மாதிரி காலாண்டு
வினாத்தாள் 2022 - 23
பத்தாம் வகுப்பு
மொழிப்பாடம் –
தமிழ்
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
அறிவுரைகள்
: 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும்.
அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
2)
நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்தவும்.
குறிப்பு
: I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.
ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும்
சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி – I ( மதிப்பெண்கள்
: 15 )
i)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்கவும்
ii)
கொடுக்கப்பட்ட
நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து
எழுதவும்.
I)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 15×1=15
அ) இலையும் சருகும் ஆ)
தோகையும்,சண்டும் இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்
2. இலக்கண முறையுடன்
பிழையின்றிப் பேசுவதும்,எழுதுவதும் ___________
அ) வழாநிலை ஆ) வழுநிலை இ)
வழுவமைதி ஈ) கால வழுவமைதி
3.” சொல்லரும்
சூழ் பசும் “ – இப்பாடலில் பயின்று வரும் பொருள்கோள் யாது?
அ) ஆற்றுநீர்ப்
பொருள்கோள் ஆ) நிரல் நிறைப்
பொருள்கோள்
இ) கொண்டுகூட்டுப்
பொருள்கோள் ஈ) அளைமறிபாப்புப் பொருள்கோள்
4. சரியான கருத்தைக்
கண்டறிக.
( I ) தான் மட்டும்
உண்பது என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை
(II) விருந்தோம்பல்
என்பது பெண்களின் சிறந்த பண்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
(III ) நடுஇரவில்
விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு
உண்டு.
அ) (I) சரி ஆ) (ii) (iii) – சரி இ) மூன்றும் சரி ஈ)
மூன்றும் தவறு
5. ‘ எய்துவர்
எய்தாப் பழி’ – இக்குறளடிக்கு பொருந்தும் வாய்பாடு எது?
அ) கூவிளம் தேமா
மலர் ஆ) கூவிளம் புளிமா நாள்
இ) தேமா புளிமா
காசு ஈ) புளிமா தேமா பிறப்பு
6. நறுந்தொகை என்று
அழைக்கப்படும் நூல் எது?
அ) கொன்றை வேந்தன் ஆ) காசிக்கலம்பகம் இ) வெற்றி வேற்கை
ஈ) காசிக்காண்டம்
7. ‘ பாடு இமிழ்
பனிக்கடல் பருகி ‘ என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல் ஆ) கடல் நீர் குளிர்ச்சி அடைதல்
இ) கடல் நீர் ஒலித்தல் ஈ) கடல் நீர் கொந்தளித்தல்
8. காசினியில்
இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ் நிலை வேண்டும்
எனக் குறிப்பிடுபவர்_________
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) குலோத்துங்கன் ஈ) தனிநாயகம்.
9. சோலையில்
பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.இத்தொடரில்
அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருத்தமான வேறு சொற்களை எழுதுக.
அ) பூஞ்சோலைகள்
– அரும்புகள் ஆ) மலை – எறும்புகள்
– தேன்
இ) பூஞ்சோலையில்
– வண்டுகள் – தேன் ஈ) கானகம் – வண்டுகள் - நீர்
10. வெட்டிய மரங்களுக்கு
ஈடாக ____________ நட்டனர்.
அ) கொடிகளை ஆ)
நாற்றுகளை இ) மரங்களை
ஈ) மரக்கன்றுகளை
11. “ தகக தகதகக தந்தத்த
தந்தக
என்று தாளம்
பதலை திமிலை தம்பட்ட மும் பெருக” – என பாடல் வரிகள் குறிப்பிடும் இசைக் கருவி
அ) மத்தளம் ஆ)
புல்லாங்குழல் இ) பறை
ஈ) உருமி
பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-
நும்இல் போல நில்லாது
புக்கு,
கிழவிர் போலக் கேளாது
கெழீஇச்
சேட் புலம்புஅகல இனிய கூறிப்
பரூஉக்குறை பொழிந்த
நெய்க்கண் வேவையொடு
குரூஉக்கண் இறடிப்
பொம்மல் பெறுகுவிர்
12.இப்பாடலில் இடம்பெற்றுள்ள
நூல் எது?.
அ) பரிபாடல் ஆ) முல்லைப்பாட்டு இ) மலைபடுகடாம் ஈ) புறநானூறு
13 ) ‘ இறடி ‘ இச்சொல்லுக்குரிய பொருள் யாது?
அ) சோறு ஆ) தினை இ) இறைச்சி ஈ) அரிசி
14 ) கெழீஇ – இச்சொல்லில் உள்ள அளபெடை
அ) உயிரளபெடை ஆ) ஒற்றளபெடை இ) செய்யுளிசை அளபெடை
ஈ) சொல்லிசை அளபெடை
15 ) மலைபடுகடாம்
எவ்வகை இலக்கியத்தைச் சார்ந்தது?
அ) சங்க இலக்கியம் ஆ) பக்தி இலக்கியம் இ) காப்பிய இலக்கியம்
ஈ) சிற்றிலக்கியம்
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் குறுகிய விடையளிக்க. 4×2=8
21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக
விடையளிக்க வேண்டும்.
16. “ இலா “ என்னும் மென்பொருள் குறித்து எழுதுக
17. விடைக்கேற்ற வினா அமைக்க.
அ. உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் தீர்ப்பதுதான் என்கிறார்
நல்வேட்டனார்
ஆ. பன்னெடுங்காலமாக மக்களால்
விரும்ப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்று கரகாட்டம்
18. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
19. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமுன் சொற்களை எழுதுக
20. சிலம்பு,கிண்கிணி,அரைநாண்,சுட்டி,குண்டலம்,குழை,சூழி – இவ்வணிகலன்கள் அணியப்படும்
இடங்களை எழுதுக.
21. விடும் – என முடியும் குறளை எழுதுக.
பிரிவு – 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்கவும். 5×2=10
22. தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச்சொற்களை விரித்து
எழுதி,தொடரில் அமைக்க.
23. பகுபத உறுப்பிலக்கணம் தருக:- பொறித்த.
24. அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது.அக்கா புறப்படும் போது
அம்மா வழியனுப்பியது. ( வழுவை வழாநிலையாக மாற்றுக )
25. குறிப்பு விடைகளின் வகைகளை எழுதுக
26. மரபுத் தொடருக்கான பொருள் அறிந்து தொடர் அமைக்க.
அ. மனக்
கோட்டை ஆ. கண்ணும் கருத்தும்
27. கலைச்சொல் தருக:- அ.
Myth ஆ) Homograph
28. “ வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும், பொதுமொழியாகவும்
வேறுபடுத்திக் காட்டுக.
பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )
பிரிவு – I
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க:- 2×3=6
29. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா
என்பது குறித்து சிந்தனைகளை முன் வைத்து எழுதுக
30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக;
“
மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் “ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக்
குறிப்பு, சங்க காலத்திலேயே தமிழில் மொழி பெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்துகிறது.
வடமொழியில் வழங்கி வந்த இராமாயண,மகாபாரத் தொன்மைச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக
இடம் பெற்றுள்ளன. இதுவும் பிற மொழிக்கருத்துகளை, கதைகளை, தமிழ்ப்படுத்தியமையைப் புலப்படுத்துகிறது.
பெருங்கதை, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம்,
வில்லிபாரதம் முதலிய சில காப்பியங்களும் வடமொழிக்கதைகளைத் தழுவி படைக்கப்பட்டவையே.
அ. இப்பத்தியில் இடம்பெறும் செப்பேட்டுக் குறிப்பு எவ்வூரைச் சார்ந்தது?
ஆ. சங்கக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்ததை எதன் மூலம் அறியலாம்?
இ. வடமொழிக் கதைகளைத் தழுவி படைக்கப்பட்ட காப்பியங்கள் எவை?
31. ‘ புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது ‘ – இது போல்
இளம் பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடரில் அமைக்க.
பிரிவு – II
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
32. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன்
செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
33. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுபடை
எவ்வாறு காட்டுகிறது?
34. “ அன்னை மொழியே“ எனத் தொடங்கும் பெருஞ்சித்திரனார்பாடலை
எழுதுக
(அல்லது )
“ அருளைப் பெருக்கி
“ எனத் தொடங்கும் நீதிவெண்பா பாடலை எழுதுக.
பிரிவு -III
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
விடையளிக்க:- 2×3=6
35. தன்மையணி என்பதனை விளக்கி, அதன் வகைகளை குறிப்பிடுக
36. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர் – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.
37. கொண்டு கூட்டுப் பொருள்கோளினை விளக்கி,
எடுத்துக்காட்டு ஒன்று தருக.
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 5×5=25
38. அ) இறைவன்,புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த
நிகழ்வை நயத்துடன் எழுதுக
( அல்லது )
ஆ) தமிழன்னையை
வாழ்த்துவதற்கான காரணங்களாக பெருஞ்சித்திரனார் சுட்டுவன யாவை?
39. அ) நீங்கள் விரும்பி படித்த நூல் ஒன்றின் சிறப்புகளைக்
கூறி,உங்கள் நண்பரையும் அந்நூலினைப் படிக்குமாறுப் பரிந்துரைத்துக் கடிதம் எழுதுக.
( அல்லது )
ஆ) உணவுவிடுதியொன்றில்
வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலைகூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன்
உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.
41. சேலம் மாவட்டம்,வ.உ.சி.நகர், காந்தித் தெரு,கதவிலக்க
எண்50 இல் வசிக்கும் இனியன் மகன் முகிலன் அங்குள்ள
நூலகத்தில் உறுப்பினராக சேர உள்ளார். தேர்வர் தம்மை முகிலாக நினைத்துக் கொண்டு உரியப்
படிவத்தை நிரப்புக.
42. அ) தூய்மையான காற்றைப் பெறுவதற்கு மேற்கொள்ள
வேண்டிய வழிமுறைகளாக நீங்கள் கருதுவனவற்றை ஐந்து தொடர்களில் பட்டியலிடுக
( அல்லது )
ஆ) மொழி பெயர்க்க:-
The Golden sun gets up early in the morning and starts its bright rays
to fade away the dark.The milky clouds start their wandering.The colourful
birds start twitting their morning melodies in percussion.The cute butterflies
dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze
gently blows everywhere and makes everything pleasant.
பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக
விடையளிக்க. 3×8=24
43. அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான
தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை விரிவாக எழுதுக.
( அல்லது )
ஆ) உங்கள் இல்லத்துகு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை
அழகுற விவரித்து எழுதுக.
44. அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும்
உள்ள பொருத்தப்பாட்டினைக் ‘ கோபல்லபுரத்து மக்கள் ‘ கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
( அல்லது )
ஆ) ‘ கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும்
கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின்
வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க..
45. அ) குமரிக் கடல் முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக்
கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித் தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும்.
எழில் சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து,
பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி,
அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.
இக்கருத்தைக் கருவாகக் கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ்
“ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
( அல்லது )
ஆ) “ விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் “ என்னும் தலைப்பில்
கட்டுரை எழுதுக.