முழுஆண்டுத் தேர்வு வினாத்தாள்
மே - 2021-2022 – ஏழாம் வகுப்பு
மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
சேலம் - மாவட்டம்
நேரம் : 2.30 மணி மதிப்பெண் : 60
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 5 × 1 = 5
1. ஆ. மாரி
2. ஆ. வயல்
3. இ. ஞானம் + சுடர்
4. அ. முதுமை
5. அ. பிறப்பால்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக. 5 × 1 = 5
1. நாடு + என்ப
2. கண்ணதாசன்
3. ஒத்துழையாமை
4. தொடர்
5. இரட்டைக்கிளவி
III. பொருத்துக. 4 × 1 = 4
1. சாந்தம் – அமைதி
2. மகத்துவம் – சிறப்பு
3. தரணி – உலகம்
4. இரக்கம் – கருணை
IV. எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. 6 × 2 = 12
1. அங்கவை, சங்கவை
2. சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள். இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கே உரியது.
3. தெளிந்த நீரும், நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய நான்கும் உள்ளதே அரண் ஆகும்.
4. சிவந்த ஒளிவீசும் சக்கரத்தை உடைய இறைவனது திருவடிகளுக்கு என் துன்பக்கடல் நீங்க வேண்டி பாமாலையை சூட்டுகிறார்.
5. பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர். அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.
6. வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தகுந்த காலம், மேற்கொள்ளும் செயலின் தன்மை , உரிய இடம் ஆகிய ஐந்தையும் ஐயம்தீர ஆராய்ந்து ஒரு செயலைச் செய்ய வேண்டும்.
7. சாதிகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் உலகம் நிலைதடுமாறுகிறது.
8. தமது கல்வியை விட நாட்டின் விடுதலையே மேலானது என்று எண்ணி ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்.
V. அடிமாறாமல் எழுதுக. 2 + 4 = 6
1. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று
2. வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று
VI. எவையேனும் மூன்று வினாவிற்கு விடையளி. 3 × 2 = 6
1. மயில் போல ஆடினாள். மீன் போன்ற கண்.
இத்தொடர்களைப்படியுங்கள் . இத்தொடர்களில் நடனம் ஆடும் பெண்ணோடு மயிலையும் ,கண்ணுடன் மீனையு ம் ஒப்பிட்டுள்ளனர். இவ்வாறு ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை (மயில், கண்) உவமை அல்லது உவமானம் என்பர். உவமையால் விளக்கப்படும் பொருளை உவமேயம் என்பர். இத்தொடர்களில் வந்துள்ள ‘போல’, ‘போன்ற’ என்பவை உவம உருபுகளாகும்.
2. உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணியாகும். இதில் உவமிக்கப்படும் பொருள் முன்னும் உவமை பின்னுமாக அமையும்.
3. ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும். பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் ஆகிய ஆறு வகையான பெயர்ச்சொற்களிலும் ஆகுபெயர்கள் உண்டு.
· பொருளாகு பெயர்
· இடவாகு பெயர்
· காலவாகு பெயர்
· சினையாகு பெயர்
· பண்பாகு பெயர்
· தொழிலாகு பெயர்
4. இரட்டையாக இணைந்து வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்களை இரட்டைக்கிளவி என்பர்.
எ.கா. விறுவிறு, கலகல, மளமள
VII. கடிதம். 1× 7 = 7
சேலம் -637102
05-05-2022
அன்புள்ள நண்பன் அருணுக்கு,
அன்பு நண்பன் கனிஷ் எழுதுவது. எங்கள் ஊர் கன்னந்தேரி மாரியம்மன் கோவில்
பண்டிகை வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி முதல் நடைபெற உள்ளது. பண்டிகையில் ஊர்க்
கூடித் தேர் இழுக்கும் வைபவம் நடைபெறும். வானவேடிக்கைகள், கலைநிகழ்ச்சிகள் நடை
பெறும் நீ அவசியம் உனது குடும்பத்தாருடன் எங்கள் ஊர் திருவிழாவிற்கு வருகை புரிய
வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். உனது வருகையை ஆவலுடன் எதிர் நோக்கி
உள்ளேன்.
இப்படிக்கு,
உண்மை நண்பம்,
கனிஷ்.
உறை மேல் முகவரி.
பெறுதல்
அ. அருண்,
10. காந்தி தெரு,
வ.உ.சி.நகர்,
ஈரோடு.
VIII. பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி. 1 × 5 = 5
1. பனை மரம் தரும் உணவுப் பொருள்கள் யாவை?
நுங்கு,பதனீர்
2. பனை மரம் யாருக்குக் கிலுகிலுப்பையைத்தரும்?
பிள்ளைகளுக்கு
3. 'தூதோலை ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
தூது+ஓலை
4. பனைமரம் மூலம் நமக்குக் கிடைக்கும் பொருள்களைப் பட்டியலிடுக.
நுங்கு,பதனீர்,கிலுகிலுப்பை,தூதோலை,கயிறு,தும்பு
5. பாடலுக்கு ஏற்ற தலைப்பை எழுதுக.
பனைமரம்
IX. விடையளி 10 × 1 = 10
1. கண்ணை இமை காப்பது போல
2. பட்டு – கோட்டை- கோடு – பட்டை
3. எனது குறிக்கோள் தேர்வில் முதலிடம் பிடிப்பது.
4. எங்கு?
5. நாட்டுப்புறவியல் – Folklore ஆ. அறுவடை – Harvest
6. இல்லையென்றால்
7. அடுக்குத் தொடர்
8. படித்த மாணவன், படித்து எழுதினான்
9. எத்தகைய
10. குன்றின் மேலிட்ட விளக்கு போல
CLICK HERE TO GET PDF