8TH - TAMIL - MODEL QUESTION - BY TAMILVITHAI

 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு ஆண்டு இறுதித் தேர்வு வினாத்தாளானது நமது தமிழ்விதை வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வினாத்தாளானது 2019- 2020 ஆம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்புக்கு பள்ளிக் கல்வித்துறையால் வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாளினை அடிப்படையாகக் கொண்டு இந்த மாதிரி வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இந்த வினாத்தாளினை நீங்கள் PDF வடிவில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மேலும் எட்டாம் வகுப்பு அனைத்து பாடத்திற்குமான பள்ளிக் கல்வித்துறையால் வெளியிட்டப்பட்ட மாதிரி வினாத்தாளினையும் நீங்கள் நமது வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த மாதிரி வினாத்தாளினைக் கொண்டு ஆண்டு இறுதித் தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்திக் கொள்ளவும்.

 

 மாதிரி வினாத்தாள் 2021-2022

எட்டாம் வகுப்பு

மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 2.00 மணி                                                                      மதிப்பெண் : 60

அறிவுரைகள் :

1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக்    

கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத்

தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்       பயன்படுத்தவும்.

குறிப்பு :

i)           அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்                                                

ii)             கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

I) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                                                       4×1=4     

1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்___________

அ) வைப்பு                 ஆ) கடல்                   இ) பரவை                 ஈ) ஆழி

2. கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______________

அ) கயிற்றுக்கட்டில்      ஆ) கயிர்க்கட்டில்         இ) கயிறுக்கட்டில்        ஈ) கயிற்றுகட்டில்

3. பள்ளிச் சென்று கல்வி ________ சிறப்பு

அ) பயிலுதல்     ஆ) பார்த்தல்     இ) கேட்டல்      ஈ) பாடுதல்

4. ஒரே செய்யுளை இரு பொருள்படும்படி பாடுவது __________ அணி

அ) பிறிதுமொழிதல்       ஆ) இரட்டுற மொழிதல்            இ) இயல்பு நவிற்சி      ஈ) உயர்வு நவிற்சி

II) கோடிட்ட இடங்களை நிரப்புக:-                                                                                     2×1=2     

5. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் __________ என அழைக்கப்பட்டன.

6. ‘ மாங்கனி நகரம் ‘ என அழைக்கப்படும் நகரம் __________

III) பொருத்துக:-                                                                                                4×1=4     

7. இயற்கை ஓவியம்    -        அ) வினையெச்சம்

8. நடந்து                   -        ஆ) பெரியபுராணம்

9. படித்த                   -        இ) பத்துப்பாட்டு

10. இயற்கை அன்பு     -        ஈ) பெயரெச்சம்

IV) அடிபிறழாமல் எழுதுக;

11. “ கற்றோருக்கு “ எனத் தொடங்கும் குமரகுருபரர் பாடலை எழுதுக.                                            1×4=4                             12. ‘ இனிது ‘ என முடியும் திருக்குறள் எழுதுக.                                                                           1×2=2

V) அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.                                                              6×1=6

13) சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுக்க – சோறு ( திண் / உண் )

14) நேற்று நம் ஊரில் நம் ஊரில் மழை பெய்தது. ( வினாத்தொடராக மாற்றுக )

15) சரியான இணைச்சொற்களை இட்டு நிரப்புக:-

          தமிழ் இலக்கியங்களின் பெருமைக்கு ____________ இல்லை. ( கல்விகேள்வி/ஈடுஇணை )

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 )

பிரிவு – 1

16. நான் நாளை ஊருக்குச் செல்கிறேன். ( பிழையைத் திருத்தி எழுதுக )

17. தமிழ் எண்களை எழுதுக:

          அ) திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் ____________

          ஆ) இந்தியாவின் விடுதலை திருநாள் ஆகஸ்ட் _____________

18. பின் வரும் தொடர்களில் உள்ள சந்தி பிழைகளைத் திருத்தி எழுதுக.

          இராமன் வீட்டை கட்டி தன் தம்பிக்கு தந்தான்.

V ) உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.                                                   2×1=2

          சங்கு ஓர் இயற்கைக் கருவி. இது கடலில் இருந்து எடுக்கப்படுகிறது. வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை வலம்புரிச் சங்கு என்பர். சங்கின் ஒலியைச் சங்க நாதம் என்பர். இலக்கியங்களில் இதனைப் பணிலம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

19. வலமாகச் சுழிந்திருக்கும் சங்கு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

VI ) எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                          6×2=12

22. தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?

23. தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?

24. யாருக்கு அழகு செய்ய அணிகலன்கள் தேவையில்லை?

25. எச்சம் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.

26. விகாரப்புணர்ச்சியின் வகைகள் யாவை?

27. கலைச்சொல் தருக:-

          அ. FLUTE                                      ஆ) RATIONAL

28. உடனிகழ்ச்சி பொருள் என்றால் என்ன?

29. நட்பு எதற்கு உரியது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?

30. அம்பேத்கர் தம் பெயரை ஏன் மாற்றிக் கொண்டார்?

VII) எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை எழுதுக.                                              3×3=9

31. பிறிது மொழிதல் அணியை விளக்கி எடுத்துக்காட்டுத் தருக.

32. தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகள் யாவை?

33. மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் குறித்து எழுதுக.

34. தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.

35. வினையெச்சத்தின் வகைகளை விளக்குக.

36. அந்தாதி என்றால் என்ன?

XI) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                      3×5=15

37. அ) தமிழகக் கைவினைக் கலைகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.

( அல்லது )

     ஆ) எம்.ஜி.ஆரின் பண்பு நலன்களை விளக்கி எழுதுக.

38. அ) காற்று கருவிகள் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக.

( அல்லது )

     ஆ) மனித யந்திரம் கதையை மீனாட்சி சுந்தரம் கூறுவதாக மாற்றி எழுதுக

39. அ) நாட்டின் வளர்ச்சியில் இளைஞர் பங்கு என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

(அல்லது )

      ஆ) விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனை பாராட்டிக் கடிதம் எழுதுக.

குறிப்பு :

          இந்த வினாத்தாளானது 2019 – 2020 கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறை  மூலம் வெளியிடப்பட்ட மாதிரி வினாத்தாளினைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

 

வினாத்தாள் வடிவமைப்பு.

WWW.TAMILVITHAI.COM

WWW.KALVIVITHAIGAL.COM

 

எட்டாம் வகுப்பு தமிழ்  
ஆண்டு இறுதித் தேர்வு மாதிரி வினாத்தாள்
தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post