9TH - TAMIL - QURTLY - MODEL QUESTION PAPER - PDF

  

மாதிரி காலாண்டு வினாத்தாள் 2022 - 23

ஒன்பதாம் வகுப்பு

மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                         மதிப்பெண் : 100

அறிவுரைகள் : 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக்  கண்காணிப்பாளரிடம்   உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்     பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

            ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

i)              அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii)              கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

I) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                       15×1=15

1.வாயில் இலக்கியம் என்றழைக்கப்படும் நூல் எது?

அ) தூது             ஆ)  புறநானூறு              இ) பிள்ளைத்தமிழ்          ஈ) மணிமேகலை

2. தமிழ்நாடு அரசு கிராமப் புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வு எது?

அ) தேசிய திறனறித் தேர்வு           ஆ) ஊரகத் திறனறித் தேர்வு         இ) தேசிய திறனறி, கல்வி உதவித்தொகை தேர்வு               ஈ) தமிழ் திறனறித் தேர்வு

3.ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர் உணர்த்தும் இலக்கணம்

அ) உரிச்சொற்கள்            ஆ) தொகைச்சொற்கள் இ) திசைச்சொற்கள்  ஈ) வடசொற்கள்

4. சொற்றொடர் அமைப்பதற்கு அடிப்படையாக இருக்கும் பெயர்ச்சொல்லை _____ என்கிறோம்

அ) பயனிலை                  ஆ) வினைமுற்று             இ) எழுவாய்       ஈ) எச்சம்

5. வினைத்தொகையில் வல்லினம் மிகாது. சான்று தருக.

அ) வந்த சிரிப்பு               ஆ) அது செய்          இ) இரவு பகல்             ஈ) வளர்பிறை

6. தென்னிந்திய அடையாளச் சின்னமாக காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன – எவ்வகைத் தொடர்

அ) செய்தித் தொடர்          ஆ)  கட்டளைத் தொடர்     இ) வினாத் தொடர்

ஈ) உணர்ச்சித் தொடர்

7. தவறான இணையைக் கண்டறிந்து எழுதுக.

அ)  ஏரி – வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம்

ஆ) குண்டு – குளிப்பதற்கேற்ற சிறுகுளம்   

இ) ஊருணி – பலவகைக்கும் பயன்படும் நீர்த் தேக்கம்                                

ஈ)  கூவல் – உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர் நிலை

8. பொருத்தமான விடையைத் தேர்க:-

1) நீரின்று அமையாது  உலகு – திருவள்ளூவர்

2) நீரின்று அமையாது யாக்கை – ஒளவையார்

3) மாமழை போற்றுதும் – இளங்கோவடிகள்

அ) 1.3 சரி           ஆ) 1,2 சரி              இ) 1,2,3 சரி                ஈ) அனைத்தும் தவறு

9. முன் + ஏறு = முன்னேறு ______ என்பது ______

அ) பெயர் + வினை = வினை                    ஆ) இடை + வினை = வினை

இ) முற்று + வினை = வினை                   ஈ) வினை + வினை = வினை

10. கூட்டுவினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளை தருவது ___

அ) துணைவினை           ஆ) தனிவினை   இ) முதல் வினை              ஈ) பிறவினை

11. உலக தாய்மொழி தினம் ______

அ) மார்ச் 21          ஆ) பிப்ரவரி - 21             இ) ஜனவரி - 21           ஈ) ஏப்ரல் - 21

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

தித்திக்கும் தெள் அமுதாய் தெள்அமுதின் மேலான

முத்திக் கனியே என் முத்தமிழே – புத்திக்குள்

உண்ணப்படும் தேனே உன்னோடு உவந்து உரைக்கும்

விண்ணப்பம் உண்டு விளம்பகேள் மண்ணில்

12. பாடல் அடிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

அ) தமிழோவியம்   ஆ) தமிழ்விடுதூது   இ) சிலப்பதிகாரம்      ஈ) மணிமேகலை

13 ) தித்திக்கும் என்ற சொல்லின் பொருள் _____

அ) துவர்ப்பு         ஆ) இனிப்பு                    இ) உவர்ப்பு       ஈ) கார்ப்பு

14 ) பாடலில் அமைந்துள்ள மோனைச் சொற்கள்

அ) முத்தி, முத்தமிழே        ஆ) விண்ணப்பம்,உண்டு            இ) தித்திக்கும் – உரைக்கும்                     ஈ) விண்ணப்பம், மண்ணில்

15 ) முத்தமிழ் பிரித்து எழுதுக

அ) முத்து + தமிழ்   ஆ) முதுமை + தமிழ்       இ) மூன்று + தமிழ்          

 ஈ) முதல் + தமிழ்

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.            4×2=8

21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

16. தென்திராவிட மொழிகள் எவையேனும் நான்கினை எழுதுக.

17. விடைக்கேற்ற வினா அமைக்க.

            அ. இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அறியப்படுபவர் சர்.ஆர்தர் காட்டன்

            ஆ. தமிழக மக்கள் பயன்படுத்தும் குடும்ப அட்டைகள் திறன் அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன.

18. ஐம்பெரும் குழுவில் இடம் பெறுவோர் யாவர்?.

19. இணைய வழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள் எவையேனும் நான்கு எழுதுக

20. கூட்டுப்புழுவை எடுத்துக்காட்டி கவிஞர் உணர்த்தும் பொருளை எழுதுக

21. எனைத்தானும் – எனத் தொடங்கும்  குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                5×2=10

22. பெயரடை என்றால் என்ன?

23. பகுபத உறுப்பிலக்கணம் தருக:- அறைந்தனன்

24. பொருள் எழுதி தொடரமைக்க: 1 அழை - அலை

25. தற்காலத் தமிழில் பயன்படுத்தும் துணைவினைகள் சிலவற்றைக் கூறுக.

26. மரப இணைச் சொற்களைத் தொடரில் அமைக்க.

            அ. மேடும் பள்ளமும்         ஆ. முதலும் முடிவும்

27. கலைச்சொல் தருக:- அ. INSCRIPTION              ஆ) NAUTICAL MILE

28. பொருத்தமான வினையடைகளைத் தேர்வு செய்க.

மெதுவாக ,வேகமாக, பொதுவாக, அழகாக )

அ) ஊர்தி ________ சென்றது

ஆ) சங்க இலக்கியம் வாழ்க்கையை ____ காட்டுகிறது.

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-               2×3=6

29. சோழர்கால குமிழித்தூம்பு எதற்காக பயன்பட்டது?

30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக;ION

            இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலப் பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார். கல்லணை பல காலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைபட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும் வறட்சியாலும் வளமை குன்றியது. இந்தச் சூழலில் 1829இல் காவிரி பாசனபகுதிக்குத் தனிப்பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார். கல்லணைக்கு கிராண்ட் அணைக்கட் என்ற பெயரைச் சூட்டினார்.

            அ) தஞ்சை மாவட்டம் ஏன் வளமை குன்றியது?

ஆ. சர் ஆர்தர் காட்டன் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

இ. கல்லணை நீரோட்டம் ஏன் தடைப்பட்டது?

31. ஏறுதழுவுதல் பற்றி கலித்தொகையில் கூறப்படும் கருத்துக்களை விளக்குக.

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.  2×3=6

(34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)

32. உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திர விழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக.

33. நிலைத்த புகழைப் பெற குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?

34. “ காடெல்லாம்“ எனத் தொடங்கும் பெரியப் புராணப் பாடலை எழுதுக

(அல்லது )

      “ அறிவியல் என்னும் “ எனத் தொடங்கும் ஓ என் சம காலத் தோழர்களே பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                         2×3=6

35. தன்வினை, பிறவினை – எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.

36. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

      தகுதியான் வென்று விடல் – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.

37. வல்லினம் மிகா இடங்களுக்கு எடுத்துக்காட்டுடன் விளக்குக..

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                     5×5=25

38. அ) தூது அனுப்பத் தமிழே சிறந்தது என்பதற்குத் தமிழ்விடு தூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக

( அல்லது )

ஆ) பெரிய புராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினை தொகுத்து எழுதுக.

39. அ) உங்களின் நண்பர் பிறந்தநாள் பரிசாக அனுப்பிய கால் முளைத்த கதைகள் என்னும் நூல் குறித்து கடிதம் ஒன்று எழுதுக

( அல்லது )

 ஆ) உனர்து ஊரில் பரவி வரும் கொசுக்களை ஒழிக்க வேண்டியும், அதன் பாதிப்புகள் குறித்தும் நகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதுக

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.

 



 

 

 

41. நயம் பாராட்டுக:-

         கல்லும் மலையும் குதித்துவந்தேன்

 பெருங்காடும் செடியும் கடந்துவந்தேன்;

         எல்லை விரிந்த சமவெளி – எங்கும்நான்

இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்.            

         ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல

ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;

         ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல்

ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.   –

கவிமணி                                               

42. அ) உன் பெற்றோர் மனம் மகிழுமாறு செய்யும் செயல்களை பட்டியலிடுக

( அல்லது )

ஆ) மொழி பெயர்க்க:-

1. Every flower is a soul blossoming in nature – Gerard De Nerval

2. Sunset is still my favourite colour, and rainbow is second – Mattie Stepanek

3. An early morning walk is a blessing for the whole day – Henry David Thoreau

4. Just living is not enough…..One must have sunshine, freedom, and a little flower – Hans Christian Anderson

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                           3×8=24

43. அ) ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரி

( அல்லது )

ஆ) அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணைய வழி சேவைகள் பற்றி விரிவாக தொகுத்து எழுதுக.

44. அ) தண்ணீர் – இக்கதையின் கருப்பொருளும் சுவையும் குன்றாமல் சுருக்கி வரைக.

( அல்லது )

ஆ) இந்திய விண்வெளித் துறை பற்றிய செய்திகளை விவரிக்க.

 

45. அ) பள்ளி நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/ கவிதை ஏதேனும் ஒன்று குறித்து மதிப்புரை எழுதுக.

குறிப்பு : நூலின் அமைப்பு – மையப்பொருள் – மொழிநடை- வெளிப்படும் கருத்து – நூலின் நயங்கள் – சிறப்புகள் – நூல் குறித்து உங்களின் பொதுவான கருத்து - முடிவுரை

( அல்லது )

ஆ) அ.பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சி செய்திகளைத் திரட்டி தொகுப்புரை எழுதுக.

 

 

வினாத்தாள் ஆக்கம் :

 

திரு. வெ.ராமகிருஷ்ணன்,

அரசு உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி.

 

WWW.TAMILVITHAI.COM

WWW.KALVIVITHAIGAL.COM

 CLICK HERE TO GET PDF

கற்றல் வளங்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் தொடர்ந்து பெற நமது வலைதளங்களை பின் தொடரவும். மேலும் உங்களுக்கு புலனத்தில் கற்றல் வளங்களை பெற புலன எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும். புலன எண் : 8695617154.

இந்த எண்ணை நீங்கள் நிர்வகிக்கும் குழுக்களில் சேர்த்தால் கற்றல் வளங்களை உங்களின் குழுவிற்கும் பகிருகிறோம்.

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post