10TH - TAMIL - QURTLY - EXAM - SALEM DT - ANSWER KEY -

 

சேலம் - காலாண்டு வினாத்தாள்

செப்டம்பர் - 2022-2023

பத்தாம் வகுப்பு

மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                         மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

அ. வணிக கப்பல்களும் ஐம்பெருங்காப்பியங்கள்

1

2.

ஆ. மணி வகை

1

3.

இ.அன்மொழித் தொகை

1

4.

ஆ. இன்னிசை அளபெடை

1

5.

அ. இருபெயரொட்டுப் பண்புத் தொகை

1

6.

அ. கூவிளம் தேமா மலர்

1

7.

ஈ. 105

1

8.

இ. இலா

1

9.

இ. கா.ப.செய்குதம்பி பாவலர்

1

10.

ஆ. 8

1

11.

அ. அருமை + துணை

1

12.

இ. பரிபாடல்

1

13.

இ. வானம்

1

14.

இ. அடுக்குத்தொடர்

1

15.

இ. கீரந்தையார்

1

பகுதி – 2

பிரிவு - 1

16.

அ) வித்துவக்கோடு என்னும் ஊர் எங்குள்ளது?

ஆ) முல்லைப்பாட்டை எழுதியவர் யார்?

2

17.

உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை.

1

1

18.

மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார்.

2

19

மாஅல் – திருமாள்

மாஅல் – செய்யுளிசை அளபெடை

2

20.

உவகைக் காரணமாக சிரித்து சிரித்துப் பேசினார் என அடுக்குத் தொடராகும்

2

21

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள்

2

பகுதி – 2

பிரிவு - 2

22

v  வேங்கைமரம்தனிமொழி

v  வேம் + கை = வேகின்ற கைதொடர்மொழி

v  வேங்கை எனும் சொல் தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைந்துள்ளது.

1

1

23

பதிந்து – பதி + த் ( ந்) + த் + உ

பதி – பகுதி

த் – சந்தி

த் ( ந் ) – ந் – ஆனது விகாரம்

உ – வினையெச்ச விகுதி

2

24

அ. நிழல் தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

ஆ. உயர் கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்

2

25.

அ) செவ்விலக்கியம்

ஆ) நாட்டுப்புற இலக்கியம்

2

26.

அ. விடு அவன் வீடு செல்லட்டும்

ஆ. மடுவில் மாடு நீர் அருந்தியது.

 

27.

அறியா வினா, ஐய வினா

2

28.

ஆறு வகைப்படும்

1.அறிவினா     2. அறியா வினா       3. ஐய வினா

4. கொளல் வினா    5. கொடை வினா   6. ஏவல் வினா

 

2

பகுதி – 3

பிரிவு - 1

29

தமிழ்

கடல்

1. முத்தமிழாக வளர்ந்தது

1. முத்தினைத் தருகிறது

2. முச்சங்களால் வளர்க்கப்பட்டு

2. மூன்று சங்குகளைத் தருகிறது

3. ஐம்பெருங்காப்பியங்கள்

3. பெரும் வணிகக் கப்பல்

4. சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது.

4. சங்கினைத் தடுத்து காக்கிறது

3

30

சோலைக் காற்று : மின் விசிறிக் காற்றே ! நலமா?

மின் விசிறிக் காற்று : நான். நலம். உனது  இருப்பிடம் எங்கே?

சோலைக்காற்று : அருவி,பூஞ்சோலை,மரங்கள். உனது இருப்பிடம் எங்கே?

மின் காற்று : அறைகளின் சுவர்களின் இடையில். எனது இருப்பிடம்

சோலைக்காற்று : என்னில் வரும் தென்றல் காற்றை அனைவரும் விரும்புவர்.

மின்  காற்று : விரும்பியவர்கள் மின் தூண்டுதல் மூலம் என்னைப்

                           பெறுவர். எண்ணிக்கையின் அடிப்படையில் வேகம்

                          கொள்வேன்

சோலைக் காற்று : இலக்கியங்களில் நான் உலா வருவேன். அனைவரும்

                          விரும்பும் விதமாக இருப்பேன்.

மின் காற்று : நான் இல்லாமல் அலுவலகம் இல்லை. மின்சாரம் இல்லையெனில் நான் இல்லை.  என்னை விரும்பும் நேரங்களில் இயக்கிக்

                  கொள்ளலாம்.

 

3

31.

முல்லை – வரகு, சாமை

மருதம் – செந்நெல், வெண்ணெல்

3

பகுதி – 3

பிரிவு - 2

32

v  மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார். அதுபோல நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அருளையே எதிர்பார்த்து வாழ்கிறேன்.

3

33.

v  கல்வி நமக்கு மகிழ்ச்சியான வாழ்வைத் தரும்

v  சமூகத்தில் நற்பெயருடன் இருக்க கல்வி அவசியம்.

v  பிறருடைய உதவி நாடாமல் சுயமாக வாழ கல்வி அவசியம்

v  கல்வி நமக்கு உறுதியான பாதுகாப்பு தரும்

3

34.

அ) அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.

( அல்லது )

ஆ) விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

            எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

            போமெனில் பின் செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

            ஒழுக்கமும் வழிபடும் பண்பே

 

 

3

பகுதி – 3

பிரிவு - 3

35

அணி        : உவமை அணி. உவமை அணியில் உவமானம்,உவமேயம்,உவம உருபு ஆகிய மூன்றும் வெளிப்படையாக வரும்.

          உவமானம் : வேலோடு நின்றான் இடுவென்றது

            உவமேயம் : கோலோடு நின்றான் இரவு

            உவமஉருபு : போலும்

            விளக்கம்   : அரசன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி வரி விதிப்பது,வேல் முதலான ஆயுதங்களைக்கொண்டு வழிப்பறி செய்வதற்கு சமம்.

3

36.

வ.எண்

சீர்

அசை

வாய்பாடு

1

குற் – றம்

நேர் – நேர்

தேமா

2

இல – னாய்க்

நிரை – நேர்

புளிமா

3

குடி – செய் – து

நிரை – நேர் – நேர்

புளிமாங்காய்

4

வாழ் – வா – னைச்

நேர் – நேர் – நேர்

தேமாங்காய்

5

சுற் – றமாச்

நேர் – நிரை

கூவிளம்

6

சுற் – றும்

நேர் – நேர்

தேமா

7

உலகு

நிரைபு

பிறப்பு

இக்குறளின் ஈற்றுச்சீர் பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது

3

37

வழு ஏழு வகைப்படும்

திணை வழு

செழியன் வந்தது

பால் வழு

கண்ணகி உண்டான்

இட வழு

நீ வந்தேன்

கால வழு

நேற்று வருவான்

வினா வழு

ஒரு விரலை காட்டிச் சிறியதோ? பெரியதோ எனக் கேட்டல்

விடை வழு

கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினவிற்குக் கண்ணாடி பைக்குள்  இருக்கிறது என விடையளித்தல்

மரபு வழு

தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுதல்

3

பகுதி – 4

38

  அ) நிகழ்கலை வடிவங்கள் :

          சமூக பண்பாட்டுத் தளத்தின் கருத்து கருவூலம் நிகழ்கலைகள். பழந்தமிழ் மக்களின் கலை,அழகியல்,புதுமை ஆகியவற்றை அறிவதற்கு தற்காலத்தில் நிகழ்த்தப்படும் நிகழ்கலை வடிவங்கள் துணை செய்கின்றன.

நிகழும் இடங்கள் :

          நிகழ்கலைகள் பொதுவாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நிகழ்த்தப்படும். கோயில் திருவிழாக்களில் இவ்வகை கலைகளை நாம் காணலாம்.

ஒப்பனைகள் :

            பல்வேறு விதமான நிகழ்கலைகளுக்கு கலைஞர்கள் பல்வேறு விதமான ஒப்பனைகள் செய்து ஆடுகின்றனர். தெருக் கூத்து கலைகளில் தெய்வங்கள், மன்னர்கள் போன்ற பல்வேறு விதமான ஒப்பனைகளை காணலாம்.

சிறப்பு, பழமையும்

          வாழ்வியலில் ஒரு அங்கமாக இருந்தது நிகழ்த்துகலைகள். இவை அறக்கருத்துகளைக் கூறும் சிறப்பாகவும் அமைந்தது, பொம்மலாட்டம், கையுறை கூத்து, தெருக் கூத்து போன்றவை  முன்னோர்களின் பழமை வாய்ந்த கலைகள் ஆகும்.

அருகி வரக் காரணம்:

·         நாகரிக வளர்ச்சி

·         கலைஞர்களுக்கு போதிய வருமானம் இல்லை

·         திரைத்துறை வளர்ச்சி

·         அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி

நாம் செய்ய வேண்டுவன:

·         நமது இல்லங்களில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகளில் இந்நிகழ்கலைகளை நிகழ்த்துவது.

·         நமது ஊர் கோவில் திருவிழாக்களில் இக்கலைகளை ஊக்கப்படுத்துவது.

·         ஊடகங்களில் இக்கலைகளைப் பற்றி விளம்பரப்படுத்துவது.

5

38

ஆ. திரண்ட கருத்து:

Ø  நிலவையும்,நட்சத்திரங்களையும் வரிசையாக வைப்போம்.

Ø  அமுத குழம்பினைக் குடிப்போம்.

Ø  பட்டாம் பூச்சியை எங்கு வேண்டுமானாலும் பறக்க வைப்போம்.

Ø  பலாக்கனிகள் ஏற்றிவரும் வாகனத்தில் வண்டின் ஓசையைக் கேட்போம்.

மையக் கருத்து:

நிலவிலும்,நட்சத்திர ஒளியிலும்,காற்றிலும், அமுதத்தைப் பருகி மனதை இலேசாக்கி எங்கும் பறந்து இனிமை நிறைந்த பலாவினை சுவைத்து இன்பம் பெறுவோம்.

மோனை:

            முதலெழுத்து ஒன்றி வருவது மோனை

                        நிலாவையும்நேர்ப்பட

எதுகை :

            முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாமெழுத்து ஒன்றி வருவது எதுகை.

                        நிலாவையும்       -          குலாவும்

இயைபு :

            செய்யுளில் ஒவ்வொரு அடியிலும் இறுதியில் வரும் எழுத்தோ,சீரோ,அசையோ ஒன்றி வருவது. 

            வெறிபடைத்தோம்            -          மகிழ்ந்திடுவோம்

அணி நயம்:

            இப்பாடலில் மனதை சிறு பறவையாக உருவகம் செய்யப்பட்டுள்ளமையால் இதில் உருவக அணி வந்துள்ளது.

தலைப்பு:

            இயற்கை இன்பம்

5

39

சேலம்

03-03-2021

அன்புள்ள நண்பனுக்கு,

            நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம்என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

            பெறுதல்

                        திரு.இரா.இளங்கோ,

                        100,பாரதி தெரு,

                        சேலம்.

 

5

39

ஆ. அனுப்புநர்

            அ அ அ அ அ,

            100,பாரதி தெரு,

            சக்தி நகர்,

            சேலம் – 636006.

பெறுநர்

            உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

            உணவு பாதுகாப்பு ஆணையம்,

            சேலம் – 636001

ஐயா,

பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல்சார்பு

            வணக்கம். நான் நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் கோழி பிரியாணி உண்டேன். அது கெட்டுப் போனதாகவும் மேலும் அதன் விலைப்பட்டியலைவிட விலைக் கூடுதலாகவும் இருந்தது. இத்துடன் அந்த உணவிற்கான விலை இரசீது நகல் மற்றும் உணவு பட்டியல் நகலையும் இணைத்துள்ளேன். தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி.

இணைப்பு:                                                                     இப்படிக்கு,

1. விலை இரசீதுநகல்                                                                              தங்கள் உண்மையுள்ள,

2. விலைப்பட்டியல்நகல்                                                                                                    அ அ அ அ அ.

இடம் : சேலம்    

நாள் : 04-03-2021

உறை மேல் முகவரி:

பெறுநர்

          உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

உணவு பாதுகாப்பு ஆணையம்,

           சென்னை.

5

40

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்

1. அதிகாலையில் எழுதல்.

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்..

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

3. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன். ..

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்

5

40

ஆ) பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.       

 

41.

5

42

அ.

1.        தேவையான உணவுப்பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்வேன்.

2.      குடிநீரைச் சேமித்துக் வைத்துக்கொள்வேன்.

3.      உணவைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

4.      நீரைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

5.      வானொலியில் தரும் தகவல்களைக் கேட்டு, அதன்படி நடப்பேன்.

இவைப் போன்று ஏற்புடைய விடைகள் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

42

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத

என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி

மரம் என் அழிவைப் பற்றி எழுது என்றது

மனிதன் என் அறியாமையைப் பற்றி எழுது என்றான்

நான் எழுதுகிறேன் மரமே வரம் என்று

 

5

 

பகுதி – 5

 

43

அ. வழக்கத்தில் பல ஆங்கில சொற்களை தமிழோடு இணைத்து பேசவும், எழுதவும் செய்வதை தவிர்க்க புதிய சொல்லாக்கம் தேவை.

Ø  தொழில் நுட்பம் சார்ந்த பல சொற்களை தமிழில் பயன்படுத்த சொல்லாக்கம் தேவை.

Ø  தாவரத்தின் அனைத்து நிலைகளுக்கும் தமிழில் சொற்கள் உண்டு.

Ø  புதிய தமிழ்ச்சொல்லாக்கம் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்கிறது.

Ø  மொழியின் மூலம் நாட்டாரின் நாகரிகத்தையும்,நாட்டு வளத்தின் மூலம் மொழிவளத்தினை அறியலாம்.

முன்னுரை, பொருள், முடிவுரை என உட்தலைப்புகள் இட்டு ஏற்புடைய பதில் இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

8

 

ஆ.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மன்னனும் இடைக்காடனும்

இறைவனிடம் முறையிடல்

இறைவன் நீங்குதல்

மன்னன் முறையிடல்

புலவனுக்கு சிறப்பு செய்தல்

முடிவுரை

முன்னுரை :

          கபிலரின் நண்பர் இடைக்காடனரை மன்னன் இகழ்ந்ததன் பொருட்டு இறைவன புலவனின் குரலுக்கு செவி சாய்த்த நிகழ்வைக் இக்கட்டுரையில் காண்போம்.

மன்னனும் இடைக்காடனும்

·         மன்னன் குசேலேப் பாண்டியன் முன் இடைக்காடன் தன் கவிதையை பாடினார்

·         மன்னன் அதனை பொருட்ப்படுத்தாமல்  இகழ்ந்தார்

·         புலவன்  அங்கிருந்து வெளியேறினார்.

இறைவனிடம் முறையிடல்

·         இடைக்காடன் இறைவனிடம் முறையிடல்

·         மன்னன் தன்னை இகழவில்லை.

·         இறைவனான உன்னை இகழ்ந்தான்.

இறைவன் நீங்குதல்

·         இறைவன் இதனைக் கண்டு கடம்பவன கோயிலை விட்டு நீங்கினார்

·         வையை ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோயிலில் சென்றார்.

மன்னன் முறையிடல் :

·         மன்னன் இறைவன் நீங்கியதைக் கண்டு வருத்தம் அடைந்தான்.

·         இடைக்காடன் பாடலை இகழ்ந்தது தவறு தான் பொறுத்தருள   வேண்டினான்

புலவனுக்கு சிறப்பு செய்தல்

·         மன்னன் இடைக்காடனாரிடம் தன்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டுதல்

·         இறைவன் சொல் கேட்டு இடைக்காடனுக்கு மன்னன் சிறப்பு செய்தான்

முடிவுரை :

          மன்னனின் சொல் கேட்ட புலவர்களின் கோபம் தணிந்தது.

இடைக்கானார் புலவரின் பாடலை இகழ்ந்தன் காரணமாக இறைவன் புலவனின் குரலுக்குச் செவிச்சாய்த்தார்,.

8

44.

அ.

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

முடிவுரை

முன்னுரை :

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக் காணலாம்.

தேசாந்திரி:

Ø  சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி.

Ø  அன்னமய்யாவுடன் ஒரு ஆள் உடன் வந்தான்

Ø  அவன் மிக சோர்வாக இருந்தான்

Ø  லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான்.

Ø  குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது.

Ø  வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான்

கருணை அன்னமய்யா:

Ø  அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான்.

Ø  அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும்,துவையலும் வைத்து கொடுத்தார்.

Ø  கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான்.

Ø  ஆனந்த உறக்கம் கண்டான்.

முடிவுரை:

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது.

8

 

ஆ) குறிப்புச் சட்டம்

முன்னுரை

1புயல் வருணனை

அடுக்குத் தொடர்

ஒலிக் குறிப்பு

முடிவுரை

முன்னுரை :

          புயலிலே ஒரு தோணியில் பா.சிங்காரம் எழுதியுள்ள புயல் வருணனை, அடுக்குத் தொடர், ஒலிக் குறிப்பு பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

புயல் வருணனை :

·         கொளுத்தும் வெயில்

·         மேகங்கள் கும்மிருட்டு

·         இடி முழக்கம் வானத்தைப் பிளந்தது.

·         மலைத் தொடர் போன்ற அலைகள்

·         வெள்ளத்தால் உடை உடலை ரம்பமாய் அறுக்கிறது

அடுக்குத் தொடர் :

·         நடுநடுங்கி

·         தாவி தாவி

·         குதி குதித்தது

·         இருட்டிருட்டு

·         விழுவிழுந்து

ஒலிக் குறிப்பு :

·         கடலில் சிலுசிலு, மரமரப்பு

·         ஙொய்ங், புய்ங் ஙொய்ங் புய்ங் ஙொய்ங் புய்ங்

முடிவுரை :

·         பகல் இரவாகி உப்பக்காற்று உடலை வருடியது

·         அடுத்த நாள் பினாங்கு துறைமுகத்தை அணுகினார்கள்.

·         இவ்வாறாக வருணனைகளோடும், அடுக்குத் தொடர்களையும், ஒலிக் குறிப்புகளையும் கொண்டு தோணி படும் பாட்டை பா.சிங்காரம் விவரிக்கின்றார்.

.

8

45

அ. குறிப்புச் சட்டம்

முன்னுரை

பிறப்பும்,கல்வியும்

விண்வெளிப் பயணம்

இறப்பு

விருது

முடிவுரை

முன்னுரை :

          விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய பெண் வீராங்கனை கல்பனா சாவ்லா குறித்து நாம் இக்கட்டுரையில் காணலாம்.

பிறப்பும், கல்வியும் :

பிறப்பு : இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் கர்னலில் ஜூலை 1,1961 இல் பிறந்தார்.

            பெற்றோர் : பனாரஸ்லால் - சன்யோகிதா தேவி

கல்வி : கர்னலில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டம்

·         டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம்.

·         . 1986-ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக் கழகத்தில் 2-ஆவது முதுகலைப்பட்டம்.   

·         பிறகு 1988-ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

 

விண்வெளிப் பயணம்:

·         1995 இல் நாசா விண்வெளி வீரர் பயிற்சியில் இணைந்து கொலம்பிய விண்வெளி ஊர்தி எஸ்,டி,எஸ்-87 இல் பயணம் செய்தார்,

·         சுமார் 372 மணிநேரம் விண்வெளியில் இருந்து சாதனையுடன் பூமி திரும்பினார்.

வீர மரணம் :

·         2003இல் ஜனவரி 16 ந் தேதி அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ் 107 இல மீண்டும் பயணம் செய்தார்.

·         அந்த விண்கலம் ஆய்வை முடித்து திரும்பிய போது பிப்ரவரி -1 இல் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச் சிதறியதில் கல்பனா சாவ்லாவுடன் உடன் பயணித்த 7 வீரர்களும் மரணமடைந்தனர்

விருது:

·         நியூயார்க் நகரின் ஒரு சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

·         பிப்ரவரி 1ந் தேதி கல்பனா சால்வலா நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

·         2011 முதல் வீரதீர சாதனைப் புரிந்த பெண்களுக்கு “ கல்பனா சாவ்லா விருது “ அரசு வழங்கி வருகிறது.

முடிவுரை:

          மாணவர்களாகிய நாமும் இவரைப் போன்றவர்களை உதாரணமாகக் கொண்டு விடாமுயற்சியுடன் படித்தால் அனைத்தையும் சாதிக்கமுடியும்.

மேற்கண்ட தலைப்புகளில் ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

8

45

ஆ.

குறிப்புச்சட்டகம்

நூலின் தலைப்பு

நூலின் மையப் பொருள்

மொழிநடை

வெளிப்படுத்தும் கருத்து

நூலின் நயம்

நூல் கட்டமைப்பு

சிறப்புக்கூறு

  நூல் ஆசிரியர்

நூலின் தலைப்பு:

                   பரமார்த்தகுரு கதை

நூலின் மையப் பொருள்:

                      சீடர்கள் குருவிடம் கொண்டுள்ள பக்தியும்,விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது நூலின் மையப் பொருள்.

மொழிநடை:

                   நகைச்சுவையுடன் யாவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.

வெளிப்படுத்தும் கருத்து:

                   பகுத்தறிவுடன் செயலபட வேண்டும் என ஒவ்வொரு கதையிலும் வெளிப்பட்டு இருக்கிறது.

நூலின் நயம்:

                   விழிப்புணர்வுடனும் நகைச்சுவையுடனும் எழுதப்பட்டுள்ளது.

நூல் கட்டமைப்பு:

                   சிறுவர்கள் ஆர்வமுடன் படிக்கும் வகையில் நூலின் கட்டமைப்பு உள்ளது.

சிறப்புக்கூறு:

                   ஒவ்வொரு கதையும் பகுத்தறியும் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது.

நூல் ஆசிரியர்:

                   வீரமாமுனிவர்.

 

8

 CLICK HERE TO DOWNLOAD BUTTON TO GET ANSWER KEY PDF

நீங்கள் 15 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி


ஆக்கம் :

வெ.ராமகிருஷ்ணன்,

அரசு உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி.

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post