7TH - TAMIL - ANNUAL MODEL QUESTION

 

மாதிரி வினாத்தாள் 2021-2022

ஏழாம் வகுப்பு

மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                            மதிப்பெண் : 100

தொகுத்தறி மதிப்பீடு 

 

 பாடம்- தமிழ்                                                                                                 மதிப்பெண்கள்: 60

 

அ)பலவுள் தெரிக:                                                                                                 6X1=6

1.மரம் வளர்த்தால்—---- பெறலாம்                          

 அ) மாறி  ஆ) மாரி  இ) காரி   ஈ)  பாரி

2.மாரி+ஒன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது                                                                                   

 அ)  மாரியொன்று  ஆ) மாரி ஒன்று  இ) மாரியின்று  ஈ) மாரியன்று 

3.இடர் என்ற சொல்லின் பொருள்

அ) மகிழ்ச்சி  ஆ)  துன்பம்   இ)  இன்பம்   ஈ) நிகழ்ச்சி 

4.மக்கள் அனைவரும்—------ ஒத்த இயல்புடையவர்கள்

அ)பிறப்பால்  ஆ)நிறத்தால்    இ) குணத்தால்     ஈ) பணத்தால் 

5.மனித வாழ்க்கையில் தேவைப்படுவது 

அ)  பணம்  ஆ)பொறுமை   இ) புகழ்   ஈ) வீடு

6.காயிதே மில்லத் என்ற அரபுச் சொல்லின் பொருள்

அ) சுற்றுலா வழிகாட்டி   ஆ) சமுதாய வழிகாட்டி    இ)சிந்தனையாளர்   ஈ)வல்லுநர். 

ஆ)பொருத்துக:                                                                                                     4X1=4

7. நாற்று - பறித்தல்

8. நீர் - அறுத்தல் 

9. கதிர் - நடுதல் 

10. களை - பாய்ச்சுதல்

இ)ஐந்து வினாக்களுக்கு மட்டும்ஓரிரு சொற்களில் விடை தருக:                                    5X2=10

11.பாரி மகளிரின் பெயர்களை எழுதுக.

12.பொருள் ஏதும் இல்லாத வீடுகளே இல்லை -எவ்வாறு?

13.உவமை, உவமேயம், உவம உருபு விளக்குக.

14. பொய்கையாழ்வார் எதற்காகப் பாமாலை சூட்டுகிறார்?

15.உருவக அணியையும், ஏகதேச உருவக அணியையும் வேறுபடுத்துக.

16.ஒரு நாட்டிற்கு எவையெல்லாம் அரண்களாக அமையும்?

17.உலகம் நிலைதடுமாறக் காரணம் என்ன

ஈ)மூன்று வினாக்களுக்கு மட்டும் ஓரிரு தொடர்களில் விடை தருக:                                 3X4=12

18.இரட்டைக்கிளவி அடுக்குத்தொடர் -ஒப்பிடுக

19.ஆட்சி மொழி குறித்து காயிதே மில்லத்தின் கருத்தை விளக்குக.

20. சாந்தம் பற்றி இயேசு காவியம் கூறுவன யாவை

21.பூதத்தாழ்வார் ஞான விளக்கை ஏற்றும் முறையை எழுதுக. 

22.தமிழரின் பண்பாட்டு கூறுகளை விளக்குக

உ.அடிமாறாமல் எழுதுக:                                                                                           2+4=6 

23.வினையால் எனத் தொடங்கும் குறளை அடி மாறாமல் எழுதுக.

24. வையகம் எனத் தொடங்கும் பாடலை அடி மாறாமல் எழுதுக

ஊ.அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                                10X1=10

25.கலைச்சொல் தருக : FOLKLORE,HARVEST

26.தொடருக்குப் பொருத்தமான உவமையை எடுத்து எழுதுக. 

      என் தா யார் என்னை __________________ காத்து வளர்த்தார்

.     (கண்ணை இமை காப்பது போல / தாயைக்கண்ட சேயைப் போ ல)

27.ஊரின் பெயரில் இருந்து புதிய சொற்களை உருவாக்குக ; நாகப்பட்டினம்

28.உவமையை உருவகமாக மாற்றுக :  மலர்முகம்

29.சரியான வினாச்சொல்லை இட்டு நிரப்புக .

     அ.நெல்லையப்பர் கோவில்—-------- உள்ளது?

      ஆ. அறநெறிச்சாரம் என்பதன் பொருள்—------?

30.பின்வரும் தொடரைப் படித்து இரண்டு வினாக்கள் உருவாக்குக.

        பூங்கொடி தன் தோழியுடன் திங்கட்கிழமை காலையில் பேருந்தில் ஏறி பள்ளிக்குச் சென்றாள் 

31.பின்வரும் படத்தைச் சார்ந்த சொற்கள் நான்கனை எழுதுக



32.தமிழெண்கள் எழுதுக : 56,28,542,102

33.பின்வரும் சொல்லைப் பெயர்ச்சொல்லாகவும் வினைச் சொல்லாகவும் பயன்படுத்தி தொடர்கள் உருவாக்குக :  விதை

34. சரியான இணைப்புசொல்லால் நிரப்புக.

       புதிய சொற்களைப் பேச வேண்டும். —------ துன்பப்பட நேரிடும்     

எ)விரிவான விடையளிக்க:                                                                                      1X6=6

35.சிதம்பரனார் குறிப்பிடும் திருநெல்வேலி கவிஞர்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.

ஏ)கடிதம்/கட்டுரை எழுதுக                                                                                       1X6=6

36.அ.என்னை கவர்ந்த நூல் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக

(அல்லது)

     ஆ. உங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாவைக் காண வருமாறு அழைப்பு விடுத்து உறவினர் ஒருவருக்கு கடிதம் எழுதுக.

 CLICKHERE TO GET PDF

1 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post