7TH - TAMIL - NOTES OF LESSON - JUNE 3RD WEEK

 கல்வி ஆண்டு 2022 -2023

ஏழாம் வகுப்பு

மாதிரி பாடக்குறிப்பு

 

வகுப்பு              :           ஏழாம் வகுப்பு  
நாள்                :           20-06-2022 முதல்  25-06-2022       

மாதம்                :           ஜூன்

வாரம்               :           ஜூன் – மூன்றாம்   வாரம்                        

 பாடம்               :           தமிழ்                                                    

பாடத்தலைப்பு     :           தமிழ் - அடிப்படைப் பயிற்சி       

 


கருபொருள்                              :

Ø   தமிழ் எழுத்துகளை நினைவூட்டல்

Ø  தமிழ் எழுத்துகளின் வகை தொகைகளை அறிதல்

Ø  சொற்கள் உருவாக்கல்

உட்பொருள்                              :

Ø  தமிழ் எழுத்துகளின் மொத்த எண்ணிக்கை அறிதல்

Ø  தமிழ் எழுத்துகளின் வகைகள், தொகைகள் அறிதல்

Ø  ஓரெழுத்து சொற்கள் முதல் ஐந்து எழுத்து சொற்கள் உருவாக்கல்

Ø  கூட்டுச் சொற்களை பிழையின்றி வாசித்தல்

Ø  சரளமாக வாசிக்க வைத்தல்

கற்றல் மாதிரிகள்                     :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல் அட்டைகள், அரிச்சுவடிகள், தமிழ் அகராதி

கற்றல் விளைவுகள்                  :

Ø  தமிழ் எழுத்துகளை நினைவூட்டல்

Ø  தமிழ் எழுத்துகளின் வகை தொகைகளை அறிதல்

Ø  சொற்கள் உருவாக்கல்

ஆர்வமூட்டல்                             :

Ø  மாணவர்கள் முன் வகுப்பில் கற்ற கதைகளை கூற கேட்டல்,

Ø  விடுமுறையில் மாணவர்கள் மேற்கொண்ட செயல்பாடுகளை கூற வைத்தல்

Ø  நாம் கூறுவதையும், கேட்பதையும் உணர வைக்க மொழி உதவுகிறது என அறிதல்

Ø  அதன் வழியே எழுத்துகளை நினைவூட்டி அடிப்படைப் பயிற்சிக்கு மாணவர்களை ஆயத்தப்படுத்துதல்

படித்தல்                                    :

Ø  கரும்பலகையில் வண்ணச்சுட்டிகளால் தமிழ் எழுத்துகளின் வகை தொகைகளை எழுதி வாசித்தல்

Ø  தமிழ் எழுத்து அட்டையைக் கொண்டு மாணவர்களை தமிழ் எழுத்துகளை அடையாளம் காண வைத்தல்

Ø  சிறு சிறு சொற்கள் கொண்ட சொல்லட்டையைக் கொண்டு வாசிக்க வைத்தல்

Ø  எழுத்து அட்டைகளைக் கொண்டு ஆசிரியர் கூறும் சொற்களை உருவாக்கல்

நினைவு வரைபடம்                   :

தமிழ் அடிப்படைப் பயிற்சி



தொகுத்து வழங்குதல்              :

 

தமிழ் அடிப்படை – எழுத்துகள்

Ø  ஒரு மொழியை பயில மொழியின் எழுத்துகள் அறிதல் அவசியம்

Ø  அந்த மொழியின் எழுத்துகளே சொற்களுக்கு அடிப்படை

Ø  சொற்கள் தொடர் வாக்கியங்களுக்கு அடிப்படை

Ø  தமிழ் எழுத்துகள் மொத்தம் 247

Ø  தமிழ் உயிர் எழுத்துகள் – 12

Ø  தமிழ் மெய்யெழுத்துகள் – 18

Ø  தமிழ் உயிர்மெய் எழுத்துகள் – 216

Ø  தமிழ் ஆய்த எழுத்து -1

Ø  இவற்றில் குறில். நெடில் வேறுபாடு உண்டு

Ø  மெய்யெழுத்துகளில் வல்லினம்,மெல்லினம்,இடையினம் என பாகுபாடு உண்டு.

Ø  இந்த எழுத்துகள் தனித்தோ ஒன்றுடன் ஒன்று சேர்ந்தோ சொற்களாக மாறுகின்றன.

Ø  ஓரெழுத்தில் உள்ள சொற்கள் 42

Ø  சொற்கள் பொருள் தரும்

Ø  சொற்கள் பல சேர்ந்து தொடர்களாக மாறுகின்றன.

லுவூட்டல்                  :

Ø  வலையொளி மூலம் தமிழ் எழுத்துகள் பற்றிய காணொளிக் காட்சியைக் காண்பித்து பாடப்பொருளை வலுவூட்டல்

 

மதிப்பீடு                                   :

Ø  தமிழில் உள்ள உயிர் எழுத்துகள் ------------

Ø  மிழ் மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை _____________

Ø  தமிழில் உள்ள மொத்த எழுத்துகளின் எண்ணிக்கை __________

Ø  தமிழ்நாடு – இச்சொல்லில் உள்ள குறில்,நெடில் எழுத்துகள் யாவை?

Ø  வல்லின மெய்யெழுத்துகள் யாவை?

Ø  உலகம் என்ற சொல்லின் மாத்திரை அளவு யாது?

குறைதீர் கற்றல்                        :

Ø   தமிழ் அடிப்படை பயிற்சியினை சொல்லட்டை, அரிச்சுவடி, அகராதி ஆகியவற்றைக் கொண்டு மீண்டும் ஒரு முறை பாடப்பொருளை நினைவூட்டி குறை தீர் கற்றலை மேற்கொள்ளல்.

எழுத்துப் பயிற்சி                      :

Ø   தமிழ் எழுத்துகளின் வகை, தொகைகளை எழுதி வருக

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   தமிழ் எழுத்துகளை வாசித்தல்.

Ø   குறில், நெடில் வேறுபாடு அறிதல்

Ø   சொற்களை எழுத்துக் கூட்டி படிக்க வைத்தல்

தொடர் பணி                            :

Ø  உனக்கு தெரிந்த பொருள் தரகூடிய ஓரெழுத்து முதல் ஐந்தெழுத்து சொற்கள் வரை ஒவ்வொன்றிலும் ஐந்து சொற்கள் எழுதி வருக.

 

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post