அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு அன்பான வணக்கம். 9 மற்றும் 10 வகுப்பு வரைக்குமான தமிழ்ப் பாடத்திற்குத் தேவையான கற்றல்விளைவுகள் இங்கே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும். அதிகாரிகள் வரும் போது இது குறித்து தெளிவு பெற பயனுள்ளதாக இருக்கும். கற்றல் விளைவுகள் என்பன ஒரு மாணவர் தான் கற்ற பாடத்திலிருந்து எவ்விதமான தகவல்களை புரிந்துக் கொள்கிறார், அவர் சமூகத்தில் கற்றதன் விளைவுகள் எவ்வாறு அமையகிறது என்பதனை அறிய கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாடம் நடத்தும் போதும் நாம் காணலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள கற்றல்விளைவுகளோடு பாடம் சார்ந்த சமூக செயல்பாடுகளை மாணவர்கள் பெற்றுள்ளனரா என்பதனை ஆசிரியர்கள் அறிந்துக் கொள்வது அவசியம். இந்த கற்றல் விளைவுகள் நமது புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு இயல் தொடங்கும் முன் இவை பட்டியலிடப்பட்டு காட்டப்பட்டிருக்கும். மாணவர்கள் இந்த பாடங்களை கற்பதன் மூலம் பெற வேண்டிய கற்றல் விளைவுகளை முன் கூட்டியே அமைத்திருப்பர். இப்போது இந்த பதிவில் நாம் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்திற்கான கற்றல் விளைவுகளை PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் .
ஒன்பதாம் வகுப்பு - கற்றல் விளைவுகள்
தமிழ்