6TH - TAMIL - UNIT -2- FA(B) - QUESTION - PDF

 

ஆறாம் வகுப்பு – தமிழ்                                 சிலப்பதிகாரம்


வளரறி செயல்பாடு FA (B)


மாணவர் பெயர் :                                      மதிப்பெண் : 10


நாள் : 15-07-22

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கழுத்தில் சூடுவது ------

அ) தார் ஆ) கணையாழி இ) தண்டை ஈ) மேகலை


 2. கதிரவனின் மற்றொரு பெயர் ------

அ) புதன் ஆ) ஞாயிறு இ) சந்திரன் ஈ) செவ்வாய்


 3. 'வெண்குடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------

அ) வெண் + குடை ஆ)வெண்மை + குடை இ) வெம் + குடை ஈ) வெம்மை + குடை


4. ’பொற்கோட்டு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------

அ) பொன் + கோட்டு ஆ) பொற் + கோட்டு இ) பொண் + கோட்டு ஈ) பொற்கோ + இட்டு


5. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------

அ) கொங்குஅலர் ஆ) கொங்அலர் இ) கொங்கலர் ஈ) கொங்குலர்


 6. அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ----

அ)அவன்அளிபோல் ஆ) அவனளிபோல் இ) அவன்வளிபோல் ஈ) அவனாளி


7. பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

அ) திங்கள் - கொங்கு ஆ) திங்களை - திங்களை இ) காவிரி – திகிரி  

ஈ) நாம நீர் - உலகு


8. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக

அ) திங்கள் - கொங்கு ஆ) போற்றுதும் – போற்றுதும் இ) காவிரி – திகிரி  

ஈ) நாம நீர் - உலகு


9. இரட்டைக் காப்பியங்கள் என்பவை __________, __________

அ) சிலப்பதிகாரம் – மணிமேகலை ஆ) திருக்குறள் – கம்பராமாயணம்

இ) சீவக சிந்தாமணி – குண்டலகேசி  ஈ) வளையாபதி - நீலகேசி


10 பாடலில் திங்கள் என்பதன் பொருள் யாது?

அ) நாள்                   ஆ) கிழமை    இ) நிலவு       ஈ) வருடம்


ஆறாம் வகுப்பு – தமிழ்                                 காணி நிலம்

வளரறி செயல்பாடு FA (B)

மாணவர் பெயர் :                                      மதிப்பெண் : 10                                            நாள் : 19-07-22

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                            

1. ’கிணறு’ என்பதைக் குறிக்கும் சொல்------

அ) ஏரி ஆ) கேணி இ) குளம் ஈ) ஆறு

2. ’சித்தம்’ என்பதன் பொருள் ------

அ) உள்ளம் ஆ) மணம் இ) குணம் ஈ) வனம்

3. மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் ------

அ) அடுக்குகள் ஆ) கூரை இ) சாளரம் ஈ) வாயில்

4. நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------

 அ) நன்+மாடங்கள் ஆ) நற் +மாடங்கள் இ) நன்மை + மாடங்கள்

ஈ) நல் + மாடங்கள்

5. நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------

அ) நிலம் + இடையே ஆ ) நிலத்தின் + இடையே இ) நிலத்து + இடையே

ஈ) நிலத் + திடையே

6. முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்______

அ) முத்துசுடர் ஆ) முச்சுடர் இ) முத்துடர் ஈ) முத்துச்சுடர்

7. நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_______

அ) நிலாஒளி ஆ) நிலஒளி இ) நிலாவொளி ஈ) நிலவுஒளி

ஆ) பொருத்துக.

1. முத்துச்சுடர்போல - மாடங்கள்

2. தூய நிறத்தில் - தென்றல்

3. சித்தம் மகிழ்ந்திட – நிலாஒளி

ஆறாம் வகுப்பு – தமிழ்                                 சிறகின் ஓசை

வளரறி செயல்பாடு FA (B)

மாணவர் பெயர் :                                      மதிப்பெண் : 10

நாள் : 22-07-22

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.     

1. ’தட்பவெப்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

அ) தட்பம் + வெப்பம் ஆ) தட்ப + வெப்பம் இ) தட் + வெப்பம் ஈ) தட்பு + வெப்பம்

2. ’வேதியுரங்கள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

அ) வேதி + யுரங்கள் ஆ) வேதி + உரங்கள் இ) வேத் + உரங்கள்

ஈ) வேதியு + ரங்கள்

 3. தரை + இறங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______.

அ) தரையிறங்கும்  ஆ) தரைஇறங்கும்  இ) தரையுறங்கும்  

ஈ) தரைய்றங்கும்

4. வழி + தடம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்_______.

அ) வழிதடம் ஆ) வழித்தடம் இ) வழிதிடம் ஈ) வழித்திடம்

5. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி_______.

அ) துருவப்பகுதி ஆ) இமயமலை இ) இந்தியா ஈ) தமிழ்நாடு

ஆ) கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. மிக நீண்டதொலைவு பறக்கும் பறவை ________________.

2. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர் ________________.

3. பறவைகள் இடம்பெயர்வதற்கு ________________ என்று பெயர்.

 4. இந்தியாவின் பறவை மனிதர் ________________.

 5. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று ________________.

ஆறாம் வகுப்பு                                         முதலெழுத்தும் சார்பெழுத்தும்

வளரறி செயல்பாடு FA ( B )

மாணவர் பெயர் :                                      மதிப்பெண் : 10                                                                    நாள் : 30-07-2022

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தமிழ் எழுத்துகள் மொத்தம் ________ வகைப்படும்.

அ ) இரண்டு   ஆ) மூன்று      இ) நான்கு      ஈ) ஐந்து


2. சார்பெழுத்துகள் ________ வகைப்படும்

அ) 12             ஆ) 18            இ) 10            ஈ) 30


3. முதல் எழுத்துகள் மொத்தம் ______

அ) 12             ஆ) 18            இ) 10            ஈ) 30


4. உயிர் எழுத்துகளும், மெய்யெழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் கிடைக்கும் எழுத்துகள் _______

அ) ஆய்த எழுத்து        ஆ) மெய்யெழுத்து       இ)  உயிர்மெய்யெழுத்து

ஈ) உயிரெழுத்து


5. உயிர்மெய்யெழுத்துகளின் வரிவடிவம் ________ ஐ ஒத்திருக்கும்.

அ) உயிர் எழுத்து        ஆ) மெய்யெழுத்து       இ) சார்பெழுத்து         

ஈ) ஆய்த எழுத்து


6. மூன்று புள்ளிகளை பெற்ற தனித்துவமான எழுத்து __________

அ) சார் பெழுத்து         ஆ) உயிர் எழுத்து       இ) மெய்யெழுத்து      

ஈ) ஆய்த எழுத்து


7. சார்பெழுத்தினை காண்க:-

அ ) இ            ஆ) ஊ           இ) ஃ             ஈ) எ


8. நுட்பமான ஒலி அமைப்பைக் கொண்ட எழுத்து _______

அ ) இ            ஆ) ஊ           இ) ஃ             ஈ) எ


9. அஃகேனம் என வழங்கப்படும் எழுத்து_______

அ) சார்பெழுத்து   ஆ) உயிர் எழுத்து  இ) மெய்யெழ்த்து  ஈ) ஆய்த எழுத்து


10. தமிழில் உள்ள மொத்த எழுத்துகளின் எண்ணிக்கை ______

அ) 216           ஆ) 247         இ) 18                      ஈ) 12

இந்த நான்கு  வினாத்தாளினையும் PDF வடிவில் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க கீழ் உள்ள DOWNLOAN  என்பதனையும் அழுத்தவும். இந்த நான்கு வினாத்தாளும் இரு தாளில்

 கிடைக்கப் பெறும். பொருட்செலவும், காகிதப் பயன்பாடும் குறையும்.

சிலப்பதிகாரம் , காணி நிலம், சிறகின் ஓசை, முதலெழுத்தும் சார்பெழுத்தும்



Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post