8TH -TAMIL -BLUEPRINT- MODEL QUESTION - PDF

 

 

 ஆண்டு இறுதித் தேர்வு

மாதிரி வினாத்தாள் 2021-2022

எட்டாம் வகுப்பு

மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 2.30 மணி                                                                      மதிப்பெண் : 100

அறிவுரைகள் :

1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக்    

கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத்

தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்       பயன்படுத்தவும்.

குறிப்பு :

i)           அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்                                                

ii)             கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

I) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                                                 20×1=20    

1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்___________

அ) வைப்பு                 ஆ) கடல்                             இ) பரவை                 ஈ) ஆழி

2. கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______________

அ) கயிற்றுக்கட்டில்      ஆ) கயிர்க்கட்டில்                   இ) கயிறுக்கட்டில்        ஈ) கயிற்றுகட்டில்

3. பள்ளிச் சென்று கல்வி ________ சிறப்பு

அ) பயிலுதல்               ஆ) பார்த்தல்                         இ) கேட்டல்                ஈ) பாடுதல்

4. ஒரே செய்யுளை இரு பொருள்படும்படி பாடுவது __________ அணி

அ) பிறிதுமொழிதல்       ஆ) இரட்டுற மொழிதல்            இ) இயல்பு நவிற்சி      ஈ) உயர்வு நவிற்சி   

5. ‘ பாலாடை’ சொல்லுக்குரியப் புணர்ச்சி _________

அ) இயல்பு                 ஆ) தோன்றல்                       இ) திரிதல்                 ஈ) கெடுதல்

6. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு __________

அ) காவிரி                  ஆ) பவானி                          இ) நொய்யல்              ஈ) அமராவதி     

7. ‘கசடற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) கச + டற               ஆ) கசட + அற                      இ) கசடு + உற           ஈ) கசடு + அ

8. பொருத்தமான சொல்லுருபை இட்டு நிரப்புக.

அருவி மலையில் __________ வீழ்ந்தது.

அ) பொருட்டு              ஆ) காட்டிலும்                       இ) இருந்து                ஈ) உடைய

9. சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது _____.

அ) வேற்றுமைத்தொகை ஆ) உம்மைத்தொகை           இ) உவமைத்தொகை ஈ) அன்மொழித்தொகை

10. பானை______ ஒரு சிறந்த கலையாகும்.

 அ) செய்தல்               ஆ) வனைதல்                      இ) முடைதல்             ஈ) சுடுதல்

11. சமையலறையில் செலவிடும் நேரம் __________ செலவிடும் நேரமாகும்.

அ) சுவைக்காக           ஆ) சிக்கனத்திற்காக              இ) நல்வாழ்வுக்காக      ஈ) உணவுக்காக    

12. பிறிதுமொழிதல் அணியில் __________ மட்டும் இடம் பெறும்.

அ) உவமை               ஆ) உவமேயம்                     இ) தொடை                ஈ) சந்தம்                   

13) வறுமை வந்த காலத்தில் __________ குறையாமல் வாழ வேண்டும்.

அ) இன்பம்                ஆ) தூக்கம்                          இ) ஊக்கம்                ஈ) ஏக்கம்

14) குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்களின் இயற்பெயர் _________

அ) சுல்தான்               ஆ) அப்துல் காதர்                   இ) சுல்தான் அப்துல் காதர்       ஈ) அப்துல் கலாம்

15) ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் ___________

அ) திருச்சி                 ஆ) சென்னை                      இ) மதுரை                ஈ) கோவை

16. மரபுத் தொடருக்கான பொருளை காண்க:- கல்லில் நார் உரித்தல்

அ) இயலாத செயல்      ஆ) ஆராய்ந்து பாராமல்            இ) நீண்டகாலமாக இருப்பது    ஈ) விரைந்து வெளியேறுதல்

17. ‘ வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல் _____________

அ) தொல்காப்பியம்       ஆ) அகநானூறு                              இ) புறநானூறு           ஈ) சிலப்பதிகாரம்

18. ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ___________

அ) மார்பு                   ஆ) கழுத்து                          இ) தலை                  ஈ) மூக்கு

19. சரியான மரபுச்சொல்லைக் காண்க:- பறவைகளின் ஒலி மரபு – மயில்

அ) அலறும்                 ஆ) அகவும்                          இ) பேசும்                  ஈ) குனுகும்

20. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என புகழப்பர்டுபவர்_______________

அ) பாரதியார்              ஆ) குணங்குடி மஸ்தான் சாகிபு இ) எத்திராசலு            ஈ) தேசிக விநாயகனார்

II) அடிபிறழாமல் எழுதுக.                                                                                    2×4=8

21. அ) ‘ வாழ்க நிரந்தரம் ‘ எனத் தொடங்கும் தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை எழுதுக.

( அல்லது )

     ஆ) ‘ உடலின் உறுதி ‘ எனத் தொடங்கி ‘ பெறுவாயே ‘ என முடியும் வருமுன் காப்போம் பாடலை எழுதுக.

22. அ) ‘ கற்றோருக்கு ‘ எனத் தொடங்கும் குமரகுருபரர் பாடலை எழுதுக.

( அல்லது )

      ஆ) ‘ ஒன்றே குலமும் ‘ எனத் தொடங்கும் திருமூலர் பாடலை எழுதுக

23. ‘ சொல்லுக ‘ எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக                                                       1×2=2

III) எவையேனும் ஒன்பது வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                        9×2=18

24. தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?

25. தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?

26. யாருக்கு அழகு செய்ய அணிகலன்கள் தேவையில்லை?

27. எச்சம் என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.

28. விகாரப்புணர்ச்சியின் வகைகள் யாவை?

29. கலைச்சொல் தருக:-

          அ. FLUTE                                      ஆ) RATIONAL

30. உடனிகழ்ச்சி பொருள் என்றால் என்ன?

31. நட்பு எதற்கு உரியது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?

32. அம்பேத்கர் தம் பெயரை ஏன் மாற்றிக் கொண்டார்?

33. சொற்களை இணைத்து நான்கு புதியச் சொற்களை உருவாக்குக:-

          தேன்             மலர்              கூடு              குருவி            சிட்டு   

34. மரபுத் தொடர்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

      அ) முதலைக் கண்ணீர்                         ஆ) வாழையடி வாழையாக

35. பகத்சிங் கண்ட கனவு யாது?

IV) எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை எழுதுக.                                               4×4=16

31. இரட்டுறமொழிதல் அணி எவ்வாறு பொருள் தரும்.?

32. தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகள் யாவை?

33. மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் குறித்து எழுதுக.

34. தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.

35. வினையெச்சத்தின் வகைகளை விளக்குக.

36. மரக்கட்டில் – இச்சொல்லைப் பிரித்து எழுதிப் புணர்ச்சியை விளக்குக.

V) அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                                3×7=21

37. அ) தமிழகக் கைவினைக் கலைகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.

( அல்லது )

     ஆ) எம்.ஜி.ஆரின் பண்பு நலன்களை விளக்கி எழுதுக.

38. அ) காற்று கருவிகள் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக.

( அல்லது )

     ஆ) அறிவுசால் ஒளவையார் – என்னும் நாடகத்தைச் சிறுகதை வடிவில் சுருக்கமாக எழுதுக.

39. அ) எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக

(அல்லது )

      ஆ) காப்பியக் கல்வி குறித்து திரு.வி.க. கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

VI) கட்டுரை வினா                                                                                          1×8=8

40. அ) கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

முன்னுரை – நூலகத்தின் தேவை – வகைகள் – நூலகத்திலுள்ளவை – படிக்கும் முறை – முடிவுரை.

( அல்லது )

     ஆ) புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

VII ) சிந்தனை வினா                                                                                       1×7=7

41. அ) நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை?

( அல்லது )

    ஆ) பாகுபாடில்லாத மக்கள் சமூகம் உருவாக நமது கடமைகளாக நீங்கள் கருதுவன யாவை?

குறிப்பு :

          இந்த வினாத்தாளானது தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள வினாத்தாள் வடிவமைப்பு அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.

 

வினாத்தாள் வடிவமைப்பு.

WWW.TAMILVITHAI.COM

WWW.KALVIVITHAIGAL.COM

CLICK HERE TO PDF 

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post