ஆறாம் வகுப்பு - தமிழ்
இன்பத்தமிழ் - வளரறி செயல்பாடுகள் FA ( B) - CLICK HERE
தமிழ்க் கும்மி - வளரறி செயல்பாடுகள் FA ( B) - CLICK HERE
வளர்தமிழ்
மாணவர் பெயர் :
நாள்
: மதிப்பெண்கள் : 10
அ)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 7×1
= 7
1. ‘ தொன்மை ‘
– என்னும் சொல்லின் பொருள்________
அ) புதுமை ஆ) பழமை இ)
பெருமை ஈ) சீர்மை
2. ‘ இடப்புறம் ‘ என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
அ) இடன் + புறம் ஆ) இடை + புறம் இ) இடம் + புறம்
ஈ) இடப் + புறம்
3. ‘ சீரிளமை ‘ என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
அ) சீர் + இளமை ஆ) சீர்மை + இளமை இ) சீரி + இளமை
ஈ) சீற் + இளமை
4. சிலம்பு + அதிகாரம்
என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்____
அ) சிலம்பதிகாரம் ஆ) சிலப்பதிகாரம் இ) சிலம்புதிகாரம்
ஈ) சிலபதிகாரம்
5. கணினி + தமிழ் என்பதனைச்
சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______
அ) கணினிதமிழ் ஆ) கணினித்தமிழ் இ) கணிணிதமிழ்
ஈ) கனினிதமிழ்
6. “ தமிழ்மொழி போல் இனிதாவது
எங்கும் காணோம்” என்று பாடியவர்___
அ) கண்ணதாசன் ஆ) பாரதியார் இ) பாரதிதாசன்
ஈ) வாணிதாசன்
7. “ மா “ என்னும் சொல்லின்
பொருள்_____
அ) மாடம் ஆ) வானம் இ) விலங்கு ஈ) அம்மா
ஆ) கோடிட்ட இடத்தை நிரப்புக:- 3×1 = 3
1. நாம் சிந்திக்கவும்
சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது______
2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள
மிகப் பழமையான இலக்கண நூல் _______
3. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டுமெனில் அது _________ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
ஆறாம் வகுப்பு
– தமிழ்
எழுத்துகளின் வகையும்,தொகையும்
வளரறி செயல்பாடு
FA (B)
மாணவர் பெயர் : மதிப்பெண்
: 10
நாள் :
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக.
1. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
அ) 6 ஆ) 5 இ) 8 ஈ) 10
2. ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும்
வரிவடிவமாக எழுதப்படுவதும்----
அ) சொல் ஆ) இலக்கணம்
இ) எழுத்து ஈ) மொழி
3. இயல்பாகக் காற்று வெளிப்படும்போது ______
எழுத்துகள் பிறக்கின்றன
அ) உயிர் ஆ) மெய் இ) உயிர்மெய் ஈ) ஆய்தம்
4. உயிர் எழுத்துகளில்
குறுகி ஒலிக்கும் எழுத்துகள் மொத்தம்________
அ) 7 ஆ) 12 இ) 5 ஈ) 6
5. உயிர் எழுத்துகளில்
நீண்டு ஒலிக்கும் எழுத்துகள் மொத்தம்________
அ) 7 ஆ) 12 இ) 5 ஈ) 6
6. ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை
கைநொடிக்கவோ ஆகும் கால அளவு
அ) நேரம் ஆ) நிமிடம் இ) மாத்திரை ஈ) நாள்
7. குறில் எழுத்துகளின் மாத்திரை அளவு ______
அ) இரண்டு ஆ) ஒன்று இ) அரை ஈ) கால்
8. நெடில் எழுத்துகளின் மாத்திரை
அளவு ______
அ) இரண்டு ஆ) ஒன்று இ) அரை ஈ) கால்
9. மெய்யெழுத்துகள் மொத்தம் ..............................
அ) 12 ஆ)
216
இ) 18 ஈ) 247
10. தமிழ் என்னும் சொல்லின் மாத்திரை அளவு_____
அ) 3 ஆ) 1.5
இ) 2
ஈ) 2.5
இந்த இரு வினாத்தாளினையும் PDF வடிவில் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க கீழ்
உள்ள DOWNLOAN என்பதனையும் அழுத்தவும். இந்த இரு வினாத்தாளும் ஒரே தாளில்
கிடைக்கப் பெறும். பொருட்செலவும், காகிதப் பய்னபாடும் குறையும்.