7TH - TAMIL - FIRST TERM MODEL QUESTION PAPER - PDF

 

முதல் பருவத் தேர்வு – 2022



தமிழ்

7 – ஆம் வகுப்பு                                                                              பதிவெண் :           

காலம் : 2.00 மணி                                                                                   மதிப்பெண்கள் : 60

I) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:-                                                                              5 × 1 = 5

1. வானில் _____ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.

அ) அகில் ஆ) முகில்            இ) துகில்             ஈ) துயில்

2. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது _____.

அ) பச்சை இலை   ஆ) கோலிக்குண்டு            இ) பச்சைக்காய்     ஈ) செங்காய்

3. ……… செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.
அ) மன்னன்                                             ஆ) பொறாமை இல்லாதவன்  

இ) பொறாமை உள்ளவன்                ஈ) செல்வந்தன்

4. காட்டாறு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.

அ) காடு + ஆறு      ஆ) காட்டு + ஆறு   இ) காட் + ஆறு      ஈ) காட் + டாறு

5. தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தே வரைப் பாராட்டியவர் _____.

அ) இராஜாஜி        ஆ) பெரியார்         இ) திரு.வி.க.        ஈ) நேதாஜி

II) கோடிட்ட இடத்தை நிரப்புக:-                                                                                             5 × 1 = 5

6. ‘காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு’ - என்று அழைக்கப்படும் விலங்கு _____

7. 'நெறி' என்னும் சொல்லின் பொருள் _________.

8. ‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை _____.

9. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ________.

10. தமிழின் கிளை மொழிகளில் ஒன்று _________

III) பொருத்துக:-                                                                                                                             4 × 1 = 4           

11. பொக்கிஷம்                   -           அழகு

12 சாஸ்தி                       -           செல்வம்

13 விஸ்தாரம்                    -           மிகுதி

14. சிங்காரம்                               பெரும்பரப்பு

IV) எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் விடையளி                                                        6 × 2 = 12

15. தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.

16. வட்டார மொழி எனப்படுவது யாது ?

17. காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை?

18. யானைகள் மனிதர்களை ஏன் தாக்குகின்றன?

19. தம் வயிற்றுக்குத் தாய் எதனை உவமையாகக் கூறுகிறார்?

20. பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது?

21. முத்துராமலிங்கத் தேவர் பெற்றிருந்த பல்துறை ஆற்றலைப் பற்றி எழுதுக.

22. கரடி ‘அனைத்துண்ணி’ என அழைக்கப்படுவது ஏன்?

V) அடிமாறாமல் எழுதுக:-                                                                                                  2 + 4 = 6

23. “ அரசு “ – என முடியும் குறளை எழுதுக.

24. பச்சை மயில் நடிக்கும் – எனத் தொடங்கும் பாடல்

 

VI) எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி:-                                                            3 × 2 = 6

25. ’குற்றியலுகரம்’ என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.

26. சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு யாது?

27. வாழைப்பழம் மிகவும் நஞ்சு விட்டது. – இத்தொடரில் இடம்பெற்றுள்ள போலிச் சொல்லைக் கண்டறிக. அதன் சரியான சொல்லை எழுதுக.

28. ஔகாரம் எப்பொழுது முழுமையாக ஒலிக்கும்?

VII) கட்டுரை எழுதுக:-                                                                                                      1 × 6 = 6

29. அ)  கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக. தாய்மொழிப் பற்று         

 (முன்னுரை – மொழி பற்றிய விளக்கம் – தாய்மொழி – தாய்மொழிப் பற்று - தாய்மொழிப் பற்றுக் கொண்ட சான்றோர் – சாதுவன் வரலாறு – நமது கடமை – முடிவுரை)

( அல்ல்லது )

ஆ) நீங்கள் சென்று வந்த சுற்றுலா குறித்து உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.

VIII) வினாவிற்கு சிந்தித்து விடை எழுதுக:-                                                                                 1 × 6 = 6

30. சிறந்த தலைவருக்குரிய பண்புகள் எவை என நீங்கள் கருதுகிறீர்கள்?

                        ( அல்லது )

31. காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பட்டியலிடுக.

IX. விடையளி:-                                                                                                            10 × 1 = 10

32. தொகைச் சொற்களை விரித்து எழுதுக. : - முத்தமிழ்

33. பிழையைத் திருத்திச் சரியாக எழுதுக.:- அரசர்கள் நல்லாட்சி செய்தார்

34. கலைச்சொல் தருக:- 1 ) Natural Resource               2) Wild Animals

35. இடைச்சொல் ‘கு’ சேர்த்துத் தொடரை எழுதுக. :- செடி பாய்ந்த நீர்  

36. கோடிட்ட இடங்களைத் தமிழ் எண் கொண்டு நிரப்புக:-

அ) தமிழ் இலக்க ணம் ___ வகைப்படும்.

ஆ) நான் படிக்கும் வகுப்பு ______

37. இரண்டுசொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க

கண்

மண்

அழகு

உண்டு

38. விடுகதைகளுக்கு விடை எழுதுக.

என் பெயர் மூன்று எழுத்துகளைக் கொண்டது. முதலெழுத்தை நீக்கினால் மறைப்பேன். இரண்டாம் எழுத்தை நீக்கினால் குரைப்பேன். மூன்றாம் எழுத்தை நீக்கினால் குதிப்பேன். நான் யார்? ___________.

39. எதிர்ப்பாலுக்குரிய பெயர்களை எழுதுக:- அ) மாணவன்                      ஆ) தோழி

40. இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக.:-

அன்னை தந்தையின் கைப் பிடித்துக் குழந்தை ______ பழகும்.

அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்கு மொழி ________

41. கீழ்க்காணும் சொற்களை உயர்திணை, அஃறிணை என வகைப்படுத்துக.

வயல், முகிலன், குதிரை, கயல்விழி,

42. அகம் என முடியும் சொற்கள் இரண்டினை எழுதுக.

CLICK HERE TO GET PDF

வினாத்தாள் வடிவமைப்பு:-

WWW.TAMILVITHAI.COM                                                                                       WWW.KALVIVITHAIGAL.COM

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post