நாள் : 18- 04 -2022 முதல் 23 - 04 - 2022
மாதம் : ஏப்ரல்
வாரம் : ஏப்ரல் - மூன்றாம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.பாரத ரத்னா எம்.ஜி.ஆர்
2. அறிவுசால் ஓளவையார்
கருபொருள் :
Ø நாட்டுக்கு
உழைத்த நல்லோரின் வாழ்க்கையை அறிந்து பின்பற்றுதல்.
Ø நாடகத்தைப்
படித்து கதையைப் புரிந்துகொள்ளும் திறன் பெறுதல்.
உட்பொருள் :
Ø எம்.ஜி.ஆரின்
இளமை, மக்கள் பணி பற்றி அறிந்து கொள்ளுதல்,
Ø உரைப்பத்தியை
நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்
Ø நாடகத்தில்
உள்ள உணர்வுகளுக்கு ஏற்றாற் போல் வாசித்தல்
Ø ஓளவையாரின்
அறிவு புலத்தினை எண்ணி வியத்தல்.
கற்றல் மாதிரிகள் :
Ø வரைபத்தாள்,கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, வலையொளி காணொளிகள்
கற்றல் விளைவுகள் :
Ø நாட்டுக்கு
உழைத்த நல்லோரின் வாழ்க்கையை அறிந்து பின்பற்றுதல்.
Ø நாடகத்தைப்
படித்து கதையைப் புரிந்துகொள்ளும் திறன் பெறுதல்.
ஆர்வமூட்டல் :
Ø மாணவர்களுக்கு
இலவச காலணி எவ்வாறு வந்தது என்ற நிகழ்வினைக் கூறி ஆர்வமூட்டல்
Ø ஓளவையாரின்
பாடல்களில் வரும் நீதிகளை கதை மூலம் கூறி ஆர்வமூட்டல்.
படித்தல் :
Ø ஆசிரியர் படித்தல், பின்
தொடர்ந்து மாணவர்களும் படித்தல்.
Ø முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்
Ø புதிய வார்த்தைக்கான
பொருள் அறிதல்
Ø நிறுத்தற்குறி அறிந்து
படித்தல்
நினைவு வரைபடம் :
பாரத
ரத்னா எம்.ஜி.ஆர்
அறிவுசால்
ஓளவையார்
தொகுத்து வழங்குதல் :
பாரத
ரத்னா எம்.ஜி.ஆர்
v சனவரி திங்கள் 17ம் நாள்
– 1917 இல் இலங்கை கண்டியில் பிறந்தவர்.
v புரட்சித்தலைவர் என்று
அனைவராலும் அழைக்கப்பட்டவர்.
v காமராஜரின் மதிய உணவுத்திட்டத்தை
சத்துணவு திட்டமாக மாற்றியவர்.
v திரைத்துறையில் புரட்சிகரமான
நடிப்பினை வெளிப்படுத்தியவர்.
v பள்ளிக் குழந்தைகளுக்கு
காலணிகள் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தவர்.
v தம் செல்வத்தை மக்களுக்கு
வாரி வழங்கியதால் பொன்மனச் செம்மல் என அழைக்கப்பட்டார்
v எம்.ஜி.ஆர் பல்வேறு சமூக
நலத் திட்டங்களை உருவாக்கினார்
v ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டை
மதுரையில் சிறப்பாக நடத்தினார்.
v தஞ்சையில் ஆயிரம் ஏக்கர்
பரப்பளவில் தமிழ் பல்கலைக் கழகத்தை தோற்றுவித்தார்
அறிவுசால்
ஓளவையார்
v அதியமானிடம் ஓளவையாரின்
உரையாடல்
v அதியமான ஓளவைக்கு நெல்லிக்கனி
வழங்குதல்
v நெல்லிக்கனியின் சிறப்பை
அமைச்சர் கூறல்
v நெல்லிக்கனி மூலம் அதியமான்,ஓளவை
இருவரின் பெருந்தன்மையை அறிதல்
v தொண்டைமானிடம் இருந்து
வந்த போர் செய்தியை அறிதல்.
v போரினால் ஏற்படும் விளைவுகளை
அதியமான் ஓளவையிடம் உரைத்தல்
v ஓளவை தொண்டைமானிடம் செல்லுதல்
v தொண்டைமானின் படைகலத்தினைப்
பார்வையிட்டு அதியமானின் போர்கலத்தோடு ஒப்பிட்டு கூறி போரை தடுத்து நிறுத்துதல்.
வலுவூட்டல் :
Ø காணொளி காட்சிகள் மூலம்
பாடப்பொருளை வலுவூட்டல்
மதிப்பீடு :
Ø எம்.ஜி.ஆர் பிறந்த ஊர்_______________
Ø எம்.ஜி.ஆர் பொன்மனச்செம்மல்
என அழைக்கப்பட காரணம் யாது?
Ø பள்ளிக்குழந்தைகளுக்கு
காலணி வழங்க காரணமாக நிகழ்வினைக் கூறுக.
Ø அதியமான் ஓளவைக்கு வழங்கிய
கனி எது?
Ø தொண்டைமானிம் படைக்கலம்
எவ்வாறு இருந்தது?
குறைதீர் கற்றல் :
Ø பாடநூலில் உள்ள விரைவுத்
துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும்
பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை
மேற்கொள்ளுதல்.
எழுத்துப் பயிற்சி :
Ø
பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு
:
Ø வண்ணச் சொற்களைப் படித்தல்
Ø ஒரு மதிப்பெண் வினாக்களைப் படித்தல்
Ø நிறுத்தற் குறி அறிந்து படித்தல்
Ø நாடகத்தின் மையக்கருத்தினை உணர்தல்
தொடர் பணி :
Ø தமிழக முதலமைச்சர்களின்
பெயர்களைப் பட்டியலிடுக.
Ø அறிவுசால் ஓளவையார் நாடகத்தின்
மையக் கருத்து குன்றாமல் ஒரு பக்க அளவில் எழுதி வருக.
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை