அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். பத்தாம் வகுப்பில் நால்வகை படிவங்கள் நமக்கு உள்ளது. அதில் ஏதேனும் ஒன்று நிச்சயம் 5 மதிப்பெண் வினாவில் கேட்கப்படும். இதில் அனைத்து பகுதிகளுமே நாம் நிரப்ப வேண்டும். அதனால் இங்கு நான்கு வகைப் படிவங்களும் இணைய வழியில் நிரம்பும் விதமாக கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இவற்றை எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். இதற்கு வரைமுறை இல்லை. இந்த இணைய வழி படிவத்தை நீங்கள் இலவசமாக எத்தனை முறை வேண்டுமானலும் பயிற்சி மேற்கொள்ளலாம். நீங்கள் இந்த இணைய படிவத்தை சரியாக நிரப்பினால் ஒரு படிவத்திற்கு பத்து மதிப்பெண்கள் கொடுத்துள்ளோம். எந்த ஒரு பகுதியும் விடுபடாமல் அனைத்தையும் சரியாக நிரப்பினால் மட்டுமே உங்களுக்கு முழு மதிப்பெண் கிடைக்கும். இதில் ஒவ்வொரு பகுதிக்கும் சரியாக பொருத்தக் கூடிய பதிலும். பொருத்தமில்லா இரு பதில்களும் உள்ளன. இவற்றில் மிகச் சரியாக எது உள்ளதோ அதனை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும். மேலும் இந்த படிவத்தை நீங்கள் PDF ஆகவும் பதிவிறக்கம் செய்துக் கொண்டு உங்கள் தமிழாசிரியர் வைக்கும் படிவத் தேர்வில் இதனைக் கொண்டு பயிற்சி செய்யலாம். வாருங்கள் மாணவர்களே சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப் பழக்கம் எனும் பழமொழிக்கேற்ப நான் இதனை அனுதினமும் பயிற்சி மேற்கொள்வோம்.முழு மதிப்பெண் படிவப்பகுதியில் பெற்றிடுவோம்.
நூலக உறுப்பினர் படிவம் நிரப்புதல்
மேல்நிலை சேர்க்கை விண்ணப்படிவம் நிரப்புதல்
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினர் சேர்க்கைப் படிவம் நிரப்புதல்
பணிவாய்ப்பு வேண்டு தன் விவரப் பட்டியல் - நிரப்புதல்
கனிஷ்கா
ReplyDelete