6TH - TAMIL - FIRST TERM - MODEL QUESTION PAPER - PDF

 

முதல் பருவத் தேர்வு – 2022





தமிழ்

6 – ஆம் வகுப்பு                                                                              பதிவெண் :   

காலம் : 2.00 மணி                                                                                   மதிப்பெண்கள் : 60

I) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:-                                                                              5 × 1 = 5

1. ஏற்றத் தாழ்வற்ற ------ அமைய வேண்டும்

அ) சமூகம்          ஆ) நாடு   இ) வீடு   ஈ) தெரு

2. “ மா “ என்னும் சொல்லின் பொருள்_____

அ) மாடம்            ஆ) வானம்         இ) விலங்கு        ஈ) அம்மா

3. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது______

அ) ஊக்கமின்மை           ஆ) அறிவுடைய மக்கள்                இ) வன்சொல்                 ஈ) சிறிய செயல்

4. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி_______.

அ) துருவப்பகுதி ஆ) இமயமலை இ) இந்தியா ஈ) தமிழ்நாடு

5. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________.

அ) ஆழமான + கடல் ஆ) ஆழ் + கடல் இ) ஆழ + கடல்  ஈ) ஆழம் + கடல்

II) கோடிட்ட இடத்தை நிரப்புக:-                                                                                                  5 × 1 = 5

6. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் _______

7. இந்தியாவின் பறவை மனிதர் ________

8. சோபியா’ ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கிய நாடு  _______

9. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் ------

10. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டுமெனில் அது _____ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

III) எதிர்ச்சொற்களைப் பொருத்துக.                                                                                                                 4 × 1 = 4 11. அணுகு - தெளிவு

12. ஐயம் - சோர்வு

13. ஊக்கம் - பொய்மை

14. உண்மை – விலகு

IV) எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் விடையளி                                                               6 × 2 = 12

15. செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?

16. நீங்கள் அறிந்த தமிழ்க் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

17. அன்பிலார், அன்புடையார் செயல்கள் யாவை?

18. பாரதியார் இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பம் குறித்து எழுதுக.

19. மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது?

20. டீப் புளூ’ – மீத்திறன் கணினி பற்றி எழுதுக.

21. நாளைய மனிதனின் வாழ்வு எவ்வாறு இருக்கும்?

22. வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?

23. இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

நீதி , மணி, கண், நூல்

 

24. கலைச்சொல் தருக :- அ) Touch Screen                            ஆ)  Sanctuary

V) அடிமாறாமல் எழுதுக:-                                                                                                       2 + 4 = 6 

25. “ அன்பிலார் “ – எனத் தொடங்கும் குறளை எழுதுக.

26. ‘ மாமழை போற்றுதும்’ – எனத் தொடங்கும் பாடல்

VI) எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி:-                                                                   3 × 2 = 6

27. மெய்யெழுத்துகளை மூவகை இனங்களாக வகைப்படுத்தி எழுதுக.

28. மொழிக்கு முதலில் வரும் உயிர்மெய் எழுத்துகள் யாவை?

29. சார்பெழுத்துகள் எத்தனை? அவையாவை?.

30. பிறமொழிக் கலப்பின்றி எழுதுக

அ). எங்க ஸ்கூல்லே சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.

ஆ) பெற்றோரிடம் பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் சொன்னாங்க.

31. வாக்கியத்தை நீட்டி எழுதுக:- அறிந்து கொள்ள விரும்பு. ( எதையும், காரணத்துடன், தெளிவாக )

VII) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி                                                                 2 × 5 = 10

32 கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

விரிவான கருத்தைச் சுருக்கிச் சொல்வதே பழமொழியின் சிறப்பு. சான்றாக, சுத்தம் சோறு போடும் என்னும் பழமொழி தரும் பல பொருளைக் காண்போம். சுத்தம் நோயற்ற வாழ்வைத் தரும். உடல் நலமே உழைப்புக்கு அடிப்படை. உழைத்துத் தேடிய பொருளால் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிறோம். இவை அனைத்திற்கும் சுத்தமே அடிப்படை. இவ்விரிந்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது.

 1. பழமொழியின் சிறப்பு சொல்வது

அ) விரிவாகச் ஆ) சுருங்கச்  இ) பழைமையைச்  ஈ) பல மொழிகளில்

2. நோயற்ற வாழ்வைத் தருவது  ______

3. உடல்நலமே ________  அடிப்படை

4. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை?

5. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக:- ( அல்லது )

33. அஃறிணை, பாகற்காய் ஆகிய சொற்களின் பொருள் சிறப்பு யாது?

34. விடுப்பு விண்ணப்பம் – வரைக                ( அல்லது )

35. ஆய்ந்தறிக.

பெருகிவரும் மக்களின் தேவைக்காக இயற்கையை அழிப்பது சரியா? இயற்கையைச் சுரண்டாமல், மக்களின் தேவைகளை நிறைவேற்ற மாற்று வழிகள் உண்டா ?

VIII) கீழ்க்காணும் வினாக்களுக்கு எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:-                                    2 × 5 = 10

36. தமிழ் மொழி படிக்கவும், எழுதவும் எளியது என்பது பற்றி உங்கள் கருத்து யாது? ( அல்லது )

37 ‘ கிழவனும் கடலும் ‘ என்னும் படக்கதையை உங்கள் சொந்த நடையில் கதையாக எழுதுக.

38. அறிவியல் ஆக்கங்கள் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக     ( அல்லது )

39. இயற்கையைக் காப்போம் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக

IX. விடையளி:-                                                                                                            1 × 2 = 2

32. பின்வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.

 கம்ப்யூட்டர் துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஆ. காலிங்பெல்லை அழுத்தினான் கணியன்.

CLICK HERE TO GET PDF

வினாத்தாள் வடிவமைப்பு:-

WWW.TAMILVITHAI.COM                                                                                       WWW.KALVIVITHAIGAL.COM

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post