ணும் கருத்தும், அள்ளி இறைத்தல் , ஆறப்போடுதல்
ஆ ) பின் வரும் உரையாடலில் உள்ள
பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக;- ( 2
மதிப்பெண் )
“ தம்பீ? எங்க நிக்கிறே?”
“ நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.”
“ அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு,பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு.... நா வெரசா வந்துருவேன்”
“அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே ! அவனெப் பாத்தே ரொம்ப நாளாச்சு !”
“அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனெக் கூட்டிக்கிட்டு வர்றேன்.”
“ ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே ! அப்பம் அவனுக்கு மூணு வயசு இருக்கும்!”
“ இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது.! ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்! சரி, போனை வையி. நாங் கெளம்பிட்டேன்.
இ ) கண்டுபிடித்து எழுதுக, ( 2 மதிப்பெண் )
ஒன்று, இரண்டு,மூன்று,
நான்கு, ஐந்து , ஆறு , ஏழு, எட்டு, பத்து ஆகிய எண்ணுப்
பெயர்கள் இடம் பெறும் திருக்குறளைக் கண்டுபிடித்து எழுதுக.
ஈ) சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக. ( 2 மதிப்பெண்
)
1. கானடை 2.
வருந்தாமரை 3. பிண்ணாக்கு 4. பலகையொலி
எ.கா : கானடை என்பதை,
கான் அடை – காட்டைச்
சேர்
கான் நடை - காட்டுக்கு
நடத்தல்
கால் நடை - காலால்
நடத்தல்
இவ்வாறு
மூன்று வகையாகப் பிரித்துப் பொருள் கூறலாம்.
இயல் -9
அ ) உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக;- ( 2 மதிப்பெண்
)
1.
தாமரை இலை நீர் போல
2.
மழை முகம் காணாப் பயிர் போல
3.
கண்ணினைக் காக்கும் இமை போல
4.
சிலை மேல் எழுத்து போல
ஆ ) பொருத்தமான நிறுத்தற் குறியிடுக:- ( 2 மதிப்பெண் )
சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை
குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை
வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில்
சான்றுகள் உள்ளன.
இ ) பாடலில் இடம் பெற்றுள்ள தமிழ்ப்புலவர்களின் பெயர்களைக்
கண்டறிந்து எழுதுக;- ( 2 மதிப்பெண் )
கம்பனும் கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்
கொம்பனும்
பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை
காசிம்புலவரை,குணங்குடியாரை
சேகனாப் புலவரை
செய்குதம்பிப்
பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ
ஈ ) விளம்பரத்தை நாளிதழுக்கான செய்தியாக மாற்றியமைக்க:-
( 5 மதிப்பெண் )
உ ) கீழ்க்காணும் நாட்காட்டியில் புதன் கிழமையை ஒன்றாம் தேதியாகக் கொண்டு தமிழெண்களால் நிரப்புக:-
( 2 மதிப்பெண் )
ஞாயிறு |
திங்கள் |
செவ்வாய் |
புதன் |
வியாழன் |
வெள்ளி |
சனி |
- |
- |
- |
௧ |
௨ |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
பகுபத உறுப்பிலக்கணம் தருக ( இரண்டு
மதிப்பெண் )
புத்தக
வினாக்கள்
1. பொறித்த 2.
உரைத்த 3. மலைந்து 4.பொழிந்த 5.கிளர்ந்த
6. பதிந்து 7.
மயங்கிய 8. அறியேன்
9. ஒலித்து
10. அமர்ந்தான்